என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி"

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று மாலை நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது.

    இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

    இதன்மூலம் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியது.

    கடந்த 2016-ம் ஆண்டு இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
    • இதில் ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

    இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன.
    • 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

    14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. கடந்த 28-ந் தேதி தொடங்கிய இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

    இதில் இன்றுஇரவு 8 மணிக்கு நடைபெறும் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் 'நம்பர் ஒன்' அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொள்கிறது.

    7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்தையும், கால்இறுதியில் பெனால்டி ஷூட்டில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சையும், அரைஇறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவையும் தோற்கடித்து 10-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

    ஸ்பெயின் அணி லீக் சுற்றில் எகிப்து, பெல்ஜியம், நமிபியாவையும், கால்இறுதியில் 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தையும், அரைஇறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவையும் வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் கால் பதித்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 6-ல் ஜெர்மனியும், ஒன்றில் ஸ்பெயினும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்தது.

    மொத்தத்தில் உலகக் கோப்பையை 8-வது முறையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ஜெர்மனியும், முதல்முறையாக கோப்பையை கையில் ஏந்த ஸ்பெயினும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

    முன்னதாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, அர்ஜென்டினாவை சந்திக்கிறது. 2 முறை சாம்பியனான இந்தியா உள்ளூரில் நடைபெறும் இந்த போட்டியில் வெறுங்கையுடன் வெளியேறாமல் குறைந்தபட்சம் ஒரு பதக்கத்துடன் நிறைவு செய்ய போராடும். ஆனால் சமபலம் வாய்ந்த அர்ஜென்டினாவும் கடும் சவால் அளிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

    போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்ரீஜேஷ் கூறுகையில், 'ஜெர்மனிக்கு எதிரான அரைஇறுதியில் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. எங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் எதிரணிக்கு தொடக்கத்தில் இருந்தே எளிதாக கோல் அடிக்கும் வாய்ப்புகளை வழங்கி தவறிழைத்து விட்டோம். நாங்கள் முதலில் தற்காப்பு ஆட்டத்தில் கவனம் செலுத்திவிட்டு, பிறகு தாக்குதலை தொடுத்து கோலுக்கான வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். முந்தைய தவறுகளை திருத்தி கொண்டு அர்ஜென்டினாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வெண்கலப்பதக்கத்தை வெல்ல முயற்சிப்போம்' என்றார்.

    7-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்-நியூசிலாந்து (பகல் 12.30 மணி), 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் பெல்ஜியம்-நெதர்லாந்து (பிற்பகல் 3 மணி) அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே சென்னையில் நேற்று நடந்த 15-வது இடத்தை நிர்ணயிப்பதற்கான ஆட்டத்தில் சிலி 2-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி 15-வது இடத்தை சொந்தமாக்கியது. சுவிட்சர்லாந்து 16-வது இடம் பெற்றது.

    13-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசியா- ஜப்பான் அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிவடைந்ததால் வெற்றியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பதம் பார்த்தது.

    11-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

    • ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.  

    • 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்தியா , 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது.

    இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
    • பி பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன.

    சென்னை:

    14-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை மற்றும் மதுரையில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை எந்தெந்த பிரிவில் இடம்பெற வேண்டும் என்பதை குலுக்கல் மூலம் நேற்று சர்வதேச ஹாக்கி சம்மேளனம் முடிவு செய்தது.

    'ஏ' பிரிவு: நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து

    'பி' பிரிவு: முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து

    'சி' பிரிவு: முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா

    'டி' பிரிவு: ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா

    'இ' பிரிவு: நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா

    'எப்' பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென்கொரியா, வங்காளதேச அணிகளும் இடம்பிடித்துள்ளன.

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் 4 கோல்கள் அடித்து முன்னிலை.
    • 2-வது பாதி நேர ஆட்டத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 கோல்கள் அடித்தது.

    பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் கனடாவை எதிர்கொண்டது. இந்திய இளம் வீராங்கனைகள் கோல் கோலாக அடிக்க இந்தியா 12-0 என கனடாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    அன்னு 4, 6 மற்றும் 39-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்து அசத்தினார். திபி மோனிகா டோப்போ 21-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    மும்தாஜ் கான் 26, 51, 54 மற்றும் 60-வது நிமிடங்களில் என நான்கு கோல் அடித்தார். தீபிகா சோரங் 34, 50 மற்றும் 54-வது நிமிடங்களில் என மூன்று கோல்கள் அடித்தார்.

    போட்டி தொடங்கியது முதலே இந்திய வீராங்கனைகள் அட்டாக்கிங் அணுகுமுறையை கையாண்டனர். போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அன்னு கோல் அடித்தார். தொடர்ந்து அட்டாக்கிங் அணுமுறையில் விளையாடிய போதிலும் முதல் கால் பகுதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை.

    தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய வீராங்கனைகள் 2-வது காலிறுதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்கள் அடித்தனர். இதனால் பாதி நேர ஆட்டத்தில் இந்தியா 4-0 என முன்னிலைப் பெற்றது.

    3-வது காலிறுதி நேரத்திலும் 4 கோல்களும், அதன்பின் கடைசி கால் பகுதி ஆட்டத்தில் 4 கோல்களும் அடித்தனர். இதனால் 12-0 என வெற்றி பெற்றனர்.

    இந்திய வீராங்கனைகள் நாளை ஜெர்மனியை எதிர்கொள்கின்றனர்.

    • மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்தது.
    • நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது.

    கோலாலம்பூர்:

    13-வது ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

    இதில் 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ள 2 முறை சாம்பியனான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று வலுவான ஸ்பெயினை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணியின் கையே ஓங்கி இருந்தது. முதலாவது நிமிடத்திலேயே ஸ்பெயின் கோல் கணக்கை தொடங்கியது. அந்த அணி வீரர் காப்ரி வெர்டெல் இந்த கோலை அடித்தார்.18-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை ஸ்பெயின் கேப்டன் ரபி ஆந்த்ரே கோலாக்கினார். இதனால் ஸ்பெயின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

    33-வது நிமிடத்தில் இந்திய அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரோஹித் இந்த கோலை அடித்தார். முதல் கோல் அடித்த காப்ரி வெர்டெல் 41-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி மீண்டும் கோலடித்து தனது அணியின் முன்னிலையை அதிகரித்தார். 60-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை ரபி ஆந்த்ரே கோலாக மாற்றினார்.

    கடைசி 5 நிமிடங்களில் இந்திய அணிக்கு 3 பெனால்டி வார்னர் வாய்ப்புகள் கிட்டியது. ஆனால் அதனை கோலாக்க இந்திய வீரர்கள் எடுத்த முயற்சியை ஸ்பெயின் கோல்கீப்பர் கேப்லாடெஸ் அருமையாக தடுத்து நிறுத்தினார்.

    முடிவில் ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்து தனது பிரிவில் முதலிடம் வகிக்கிறது. 2-வது ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதலாவது ஆட்டத்தில் தென் கொரியாவை (4-2) வென்று இருந்தது.

    இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென்கொரியா 4-1 என்ற கோல் கணக்கில் கனடாவை தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    'டி' பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் 4-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை தோற்கடித்து முதலாவது வெற்றியை தனதாக்கியது. அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்துடன் (3-3) டிரா கண்டு இருந்தது. இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி முதல் வெற்றியை சொந்தமாக்கியது.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது. தனது பிரிவில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியா அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின்-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

    ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர் வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி வரை ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வந்து சேர்ந்தது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கிய வீரர்களை, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். தூதரகத்தில் பாகிஸ்தான் அணியினருக்கு இன்று மதிய விருந்து வழங்கப்பட்டது. 

    இந்நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் தூதரக பொறுப்பாளர், ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று கூறிய அவர், வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடனும், திறமையுடனும் செயல்படுவார்கள் என்று நம்புவதாக தெரிவித்தார்.

    2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் சிறப்பு அதிகாரங்களை மத்திய திரும்பப் பெற்றதுடன்  மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் முடிவை அறிவித்த பிறகு, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது.  காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    ஆனால், பயங்கரவாதம், விரோதம் மற்றும் வன்முறை இல்லாத சூழலில், பாகிஸ்தானுடன் உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×