search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP- PMK alliance"

    • தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.
    • பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணியை உறுதிப்படுத்துவதில் பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு முயற்சித்தனர். ஆனால் அ.தி.மு.க. ஏற்கவில்லை. இதனால் பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., அ.ம.மு.க., ஓ.பன்னீர்செல்வம், புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே. ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதில் பா.ம.க., தே.மு.தி.க.வை தவிர மற்ற கட்சிகள் பா.ஜ.க கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.

    பா.ம.க.வையும், தே.மு.தி.க.வையும் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அ.தி.மு.க.வுடனும் பேசிக் கொண்டிருப்பதால் இரு கட்சிகளும் எந்த அணியில் சேருவது என்று முடிவெடுக்கப்படாமல் இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர்கள் கிஷன்ரெட்டி, வி.கே.சிங் ஆகியோர் சென்னை வந்தனர். கிண்டி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் அவர்களை டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது கூட்டணியை உறுதி செய்து உள்ளார். 

    பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுடன் பேசிய பிறகு தொகுதி எண்ணிக்கையை முடிவு செய்ய திட்டமிட்டிருந்தனர்.

    இந்நிலையில், பாஜகவுடன் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்துள்ளது.

    அதன்படி, மக்களவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து பா.ம.க சந்திக்கிறது. இதனை, பாமக மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்தார்.

    மேலும், நாளை ஒப்பந்தம் ஆன பிறகு தொகுதிகள் குறித்து அறிவிப்போம் என்றும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ராமதாஸ் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

    ×