என் மலர்
நீங்கள் தேடியது "Central Staff Selection Commission's"
- தமிழ்நாடு தேர்வர்களை வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு கடும் கண்டனம்.
- நெல்லை, கோவை, வேலூரில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை.
மத்திய அரசின் பணியாளர் தேர்வுக்கு மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (SSC) பொறுப்பற்ற நடவடிக்கை. நெல்லை, கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை. மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள தேர்வு மையங்களை தேர்வு செய்த தொல்லியல் துறை மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெருநகரமான சென்னையில் ஒரே ஒரு தேர்வு மையம். தமிழ்நாட்டு தேர்வர்களை விடாது வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம் பல அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள 2,423 காலியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர எண். Phase-XIII/2025/Selection Posts ஐ வெளியிட்டது. ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம் ஜூன் 23, 2025 (2300 மணி நேரம் வரை) என்று தரப்பட்டிருந்தது. கணினி அடிப்படையிலான தேர்வுக்கான தேதிகளும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 04, 2025 வரையில் நடக்கும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தேதியில் தேர்வு தொடங்கியது பாராட்டப்பட வேண்டிய அம்சமாகும். ஆனால் தேர்வு நடத்தும் முறை நாடு முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்களை நடுநடுங்கச் செய்ய வைத்துள்ளது. பல்வேறு இடங்களில் தேர்வு எழுதுவதற்காகச் சென்ற விண்ணப்பதாரர்கள் பின்வரும் கருத்துக்களை தெரிவித்தனர்.
1. விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்கள் அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தன. நுழைவுச் சீட்டுகளை ஜூலை 21, 2025 அன்றுதான் வெளியிட்டார்கள். மேலும், இந்த வெளியீடு கூட அனைத்து நாட்களுக்குமானதாக இல்லை. தேர்வுக்கு குறைந்தது நான்கு நாட்களுக்கு முன்புதான் நுழைவுச்சீட்டு வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதாவது, ஆகஸ்ட் 1, 2025 அன்று எழுதவிருக்கும் ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2. தேர்வு மையத்திற்கு 100 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த பிறகு, பல்வேறு மையங்களில், தேர்வுகள் நிர்வாகக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டதாக வாயில்களில் அறிவிப்பைக் கண்டு விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மையத்தில், அறிவிப்புகள் ஒவ்வொன்றாக ஒட்டப்பட்டபோது அது நகைப்புக்குரியதாக மாறியது. இறுதியாக, ஜூலை 24, 2025 முதல் ஜூலை 26, 2025 வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டது. இந்த நிச்சயமற்ற தன்மை தேர்வர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் தேர்வுகளை சந்திக்க உள்ளவர்கள் பலர் தேர்வு மையங்களுக்கு பயணிக்கத் தயங்குவதால் நேரம் மற்றும் சக்தி வீணாகிவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
3. விளம்பரத்தில் போதிய எண்ணிக்கையிலான மையங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த மையங்கள் பலவற்றில் தேர்வு நடத்தப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கோயம்புத்தூர் போன்ற முக்கியமான மையங்களில் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஒரு பெருநகரமான சென்னையில் கூட, ஒரே ஒரு தேர்வு மையம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயமாக போதுமானதாக இல்லை. மையங்கள் வெகு தொலைவில் இருப்பதால் நூற்றுக்கணக்கான தேர்வர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். சிலர் தேர்வில் கலந்து கொள்ள மூன்று நாட்கள் செலவிட வேண்டியிருக்கிறது.
