search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bulbul Bird"

    • இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது.
    • இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது.

    மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி தமிழிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'காதல் தி கோர்' படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் மம்முட்டி ஜோடியாக ஜோதிகா நடித்து இருந்தார்.

    கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மம்முட்டியின் பிரம்மயுகம் படமும் வசூல் சாதனை நிகழ்த்தியது. சமீபத்தில் மம்மூட்டி மற்றும் கன்னட பிரபலமான ராஜ் பி ஷெட்டி இணைந்து டர்போ என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார்.

    சினிமாவை தாண்டி இன்னொரு புறம் மம்முட்டிக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்கும். படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள அழகான விஷயங்களை தனது கேமராவில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்வது உண்டு. அப்படி மம்முட்டி எடுத்த புகைப்படங்களில் இந்திய புல்புல் பறவையின் புகைப்படமும் ஒன்று. இந்த புகைப்படம் கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி சமீபத்தில் நடந்த புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்று இருந்தது. பின்னர் மம்முட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படத்தை ஏலம் போட்டனர்.

    ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூபாய் 1 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. பின் அந்த புகைப்படத்தை தொழில் அதிபரான அச்சு உல்லட்டில் [லீனா க்ரூப் ஆஃப் பிசினஸ்] ரூ.3 லட்சத்துக்கு ஏலம் எடுத்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சி மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன் சார்பாக நடைப்பெற்ற கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×