என் மலர்tooltip icon

    கோவில்கள்

    1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோவில் கருதப்படுகிறது. இந்த கோவில் வரலாறை அறிந்து கொள்ளலாம்.
    1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக சேலம் ஆறகழூர் அஷ்டபைரவர் கோயில் கருதப்படுகிறது. இக்கோயில் இறைவனாக சிவ பெருமான் “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயரில் அருள்புரிகிறார். “அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் மற்றும் கால பைரவர்” என எட்டு என பொருள்படும் அஷ்ட பைரவர்கள் இக்கோயிலில் இருப்பது சிறப்பம்சமாகும். இந்த கோயில் தல புராணங்களின் படி அசுரனான “அந்தகன்” மற்றும் அவனது அசுர படைகளால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்த போது, அவர் தியானத்தில் இருப்பதை கண்டு அவர் தியானத்தை கலைப்பதற்கு அனைவரும் அஞ்சினர்.

    சிறிது ஆலோசனைக்கு பிறகு தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று தங்களுக்காக சிவபெருமானின் தியானத்தை கலைக்குமாறு தேவர்கள் கூற, அவர்களுக்காக மன்மதன் சிவபெருமானின் மீது மலர் அம்புகளை தொடுத்து அவரின் தியானத்தை கலைத்தார். தியானம் கலைந்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண் திறந்து, அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்பால் காமத்திற்கு நாயகனாகிய மன்மதனை அழித்ததால், இக்கோயிலின் இறைவனுக்கு “காமநாத ஈஸ்வரர்” என்கிற பெயர் ஏற்பட்டது. இக்கோயிலில் இருக்கும் சிவபெருமானை வசிஷ்டர் பூஜித்ததால் இந்த சிவனுக்கு வசிஸ்டேஸ்வரர் என்கிற ஒரு பெயரும் உண்டு.

    தேவர்களின் துன்பத்தை தீர்க்க தனது அம்சமான பைரவரை அசுரர்களை அழிக்க அனுப்பினார் சிவபெருமான். திசைக்கு எட்டு பைரவர் வீதம் 64 பைரவர்கள் தோன்றி அந்தகன் மற்றும் அவனது அசுரர் சேனைகளை அழித்தனர். வட இந்தியாவில் காசியில் அஷ்ட பைரவர் கோயில் இருக்கிறது. அதற்கடுத்து தென்னிந்தியாவில் அஷ்ட பைரவர்களுக்கென்று இருக்கும் பழமையான கோயிலாக ஆறகளூர் அஷ்ட பைரவர் கோயில் கருதப்படுகிறது. காசிக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடுவதால் காசி அஷ்ட பைரவரை வணங்கியதற்கு ஈடானது என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் கருத்தாக உள்ளது.

    கோயில் சிறப்பு

    இங்குள்ள அஷ்டபைரவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தில் நள்ளிரவில் அஷ்டபைரவர்களுக்கும் சிறப்பு யாக பூஜை நள்ளிரவு 12.00 மணிக்கு நடக்கிறது. இப்பூஜையின் போது சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரத்துடன் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இப்பூஜையில் கலந்து கொண்டு வழிபாடும் பக்தர்களின் கிரக தோஷங்கள், வறுமை நிலை, துஷ்ட சக்திகள் பாதிப்பு, குழந்தை பேறின்மை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் கருத்தாகும். திருமண தடை மற்றும் தோஷங்கள் நீங்க இங்குள்ள கால பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து, வடைமாலை சாற்றி வழிபடுகின்றனர்.

    பைரவர் அவதரித்த கார்த்திகை அஷ்டமி அன்று பைரவாஷ்டமி விழா இக்கோயிலில் கடைபிடிக்கப்படுகிறது. அன்று மாலை நடைபெறும் மகா யாகத்தில் தேனில் தோய்த்த 1008 வடைகளை யாகத்தில் இட்டு பைரவரை பூஜிக்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொண்டு அஷ்டபைரவர்களை வழிபடுபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும் என இங்கு வழிபடும் மக்கள் கூறுகின்றனர்.

    கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

    காலை 5 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும். மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும்.

