என் மலர்
நீங்கள் தேடியது "dealer died"
பேரையூர்:
விருதுநகர் மாவட்டம், மந்திரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 42). விறகு கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் கணேசன் (42) ஆடு வியாபாரி.
நேற்று 2 பேரும் ஆடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருமங்கலம் அருகே உள்ள பாரபத்தியில் ஆடுகளை வாங்கிவிட்டு மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர்.
அவர்கள் 4 வழிச் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியே அருப்புக்கோட்டை- சென்னை இடையேயான தனியார் பஸ் வந்தது. அந்த பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதே விபத்தில் முத்துக்கருப்பன் மற்றும் கணேசன் தூக்கி வீசப்பட்டனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால் சம்பவ இடத்திலேயே முத்துக்கருப்பன் பரிதாபமாக இறந்தார். கணேசன் காயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான முத்துக்கருப்பனுக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நாட்டறம்பள்ளி:
ஆம்பூரை சேர்ந்த அப்துல் பாஷா மகன் ஜமீல்அகம்மது (வயது 27). தோல் வியாபாரி. இவர் இன்று காலை தொழில் சம்மந்தமாக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
நாட்டறம்பள்ளி அருகே உள்ள தண்ணீர்பந்தல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, கார் திடீரென பழுதானது. காரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, வாணியம்பாடியில் இருந்து ஓசூருக்கு சென்ற லாரி, கார் மீது மோதியது. இதில் காரின் பின்புறம் இருந்த ஜமீல் அகம்மது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






