search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damaged roads"

    • நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்கத்தில் அதன் தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது
    • கூட்டத்தில் மழையினால் சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சேரன்மகாதேவி சாலையில் உள்ள வியாபாரிகள் சங்கத்தில் அதன் தலைவர் முகம்மது யூசுப் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ரவிக்குமார் வரவேற்று பேசினார். துணைத்தலைவர் நாராயணன், கான்முகம்மது, துணைச்செயலாளர்கள் ஆதிமூலம், செய்யது அலி, முகம்மது அனிபா, கவுரவ ஆலோசகர் சம்சுதீன், பொருளாளர் ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிர்வாகக்குழு உறுப்பி னர்கள் லட்சுமணன், கண்ணன், முகம்மது அலி சித்திக், அப்துல் ரஹ்மான் கனி, முகைதீன் கலுங்கு என்ற ஹக்கீம், சாகுல்ஹமீது, ராமச் சந்திரன், சுப்பிரமணியன், மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், டவுன் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களுக்கு கழிப்பிட வசதி செய்து தரவேண்டும், மழையினால் சேதமடைந்த சாலைகள் அனைத்தையும் சரிசெய்ய வேண்டும், சந்தி பிள்ளையார் கோவிலில் இருந்து பேட்டை வரையிலும் மோசமாக சாலைகளை சரிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

    • மதுரையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாக சாலைகள், வீதிகள் அலங்கோலமாக கிடக்கின்றன.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 கிராம பஞ்சாயத்து, 655 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 3 ஆயிரத்து 710 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மதுரையில் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சியில் மட்டும் 1,253 சதுர கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக சாலை முழுவதும் சேதமடைந்து உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாக சாலைகள், வீதிகள் அலங்கோலமாக கிடக்கின்றன.

    வாகனங்கள் மட்டுமின்றி மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் பழுதாக உள்ளது.எனவே சாலைகளை போர்க்கால அடிப்படையில் அரசு சீர்செய்ய வேண்டும். இல்லையென்றால் மதுரை மாவட்ட அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்துள்ளார்.

    தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள சாலைகளின் நிலை என்ன? மதுரை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் புறக்கணிக் கப்படுகிறதா? நிதி ஒதுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுகிறதா?என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, ஆகவே சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அரசு முன் வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மண்ணை போட்டு நிரப்புவதால் அந்த பகுதி தூசு மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மதுரை நகர் பகுதியில் தல்லாகுளம், விமான நிலையம், இடையபட்டி, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு கன மழை பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் சில நாள் பெய்த கனமழையால் மதுரையின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது. மேலும் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி, தபால் தந்தி நகர், ஆனையூர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதிகளிலும் செல்ல முடியாத நிலையில் பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது.

    தற்போது பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் பெரிய அளவில் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மதுரையில் பீபீகுளம் சந்திப்பில் சில மாதங்களாகவே சாலை மிகவும் பழுதடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் அந்த பகுதியில் மண்ணை கொண்டு சரி செய்வதால் சாலைகளில் பஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் தூசி மண்டலம் ஏற்படுகிறது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் கடும் பாதிப்படைகிறார்கள்.

    இதுபோல தல்லாகுளம், கோரிப்பாளையம், பைபாஸ் ரோடு, பெரியார் பஸ் நிலையம், தெப்பக்குளம், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மணல் குவியல் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அந்த சாலைகளிலும் தூசி பரவல் அதிகரித்துள்ளது.

    மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மண்ணை கொண்டு மூடுவதை தவிர்த்து தார் மற்றும் ஜல்லி கலவையை அந்த இடங்களில் நிரப்பினால் மீண்டும் சாலைகள் பழுதாகாமலும், அதிக அளவில் தூசி எழும்பாமலும் இருக்கும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு வசதியாக தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மணல் குவியல்களை கூடுதல் பணியாளர்களை கொண்டு உடனடியாக அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.
    • சாலை மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூரில் இருந்து மருதடியூர், சாலையடியூர் வழியாக செல்லும் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமான நிலையில் காணப்படுகிறது.

    பள்ளி மாணவர்கள், பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட் செல்லும் விவசாயிகள், வாகன ஓட்டிகள் என பலரும் இந்த சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் திப்பணம்பட்டி முதல் அரியப்பபுரம் ரெயில்வே கேட் வரை செல்லும் சாலையும் மிகவும் பள்ளங்கள் நிறைந்து உருக்குலைந்து காணப்படுகிறது.

    எனவே இந்த இரு சாலைகளையும் செப்பனிட்டு தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×