    கோயில் அமைவிடம்

    ஆறகளூர் அருள்மிகு காமநாத ஈஸ்வரர் திருக்கோயில் சேலம் மாவட்டத்தில் இருக்கும் தலைவாசல் என்கிற ஊருக்கு அருகில் இருக்கும் ஆறகழூர் என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல சேலம் நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன.
    ஈரோட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும், சேலத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செங்கோடு அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    பழங்காலத்தில் இருந்தே தொற்றுநோய்கள், உலகை அச்சுறுத்தி வந்திருக்கின்றன. இதனால்தான் நம் முன்னோர்கள் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மாட்டுச் சாண கரைசலை தெளித்தும், வீடுகளின் முகப்பில் வேப்பிலை கொத்துக்களைச் கட்டிவைத்தும் பற்பல தடுப்பு நடவடிக்கைகளை கையாண்டதுடன், அவற்றை மாரியம்மன் வழிபாடு, பத்ரகாளி வழிபாடு என்று தெய்வங்களோடு தொடர்பு படுத்தி வைத்தனர். இங்கே தொற்று நோய் தீர்க்கும் ஒரு ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.

    சமயக்குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர், சிவ தலங்களை வழிபட்டுக் கொண்டே யாத்திரை சென்றார். அதன் ஒரு பகுதியாக பவானி வேதநாயகி சமேத சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் வழிபட்டுவிட்டு, தம் அடியவர்களுடன் திருச்செங்கோடு பாகம்பிரியாள் சமேத அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்துகொண்டிருந்தார்.

    திருச்செங்கோடு மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும், ஒருவித தொற்றுநோய்க் கிருமி பரவி அனைவரும் குளிர் சுரத்தால் அவதியுற்றனர். திருஞானசம்பந்தர் தங்கள் ஊருக்கு வந்திருப்பதை அறிந்த ஊர் மக்கள், அந்த திருமடத்துக்கு வந்து, ‘தொற்றுநோயில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று வேண்டினர். அதுசமயம் திருஞானசம்பந்தருடன் வந்திருந்த அடியவர்கள் ஒருசிலருக்கும் அந்த தொற்று நோய்க் கிருமியால் பாதிப்பு உண்டாகி உடல் நலிந்தனர்.

    மக்கள் நலம் பெற வேண்டியும், அடியவர்கள் நலம்பெறும் பொருட்டும் ஈசனை வேண்டி ‘அவ்வினைக்கு இவ்வினையாம்..' எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடினார், திருஞான சம்பந்தர். என்ன ஆச்சரியம்.. மக்களையும், அடியவர்களையும் வருத்திய அந்த குளிர் தொற்றுநோய்க் கிருமி அகல, விஷ சுரமும் அகன்றது.

    சம்பந்தர் தனது அடியார்களுடன் தங்கிய மடம் திருச்செங்கோடு தேரடி வீதியில் உள்ளது. இங்கு ‘சுரகண்டநாதர்’ என்னும் ஜுரஹரேஸ்வரர் ஈசன் அருள்பாலிக்கிறார். தொற்று நோயால் துன்பப்படுபவர்கள் அங்கு சென்று ஈசனை வேண்டி மிளகு ரசம் சாதம் வைத்து வழிபாடு செய்து வழிபட்டு, பின்னர் மலைமேல் உள்ள அர்த்தநாரீஸ்வரர், ஆதிகேசவப்பெருமாள், செங்கோட்டு வேலவர் சன்னிதிகளிலும் வழிபட்டு வந்தால் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு உடனே படிப்படியாக குறைந்து முற்றிலும் குணமாகிவிடும் என்கிறார்கள். வழிபாட்டுடன், திருஞானசம்பந்தரின் ‘அவ்வினைக்கு இவ்வினையாம்' எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி வழிபடவேண்டும் என்கிறார்கள்.

    திருச்செங்கோட்டு மலைக்கோவிலில் முருகப்பெருமான், ‘செங்கோட்டு வேலவர்’ எனும் பெயரில் அருள்கிறார். இங்கு முருகப்பெருமான் வலக்கரத்தில் சக்திவேல் தாங்கி, இடதுகரத்தால் இடுப்பில் சேவலை அணைத்தபடி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். திருக்கயிலை மலையில் பழத்தினால் ஏற்பட்ட குழப்பத்தினால் கோபம் கொண்டு பழனிக்கு வந்தார், முருகப்பெருமான்.

