என் மலர்
நீங்கள் தேடியது "Akshaya Thrithiyai"
- இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம்.
- இந்த நாள் சக்தி வாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கும்
ஏப்ரல் 14-ந்தேதிக்கும் மே 14-ந்தேதிக்கும் இடைப்பட்ட சித்திரை மாத வளர்பிறை காலத்தில் 3-ம் பிறை தோன்றும் நாள்தான் அட்சய திரிதியை நாள் என்று அழைக்கிறோம்.
இந்த நாளில் நல்ல நேரம் பார்த்து நகை வாங்கினால் மேலும் மேலும் நகை வாங்கும் வாய்ப்பும் வசதியும் பெருகும் என்பது ஐதிகம்.
தனலட்சுமி, அதிலட்சுமி உள்பட 8 லட்சுமிகளும் அடி எடுத்து வைக்கும் இந்த நாளில் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சி, மற்றும் நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம்.
இந்த நாள் சக்தி வாய்ந்த நாள் என்பதால் தொட்டது துலங்கும் பெண் பார்க்கும் விசயத்தில் இருந்து எந்த காரியத்தை செய்தாலும் மகத்துவம் உண்டு.
- அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம்.
- இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர்.
அட்சய திரிதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம்.
ஆனால் நகைதான் பிரதானமாக வாங்கப்படுகிறது.
கடந்த அட்சய திருதியை நாளில் இந்தியா முழுவதும் சமார் 50 டன் தங்கம் விற்பனையானது.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 15 டன் தங்கம் விற்பனையானது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் 16 டன் தங்கம் விற்பனையாகும் என்று நகை வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போது தங்கம் விலை பெரும் உயர்வை சந்தித்துள்ளது.
இருப்பினும் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர்.
எனவே இந்த ஆண்டு நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என நகை கடை உரிமையாளர்கள் நம்புகின்றனர்.
அட்சய திருதியை அன்று நகை வாங்க உகந்த நேரம் வருமாறு:-
காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை, மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை, இரவு 6 மணி முதல் 7.30 மணிவரை.
- அட்சயத் திருதியை தினத்தன்று செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழிவற்ற, அளவற்ற பலன்களைத் தரும்.
- அத்தகைய நாட்களைத்தான் புண்ணிய கால நாட்கள் என்று சாஸ்திரங்களில் வரையறுத்து வைத்துள்ளனர்.
மனிதனுக்காக தரப்பட்ட ஆயுள் மிக, மிக குறைவானது.
எனவே குறைந்த முயற்சியில் அதிகமான பலன்களைப் பெற வேண்டிய நிலையில் மனிதர்கள் உள்ளனர்.
ஒருவர் தம் வாழ்நாளில் அதிகமான பலன்களைப் பெற வேண்டுமானால் உரிய காலத்தை அறிந்து கொண்டு, அந்த சமயத்தில் செயலை செய்ய வேண்டியதுள்ளது.
அத்தகைய நாட்களைத்தான் புண்ணிய கால நாட்கள் என்று சாஸ்திரங்களில் வரையறுத்து வைத்துள்ளனர்.
நாம் ஒவ்வொருவரும் அந்த அரிய புண்ணிய கால நாட்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொண்டால்தான் குறைந்த முயற்சியில் அதிக பலன்களைப் பெற்று, வாழ்வில் வெற்றிகளையும், செல்வங்களையும் குவிக்க முடியும்.
இதற்கு உதவும் புண்ணிய கால நாட்களில் அட்சயத் திருதியை தினம் முக்கியமானது.
அதோடு இணையற்ற மகத்துவமும் கொண்டது.
அட்சயத் திருதியை தினத்தன்று செய்யும் நல்ல செயல்கள் அனைத்தும் அழிவற்ற, அளவற்ற பலன்களைத் தரும்.
பொதுவாக அட்சயத் திருதியை தினத்தை நாம் எல்லோரும் செல்வத்தை பெருக்கும் தினமாக மட்டுமே கருதுகிறோம்.
மானிடர்களின் லௌகீக வாழ்க்கையில் 90 சதவீதம் பேர் செல்வம் சேர்ப்பதில்தான் குறியாக இருக்கிறார்கள்.
