என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்ஸ்"

    • அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
    • எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தனிப்பட்ட தரவை பாதுகாக்கும் தொழில்நுட்ப அம்சமாகும்.

    வாட்சப் செயலுக்கு மாற்றாக ஜோஹோ (Zoho) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இந்திய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலி என்பதால் பலரும் அரட்டை செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அரட்டை செயலியில் தனியுரிமை மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இருக்குமா? என்று இணையத்தில் கேள்வி எழுந்தது.

    இதற்கு பதில் அளித்த அளித்த ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, "எங்கள் முழு வணிகமும் நாங்கள் வாடிக்கையாளர் தரவை அணுக மாட்டோம் மற்றும் அவர்களின் தரவை விற்பனை செய்வதற்கு பயன்படுத்தமாட்டோம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தான் அமைந்துள்ளது.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் என்பது ஒரு தொழில்நுட்ப அம்சமாகும். அது விரைவில் வரப்போகிறது. அனால் அதைவிட நம்பிக்கை மிகவும் விலைமதிப்பற்றது. மேலும் உலக சந்தையில் அந்த நம்பிக்கையை நாங்கள் தினமும் சம்பாதித்து வருகிறோம்.

    எல்லா இடங்களிலும் எங்கள் தயாரிப்பின் ஒவ்வொரு பயனரின் நம்பிக்கையையும் நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் அதற்கு அடுத்த பதிவில், "எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இப்போது சோதனையில் உள்ளது. நாங்கள் அதை நவம்பரில் வெளியிடப் போகிறோம்" என்று தெரிவித்தார்.

    எண்ட் டு எண்ட் என்க்ரிப்ஷன் அம்சம் இல்லாதது மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் அரட்டை செயலி செயல்படுகிறது என்று ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளது இணையத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. 

    • Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வருகின்றனர்.
    • இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், Spotify-ல் நீங்கள் கேட்கும் பாடல்களை இன்ஸ்டாகிராம் Notes-ல் பகிரும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா வெளியிட்டுள்ளது.

    Spotify தளத்தில் தற்போது பலரும் பாடல்களை கேட்டு வரும் நிலையில், மெட்டாவின் இந்த புதிய அப்டேட் இன்ஸ்டாகிராம் பயனாளர்களை கவர்ந்துள்ளது. 

    • இந்தியாவில் இன்ஸ்டாகிராமை அதிகமான இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலியில் இளம் தலைமுறையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து லைக்குகளை குவிப்பார்கள்.

    அண்மை காலங்களில் இன்ஸ்டாகிராம் பல புதிய அப்டேட்டுகளை வழங்கி இளைஞர்களை கவர்ந்து வருகிறது.

    இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் இனி புகைப்படம், வீடியோவை 3:4 Ratio-விலும் பதிவேற்றம் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா கொண்டுவந்துள்ளது.

    இதன்மூலம் இனி புகைப்படங்களை Crop செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு முன்பாக 1:1, 4:5, 16:9 வடிவங்கள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
    • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

    இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

    வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

    திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

    முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • புது அம்சம் பற்றிய விவரங்கள் செயலியின் பீட்டா வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷன் 2.22.23.14/15 அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது. பிளே ஸ்டோரில் இந்த அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புது அப்டேட்டில் மல்டி டிவைஸ்-க்கான லாக்-அவுட் ஸ்கிரீன், புகைப்படம், வீடியோ, ஜிஃப் மற்றும் டாக்யுமெண்ட் உள்ளிட்டவைகளை கேப்ஷனுடன் ஃபார்வேர்டு செய்யும் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    லாக்-அவுட் ஸ்கிரீனை மேம்படுத்தும் பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. புதிய லாக்-அவுட் பகுதி வாட்ஸ்அப்-இல் இருந்து லாக்-அவுட் செய்ததும் காண்பிக்கும். செயலியின் செட்டிங்ஸ்-இல் இருந்தபடி இரண்டாவது சாதனத்தில் இருந்து லாக்-அவுட் செய்ய முடியும்.

    வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- லின்க்டு டிவைசஸ் ஆப்ஷன் மூலம் பிரைமரி போனில் இருந்து டேப்லெட் செஷனை விட்டு வெளியேற முடியும். மேலும் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- அக்கவுண்ட் ஆப்ஷன்களில் இருந்து நம்பரை மாற்றுவதற்கான "சேஞ்ச் நம்பர்" அம்சம் இடம்பெற்று இருக்கிறது.