    அதன் பின் அங்கிருந்து இத்தலத்திற்கு வந்து செங்கோட்டுவேலவர் என்ற பெயருடன் காட்சிதருகிறார். இங்கு வந்தபின் அம்மையப்பனின் வேண்டுகோளுக்கு இணங்க தேவர்களை துன்புறுத்திய அசுரர்களான தாரகாசுரன் மற்றும் அவனது தம்பியுமாகிய சூரபத்மன் இருவரையும் முருகன் வதம் செய்தாா். முருகப்பெருமான் கோபம் கொண்டு நாகாசலம் வந்ததால், பார்வதி கவலைகொண்டார். இதைக்கண்ட சிவன், பார்வதியை மகிழ்வூட்ட அவரை இயற்கை வளங்கள் நிறைந்த தாருகாவனத்திற்கு அழைத்து வந்தார்.

    அங்கு பல்வேறு இயற்கை காட்சிகளைக்கண்டு மகிழ்ந்த பார்வதிக்கு, முல்லைக்கொடி ஒன்று மாதவி மரத்தை சுற்றி வளர்ந்துள்ளதை சிவன் காட்டினார். அதை கண்ட பார்வதி வெட்கப்பட்டு சிவனின் கண்களை தன் கைகளால் மூடினார். இதனால் அண்டசராசரங்கள் அனைத்தும் இருண்டன. பார்வதி தன் கைகளை விலக்கவே அந்த இருள் நீங்கியது. திடீரென்று ஏற்பட்ட இருளின் காரணமாக உலகின் அனைத்து வழிபாட்டு முறைகளும் மாறின. இதனால் தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

    இதைகண்ட பார்வதி, சிவனிடம் “இந்தத் தவறு மீண்டும் நிகழாதிருக்க, நாம் இருவரும் தனித்தனி என்ற நிலை மாறி ஒருவர் என்ற நிலை உருவாகவேண்டும்” என்று வேண்டினார். இந்த வேண்டுகோளை ஏற்று தேவிக்கு தன் உடலில் இடம் கொடுப்பதாக சிவன் ஒப்புக்கொண்டார். அதற்காக பார்வதியிடம் ‘இமயமலையிலும், காசியிலும், காஞ்சி நகரில் உள்ள கம்பையாற்றின் கரையிலும், திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சாபவிமோசனம் பெறவேண்டும்’ என்று கூறினார். பார்வதி தேவியும் அவ்வாறே தவம் செய்தார்.

    இறுதியில் திருவண்ணா மலையில் சிவன் பார்வதிக்கு காட்சி தந்து, “நீ யாருக்காக சோகமுற்று இந்தத் தொல்லைகளுக்கு ஆளானாயோ, அந்த முருகன் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள திருக்கொடிமாடச் செங்குன்றூரில் குடிகொண்டுள்ளான். அதனால் அதுவே நாம் தங்கு வதற்கு ஏற்ற இடம்” என்று கூறி திருக்கொடிமாடச்செங்குன்றூர் சென்று தவம் செய்யுமாறு கூறினார். அதன்படி பார்வதியும் இங்கு வந்து தவம் செய்து சிவனுடன் இரண்டற கலந்து, அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளிக்கின்றனர்.

    திருச்செங்கோடு திருத்தலம் முன்பு மரம், செடி, கொடிகள், மாடமாளிகைகள் நிறைந்ததாக இருந்ததால் ‘திருக்கொடிமாடச்செங்குன்றூர்’ என்றும் அழைக்கபட்டது. இந்த திருச்செங்கோடு மலைக்கோவிலை ‘மலைத்தம்பிரான்’ என்றும் அழைக்கின்றனர். ஆதிசேஷபாம்பு மேருமலையை பிடித்த போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தத்தால், மலை செந்நிறம் ஆனதால் ‘திருச்செங்கோடு’ எனப்பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. மலை அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேலே படி வழியாக செல்லும் போது 60 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாய் ஐந்து தலைகளுடன் அமைந்துள்ள ஆதிசேஷன் உருவத்தை காணலாம். பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்த நாகருக்கு, மக்கள் குங்குமம் தூவி, தீப ஆராதனை செய்து வழிபடுகின்றனர். நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.

    அமைவிடம்

    ஈரோட்டில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும், சேலத்தில் இருந்து 41 கிலோமீட்டர் தூரத்திலும் திருச்செங்கோடு அமைந்துள்ளது.
    திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வவன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.
    கடையத்துக்கு வந்தால் கவலைகள் பறந்தோடும் என்பார்கள். கடையத்தில்தான், வில்வங்களில் ஈடுபாடும் ஆசையும் கொண்ட வில்வவனேஸ்வரர் குடிகொண்டிருக்கிறார்.

    திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது கடையம் . அழகிய கிராமத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் வில்வவன நாதர். இங்கே அம்பாளின் திருநாமம் ஸ்ரீநித்ய கல்யாணி அம்பாள்.

    அற்புதமான ஆலயம். புராதனமான திருத்தலம். ஒருகாலத்தில் வில்வ வனமாக இருந்த இந்தத் தலத்தில் கோயில் கொண்டதால், சிவபெருமானுக்கு வில்வம் சார்த்தி வேண்டிக் கொண்டால் நம்மையும் நம் வாழ்வையும் சிவனார் பார்த்துக் கொள்வார்.

    கைப்பிடி வில்வம் எடுத்து வந்து சிவனாருக்கு சார்த்தினாலே போதும்... நம் கவலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்கிறார்கள் பக்தர்கள்.

    கடையம் குறித்தும் அந்தத் தலம் குறித்தும் ஸ்தல புராணம் தெரிவிக்கும் இன்னொரு சிறப்பம்சம் என்ன தெரியுமா?

    சிற்றாறு உற்பத்தியாகும் குற்றாலத்துக்கும் தாமிரபரணி உற்பத்தியாகும் பாண தீர்த்தத்துக்கும் நடுவே, அகத்திய முனிவர் இன்றைக்கும் தவமிருக்கும் இடம் என்று போற்றப்படும் தலத்தில் அமைந்துள்ள ஆலயம் என்று கடையம் வில்வவன நாதரைப் போற்றுகிறார்கள் பக்தர்கள்.

    அம்பாள் மட்டும் என்ன? நித்ய கல்யாணி. தன்னை நாடி வந்து, சந்நிதியில் கண்ணீருடன் நிற்கும் பெண்களின் துயர் துடைப்பதே தன் பணி என்பதாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் தேவி. அம்பாளுக்கு புடவை சார்த்தி, குங்கும அர்ச்சனை செய்து மனதார வேண்டிக் கொண்டால் போதும்... மணமாலை தந்து, மாங்கல்யம் காப்பாள் அம்பிகை என்கின்றனர் பக்தர்கள்.

    சக்தி குறித்து இன்னொரு சிறப்பையும் வியப்பையும் சொல்லவேண்டும்.

    இங்கே, ஸ்ரீதுர்கையாகவும் ஸ்ரீலக்ஷ்மியாகவும் ஸ்ரீசரஸ்வதி யாகவும் உமையவள் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே, பெண்கள் எந்தக் குறைகளுடன் வந்தாலும், அவர்களின் குறைகளை தாயுள்ளத்துடன் உடனே போக்கி அருள்வாள் ஸ்ரீநித்யகல்யாணி அம்பிகை என்பது ஐதீகம்!

    ‘காணி நிலம் வேண்டும் பராசக்தி’ எனப் பாடினாரே மகாகவி பாரதி. அந்தத் தலம் இது என்று சொல்வார்கள்.

    கடையம் வில்வவன நாதரை கண்ணாரத் தரிசியுங்கள். நம் சாபமெல்லாம் நீங்கும். பாவமெல்லாம் விலகும். தடைகள் அனைத்தும் தகர்த்து, நல்ல நல்ல சத்விஷயங்கள் நமக்குக் கிடைக்கச் செய்வார் சிவபெருமான்.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார்  10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.

    முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு  பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.

    பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.

    தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான  தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.

    இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய  பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.

    மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.

    வரலாற்று செய்தி

    சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி  முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு  குணப்படுத்தியது என்கிற வரலாற்று  செய்தி இந்த தலத்தில் உள்ள  இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.

    வள்ளி தெய்வயானை சமேத ஆறுமுகப்பெருமான் மயில் வாகனத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால், இங்கு திருமணம் செய்துக் கொள்ளும் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு வாழ்வார்கள்  என்பது நம்பிக்கை.  

    அருணகிரிநாதரின் பாடல் பெற்ற இந்த திருதலத்தில்,10 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர பெருவிழாவும், 10 நாட்கள் கோலாகலமாக  நடைபெறும் தைப்பூசத் திருநாளும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர முருகப் பெருமானுக்கே உரிய சித்திரை பால் பெருக்கு விழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடி திருப்படி பூஜை, ஐப்பசியில் கந்தசஷ்டி போன்றவையும்  சிறப்பாக நடைபெறும்.