ஆன்மாவை சுத்தப்படுத்தி, முக்தி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் மிக சொற்பமே.
அட்சய திருதியை தினத்தன்று தெய்வங்களை ஆராதனை செய்தால், முக்தி பலனுக்கான படிக்கட்டுக்களை எட்டிப் பிடிக்கலாம்.
அட்சய திருதியை தினத்தன்று கருந்துளசியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த துளசியால் மகாவிஷ்ணுவை "மதுத்விஷாய நம" என்று சொல்லி 108 தடவை அர்ச்சிக்க வேண்டும்.
காலை, மாலை, இரவு என்று மூன்று நேரங்களிலும் இந்த அர்ச்சனையை செய்தல் வேண்டும்.
இது அளவற்ற பலனைத் தரும்.
- அரச மரத்தின் 4 பக்கங்களிலும் தண்ணீரை விட்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- பிறகு அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தளி இருப்பதாக கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
அன்று காலை எழுந்ததும் குளிக்க வேண்டும். ஏரி அல்லது வாய்க்காலில் தலை முழுவதும் நனையுமாறு குளிப்பது நல்லது.
நீராடி முடித்ததும் ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அந்த குடத்து தண்ணீரை எடுத்துச் சென்று அரச மரத்தின் வேரில் விட வேண்டும்.
அரச மரத்தின் 4 பக்கங்களிலும் தண்ணீரை விட்டு சுத்தப்படுத்த வேண்டும்.
பிறகு அதில் அனைத்து தெய்வங்களும் எழுந்தளி இருப்பதாக கருதி வழிபாடு செய்தல் வேண்டும்.
குறிப்பாக அரச மரத்தை 7 தடவை சுற்றி வந்து வழிபாடுகள் செய்ய வேண்டும்.
அதன் பிறகு பசு மாடுகள் இருக்கும் இடம் சென்று பசு மாட்டுக்கும், பசுங்கன்றுக்கும் கழுத்தில் சொறிந்து கொடுத்து, சாப்பிட உணவு ஏதாவது கொடுக்க வேண்டும்.
இவற்றை செய்து முடித்த பிறகே பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீவிஷ்ணுவை தரிசனம் செய்ய வேண்டும்.
அப்போது ஸ்ரீவிஷ்ணுவை மாதவன் எனும் பெயரில் தியானித்து வழிபாடுகள் செய்தல் வேண்டும்.
அட்சய திருதியை தினத்தன்று இத்தகைய வழிபாட்டை செய்தால் நாம் நினைக்கும் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும்.
- கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள்.
- நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள்.
அட்சய திருதியை தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடுங்கள்.
பிறகு பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையை போட்டு மேலே வாழை இலை ஒன்றினை இடுங்கள்.
இலையின் நடுவே கொஞ்சம் பச்சரிசியை பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள்.
அதனுள் காசுகளை போடுவது காசுகளை பரப்பி அதன் நடுவே கலசத்தினை வைப்பது எல்லாம் அவரவர் வழக்கப்படி செய்யலாம்.
கலசத்தின் அருகே ஒருபடி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள்.
கலசத்திற்கு பொட்டு, பூ வையுங்கள். லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள்.
பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழை இலையில் வலதுப்பக்கமாக வையுங்கள்.
நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள்.
அது விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
அட்சய திருதியை நாளில் எல்லோராலும் வாங்க முடிந்த பொருள் ஒன்று உண்டு.
அதிக பலன் தருவதும் அதுதான். உப்பு வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி கடாட்சம் உங்கள் வீடு தேடி வந்துவிடும்.
முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியங்கள்.
உங்களுக்கு தெரிந்த விஷ்ணு-லட்சுமி, சிவன்-பார்வதி, குபேரன் துதிகளை சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.
குசேலரின் கதையை படிப்பது, கேட்பது, சொல்வதும் சிறந்தது.
பின்னர் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள்.
இந்த பூஜையில் பாயசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நிவேதிப்பது சிறப்பானது.
அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்கு சென்று தரிசியுங்கள்.
அதன் பின்னர் மீண்டும் தூப, தீப ஆராதனையை கலசத்துக்கு செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள்.