    இத்துடன் புகைப்படம், ஜிஃப், வீடியோ உள்ளிட்டவைகளை ஃபார்வேர்டு செய்யும் போது அவற்றுக்கு தலைப்பிடும் வசதி வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்படுகிறது. இதன் மூலம் தரவுகளை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் தலைப்பை பார்க்க முடியும். இதே வசதி டாக்யுமெண்ட்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு அம்சங்களில் லாக்-அவுட் ஸ்கிரீன் அம்சம் உருவாக்கப்பட்டு வருகிறது. அனைவருக்குமான வெர்ஷனில் வெளியாகும் முன் இந்த அம்சம் தொடர் சோதனை செய்யப்படும். ஃபார்வேர்டு மீடியா வித் கேப்ஷன் அம்சம் பீட்டா பயனர்களில் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் பீட்டா செயலியில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பீட்டா வெர்ஷனில் இரண்டு புது அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 அப்டேட்டில் புது அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பயனர்கள் தங்களுக்கு தாங்காளாகவே குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதுதவிர ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் எனும் புது வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த இரு அம்சங்களும் சோதனை முறையில் மிக சிறிய பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    மெசேஜ் யுவர்செல்ஃப் (Message Yourself) - அம்சம் கொண்டு பயனர்கள் அவர்களின் சொந்த மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பிக் கொள்ள முடியும். இதற்கான வசதியை வாட்ஸ்அப் தனித்து காண்பிக்கிறது. சில பீட்டா டெஸ்டர்களுக்கு இந்த அம்சம் வேறு விதமான சின்க் வசதியை வழங்கி இருக்கிறது. அதாவது அவர்களின் சொந்த நம்பருக்கு குறுந்தகவல் அனுப்பும் போது, இவை ஏற்கனவே லின்க் செய்யப்பட்ட சாதனங்களுடன் சின்க் செய்யப்பட்டு விடும்.

    ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் - க்ரூப் சாட்களுக்குள் க்ரூப் பயனர்களுக்காக வாட்ஸ்அப் ப்ரோபைல் படத்தை வெளியிடுகிறது. இந்த வசதியை செயல்படுத்த முதலில் க்ரூப் ஒன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஒரே பெயரில் க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றவர்களை ப்ரோபைல் போட்டோவை வைத்து எளிதில் கண்டறிந்து விட முடியும்.

    ஒருவேளை யாரேனும் ப்ரோபைல் போட்டோ வைக்காமல் இருந்தாலோ அல்லது பிரைவசி செட்டிங்கில் அதனை மறைத்து வைத்தாலோ, போட்டோ இல்லாமல் காலியாக உள்ள படம் செட் செய்யப்படும். இதில் குறிப்பிட்ட காண்டாக்டின் முதல் எழுத்து ப்ரோபைல் போட்டோவாக வைக்கப்படும்.

    தற்போது மெசேஜ் யுவர்செல்ஃப் மற்றும் ப்ரோபைல் போட்டோ க்ரூப் சாட் அம்சங்கள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.24.2 வெர்ஷனிலும் வாட்ஸ்அப் ஐஒஎஸ் பீட்டா 22.23.0.70 வெர்ஷனிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. தொடர் சோதனைக்கு பின் இரு அம்சங்களும் அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் புது அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.
    • இந்த அப்டேட்டில் கம்யுனிடிஸ், இன்-சாட் போல்ஸ் என புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் புதிய அம்சம் வரும் மாதங்களில் சர்வதேச அளவில் வெளியிடப்படும் என மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தஉ இருந்தார். ஏற்கனவே வெளியான தகவல்களின் படி வாட்ஸ்அப் செயலியில் கம்யுனிடிஸ் எனும் அம்சம் உருவாக்கப்பட்டு வந்தது. இந்த அம்சம் வாட்ஸ்அப் க்ரூப்களை ஒருங்கிணைக்கும் புது வசதியை செயல்படுத்துகிறது.

    கம்யுனிடிஸ் அம்சத்தின் கீழ் பயனர்கள் பல்வேறு வாட்ஸ்அப் க்ரூப்களை ஒற்றை குடையின் கீழ் கொண்டுவர முடியும். கம்யுனிடிஸ் அம்சம் மூலம் வியாபாரங்கள் உரையாடும் போது மற்ற தளங்கள் வழங்குவதை விட அதிகளவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை வழங்க முடிவு செய்துள்ளது. எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் வாட்ஸ்அப்-இல் அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    புதிய கம்யுனிடிஸ் அம்சத்தை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாட்-இன் மேல்புறத்திலும், ஐஒஎஸ் பயனர்கள் சாட்-இன் கீழ்புறத்திலும் காண முடியும்.

