என் மலர்
நீங்கள் தேடியது "சோபி டிவைன்"
- ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு அளிக்கப்பட்டது.
- அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன் எடுத்தார்.
அடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்னிலும், ஜார்ஜியா வோல் 79 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், தொடர் நாயகி விருது சோபி டிவைனுக்கும் அளிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கும், அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது நந்தினி ஷர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
- மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது.
- இந்தத் தொடருக்கு பிறகு நியூசிலாந்து கேப்டன் ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்தார்.
வெல்லிங்டன்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை சோபி டிவைன். இவர் நியூசிலாந்து அணிக்காக 151 ஒருநாள் போட்டிகளில் ஆடி 3,990 ரன்னும், 107 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார். மேலும், 146 டி20 போட்டிகளில் ஆடி 3,432 ரன்னும், 119 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.
16 வயதில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமான சோபி டிவைன் சுமார் 20 ஆண்டுக்கு மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், சோபி டிவைன் இந்தியாவில் நடைபெற உள்ள மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஓய்வு குறித்து சோபி டிவைன் கூறுகையில், நியூசிலாந்து அணியில் விளையாடியதை பெருமையாக நினைக்கிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என தெரிவித்தார்.
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.






