search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "144 prohibitory order"

    • செப்டம்பர் 9-ம் தேதி முதல் ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • வெளிமாவட்ட வாகனங்கள் ராமநாதபுரத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் 11-ம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

    வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது.
    • உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது.

    புதுடெல்லி:

    வட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன.

    இமாச்சலபிரதேசத்தில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து அனைத்து பகுதிகளிலும் சூழ்ந்தது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

    குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் வெள்ள நீர் புகுந்தது. ஏற்கனவே டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்திருந்த நிலையில் யமுனா நதி வெள்ளமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து இருப்பதால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், பஸ் என பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

    சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    தொடர் கன மழை காரணமாக யமுனா ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயந்ந்தது. நேற்று பகல் 1 மணிக்கு 208.62 மீட்டராக அதிகரித்தது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெரும் வெள்ளம் டெல்லிக்குள் புகுந்தது.

    இந்த நிலையில் யமுனா ஆற்றுக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்துள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு ஆற்றின் நீர் மட்டம் 208.62 மீட்டர் அளவிலேயே இருந்தது. நீர் மட்டம் உயராததால் இனிமேல் குறைய தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து மத்திய நீர் ஆணைய இயக்குனர் ஷரத் சந்திரா கூறும்போது, அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணைக்கு நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. யமுனா ஆற்றில் நீர் மட்டம் சீராகி விட்டது. இன்று ஆற்றின் நீர் மட்டம் 208.45 மீட்டராக குறையும் என்று எதிர் பார்க்கப்படு கிறது என்றார்.

    யமுனா ஆற்றின் நீர் மட்டம் நேற்று இரவு நிலையான அளவு வந்து குறைய தொடங்கி இருந்தாலும் அபாய கட்டத்தை விட மூன்று மீட்டர் உயரத்தில் தண்ணீர் இன்னும் பாய்கிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    யமுனா ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி சென்ற தண்ணீரின் அளவு குறைய தொடங்கியுள்ளதால் டெல்லியில் வெள்ளம் வடிகிறது.

    அதே வேளையில் டெல்லி முழுவதும் வெள்ள காடாக இருப்பதால் தண்ணீர் வடிய சில நாட்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் நாளை மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வட மாநிலங்களில் கன மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு மேலும் 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் 17 பேர் பலியானார்கள். இமாச்சலபிரதே சத்தில் 6 பேர், அரியானாவில் 5 பேர் பஞ்சாப்பில் 4 பேர், உத்தரகாண்ட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

    ஒட்டு மொத்தமாக வட மாநிலங்களில் மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. இதில் இமாசல பிரதேசத்தில் அதிகமானோர் பலியாகி இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் வெள்ளம் புகுந்தது. நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் செல்கிறது. கடும் பாதிப்புக்குள்ளாகி இருந்தும் இமாசலபிரதேச மாநிலத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அங்கு லஹவுல் ஸ்பிதி மற்றும் கின்னார் மாவட்டங்களில் சிக்கி தவித்த சுற்றுலா பயணிகள் 1000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    • யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி.

    டெல்லியில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால், சாலை எங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    டெல்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    யமுனை ஆற்றில் இருந்து வெள்ளநீர் வெளியேறாமல் இருக்க தடுப்புகள் அமைக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி, யமுனை ஆற்றில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருப்பதாக டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.

    • எதிர்க்கட்சிகளின் பேரணி அறிவிப்பை தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • பாராளுமன்றத்தின் வெளியே உள்ள சாலையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன

    அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    அதில் பங்கு சந்தையில் அதானி குழுமம் பல முறைகேடுகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இதன் காரணமாக அதானி நிறுவன பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அந்த நிறுவன பங்குகளில் முதலீடு செய்தவர்கள் கடும் நஷ்டத்துக்கு உள்ளானார்கள்.

    மத்திய அரசின் பல பொதுத்துறை நிறுவனங்கள் அதானி குழுமம் பங்குகள் மீது முதலீடு செய்து இருந்தன. இதனால் இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையில் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்பி அமளியில் ஈடுபட்டன.

    அதானி குழும மோசடி தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் கட்சியும் மனுதாக்கல் செய்து இருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    அதானி விவகாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க எம்.பி.க்கள் ராகுல் காந்தி பிரச்சினையை கிளப்பினார்கள். இந்திய ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அதானி குழுமம் விவகாரம் குறித்து எதிர்கட்சியினர் இன்று ஆலோசனை நடத்தினர். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேல்சபை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 18 எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    டி.ஆர்.பாலு (தி.மு.க.), வைகோ (ம.தி.மு.க.), சஞ்சய் ராவத் (சிவசேனா உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    அதானி விவகாரம் குறித்து கூட்டுகுழு விசாரணைக்கு மத்திய அரசு மறுத்து வருவதால் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    அதானி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று புகார் அளிப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து இன்று மதியம் 12.30 மணியளவில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எம்.பி.க்கள் ஊர்வலமாக சென்றனர்.

    காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சி எம்.பி.க்கள் இந்த பேரணியில் பங்கேற்றனர். அவர்கள் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்ற பாதகைகளை வைத்து இருந்தனர்.

    அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு மனு ஒன்றை எதிர்கட்சிகள் அளிக்க உள்ளனர்.

    எதிர்கட்சி எம்.பி.க்கள் பேரணி காரணமாக பாராளுமன்றத்துக்கு வெளியே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருந்தனர். பல இடங்களில் தடைகள் வைக்கப்பட்டு இருந்தன.

    • இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிப்பு.
    • அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் அன்பில், கீழ் அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம் ஆகிய 4 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மாசி திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உள்ளதால், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இன்று முதல் மார்ச் 8ம் தேதி பிற்பகல் 2 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அன்பில் கிராமத்தில் உள்ள ஆச்சிராம வள்ளியம்மன் கோவில் திருவிழா எதிரொலியால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×