search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cooperative union"

    • நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
    • கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் வருடாந்திர பேரவை கூட்டம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு தலைவர் டாக்டர் ஜானகிராமன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் அருணாச்ச லம் முன்னிலை வகித்தார். உப தலைவர் சின்னத்துரை, இயக்குனர்கள் அருந்தவசு, கணேசன், சரவண கார்த்திகேயன், ராதா கிருஷ்ணன், ரோஸ்மேரி ஜானகிராமன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 2019 -2020 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை வாசிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டுக்கான மொத்த லாபத்தொகை ரூ.14 லட்சத்து 68 ஆயிரத்து 419 என கணக்கிடப்பட்டது.

    இதன் பின்னர் இந்த ஆண்டுக்கான கடன் வழங்கும் தொகை ரூ.12 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தவும், இதேபோல் பங்கு தொகையையும் ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.7ஆயிரத்து 500 ஆக உயர்த்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த உறுப்பினர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசு பொருள்கள் வழங்கப்பட்டது.

    கோவையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணிபுரிந்த வந்த பெண் மோசடி குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மொங்கம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ். இவருடைய மனைவி சுமதி (39).

    இவர் பெள்ளாதி கூட்டுறவு கடன் வசதி சங்கத்தில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுமதி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்தி வேல், சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சுமதி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மோசடி புகார் கூறியதால் சுமதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சுமதி வேலை பார்த்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக மனோகரன் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை மோசடி நடைபெற்றதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து செயலாளர் மனோகரன் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மனோகரன் கூட்டுறவு சங்கத்திற்கு வந்துள்ளார். அப்போது சங்க உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளனர். அவர்களிடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்க்கும் சுமதியும் மோசடி செய்துள்ளார் என கூறிவிட்டு மனோகரன் அங்கிருந்து சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து பெள்ளாதி கிராமத்தை சேர்ந்த நசீர், சண்முகம், முகேஷ் வெங்கட், தொட்டி பாளையம் ராஜேந்திரன், ஆண்டவன் முருகேஷ், கனகராஜ் ஆகிய 6 பேர் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டியதும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் உள்பட 7 பேர்மீது சுமதியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×