என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

தங்கம் கொடுக்க முடியவில்லையா?
- உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும்.
- ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம்.
தங்கம் கொடுக்க முடியவில்லையா கவலையேப் படாதீர்கள்.
உங்களால் என்ன தானம் செய்ய முடியுமோ, அதை தானம் செய்யுங்கள் போதும்.
ஏழை-எளியவர்களுக்கு புத்தாடை வாங்கிக் கொடுக்கலாம்.
உணவு செய்து கொடுக்கலாம். அவர்கள் மனம் குளிரும் போது உங்கள் வாழ்வு குளிர்ச்சி பெறும்.
இப்போது கோடைகாலம். உச்சக்கட்ட வெயில் வாட்டி வதைக்கிறது.
எனவே ஏழை-எளியவர்களுக்கு செருப்பு, குடை, குளிர்பானம் போன்றவை வாங்கிக் கொடுக்கலாம்.
மனிதர்களுக்கு மட்டும்தான் என்று இல்லை.
அன்று ஆடு, மாடு போன்றவற்றுக்குக் கூட உணவு கொடுத்தும், தண்ணீர் கொடுத்தும் உதவலாம். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்.
இத்தகைய தானத்தால், நமது மறைந்த முன்னோர்களுக்கு ஏற்படும் தாகம் தீர்க்கப்படும்.
அதோடு அவர்களுக்கு மேல் உலகில் நற்கதி உண்டாகும்.
எனவே அட்சய திருதியை தினத்தன்று தானம், உதவிகள் செய்ய தவறாதீர்கள்.
தெரு ஓரங்களில் எத்தனையோ கஷ்டப்பட்டவர்களைப் பார்த்து இருப்போம்.
அவர்களில் 5 பேருக்கு நம்மால் உதவ முடியாதா?
அந்த 5 பேருக்கு பசியாற உணவு கொடுத்து தாகம் தீர்க்கும் போது, அந்த பலன்கள் பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
குறைந்த பட்சம் சுய நலம் கருதியாவது இந்த தான-தர்மங்களை செய்யலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு எதுவெல்லாம் தேவை, அவசியம் என்று நினைக்கிறீர்களோ, அவற்றையெல்லாம் தானம் செய்யுங்கள்.
நீங்கள் நினைப்பது, ஆசைப்படுவது பல மடங்கு பெருகி, உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.
எனவே 2-ந்தேதி தானம் முக்கியம், மறந்து விடாதீர்கள்.