    முருகன், அழகன்,மால் மருகனின் கிருத்திகை நட்சத்திரமான இன்று கந்தனை வாயார போற்றி மனதார துதித்து பலனடைவோம்.

    வேலுண்டு வினையில்லை ....

    மயிலுண்டு பயமில்லை ....
    தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மன். இவருக்கு திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    தலைவிதியை மாற்றும் வல்லமை கொண்டவர் பிரம்மன். அவருக்கு திருச்சி அருகே உள்ள திருப்பட்டூர் என்ற தலத்தில் தனிச் சன்னிதி அமைந்துள்ளது. திருப்பட்டூரில் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு பிரம்ம நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் அருள்கிறார். ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கீழ்திசை நோக்கி ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வேத மண்டபம், நாத மணடபம் ஆகியவற்றைக் கடந்ததும் அர்த்த மண்டபம் வரும். அதை அடுத்து கருவறை இருக்கிறது.

    இங்கு லிங்கத் திருமேனியில், பிரம்மபுரீஸ்வரர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ‘மண்டூகநாதர்’, ‘கயிலாசநாதர்’ போன்ற பெயர்களும் உள்ளன. இங்குள்ள அன்னை பிரம்ம நாயகிக்கு, ‘பராசக்தி’, ‘பிரம்ம சம்பத் கவுரி’ என்ற பெயர்களும் உண்டு. பல்லவர்கள் காலம் தொடங்கி, நாயக்க மன்னர்கள் காலம் வரை பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஆலயம் இது.

    இந்த ஆலயத்தில் பங்குனி மாதத்தில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் காலை 6.30 மணியளவில், சூரியனின் பொற்கதிர்கள், பிரம்மபுரீஸ்வரர் மீது விழும். கோவில் உட்பிரகாரத்தில் மூலவருக்கு வடபுறத்தில் தியான நிலையில் ஆறடி உயரத்தில் கமண்டலத்துடன் தாமரை மீது பத்மாசன கோலத்தில் அருள்பாலிக்கிறார் பிரம்மன். இவருக்கு முன்பக்கம் மூன்று முகம் உள்ளது. பின்புறம் ஒரு முகம் ஆக நான்கு முகங் களுடன் காட்சியளிக்கிறார். வலது கையில் ருத்ராட்ச மாலையும், இடது கையில் கமண்டலத்தையும் ஏந்தியிருக்கிறார். இந்த பிரம்மதேவனுக்கு, பக்தர்கள் தாங்களே அரைத்து தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாக அலங்காரம் செய்யப்படுகிறது.

    திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரம்மன் சன்னிதி பக்தர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. குருவின் அதிதேவதையான பிரம்மாவின் பார்வை பட்டால் பக்தர்களுக்கு கோடானு கோடி நன்மை கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

    தல வரலாறு

    படைக்கும் கடவுள் பிரம்மனுக்கு ஆரம்பத்தில் ஐந்து தலைகள் இருந்தன. ஈசனை போல தனக்கும் ஐந்து தலை இருப்பதை எண்ணி அகங்காரம் கொண்டார் பிரம்மன். அழிக்கும் ஈசனை விட படைக்கும் தனக்கே சக்தி அதிகம் என்று இறுமாப்பு கொண்டார். ஈசனையும் மதிக்கத் தவறினார். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கொய்து, படைப்பு தொழிலை தனதாக்கிக் கொண்டார்.

    தன் தவறை உணர்ந்த பிரம்மன், பல தலங்களுக்குச் சென்று சிவலிங்கம் அமைத்து பூஜித்தார். பிரம்மன் வழிபட்ட பல தலங்களில், இறைவனின் திருநாமம் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்றே அழைக்கப்படுகிறது. அதன்படி திருப் பட்டூரில், துவாதச லிங்கத்தை (12 லிங்கங்கள்) பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார். பிரம்மனின் வழிபாட்டைக் கண்டு மனம் இளகிய சிவபெருமான், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார். அதோடு, இத்தலம் வந்து பிரம்மனை வழிபடுவோருக்கு, கூடுதல் பலன் கிடைக்கும் என்றும் ஆசி வழங்கினார்.

    பிரம்மனுக்கு வரம் வழங்கியதால் இத்தலத்து இறைவன், ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்ற பெயரைப் பெற்றார். பிரம்மனுக்கு தேஜயை வழங்கியதால், இத்தல அன்னைக்கு ‘பிரம்ம சம்பத்கவுரி’ எனப் பெயர். பதஞ்சலி சித்தர் வாழ்ந்த திருத்தலம் திருப்பட்டூர். இவர் இந்த தலத்தில் லிங்க உருவில், பிரம்மாவின் அருகில் உள்ளார்.