    இங்கிருந்து ஏற்கனவே உள்ள க்ரூப்களை ஒரு கம்யுனிடியின் கீழ் ஒருங்கிணைக்க முடியும். இதுதவிர புது கம்யுனிடியையும் உருவாக்க முடியும்.

    கம்யுனிடியில் சேர்ந்த பின் பயனர்கள் க்ரூப்களின் இடையே தங்களுக்கு தேவையான விவரங்களை மிக எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். அட்மின்களும் மிக முக்கிய அப்டேட்களை கம்யுனிடியில் உள்ள அனைவருக்கும் அனுப்ப முடியும்.

    புதிய கம்யுனிடிஸ் அம்சம் தவிர இன்-சாட் போலிங் மற்றும் 32 நபர்களுடன் வீடியோ காலிங் வசதி, க்ரூப் பயனர்கள் எண்ணிக்கை 1024 உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. எமோஜி ரியாக்‌ஷன், அதிக ஃபைல் ஷேரிங் மற்றும் அட்மின் ரிமுவல் போன்ற அம்சங்களை க்ரூப்களிலும் பயன்படுகத்த முடியும். இந்த வசதி கம்யுனிடி அம்சத்திற்கு பெருமளவு உதவியாக இருக்கும்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அம்சங்கள் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகின்றன. வரும் மாதங்களில் உலகம் முழுக்க இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • இன்ஸ்டாகிராம் செயலியில் சமீப காலங்களில் அதிகளவு புது அம்சங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
    • அந்த வரிசையில், இன்ஸ்டாவில் புது அம்சத்திற்கான அப்டேட் வெளியிடப்பட்டு வருகிறது.

    உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் வழங்கப்பட்டு இருக்கும் புது அப்டேட் உங்களின் பதிவுகளை ஏன் யாரும் பார்க்கவில்லை என்பதை தெரிவிக்கும் வசதி கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி புது அப்டேட் பற்றிய தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

    புது அப்டேட் மூலம் இன்ஸ்டாவின் "Account Status" ஆப்ஷனில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது நீங்கள் பதிவிட்ட போஸ்ட் ஏதேனும் னஉங்களின் அக்கவுண்ட்-ஐ மக்கள் பார்க்க விடாமல் செய்கிறதா என்பதை தெரிவிக்கும். சமீபத்தில் மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களை பாதுகாக்கும் வகையில் புதிய பிரைவசி அப்டேட்களை வெளியிட்டது.

    அந்த வகையில், தற்போது Professional Account-களில் இருந்து பதிவுகள் மற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதை நிறுத்தி இருக்கிறதா என்பதை இன்ஸ்டாவின் Settings -- Account -- Account Status ஆப்ஷனில் காண்பிக்கிறது. டிக்டாக்கிற்கு பெரும் போட்டியாளராக விளங்கும் நிலையில், இன்ஸ்டாவில் பரிந்துரைகள் Explore பக்கம், Home Feed உள்ளிட்டவைகளில் காண்பிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் அக்கவுண்ட்களின் தரவுகள் பரிந்துரைக்கப்படுவதை மெட்டா நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிவரை இருமடங்கு அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது. இன்ஸ்டாகிராமின் மிக கடினமான நிபந்தணைகளுக்கு முழுமையாக பூர்த்தியாகும் பதிவுகள் Explore பக்கத்தில் தோன்ற சரியானதாக இருக்கும் பட்சத்தில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன.

    • வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்கப்பட்ட அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • இதே அம்சம் விரைவில் ஐஒஎஸ் வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர் குறுந்தகவல்களுக்கு பாதுகாப்பை அதிகப்படுத்தும் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு "View Once" எனும் வசதியை வழங்கி இருக்கிறது. இந்த வசதி கொண்டு அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஒரு முறை பார்க்கப்பட்டதும் அவை அழிந்து விடும். வாட்ஸ்அப்-இன் "View Once" அம்சம் தற்போது குறுந்தகவல்களுக்கும் வழங்கப்படுகிறது.

    இந்த அம்சம் தற்போது உருவாக்கப்பட்டு வருவதால், இதனை மற்றவர்கள் பயன்படுத்த முடியும். முதற்கட்டமாக குறுந்தகவல்களுக்கான "View Once" அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டாவில் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.22.25.20 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் பயனர்கள் மெசேஜ்களுக்கு "View Once" வசதியை பயன்படுத்தலாம்.

