என் மலர்

  நீங்கள் தேடியது "Agricultural zone"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • போராட்டத்தில் ஈடுபட்டு வரும் “நமது நிலம் நமதே” அமைப்பை சேர்ந்த விவசாயிகள் கோவை ஆடீஸ் வீதியில் குவிந்தனர்.
  • ஏற்கனவே பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் போராட்டம் திரும்ப பெறப்படும்.

  கோவை,

  கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொழில் பூங்கா அமைக்க டிட்கோ மூலம் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் "நமது நிலம் நமதே" அமைப்பை சேர்ந்த விவசாயிகள் கோவை ஆடீஸ் வீதியில் குவிந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  "நமது நிலம் நமதே" அமைப்பின் போராட்டக்குழு தலைவர் ரவிக்குமார் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தப்படாது என கூறிய நீலகிரி எம்.பி. ஆ.ராசாவிற்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அதே வேளையில் பாதி கிணறை மட்டும் தாண்டி இருக்கின்றோம். போராட்டம் இன்னும் தொடர்கின்றது. அன்னூர், மேட்டுப்பாளையம் பகுதிகளை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

  ஏற்கனவே பிறப்பித்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் போராட்டம் திரும்ப பெறப்படும்.

  இந்த பகுதியில் பெங்களூரை தலைமை–யிடமாக கொண்ட நிறுவனம் விவசாயிகளின் நிலத்தை வாங்கி இருக்கின்றனர்.

  1996 முதல் 2008 வரை இந்த நிலத்தை அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கி இருக்கின்றனர். அவர்கள் வாங்கி இருக்கும் இடம் ஒரே இடத்திலோ அல்லது சதுரமாகவோ இல்லை.

  இரண்டு இடங்களில் மட்டும் 100 ஏக்கர் அளவில் இருக்கும். மற்ற இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இருப்பதால் தொழில் பூங்கா அமைக்க சாத்தியமில்லை. இது ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதும் அதை கையகப்படுத்துவதும் நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது.

  உள்ளூர் மக்கள் அனுமதி இல்லாமல் தொழிற்சாலைகள் தொடங்க கூடாது.

  விவசாயிகளின் போராட்டத்துடன் அண்ணாமலையையும், பா.ஜ.க.வையும் முடிச்சு போடாதீர்கள். எங்கள் போராட்டத்திற்கு அ.தி.மு.க., நாம் தமிழர், சிபிஎம், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு கொடுத்துள்ளன. எனவே அண்ணாமலை செய்வதற்கு எல்லாம் நாங்கள் பொறுப்பாக முடியாது.அண்ணாமலைக்கும் ஆ.ராசாவிற்கும் பிரச்சினை இருந்தால் அதை தனியாக பார்த்து கொள்ளட்டும்.

  நாங்கள் அரசு தொழிற் பேட்டை அமைப்பதை ஏற்க மாட்டோம். யாரை நம்புவது என தெரியாமல் கடவுளிடம் மனு கொடுத்தோம். சட்டரீதியாக போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமையுண்டு. எங்கள் போராட்டம் ஜனநாயகரீதியாக மட்டுமே இருக்கும்.

  கோரிக்கைகள் ஏற்கும் வரை அதிகாரிகளை நிலத்திற்குள் அனுமதிக்க மாட்டோம்.

  ஆ.ராசாவிடம் சொல்லப்படும் செய்திகள் தவறானவை. அதிகாரிகள் அவரிடம் தவறான தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.ஆ.ராசாவை இது தொடர்பாக நேரில் சந்தித்து பேசவும் தயாராக உள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீரென ஆடிஸ் வீதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
  • டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும்.

  அம்மாப்பேட்டை:

  சாலியமங்களம் அருகே விளை நிலங்கள் நடுவே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

  அப்போது விவசாய சங்கத்தினர் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

  விளை நிலங்களை பாதிக்கும் வகையில் டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும் என்று கூறினர். உங்களது கோரிக்கைகள் குறித்து மேல் அதிகாரிகளிடம் எடுத்து கூறப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

  ×