பவன் கல்யாணின் OG - பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு!

பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
பவன் கல்யாணின் OG - பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர போஸ்டர் வெளியீடு!
Published on

பவன் கல்யாண் ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து தே கால் ஹிம் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். சுஜி இதற்கு முன் சாகோ மற்றும் ரன் ராஜா ரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் பிரியங்கா மோகனின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் கண்மணி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படம் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருகிறார்.அதன் பிறகு சம்பவத்தை மையமாக வைத்து திரைப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர். திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com