என் மலர்
நீங்கள் தேடியது "Ola Electric"
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி புது எலெக்ட்ரிக் கார் வெளியீட்டை உணர்த்தும் டீசரை பகிர்ந்து இருக்கிறார்.
- ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரண்டு அறிவிப்புகளை வெளியிட ஓலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது.
ஆகஸ்ட் 15, 2021 அன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கிய ஓலா எலெக்ட்ரிக் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தனது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்பே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் எதிர்கால ஸ்டைலிங், இரு யு வடிவ ஹெட்லேம்ப்கள், பொனெட் நெடுக கிடைமட்ட ஸ்டிரைப் அடங்கிய செடான் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருந்தது. ஓலா பேட்ஜிங் கொண்ட இந்த கார் ஸ்ப்லிட் ஸ்டைல் எல்இடி டெயில் லேம்ப்-கள், கனெக்டிங் லைட் பார் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது வெளியாகி இருக்கும் டீசர்களின் படி ஓலா எலெக்ட்ரிக் செடான் மாடல் முழு சார்ஜ் செய்தால் 500-க்கும் அதிக கிலோ மீட்டர் ரேன்ஜ் வழங்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி ZS EV போன்ற எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு இருக்கும் டீசர்களின் படி புது ஓலா எலெக்ட்ரிக் வாகனம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தலைசிறந்த ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது.
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏப்ரல் - மே மாதங்களில் மட்டும் ரூ. 500 கோடி வருவாய் ஈட்டியிருக்கிறது.
- எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் 50 சதவீத பங்குகளை ஓலா எலெக்ட்ரிக் பிடித்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓலா எலெக்ட்ரிக், 2022-2023 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களுக்கான வருவாய் விவரங்களை வெளியிட்டு உள்ளது. ஏப்ரல் மற்றும் மே 2022 மாதங்களில் மட்டும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 500 கோடி வரையிலான வருவாய் ஈட்டியதாக அறிவித்து இருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி இந்த நிதியாண்டின் இறுதியில் 1 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ. 7 ஆயிரத்து 824 கோடி வருவாயை எட்டும் நிலையில் இருப்பதாகவும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஓலா நிறுவனம் தனது இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

தற்போது ஒட்டுமொத்த எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் 50 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. "வாடிக்கையாளர்களுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக காட்சியளிக்கிறது. ஓலா பியுச்சர் பேக்டரியில் வாகன உற்பத்தியை சீராக இயக்க முடிகிறது."
"இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எக்கச்சக்க முன்பதிவுகள் நடைபெற்று இருப்பதால், உற்பத்தி பணிகளை முடுக்கி விடும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
- ஒலா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது.
- இது அந்நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் வாகனம் ஆகும்.
ஓலா நிறுவனம் உருவாக்கி வரும் எலெக்ட்ரிக் செடான் மாடல் காரின் கான்செப்ட் படங்களை வெளியிட்டு உள்ளது. இந்த டீசர் ஓலா கஸ்டமர் டே நிகழ்வின் போது வெளியானது. இந்த நிகழ்வு பெங்களூரில் உள்ள ஆலையில் நடைபெற்றது. இது பற்றிய கூடுதல் விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன சி.இ.ஒ. பாவிஷ் அகர்வால் தெரிவித்தார்.

டீசர் படங்களின் படி இந்த வாகனம் லோ-ஸ்லங் செடான் மாடலாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது ஸ்போர்ட் டிசைன், டபுள் பாரெல் ஹெட்லேம்ப்கள், அதனிடையே எல்.இ.டி. ஸ்ட்ரிப், பின்புறம் காரின் அகலம் முழுக்க எல்.இ.டி. ஸ்ட்ரிப் காணப்படுகிறது. தற்போது வெளியாக இருக்கும் புகைப்படங்களின் படி ஓலா நிறுவனம் தனது வாகனங்களில் டாப்-டவுன் வழிமுறையை பின்பற்றுவதாக தெரிகிறது.
ஏற்கனவே ஓலா நிறுவனம் கால் டாக்சி துறையில் இயங்கி வருவதை அடுத்து, புதிய எலெக்ட்ரிக் கார்கள் கால் டாக்சிக்களாகவும் பயன்படுத்தலாம். எனினும், இது பற்றி அந்நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கிய ஓலா நிறுவனம் இதே பானியை தனது எலெக்ட்ரிக் காரிலும் கொண்டுவரும் என எதிர்பார்க்கலாம்.


