என் மலர்
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி
- ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெற்றது.
- இதில் ஜெர்மனி அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
சென்னை:
14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்கு உட்பட்டோர்) சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் அணியான ஜெர்மனி, 4-ம் நிலை அணியான ஸ்பெயினை எதிர்கொண்டது.
இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. இதையடுத்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
இதனால் ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
Next Story