    புது வசதியை வழங்குவதற்காக வாட்ஸ்அப் சாட் பார் அருகில் விசேஷ பட்டனை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவவதாக கூறப்படுகிறது. பயனர்கள் "View Once" மெசேஜ் அனுப்பும் முன் இந்த பட்டனை க்ளிக் செய்து அதன் பின் அனுப்ப வேண்டி இருக்கும். மெசேஜை அனுப்புவதற்கான ஐகான் மீது லாக் இடம்பெற்று இருக்கிறது.

    வாட்ஸ்அப் தற்போது "View Once" முறையில் அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படுவதை தடுக்கும் வசதியை வழங்கி வருகிறது. இதே போன்று "View Once" போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர், ஃபார்வேர்டு, காப்பி அல்லது சேவ் செய்வதற்கான வசதியும் வழங்கப்படவில்லை. இதே போன்ற வசதிகள் மெசேஜ்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: WABetaInfo

    • வாட்ஸ்அப் செயிலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புது வசதி தற்போது வெளியிடப்பட்டு வருகிறது.
    • முன்னதாக இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சிறிது காலம் சோதனை செய்யப்பட்டு வந்தது.

    வாட்ஸ்அப் பீட்டா v2.22.18.13 வெர்ஷனில் இருந்தே அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்க செய்யும் வசதியை வாட்ஸ்அப் சோதனை செய்து வருகிறது. தற்போது இந்த அம்சம் "Accidental Delete" எனும் பெயரில் வாட்ஸ்அப் ஸ்டேபில் வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம், ஏற்கனவே "delete for me" ஆப்ஷனை தேர்வு செய்யும் போது, நீங்கள் அழித்த குறுந்தகவல் அனுப்பியவருக்கு தெரியும் வகையில் வழங்கப்பட்டு இருந்தது. "delete for everyone" அம்சம் அனுப்பியவருக்கும், அதனை பெற்றவருக்கும் குறுந்தகவலை அழித்து விடும். இவை தவிர குறுந்தகவல்களை அழிக்க வாட்ஸ்அப் வேறு எந்த வசதியையும் வழங்கவில்லை. இதன் காரணமாக க்ரூப்களில் குறுந்தகவல் அனுப்பியவருக்கு சங்கடமாக இருந்து வந்தது.

    தற்போது புது அப்டேட் மூலம், "delete for me" ஆப்ஷனை க்ளிக் செய்தால், அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை Undo செய்யலாம். குறுந்தகவலை "delete for me" ஆப்ஷன் மூலம் அழித்து இருந்தால், வாட்ஸ்அப் திரையின் கீழ்புறம் உள்ள undo ஆப்ஷன் மூலம் அதனை திரும்ப பெற முடியும். இந்த வழிமுறையை மேற்கொள்ள ஐந்து நொடிகள் வரை வழங்கப்படும். இந்த அம்சம் சீராக இயங்க குறுந்தகவல் அனுப்பியவர் மற்றும், அதனை பெற்றவர் வாட்ஸ்அப்-இன் புது வெர்ஷனை பயன்படுத்த வேண்டும்.

    • வாட்ஸ்அப் செயலிக்கான ஆதரவு விரைவில் சில ஸ்மார்ட்போன்களுக்கு நிறுத்தப்பட இருக்கிறது.
    • அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயலியை இன்னும் சில தினங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

    புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் வாட்ஸ்அப் விஷயத்தில் பாதுகாப்பான பக்கம் உள்ளனர் என்றே எடுத்துக் கொள்ளலாம். எனினும், சற்றே பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் கவலை கொள்ள வேண்டிய தருணம் இது. சில ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ்அப் விரைவில் இயங்காமல் போக இருக்கிறது.

    முன்னதாக இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி சில ஐபோன் மாடல்களுக்கான சப்போர்ட்-ஐ வாட்ஸ்அப் நிறுத்தியது. தற்போது வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படும் பட்டியல் சற்றே பெரிதாகி இருக்கிறது. புத்தாண்டு தினத்தில் இருந்து 49 ஸ்மார்ட்போன்களுக்கான சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கிறது.