    வடக்கு பிரகாரத்தில் சண்டீகேஸ்வரர் சன்னிதியும், அதன் அருகே பாதாளகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. சித்தர்கள் வாழ்ந்த தலங்களில் மட்டுமே பாதாளகேஸ்வரர் சன்னிதிகள் இருக்கும் என்பது வழக்கத்தில் காணப்படும் ஒன்று.

    கோவில் உட்பிரகாரத்தில் கற்பக விநாயகர், பழமலை நாதர், கந்தபுரீஸ்வரர், கஜலட்சுமி, நடராஜர், கால பைரவர், சூரியன் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. இறைவனின் தேவக் கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. அம்மன் சன்னிதிக்கு அருகே தாயுமானவர் சன்னிதி, பிரம்ம தீர்த்தம், பகுள தீர்த்தம் உள்ளன. அம்மன் சன்னிதியை அடுத்துள்ள வெளிவட்டத்தில் சப்தரிஷீஸ்வரர், காளத்திநாதர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேசுவரர், ஏகாம்பரேஸ்வரர், மண்டூக்யநாதர் ஆகியோரது தனித் தனி சன்னிதிகள் உள்ளன.

    ஆலயத்தின் தல விருட்சம், மகிழ மரம். இந்த ஆலயத்தில் உள்ள நாத மண்டபத்தின் கல்தூண்களை தட்டினால் மனதை வருடும் மெல்லிய நாதம் வந்து நம்மை சிலிர்க்க வைக்கும். இங்கு அருள்பாலிக்கும் தன்னை தரிசித்து பிரார்த்தனை செய்யும் பக்தர்களின் தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றி எழுதி அவர்களது நல்வாழ்க்கைக்கு இங்குள்ள பிரம்மதேவன் வழிகோலுவார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    அமைவிடம்

    திருச்சி - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பட்டூர் என்ற இத்தலம்.
    மும்பை டாக்கியாட் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது, சதுர்புஜ வைஷ்ணவி திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    மும்பை டாக்கியாட் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ளது, சதுர்புஜ வைஷ்ணவி திருக்கோவில். இந்த ஆலயமானது, ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கிறது. குன்றின்மேல் உள்ள ஆலயத்தை அடைவதற்கு படிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோவில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

    பேஷ்வா அரசர்கள், வியாபார நிமித்தமாக செல்லும் வியாபாரிகள் ‘வசை’ என்னும் இடத்திற்குச் செல்லும்போது, இங்கு தங்கியிருந்து, இந்த அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர். ஆங்கிலேயர்களும் கூட, தாங்கள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் பொருட்களை, தேவி காப்பாள் என்ற நம்பிக்கையுடன், கோவிலுக்கு அருகிலேயே கிடங்குகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர்.

    மும்பை என்பது 7 தீவுகள் இணைந்த பகுதியாகும். ஆரம்ப கால கட்டத்தில், சதுர்புஜ வைஷ்ணவி தேவியானவள், ஒரு மரத்தடியின் கீழ் சாதாரணமாகத்தான் இருந்தாள். மும்பையின் தொடக்க காலங்களில் மீனவர்கள்தான் இங்கு அதிகமாக வசித்து வந்தனர். அவர்கள் ‘கோலி’ என்று அழைக்கப்பட்டனர். ‘கோலி’ என்பதற்கு ‘மீனவர்’ என்பது பொருள் ஆகும்.

    வியாபார நிமித்தமாக கடலைக் கடந்து செல்லவும், பொருட்களை பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கவும், தங்களுக்கு துணைபுரியும்படி இந்தப் பகுதியில் வசித்தவர்கள், இத்தல அம்மனை வழிபாடு செய்து வந்திருக்கின்றனர். அன்னையும் தனது சக்தியால், கடல் கடந்து வியாபாரம் செய்பவர்களையும், மீனவர்களையும் காத்து வந்தாள்.

    இந்த அன்னையின் சக்தி மீது நம்பிக்கையும், பக்தியும் கொண்ட, மீனவர்களும், வியாபாரிகளும் இணைந்துதான், தற்போதிருக்கும் குன்றின் மேல் இயற்கை அழகுடன் கூடிய ஆலயத்தை அமைத்திருக்கிறார்கள். பின்னர் மரத்தடியின் கீழ் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டிருந்த அம்பாளை, அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர்.