உண்ணாவிரதம் இருப்பது எளிய திரவ ஆகாரம் மட்டும் உண்பது எல்லாம் அவரவர் வசதி, உடல்நலத்தை பொறுத்தது.
கலசத்தினை நகர்த்துவது விரதத்தினை நிறைவு செய்துவிட்டதாக அர்த்தம்.
பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காயை அடுத்து வெள்ளிக்கிழமை பூஜையில் உடைத்து பொங்கல் செய்யலாம்.
நெல்லை ஒரு முடிச்சாகக் கட்டி அரிசிவைக்கும் பாத்திரத்தில் வைத்து விடுங்கள். காசுகளை பீரோவில் வையுங்கள்.
அட்சய திரியை நாளில் விரதம் இருப்பது.
பூஜைகள் செய்வது புதிய பொருட்களை வாங்குவது எல்லாவற்றையும் விட முக்கியமானது, தானம் அளிப்பதும், முன்னோர் கடன்களை செய்வதும்தான்.
இல்லோதருக்கு உங்களால் இயன்ற அளவுக்கு உதவுங்கள். பெற்றோர் பெரியோரிடம் ஆசி பெறுங்கள். நீத்தார் கடன்களை அவசியம் செய்யுங்கள்.
- ஆனால் உண்மையில் அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு உரிய நாள் அல்ல.
- முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் யாரும் தங்கம் வாங்கியதே இல்லை.
அட்சயத் திருதியை என்றதுமே நகைக் கடைக்கு போய் தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மனதில் உருவாகியுள்ளது.
அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்பது பெண்கள் மனதில் ஒரு வைராக்கியமாகவே மாறி விட்டது.
ஆனால் உண்மையில் அட்சய திருதியை தினம் தங்கம் வாங்குவதற்கு உரிய நாள் அல்ல.
அன்று கண்டிப்பாக தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
பிறகு ஏன் தங்கம் வாங்கும் பழக்கமும், மோகமும் ஏற்பட்டது என்று கேட்கலாம்.
தங்கம் என்ற பொன், லட்சுமியைக் குறிக்கும். எனவே லட்சுமி வழிபாட்டில் தங்கத்தை வைத்து பிரார்த்தனை செய்தால், அது அட்சயமாக வளர்ந்து செல்வ செழிப்பைத் தரும் என்று கூறப்படுவதன் பேரில் தங்கம் வாங்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.
முன்பெல்லாம் அட்சய திருதியை நாளில் யாரும் தங்கம் வாங்கியதே இல்லை.
அதற்கு மாறாக தங்கத்தை தானம் செய்தார்கள்.
அட்சய திருதியை தினத்தன்று தங்கத்தை அவசியம் தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கான காரணமும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
அதாவது தங்கம் என்பது ஒரு உயிருக்கு பிரதிநிதியாக, சம அந்தஸ்து கொண்டது.
நமது உயிரை மற்றவருக்கு தானமாக தர இயலாது என்பதால் உயிருக்கு சமமான தங்கத்தை தானம் செய்வதால் நம்மையே தானம் செய்த உயர்வும், பலனும் கிடைக்கும்.
ஏழைகளுக்கு தங்கம் கொடுத்தால் அளவிடற்கரிய பலன்கள் வந்து சேரும்.
அது முடியாதபட்சத்தில் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி, மகன், மகள் போன்ற உறவினர்களுக்காவது தங்கம் தானம் செய்யலாம் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும்.
- ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம்.
தங்கம் கொடுக்க முடியவில்லையா கவலையேப் படாதீர்கள்.
உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும்.
ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம்.
உணவு செய்து கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிரும் போது உங்கள் வாழ்வு குளிர்ச்சி பெறும்.
இப்போது கோடைகாலம். உச்சக்கட்ட வெயில் வாட்டி வதைக்கிறது.
எனவே ஏழை-எளியவர்களுக்கு செருப்பு, குடை, குளிர்பானம் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம்.
மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை.
அன்று ஆடு, மாடு போன்றவற்றுக்குக் கூட உணவு கொடுத்தும், தண்ணீர் கொடுத்தும் உதவலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.
இத்தகைய தானத்தால், நமது மறைந்த முன்னோர்களுக்கு ஏற்படும் தாகம் தீர்க்கப்படும்.
