என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actor Pawan Kalyan"

    OG படத்தை சுஜித் இயக்கியுள்ளார்

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்நிலையில் படத்தின் டிரெய்லர் ரிலீசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தின் டிரெய்லர் வரும் செப்- 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். 

    • பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். படத்தின் செகண்ட் சிங்கிளான சுவி சுவி பாடல் வரும் விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    • பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

    பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

    படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

    • 17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார்.
    • படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கதைக்களம்

    17 ஆம் நூற்றாண்டில் கதை நடக்கிறது. நாயகன் பவன் கல்யாண் ஊரில் சின்ன சின்ன திருட்டு செய்து இல்லாதவர்களுக்கு உதவி வருகிறார். ஒரு பக்கம் முகலாயர்கள் இந்துக்கள் வாழும் பகுதிகளை அழித்து நாட்டை தன்வசமாக்கி வருகிறார்கள். அப்படி இந்துக்களை அடிமையாக்கி பல மாகாணங்களை தன்வசமாக்கி வைத்து இருக்கிறார் பாபி தியோல். மேலும் இவர் கோஹினூர் வைரத்தை வைத்து இருப்பதால், அதை திருடி கொடுக்க பவன் கல்யாணுக்கு அழைப்பு வருகிறது. இதை ஏற்றுக் கொள்ளும் பவன் கல்யாண், பாபி தியோலை தேடி செல்கிறார்.

    இறுதியில் பவன் கல்யாண் கோஹினூர் வைரத்தை கண்டு பிடித்தாரா? பாபி தியோல் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்துக்களை பவன் கல்யாண் மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் பவன் கல்யாண், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அடிமை மக்களுக்காக போராடுவது, எதையும் துணிந்து செய்வது, காதலிப்பது என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி வருகிறார். நாயகியாக நடித்திருக்கும் நிதி அகர்வால் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் பாபி தியோல். மிடுக்கான தோற்றத்தால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இவரது உடல் மொழி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. சத்யராஜ், ஈஸ்வரிராவ் உள்ளிட்ட பலர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

    இயக்கம்

    17 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருந்தது என்பதை வரலாற்று பின்னணியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் கிரிஷ் ஜாகர்லாமுடி, ஜோதி கிருஷ்ணா. பவன் கல்யாண் ரசிகர்களுக்காக பல கமர்சியல் அம்சங்கள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ரசிகர்களை கவர்ந்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் எதார்த்த மீறலாக அமைந்துள்ளது.

    தலை குனிந்து இருக்கும் மக்களை நிமிர வைப்பது, ஆடு புலி ஆட்டத்தில் நடக்கும் சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. பல காட்சிகளில் பவன் கல்யாணுக்கு காலில் றெக்கை கட்டியது போல் பறக்கிறார். இதை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

    ஒளிப்பதிவு

    ஞான சேகர் மற்றும் மனோஜ் பரமம்சா ஆகியோரின் ஒளிப்பதிவு சிறப்பு.

    இசை

    கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

    தயாரிப்பு

    Mega Surya Production நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது

    ஹரி ஹர வீரமல்லு - 3/5

    • பவன் கல்யாண் அடுத்ததாக உஸ்தாட் பகத் சிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார்.

    ஹரி ஹர வீரமல்லு படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் அடுத்ததாக உஸ்தாட் பகத் சிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹரிஷ் ஷங்கர் இயக்குகிறார். படத்தில் ஸ்ரீலீலா மற்றும் கே.எஸ் ரவிக்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்நிலையில் படத்தில் ராஷி கண்ணா நடித்துள்ள கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் ஷ்லோகா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். போஸ்டரில் கையில் கேமராவுடன் நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, திரைப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாக இருக்கிறது. படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார்.

    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. பவன் கல்யான் பேசும் மாஸ் பன்ச் வசனங்கள் டிரெய்லர் காட்சியில் இடம் பெற்றுள்ளது. ஆக்ஷன் அதிரடியாக திரைப்படம் உருவாகியுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    முன்னதாக ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் படத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

    'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியா இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளனர்.

    • பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
    • எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு. இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்திருக்கிறது.

    பவன் கல்யாணின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் பாடலை ஹிட் அடித்து வருகிறார்கள். .

    ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்தின் இசையமைப்பை மேற்கொள்கிறார்.

    ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்த்னம் தயாரிக்கும் ' ஹரி ஹர வீர மல்லு . திரைப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    • திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் சேதப்படுத்தினர்.
    • சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல சினிமா நடிகரும், ஜன சேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினத்தில் உள்ள லீலா மஹால் திரையரங்கில் 2 காட்சிகள் பவன் கல்யாண் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இந்த தியேட்டரில் 700 பேர் மட்டுமே உட்கார்ந்து படம் பார்க்க முடியும். ஆனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தனர். அவர்கள் உட்கார்ந்து படம் பார்க்க முடியாததால் போதையில் இருந்த ரசிகர்கள் சினிமா திரையை பிளேடால் கிழித்தனர். இதுகுறித்து சினிமா தியேட்டர் நிர்வாகத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு 4 போலீசார் மட்டுமே வந்ததால் அவர்களால் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து 2-வது காட்சி திரையிடப்பட்டது. அப்போது ஆவேசமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் திரையை முழுவதுமாக கிழித்து அதில் ஹாப்பி பர்த்டே பவன் கல்யாண் என எழுதினர்.

    மேலும் திரையரங்கில் இருந்த இருக்கைகள், ஏ.சி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். சுமார் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சினிமா தியேட்டர் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதால் இதனை சீரமைக்க 5 நாட்கள் ஆகும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் பிறந்த நாளில் சினிமா தியேட்டர் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×