என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்றம் ஒத்திவைப்பு"

    • மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.
    • காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு இன்று தொடங்கியது.

    டெல்லியில் நேற்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள். அதோடு அவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுத்தனர்.

    இந்த விவகாரத்தை ஆளும் பா.ஜ.ஜக உறுப்பினர்கள் எழுப்பினார்கள். காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    பாராளுமன்ற மக்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து பா.ஜ.கா எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதிக்கு வந்து காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமருக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பான பிரச்சினையை கிளப்பினார்கள்.

    இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த அமளியால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினை கிளப்பியதால் 2 மணி வரை அைவ ஒத்தி வைக்கப்பட்டது.

    இதே பிரச்சினையை மேல்சபையிலும் பா.ஜ.க உறுப்பினர்கள் கிளப்பினார்கள். மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

    இது காங்கிரஸ் கட்சியின் சிந்தனையையும், மனநிலையையும் காட்டுகிறது. ஒரு பிரதமருக்கு எதிராக இது போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர் மல்லி கார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

    காங்கிரஸ் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலைக்கு சென்றுவிட்டது. இது கற்பனை செய்ய முடியாதது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பா.ஜனதா எம்.பி.க்களின் அமளியால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    பாராளுமன்றத்தில் இன்று மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. #MekedatuIssue #ADMK #WinterSession
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.

    இன்றைய கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.



    இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப உள்ளதால் கூட்டத் தொடர் முழுவதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #MekedatuIssue #ADMK #WinterSession
    திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. #RIPKarunanidhi #ParliamentAdjourned
    புதுடெல்லி:

    திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்படுகிறது. கருணாநிதி மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேரில் வந்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் பாராளுமன்றம் இன்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். மக்களவையில் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர். பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.



    எனினும் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவிக்கான வேட்புமனுக்கள் பெறும் பணி மட்டும் திட்டமிட்டபடி நடைபெறுகிறது. #RIPKarunanidhi #ParliamentAdjourned
    ×