search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னமனூர் சந்தையில் மளிகை பொருட்கள் திருடிய 3 பேர் கைது
    X

    கோப்பு படம்

    சின்னமனூர் சந்தையில் மளிகை பொருட்கள் திருடிய 3 பேர் கைது

    • பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
    • போலீசார் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்குரதவீதியை சேர்ந்தவர் வெற்றிவேல்(42). இவர் வாரச்சந்தையில் மொத்த வியாபாரக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு தேவையான பொருட்களை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் அதனை சரிபார்த்த போது பாமாயில், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட ரூ.5200 மதிப்பிலான பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார்அளித்தார். போலீசார் விசாரணையில் ஜக்கம்மாள் கோவில் தெருவைேசர்ந்த அசோக்குமார்(32), 2-வது வார்டு பொன்னகரை சேர்ந்த அலெக்ஸ்(44), வடக்கு முஸ்லீம்தெருவை சேர்ந்த சேக்அஜ்மீர்(46) ஆகிய 3 பேரும் சேர்ந்து அதனை திருடியிருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருடிய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    தேவாரம் அடுத்துள்ள மீனாட்சிபுரம் வடக்குதெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(29). இவர் அதேபகுதியில் விவசாயம் செய்து வருவதுடன் ஆடுமாடுகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். அதில் பசுமாடு, ஆட்டுகிடா ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து தேவாரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனைதிருடியது மீனாட்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்பாண்டி, கம்பத்தை சேர்ந்த சதீஸ், விஜய், விஜிகுமார் என தெரியவந்தது. அவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது கணேஷ்பாண்டி மற்றும் சதீஸ் தப்பிஓடிவிட்டனர். விஜிகுமாரை போலீசார் கைது செய்து பசுமாடு மற்றும் ஆட்டுகிடாவை பறிமுதல் செய்தனர். படுகாயமடைந்த விஜய் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×