    குன்றின் மேல் பகுதிக்கு செல்லும் படிகளில் ஏறியதும் முதலில் சிவலிங்க சன்னிதி உள்ளது. அங்கிருந்து பக்கவாட்டில் மூன்று படிகள் ஏறினால், ருத்திரர் - திருமால்- பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஓருருவாக நின்ற தத்தாத்ரேயர் சன்னிதி இருக்கிறது. தொடர்ந்து அனுமன் சன்னிதி, காளி சன்னிதி என ஒரே வரிசையில் நீளமாகக் கட்டிய அறையில் தனித்தனி சன்னிதிகளாக அமைந்துள்ளன.

    இவற்றையெல்லாம் தரிசித்து விட்டு, இன்னும் சில படிகள் கடந்தால், ஆலயத்தின் நாயகியான சதுர்புஜ வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்யலாம். கம்பீர தோற்றத்துடனும், புன்னகை ததும்பும் முகத்துடனும் அமர்ந்திருக்கும் இந்த அன்னை, தன்னுடைய ஒரு கையில் வீர வாளும், மற்றொரு கையில் தாமரை மலரும் தாங்கியிருக்கிறார். முன்பக்க இரு கரங்கள் அபய, வரத ஹஸ்த முத்திரை காட்டியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றன.

    குன்றின் மேல் கோவிலுக்கு இடது பக்கம் மிகப்பெரிய பூங்கா ஒன்று உள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்தப் பூங்காவில் தியானம் செய்வதற்காகவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே சிறிய கிராமமாக இருந்தாலும் இங்கு வந்து அம்பாளை தரிசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    இத்தல அம்பாளிடம் தங்களின் மனக்குறைகளைக் கூறி வேண்டிக்கொண்டால், அவை விரைவில் தீர்ந்து விடும். வேண்டுதல் நிறைவேறியதும், பக்தர்கள் அனைவரும் தங்கள் சக்திக்கேற்ப நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இரண்டுகால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்துவைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தில் ஹோலி, குடிபதவா, மகரசங்கராந்தி, நவராத்திரி போன்ற விசேஷங்கள் நடைபெறுகின்றன.
    காஞ்சீபுரத்தில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோவிலில் இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை செய்யப்படுகிறது. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.
    பாஸ்கர ராஜபுரம்

    தஞ்சை மாவட்டத்தில் பாஸ்கரராஜ கவிராயரால் ஸ்தாபிக்கப்பட்ட மகாமேரு உள்ளது. ஸ்ரீவித்யா உபாஸகர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய மிக அற்புதமான தலம்.

    கன்னிவாடி ராஜ காளியம்மன்

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. போகர் தவம் செய்த ஆலயம். இந்த அற்புத தலத்தில் உள்ளது. இங்கு ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    ஸ்ரீகனக துர்க்கா ஆலயம்

    ஆந்திர பிரதேசத்தில் கிருஷ்ணா நதி கரையில் தேவி சுயம்பு வடிவில் அருளும் திருத்தலமாகும். இங்கு ஆதி சங்கரரால் ஸ்ரீ சக்கரம் பிதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நவராத்திரி, பவுர்ணமி, ஆடி வெள்ளி, தை வெள்ளிக்கிழமை கூட்டம் அலைமோதும்.

    நிமிஷாம்பா கோவில்

    காவேரிக்கரையில் ஸ்ரீரங்கப்பட்டினம் என்ற இடத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. மற்றும் மைசூரில் இருந்து சுமார் 17 கி.மீ-. தொலைவில் உள்ளது. சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆலயம். மைசூர் மும்மடி கிருஷ்ணராஜ உடையார் மகாராஜாவால் நிறுவப்பட்டுள்ளது. பக்தர்களின் பிரார்த்தனைகள் சொன்ன அடுத்த நிமிடமே நிறைவேறுவதால் இங்குள்ள அம்பிகைக்கு ‘நிமிஷாம்பாள்’ என்ற சிறப்பு பெயர் நிலவி வருகிறது. இங்கு கல்லால் அமைக்கப்பட்ட ஸ்ரீசக்கரத்தைக் காணலாம்.
    தவிர, ஸ்ரீசக்கரம், மகாமேரு வழிபாடுகள் உள்ள ஆலயம் தமிழகத்தில் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஸ்கந்தாச்ரமம், புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி பீடம், பண்ருட்டியை அடுத்த கண்டிகை கிராமத்தில் ஸ்ரீநகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமகாமேரு தியான நிலையம், நெடூர் சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானம், திருஈங்கோய் மலை அடிவாரத்தில் ஸ்ரீலலிதா மகிளா சமாஜ் தியான நிலையம் ஆகியவை ஸ்ரீசக்கரம் மகாமேருவின் வழிபாடுகள் நடைபெறும் முக்கிய இடமாகும்.