4. தேர்வு அறைகளுக்குள், கணினிகள் சரியாக வேலை செய்யவில்லை. சில தேர்வர்கள் விடை எழுதும்போது தங்கள் கணினிகள் இருட்டடிப்பு செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். அவர்கள் வேறொரு கணினியில் அமர்த்தப்பட்டனர். பல கணினிகளில் மவுஸ் வேலை செய்யவில்லை. தேர்வு அறைகள் பெரும்பாலும் கணினி ஆய்வகங்களாக உள்ளதால் மூடப்பட்டதாகவே இருக்கும். சில தேர்வு அறைகளில், குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை. இந்தியாவின் வட பகுதி மாநிலங்களில் இது கோடைக்காலம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
5. நுழையும் இடத்தில் தேவைப்படும் நடைமுறை மற்றும் தேர்வு மையத்திற்குள் செய்ய வேண்டியவை ஒழுங்கற்ற முறையில் கையாளப்பட்டுள்ளன. சில அரங்குகளில் கதவு மூடப்பட வேண்டிய நேரம் என்று அறிவித்திருந்த நேரமான காலை 9 மணிக்குப் பிறகுதான் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்வு அரங்கிற்குள் அலைபேசிகள் தடைசெய்யப்பட்டவையாகும். ஆனால், தேர்வு அரங்கின் உள்ளிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியில் பகிரப்பட்டுள்ளன. மேலும் சிலர் தாங்கள் தேர்வு எழுதும் கணினியின் திரையைப் பகிர்ந்திருக்கிறார்கள்.
6. தேர்வுகளை நடத்துவதற்குப் பொறுப்பேற்றுள்ள நிறுவனம் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, டாடா கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை நடத்தி வந்தது, இப்போது எடுக்விட்டி(Eduquity) என்ற புதிய நிறுவனத்திற்கு இந்தப் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தைச் செய்யும் அதே வேளையில், தேர்வுகளை சீராக நடத்துவதை உறுதி செய்வதில் பணியாளர் தேர்வு ஆணையம் தோல்வியடைந்துள்ளது, இதன் விளைவாக நாடு முழுவதும் உள்ள வேலையற்ற இளைஞர்கள் தேவையற்ற சித்திரவதைக்கு ஆளாகியுள்ளனர்.
இதன் மூலம் தேர்வர்கள் நலன் சார்பாக முன்வைக்கும் கோரிக்கைகள் என்னவென்றால்,
1. தேர்வுகள் மீண்டும் திட்டமிடப்படுவதால், எஞ்சியுள்ள தேர்வுகள் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும். "நிர்வாகக் காரணங்கள்" அல்லது "தொழில்நுட்பக் கோளாறுகள்" போன்றவற்றைச் சொல்வது எதற்கும் பயனளிக்காது.
2. விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மையங்களில் இருந்தும், தேர்வர்களுக்கு அருகாமையில் உள்ள மையங்களை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.
3. பெரிய நகரங்களில், அதாவது சென்னையில் உள்ள தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
4. எதிர்காலத்திலாவது நுழைவுச் சீட்டுகள் முன்கூட்டியே வெளியிடப்பட வேண்டும்,
5. தேர்வுகளை நடத்தும் பணியை ஒதுக்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பே, மாற்றத்தின் போது ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க ஒரு தெளிவான செயல்முறையை வகுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- குரூப் “B” மற்றும் குரூப் “C” நிலையில் 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.
- விண்ணப்பிக்க கடைசி நாள் 3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 4.5.2023 ஆகும்.
திருப்பூர் :
மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (Staff Selection Commission, Government of India) "ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு – 2023 (Combined Graduate Level Examination, 2023) தொடர்பான அறிவிப்பினை 3.4.2023 அன்றுவெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் , துறைகள் , நிறுவனங்கள்மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள்,சட்டப்பூர்வ அமைப்புகள்-தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் "B" மற்றும் குரூப் "C" நிலையில் 7,500-ற்கும்மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ளதகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி,செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்றவிவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/noticeCGLE03042023.pdf என்ற இணையதள முகவரியிலும் உள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின்இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலானஇத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள்3.5.2023 மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்4.5.2023 ஆகும். தென் மண்டலத்தில் கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல்ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும்,தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில்பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam- CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின்மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/)பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்விணையதளத்தில் 'TN Career Services Employment' மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்றYouTube Channel-களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கானகாணொளிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே,இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரியமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்புகொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.