அதோடு அவர்களுக்கு மேல் உலகில் நற்கதி உண்டாகும்.
எனவே அட்சய திருதியை தினத்தன்று தானம், உதவிகள் செய்ய தவறாதீர்கள்.
தெரு ஓரங்களில் எத்தனையோ கஷ்டப்பட்டவர்களைப் பார்த்து இருப்போம்.
அவர்களில் 5 பேருக்கு நம்மால் உதவ முடியாதா?
அந்த 5 பேருக்கு பசியாற உணவு கொடுத்து தாகம் தீர்க்கும் போது, அந்த பலன்கள் பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
குறைந்த பட்சம் சுய நலம் கருதியாவது இந்த தான-தர்மங்களை செய்யலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எதுவெல்லாம் தேவை, அவசியம் என்று நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள்.
நீங்கள் நினைப்பது, ஆசைப்படுவது பல மடங்கு பெருகி, உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே 2-ந்தேதி தானம் முக்கியம், மறந்து விடாதீர்கள்.
- மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார்.
- அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்!” என்றது அந்த அசரீரி.
சூரிய தேவனின் மகன், சனி பகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.
அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனி பகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.
மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி பகவான், மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார்.
வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.
ஊர் ஊராகச் சுற்றி வந்த சனி பகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.
நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளா மரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது.
அந்த நீர் சனி பகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது.
கூடவே ஓர் அசரீரி எழுந்தது. "சனி பகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த "பூச ஞான வாவி" என்ற ஞான தீர்த்தம் இது.
சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி பகவான் வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.
விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும்.
அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்!" என்றது அந்த அசரீரி.
தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனி பகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார்.
- ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம்.
- கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம்.
பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம்.
இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள்.
மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.
மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இவர், சனி பகவான் பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள்.
எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம்.
இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.
அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் "அபிவிருத்தி" நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம்.
அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.
வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.
சண்டீஸ்வரர், காலபைரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.
- ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்.
- தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது.
அட்சயபுரீஸ்வரர் தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம்.
எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனி பகவான்.
இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனி பகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது.
விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனி பகவான் கருதப்படுகிறார்.
தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனி பகவான்யின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர்.
இதனால் சனி பகவான் தோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.
தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது.
பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள்.
தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார்.
அட்சய திருதியை அன்று சனி பகவான்பகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
- புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.
- புண்ணியத்தை தேடிக் கொள்ள அட்சய திரிதியை அருமையான நாளாகும்.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் யார் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கிறதோ, அவர்களது வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.
இந்த மூன்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது.
செல்வம் இருந்து கல்வியும் வீரமும் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிலரிடம் கல்வி இருக்கும்.
ஆனால் செல்வமும், துணிச்சலான வீரமும் இல்லாமல் தவிப்பார்கள். எனவே கல்வி, செல்வம், வீரம் மூன்றும் வேண்டும்.
இந்த மூன்றையும் பெற்றுத் தரும் அரிய திருநாளாக அட்சய திரிதியை தினம் வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாவது நாள் அட்சய திரிதியை தினமாகும்.
அட்சய திரிதியை நாளில் நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.
அதனால்தான் நிறைய பேர் அட்சய திரிதியை தினத்தன்று புதிய பொருட்களையும், தங்கத்தையும் போட்டி போட்டு வாங்குவார்கள்.
நாளை எது வாங்கினாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும் என்பதால்தான் மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை வாங்குவார்கள்.
ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது.
நாளைய தினம் நாம் எந்த செயல் செய்தாலும் அது உங்களுக்கே இரட்டிப்பாக திரும்பி வந்து விடும்.
நீங்கள் ஒருவரை நாளை வஞ்சனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த வஞ்சனை உங்களுக்கு 2 மடங்காக திரும்பி வந்து விடும்.
அதே சமயத்தில் நாளை நீங்கள் தானம் செய்து பாருங்கள். அந்த தான பலன் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரண்டு மடங்காக உங்களுக்கே புண்ணியமாக திரும்பி வந்து விடும்.
புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.
புண்ணியத்தை தேடிக் கொள்ள அட்சய திரிதியை அருமையான நாளாகும்.






