search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Army recruitment"

    • ராணுவத்தில் வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி.
    • சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது சாதி சான்றிதழ் கேட்கப்படுவதாக ஆம்ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய்சிங், ஐக்கிய ஜனதாதளம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா மற்றும் பாஜக எம்பி வருண் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ஆவணத்தையும் அவர்கள் டுவிட்டர் பதிவில் வெளியிட்டனர்.

    இந்த பிரச்சினை பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்டது. ராணுவ ஆள்சேர்ப்பில் இடஒதுக்கீடு வழங்காத நிலையில் ஜாதிச் சான்றிதழ் தேவையா என ஐக்கிய ஜனதாதளம் எம்பி குஷ்வாஹா கேள்வி எழுப்பினார். ராணுவத்தின் விதிமுறைகளை மாற்றுவதன் மூலம் நமது தேசிய பாதுகாப்பில் ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

    இந்நிலையில் பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், ராணுவ வீரர்கள் தேர்வில் சாதி பார்க்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு ஒரு வதந்தி என்று கூறினார். சுதந்திரத்திற்கு முன்பு இருந்த நடைமுறையே தற்போதும் தொடர்கிறது என்றும், இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் அரசியல் செய்து, ராணுவத்தை இழிவுபடுத்தி அவமதிப்பதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

    2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ராணுவ ஆட்சேர்ப்பில் சாதி அல்லது மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும்,  இதற்கு பதிலளிக்கும் வகையில் ராணுவம் சார்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆகஸ்ட் 3 ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
    • ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    திருப்பூர் :

    அக்னிபத் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு பணி அவினாசியில் செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு தொடங்கி உள்ளது .ஆகஸ்ட் 3 ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பூர் அவிநாசி அருகே உள்ள டீ பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 20ந் தேதி முதல் அக்டோபர் 1ந் தேதி வரை ஆட்கள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் கோயம்புத்தூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, மதுரை, நாமக்கல், நீலகிரி, சேலம், தேனி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

    10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 8வது தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அக்னிவீர் கிளார்க்-ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ராணுவத்தில் சேர்வதற்காக இந்த ஆள்சேர்ப்பு பணி நடத்தப்படுகிறது. ராணுவத்தில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேர்வதற்கான வயது, கல்வித் தகுதி மற்றும் பிற அளவுகோல்கள் பற்றிய விவரங்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். அதிலேயே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களின் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்றும் மற்றும் 14 ஆகஸ்டுக்கு பிறகு ஆன்லைனில் அட்மிட் கார்டு வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு பணியை கோவையில் உள்ள ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் நடத்துகிறது என்று கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாமின் 2-வது நாளான இன்று சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.
    சேலம்:

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் 12 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

    முதல் நாளான நேற்று மதுரை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் உயரம், மார்பளவு, ஒட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது.

    தேர்வு பெறாதவார்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தேர்வு பெற்றவர்கள் 600 பேருக்கு எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    2-வது நாளான இன்று (23-ந் தேதி) சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர். இன்று அதிகாலை 3 மணி முதல் இந்த உடல் தகுதி தேர்வுகள் நடந்தது.

    இதற்கு ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு இயக்குனர் கோவை கர்னல்ரானே தலைமை தாங்கினார். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் இனி வரும் நாட்களில் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி சேலம் மாநகர போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது.
    சேலம்:

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாம் வருகிற செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முடிவடைகிறது.

    முகாமில் சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

    முதல் நாளான இன்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அனுமதிக்கப்பட்டனர். இன்று நள்ளிரவில் இருந்து தேர்வு தொடங்கியது.

    முதலில் மைதான நுழைவு வாயில் முன்பு வைத்து இளைஞர்கள் உயரம் சரி பார்க்கப்பட்டது. இதில் உயரம் குறைவாக இருப்பவர்கள் அனுமதிக்கப்படவில்லை. சரியான உயரம் உள்ளவர்கள் மட்டும் முகாமிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு மார்பு அளவு சரிப்பார்க்கப்பட்டது.

    பின்னர் கல்வி அடிப்படையில் டெக்னீக்கல், டெக்னீக்கல் அம்யூசன், ஏவியேசன், நர்சிங் அசிஸ்டன்ட், ஜெனரல் டியூட்டி, கிளார்க், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன் ஆகிய பதவிகளுக்கு ஆன்லைனின் விண்ணப்பித்தவர்கள் தனித் தனியாக பிரிக்கப்பட்டனர்.

    ஒவ்வொரு பதவிகளுக்கும் இளைஞர்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு முகாமில் வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களின் கல்விச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை சரிபார்த்தனர். இந்த பணியில் ராணுவ அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளும் மற்றும் பல்வேறுதுறை அரசு அதிகாரிகளும் ஈடுபட்டனர்.

    தகுதியான இளைஞர்கள் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் பிறகு கயிறு ஏறுதல் என ஒவ்வொரு உடற்தகுதி தேர்வுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ தேர்வு நடைபெறும்.

    முகாமில் கலந்து கொள்ள 11 மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் மைதானத்தின் வெளியே திரண்டனர். பெரும்பாலான இளைஞர்கள் பெற்றோருடன் வந்திருந்தனர். அவர்கள் சாலையின் ஓரத்திலும், மைதானத்தின் வெளியே, மதில் சுவர் ஓரமாக இரவு தூங்கினார்கள். சிலர் பெரியார் மேம்பாலத்தின் அடியிலும் படுத்து தூங்கினார்கள். அவர்கள் கடும் குளிராலும், கொசுக் கடியாலும் அவதிப்பட்டனர். உணவுக்கும் சிரமப்பட்டனர். இரவு நேரத்தில் கடைகளை தேடி அலைந்தார்கள். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து வேதனை அடைந்தனர்.

    தேர்வில் பங்கேற்க வந்துள்ள இளைஞர்கள் தங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் மண்டபம் ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்து இருக்கலாம் என்று புலம்பியபடி சென்றனர். தேர்வு நள்ளிரவு 12 மணிக்கு பிறகு தொடங்கியதால் தூக்க கலக்கத்தில் சோர்வுடன் இளைஞர்கள் காணப்பட்டனர்.

    சேலம் மகாத்மா காந்தி மைதானம் பெரிய மைதானம் மட்டுமல்லாமல், மரங்கள் சூழ்ந்து, காற்றோற்றத்துடன், சுற்றிலும் மதில் சுவருடன் பாதுகாப்பாக உள்ள மைதானமாகும். எனவே, காலை 6.30 மணிக்கு பிறகு தேர்வை வைத்திருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் தேர்வில் பங்கேற்க வந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
    ×