search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLA. emphasis"

    • மதுரையில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க கோரி ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.
    • பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாக சாலைகள், வீதிகள் அலங்கோலமாக கிடக்கின்றன.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. அதில் 3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 கிராம பஞ்சாயத்து, 655 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 3 ஆயிரத்து 710 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மதுரையில் 30 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

    மதுரை மாநகராட்சியில் மட்டும் 1,253 சதுர கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக சாலை முழுவதும் சேதமடைந்து உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் மோசமாக உள்ளன. பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் குண்டும், குழியுமாக சாலைகள், வீதிகள் அலங்கோலமாக கிடக்கின்றன.

    வாகனங்கள் மட்டுமின்றி மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் பழுதாக உள்ளது.எனவே சாலைகளை போர்க்கால அடிப்படையில் அரசு சீர்செய்ய வேண்டும். இல்லையென்றால் மதுரை மாவட்ட அமைச்சர் ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்று அறிவித்துள்ளார்.

    தற்போது மதுரை மாவட்டத்தில் உள்ள சாலைகளின் நிலை என்ன? மதுரை மாவட்டத்தில் நலத்திட்டங்கள் புறக்கணிக் கப்படுகிறதா? நிதி ஒதுக்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுகிறதா?என பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, ஆகவே சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க அரசு முன் வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×