search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 person arrested"

    • ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் போலி மதுபானங்கள் விற்பதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 474 மதிப்பிலான 196 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பகுதியில் புகையிலை பொருட்கள் மற்றும் போலி மதுபானங்கள் விற்பதாக மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் டி.எஸ்.பி.முருகேசன் ஆலோசனை யின்படி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணக்குமார், இளஞ்செழியன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் சோதனை நடத்தி வந்தனர்.

    ஏ.பி.பி. நகரை சேர்ந்த குப்புசாமி (வயது50) வீட்டில் ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 474 மதிப்பிலான 196 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதனை சப்ளை செய்த ஒட்டன்சத்திரம் சாலைப்புதூரை சேர்ந்த மோசஸ்பெனினா (42), திண்டுக்கல் மேட்டுப்பட்டி அன்னைநகரை சேர்ந்த சையது முகமது (28) ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 1392 போலி மது பாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். தலைமறைவான முகமது அலி உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட எஸ்.பி. தெரிவிக்கையில், கள்ள சந்தையில் மதுபானம் விற்பவர்கள் மீதும் இதற்கு துைண போகும் நபர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்குரதவீதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(42). இவர் வாரச்சந்தையில் மொத்த வியாபாரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு தேவையான பொருட்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அதனை சரிபார்த்த போது பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5200 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார்அளித்தார். போலீசார் விசாரணையில் ஜக்கம்மாள் கோவில் தெருவைேசர்ந்த அசோக்குமார்(32), 2-வது வார்டு பொன்னகரை சேர்ந்த அலெக்ஸ்(44), வடக்கு முஸ்லீம்தெருவை சேர்ந்த சேக்அஜ்மீர்(46) ஆகிய 3 பேரும் சேர்ந்து அதனை திருடியிருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(29). இவர் அதேபகுதியில் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுமாடுகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அதில் பசுமாடு, ஆட்டுகிடா ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனைதிருடியது மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி, கம்பத்தை சேர்ந்த சதீஸ், விஜய், விஜிகுமார் என தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கணேஷ்பாண்டி மற்றும் சதீஸ் தப்பிஓடிவிட்டனர். விஜிகுமாரை போலீசார் கைது செய்து பசுமாடு மற்றும் ஆட்டுகிடாவை பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த விஜய் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • மணல் கடத்திய போது தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    பணகுடியை அடுத்த கூட்டம்புளி பகுதியில் எம்.சாண்ட் மணல் கடத்தப்படுவதாக பழவூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனடியாக நேற்று சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் அஞ்சுகிராமம்-உவரி சாலையில் கூட்டாம்புளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 4 கனரக லாரிகளை தடுத்து நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து லாரியை சோதனை செய்தனர். அவற்றில் குண்டுகற்கள், எம்.சாண்ட் உள்ளிட்டவை இருந்தன. ஆனால் அவற்றுக்கான உரிய ரசீது இல்லை.

    இதையடுத்து போலீசார் 4 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பணகுடி அருகே உள்ள கைலாசபுரத்தை சேர்ந்த நாகராஜ்(வயது 23), செட்டிகுளத்தை சேர்ந்த சிவக்குமார்(46), குமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்த சிங்(30) என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து, தப்பியோடிய 4 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×