என் மலர்
சினிமா செய்திகள்

பவன் கல்யாணின் ஹரி ஹர வீரமல்லு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அறிவிப்பு!
- ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
- பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
பவர் ஸ்டார் பவன் கல்யானின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ஹரி ஹர வீரமல்லு.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பவன் கல்யாணின் படம் திரைக்கு வருவதால் அவரது ரசிகர்கள் ஏகோபித்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முன்னதாக ஹரி ஹர வீர மல்லு திரைப்படம் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் படத்தில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
'ஹரி ஹர வீரமல்லு' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியா இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளனர்.
Next Story






