என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அட்சயபுரீஸ்வரர் ஆலய வரலாறு
    X

    அட்சயபுரீஸ்வரர் ஆலய வரலாறு

    • மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார்.
    • அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்!” என்றது அந்த அசரீரி.

    சூரிய தேவனின் மகன், சனி பகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர்.

    அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனி பகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.

    மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி பகவான், மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார்.

    வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.

    ஊர் ஊராகச் சுற்றி வந்த சனி பகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார்.

    நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளா மரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது.

    அந்த நீர் சனி பகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது.

    கூடவே ஓர் அசரீரி எழுந்தது. "சனி பகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த "பூச ஞான வாவி" என்ற ஞான தீர்த்தம் இது.

    சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி பகவான் வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.

    விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும்.

    அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்!" என்றது அந்த அசரீரி.

    தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனி பகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார்.

    Next Story
    ×