    அந்த வகையில், 2022 டிசம்பர் 31 ஆம் தேதியுடன் பட்டியலிடப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து பழைய ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த புது ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் சப்போர்ட் நிறுத்தப்பட இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்:

    ஐபோன் 5

    ஐபோன் 5சி

    அர்கோஸ் 53 பிலாட்டினம்

    கிராண்ட் எஸ் பிலெக்ஸ் இசட்டிஇ

    கிராண்ட் எக்ஸ் குவாட் வி987 இசட்டிஇ

    ஹெச்டிசி டிசையர் 500

    ஹூவாய் அசெண்ட் டி

    ஹூவாய் அசெண்ட் டி1

    ஹூவாய் அசெண்ட் டி2

    ஹூவாய் அசெண்ட் ஜி740

    ஹூவாய் அசெண்ட் மேட்

    ஹூவாய் அசெண்ட் பி1

    குவாட் எக்ஸ்எல்

    லெனோவோ ஏ820

    எல்ஜி எனாக்ட்

    எல்ஜி லூசிட் 2

    எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் ஹெச்டி

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 கியூ

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்5

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்6

    எல்ஜி ஆப்டிமஸ் எஃப்7

    எல்ஜி ஆப்டிமஸ் எல்2 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்3 II டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்4 டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5 டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் எல்5 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II

    எல்ஜி ஆப்டிமஸ் எல்7 II டூயல்

    எல்ஜி ஆப்டிமஸ் நைட்ரோ ஹெச்டி

    மெமோ இசட்டிஇ வி956

    சாம்சங் கேலக்ஸி ஏஸ்2

    சாம்சங் கேலக்ஸி கோர்

    சாம்சங் கேலக்ஸி எஸ்2

    சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி

    சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் II

    சாம்சங் கேலக்ஸி டிரெண்ட் லைட்

    சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 2

    சோனி எக்ஸ்பீரியா ஆர்க் எஸ்

    சோனி எக்ஸ்பீரியா மிரோ

    சோனி எக்ஸ்பீரியா நியோ L

    விகோ கின்க் ஃபைவ்

    விகோ டார்க்நைட் இசட்டி

    "தொழில்நுட்ப துறையின் வளர்ந்து வரும் புது அம்சங்களை வழங்கும் நோக்கில், நாங்கள் தொடர்ச்சியாக பழைய ஒஎஸ்-களுக்கு வழங்கி வந்த ஆதரவை நிறுத்தி வருகிறோம். இதன் மூலம் புது ஒஎஸ்-களுக்கு ஆதரவளித்து வருகிறோம். நாங்கள் பழைய ஒஎஸ்-க்கான ஆதரவை நிறுத்தும் பட்சத்தில், அதற்கான நோட்டிஃபிகேஷன் மற்றும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த சாதனத்தை மாற்றக் கோரும் நினைவூட்டல்களை வழங்குவோம்," என வாட்ஸ்அப் தெரிவித்து இருக்கிறது.

    • வாட்ஸ்அப் செயலியின் டெஸ்க்டாப் வெர்ஷனில் வழங்கப்பட இருக்கும் புது அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
    • முதற்கட்டமாக புது அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் ஸ்டேட்டஸ்-ஐ ரிபோர்ட் செய்யும் வசதி சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த வசதி கணினி அல்லது லேப்டாப் சாதனங்களில் டெஸ்க்டாப் செயலியை பயன்படுத்துவோருக்கு வழங்கப்படுகிறது. தற்போது போலியான குறுந்தகவல்களை ரிபோர்ட் செய்யும் வசதி வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    எனினும், தற்போதைய அப்டேட் செயலியை மேலும் பாதுகாப்பான ஒன்றாக மாறி இருக்கிறது. புது அப்டேட் மூலம் பயனர்கள் எதிர்கொள்ளும் போலி அல்லது சர்ச்சைக்குரிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை ரிபோர்ட் செய்யலாம். ஸ்டேட்டஸ் பகுதியில் உள்ள புது மெனுவில் ரிபோர்ட் செய்வதற்கான ஆப்ஷன் இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. ரிபோர்ட் செய்யப்படும் ஸ்டேட்டஸ் பற்றிய விவரங்கள் வாட்ஸ்அப்-க்கு அனுப்பப்படும்.

    அழைப்புகள், குறுந்தகவல், மீடியா, லொகேஷன் ஷேரிங், ஸ்டேட்டஸ் அப்டேட் போன்றே ரிபோர்ட் செய்யப்படும் குறுந்தகவல்களும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு என்க்ரிப்ட் செய்யப்படும் குறுந்தகவல்களை யாராலும் பார்க்க முடியாது. தற்போது இந்த அம்சம் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷனஷில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வெர்ஷனில் புது ஸ்கிரீன் லாக் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் கடவுச்சொல் வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு செயலியை திறக்க பயனர்கள் பாஸ்வேர்டு பதிவிட வேண்டும்.

    Photo Courtesy: wabetainfo.com

    ×