என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வெற்றி தரும் அட்சய திரிதியை
    X

    வெற்றி தரும் அட்சய திரிதியை

    • புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.
    • புண்ணியத்தை தேடிக் கொள்ள அட்சய திரிதியை அருமையான நாளாகும்.

    கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் யார் ஒருவருக்கு முழுமையாக கிடைக்கிறதோ, அவர்களது வாழ்க்கை நிறைவானதாக இருக்கும்.

    இந்த மூன்றில் எந்த ஒன்று குறைந்தாலும் வாழ்க்கை பூரணத்துவம் பெறாது.

    செல்வம் இருந்து கல்வியும் வீரமும் இல்லாவிட்டால் எந்த பிரயோஜனமும் இல்லை. சிலரிடம் கல்வி இருக்கும்.

    ஆனால் செல்வமும், துணிச்சலான வீரமும் இல்லாமல் தவிப்பார்கள். எனவே கல்வி, செல்வம், வீரம் மூன்றும் வேண்டும்.

    இந்த மூன்றையும் பெற்றுத் தரும் அரிய திருநாளாக அட்சய திரிதியை தினம் வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையை அடுத்த மூன்றாவது நாள் அட்சய திரிதியை தினமாகும்.

    அட்சய திரிதியை நாளில் நாம் எந்த செயலைத் தொடங்கினாலும் அது குறைவே இல்லாமல் பெருகும் என்பது ஐதீகம்.

    அதனால்தான் நிறைய பேர் அட்சய திரிதியை தினத்தன்று புதிய பொருட்களையும், தங்கத்தையும் போட்டி போட்டு வாங்குவார்கள்.

    நாளை எது வாங்கினாலும் அது இரட்டிப்பு பலன்களைத் தரும் என்பதால்தான் மக்கள் தங்களுக்கு விருப்பமானவற்றை வாங்குவார்கள்.

    ஆனால் ஒன்றை நாம் மறந்து விடக்கூடாது.

    நாளைய தினம் நாம் எந்த செயல் செய்தாலும் அது உங்களுக்கே இரட்டிப்பாக திரும்பி வந்து விடும்.

    நீங்கள் ஒருவரை நாளை வஞ்சனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

    அந்த வஞ்சனை உங்களுக்கு 2 மடங்காக திரும்பி வந்து விடும்.

    அதே சமயத்தில் நாளை நீங்கள் தானம் செய்து பாருங்கள். அந்த தான பலன் உங்கள் மனதை குளிர்விக்கும் வகையில் இரண்டு மடங்காக உங்களுக்கே புண்ணியமாக திரும்பி வந்து விடும்.

    புண்ணியம் வேண்டாம் என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.

    புண்ணியத்தை தேடிக் கொள்ள அட்சய திரிதியை அருமையான நாளாகும்.

    Next Story
    ×