search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 people arrest"

    நாகை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகையை அடுத்த நாகூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஏட்டு ஜெயராமன், பெண் தலைமைக் காவலர் ஷோபா மற்றும் போலீசார் இன்று காலையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது நாகூர் வெட்டாறு பாலம் அருகில் உள்ள ஆற்றில் 5 மாட்டு வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த கண்டனர். உடனே அவர்களை அழைத்து விசாரித்ததில் அரசு உரிய அனுமதியின்றி இல்லாமல் மணல் அள்ளுவது தெரிய வந்தது.

    உடனே மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்த நாகூர் போலீசார் நாகூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து 5 பேரையும் விசாரணை செய்தனர்.

    இதில் தெத்தி சிவன் சன்னதி தெருவை சேர்ந்த முத்துக்குமார் (வயது 38) அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை (40) தெற்கு தெருவை சேர்ந்த ராஜகுரு (44) மேலத்தெருவை சேர்ந்த கல்யாணசுந்தரம் (45) வடகுடி வடக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன்(38) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணல் அள்ளிய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்து 5 பேரையும் கைது செய்தனர். #tamilnews
    மதுரையில் 5700 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் தந்தை, மகன்கள் உள்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரையில் பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக புகையிலை, குட்கா விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்பேரில் நகரில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தெற்குவாசல், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பிள்ளையார் பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற ரவிசங்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 2500 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 62), அவரது மகன்கள் செந்தில்குமார் (37), பழனிராஜன் (31) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3000 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவனியாபுரம் போலீசார் என்.எஸ்.கே. நகரில் ரோந்து சென்றபோது புகையிலை விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 195 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×