என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

அட்சயபுரீஸ்வரர் கோவில் அமைப்பு
- ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம்.
- கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.
முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.
ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம்.
பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம்.
இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது.
அன்னைக்கு நான்கு கரங்கள்.
மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.
மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன.
அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
இவர், சனி பகவான் பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள்.
எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.
அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம்.
இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.
அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் "அபிவிருத்தி" நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம்.
அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.
தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.
வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன.
சண்டீஸ்வரர், காலபைரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.






