search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Minister MJ Akbar"

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulGandhi #Modi #MeToo #MJAkbar #PriyaRamani
    போபால்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலம் ஜோரா, சியோபூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டங்களில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    பிரதமர் மோடி பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி போதிப்போம் என்று தெரிவிக்கிறார். அதே நேரத்தில் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் மோடி மவுனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை.

    உத்தரபிதேசத்தில் ஒரு பெண்ணை பா.ஜனதா எம்.எல்.ஏ. பாலியல் வன்கொடுமை செய்த போது அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மவுனம் காத்தார். இந்த விவகாரத்தில் மோடியும் மவுனம் காத்தார். எனவே பா.ஜனதா மந்திரி, எம்.எல்.ஏ.விடம் இருந்து நமது பெண் குழந்தைகளை காப்போம் என்று புதிய கோ‌ஷம் எழுப்புவோம்.



    இந்தியாவின் பாதுகாவலராக இருக்க விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் அவர் தொழில் அதிபர்கள் அனில் அம்பானி, மெகுல் கோச்சி, நீரவ் மோடி ஆகியோரின் உண்மையான பாதுகாவலர் என்பதை உறுதி செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக அவர்களுக்காகவே மோடி பணியாற்றினார்.

    நாட்டில் பெட்ரோல் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. வரிகளின் மூலம் மக்களின் பணத்தை அவர்கள் எடுக்கின்றனர். அந்த பணத்தை 20 தொழில் அதிபர்களுக்கு அளிக்கின்றனர்.

    நான் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு இங்கு வரவில்லை. நான் பொய் சொல்ல மாட்டேன். உண்மையான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பேன். அதை செயல்படுத்துவேன். ஊட்டச்சத்து குறைபாடு, விவசாயிகள் பிரச்சினை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மத்திய பிரதேசம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவில்லை. ஆனால் பா.ஜனதா அரசு தன்னை விளம்பரப்படுத்தும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

    மத்திய பிரதேசததில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு தர வேண்டும். மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். விவசாய நிலங்கள் அருகே உணவு பதப்படுத்துதல் ஆலைகள் அமைக்கப்படும். காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவி ஏற்பவர் தினமும் 18 மணி நேரம் இளைஞர் நலப்பணியில் ஈடுபடுவார்.

    இவ்வாறு அவர் பேசினார். #Congress #RahulGandhi #BJP #Modi #MeToo #MJAkbar #PriyaRamani
    பாலியல் புகாருக்கு ஆளான மத்திய இணை மந்திரி எம்ஜே அக்பர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். #MeToo #MJAkbar #PriyaRamani
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருப்பவர் எம்.ஜே.அக்பர்.

    இவர் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணி புரிந்துள்ளார்.

    எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு கூறினார். “மீடூ” இயக்கத்தின் மூலம் அவர் எம்.ஜே.அக்பர் குறித்து பரபரப்பான பல தகவல்களை வெளியிட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் 2 பெண் பத்திரிகையாளர்கள் அக்பர் மீது பாலியல் புகார்கள் கூறினார்கள்.

    இதனால் மத்திய மந்திரி பதவியில் இருந்து அக்பர் விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. எனவே அக்பரை பதவியில் இருந்து விலக்குவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே நைஜீரியாவில் இருந்து டெல்லி திரும்பிய எம்.ஜே.அக்பர், தன் மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறி பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி மீது சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார். அதன் படி பிரியாரமணி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சுமார் 20 பெண் பத்திரிகையாளர்கள் பிரியாரமணிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அக்பர் தொடுத்துள்ள வழக்கை எதிர்கொள்ள தயார் என்று பிரியாரமணியும் 20 பெண் பத்திரிகையாளர்களும் கூறியுள்ளனர்.



    இந்த நிலையில் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது மேலும் ஒரு பெண் பரபரப்பு பாலியல் புகாரை தெரிவித்துள்ளார். அவரது பெயர் துஷிதா படேல். இவர் நேற்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறி இருப்பதாவது:-

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் இரண்டு தடவை என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். பத்திரிகை பணி தொடர்பாக என்னை அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு சென்று அவரை சந்தித்தேன்.

    அவரது அறைக்குள் சென்ற பிறகுதான் அவர் தவறான கண்ணோட்டத்துடன் என்னைப் பார்த்ததை புரிந்து கொண்டேன். அவர் என்னை கட்டாயப்படுத்தி கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார்.

    அவரது உண்மையான முகம் இப்போதுதான் வெளியில் தெரிய தொடங்கியுள்ளது. எனவேதான் நானும் எனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை வெளியிட்டுள்ளேன்.

    இவ்வாறு பெண் பத்திரிகையாளர் துஷிதா படேல் கூறியுள்ளார். அக்பர் மீது பெண்கள் அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறி வருவது மத்திய பா.ஜ.க. அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

    இதற்கிடையே அக்பர் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களை தீவிரப்படுத்த பெண் பத்திரிகையாளர்கள் முடிவு செய்துள்ளனர். பெண் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், மேனகாகாந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. #MeToo #MJAkbar #PriyaRamani
    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சந்திக்க தயார் என்று பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி பதில் அளித்துள்ளார். #MeToo #MJAkbar #PriyaRamani
    புதுடெல்லி:

    மத்திய வெளியுறவு துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர்.

    பத்திரிகையாளராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றிய காலத்தில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.

    மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘மீ டூ’ இயக்கம் மூலம் வெளிநாட்டு பத்திரிகையாளர் உள்பட 10-க்கும் மேற்பட்ட பெண் பத்திரிகையாளர்கள் எம்.ஜே. அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். இதில் பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

    இதைத்தொடர்ந்து எம்.ஜே.அக்பருக்கு எதிர்ப்பு கிளம்பியது. அவர் மத்திய மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

    இந்த பாலியல் குற்றச்சாட்டுக்களை மத்திய இணை மந்திரி எம்.ஜே.அக்பர் மறுத்தார். அதோடு பதவி விலகவும் முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இந்தநிலையில் தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியாரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கை கொடுத்துள்ளார்.

    பிரியாரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் புகார் கூறியுள்ளார். அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


    அவதூறு வழக்கு தொடர்பாக பெண் பத்திரிகையாளர் பிரியாரமணி கூறியதாவது:-

    எம்.ஜே.அக்பர் மீது நான் கூறிய பாலியல் குற்றச்சாட்டு உண்மையானது. முற்றிலும் உண்மை. தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். பல்வேறு பெண்கள் கூறிய பாலியல் குற்றச்சாட்டை அரசியல் சதி என்று அவர் தெரிவித்து இருப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    என் மீது மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கை சந்திக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MeToo #MJAkbar #PriyaRamani
    என்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் இன்று விளக்கம் அளித்துள்ளார். #MJAkbar #MeToo
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் இன்று டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இன்று மாலை அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிட்டுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இப்போது இத்தகைய புகார்கள் எழுப்பப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பிய அக்பர், அடிப்படை ஆதாரங்களற்ற இந்த குற்றச்சாட்டுகளால் தனது நன்மதிப்புக்கு களங்கம் நேர்ந்துள்ளதாகவும், இதுதொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளை எனது வழக்கறிஞர்கள் மேற்கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். #MJAkbar #MeToo
    ×