search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் 2-வது நாளாக ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு
    X

    சேலத்தில் 2-வது நாளாக ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு

    ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பு முகாமின் 2-வது நாளான இன்று சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர்.
    சேலம்:

    சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவ பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் 12 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.

    முதல் நாளான நேற்று மதுரை மாவட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இதில் உயரம், மார்பளவு, ஒட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தேர்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தது.

    தேர்வு பெறாதவார்கள் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தேர்வு பெற்றவர்கள் 600 பேருக்கு எழுத்து தேர்வு நடைபெறும் தேதி தெரிவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    2-வது நாளான இன்று (23-ந் தேதி) சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள் உடல் தகுதி தேர்வில் பங்கேற்றனர். இன்று அதிகாலை 3 மணி முதல் இந்த உடல் தகுதி தேர்வுகள் நடந்தது.

    இதற்கு ராணுவ பணிக்கான ஆள் சேர்ப்பு இயக்குனர் கோவை கர்னல்ரானே தலைமை தாங்கினார். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அடுத்த கட்டமாக எழுத்து தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டது.

    அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் இனி வரும் நாட்களில் நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதையொட்டி சேலம் மாநகர போலீசார் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×