    திருமியச்சூர்

    திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே உள்ள பசுமையான கிராமம். இங்குதான் அருள்மிகு அன்னை லலிதா பரமேஸ்வரியைப் போற்றும் ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் பிறந்த திருத்தலமாகும். ஐந்து நிலை ராஜகோபுரம், பறவைகளுக்கு பஞ்சமே இல்லை. மேலும் வாலி, சுக்ரீவன், அருணன், கருடன் என அடுத்தடுத்து இத்தலத்தில் பிறந்தவர்கள். இங்கு நவக்கிரகங்களுக்கு தனியாக சன்னதி கிடையாது. சூரியனின் புதல்வர்களான சனி பகவான் எமதர்ம ராஜா பிறந்த தலம். பன்னிரண்டு ராசிகளுக்கு உரியனவாக 12 நாகர்கள் உட்பிரகாரத்தில் (மண்டப சுற்றில்) உள்ளது.

    நாகர் வழிபாடு விசேஷம். அம்பாள் சன்னிதிக்கு எதிரே துர்க்கை சன்னதி, துர்க்கையின் கரத்திலுள்ள கிளியே நம் கவலைகள், கோரிக்கைகள் எல்லாம் அம்பாள், ஸ்ரீலலிதாம்பிகையிடம் சேர்க்கின்றது. தெற்கு நோக்கிய அகன்ற மகா மண்டப சன்னதி, வெளிமண்டபம், அர்த்த மண்டபம் அடுத்து கருவறை அமைந்துள்ளது. அங்கே சதாசிவ லிங்க பீடம், ஸ்ரீசக்கர பீடம் என இரு பீடங்கள் உள்ளது.

    இந்த பீடத்தில்தான் எவருமே வெல்லமுடியாத பண்டாசுரனை வென்று விஜயாம்பிகையாக அம்பிகை கொலுவீற்றிருக்கிறாள். சிறப்பாக அம்பாளின் திருமுகத்திலிருந்து வாக்தேவிகள், வசினி தேவிகள் என்று பேசப்பட்ட எட்டு தேவிகள் தோன்றி அம்பாளின் ஆயிரம் திருநாமங்களை தேவியின் முன் பாடுகின்றனர். அகஸ்திய மகரிஷியும், அவரது தர்மபத்தினி லோபா முத்திரையும் இங்கு வந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்கின்றனர். இதை செவியுற்ற தேவி மகிழ்ச்சியுற் று நவரத்தின ஸ்வரூபமாக காட்சியளிக்கிறார். ‘மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே’ எனத் தொடங்கும் ஸ்ரீலலிதா நவரத்தின மாலையைப் பாடி நமக்கெல்லாம் அருளியது இந்த சன்னதியில்தான்.

    ஸ்ரீசக்கர கோபுரம்

    ஏற்காடு, நாகலூரில் அமைந்துள்ளது ஸ்ரீவித்யா மகாமேரு ஆலயம். கருவறையில் ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி அம்மன் வீற்றிருக்கிறாள். ஸ்ரீசக்கர வடிவில் கோபுரம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தின் சிறப்பு.

    காஞ்சீபுரத்தின் பெருமை

    காஞ்சீபுரத்தில் ஸ்ரீகாமாட்சி அம்பாள் காமகோஷ்டத்தில் அமர்ந்து கடைக்கண் பார்வைகளால் அருள்பாலிக்கிறாள். ஆதி சங்கரர் காமகோஷ்டத்தையும், சக்கர மகா யந்திரத்தையும் பிரதிஷ்டை செய்து காமகோடி பீடத்தில் தானே அமர்ந்து யோக லிங்கத்தை த்ரிகாலமும் பூஜித்து காஞ்சியின் சிறப்பைக்கூட்டினார். ஆதியிலே பண்டகாசுரனை அழித்து தேவர்களை பிலத்தே அம்மை காத்த போது, தேவி தானே இங்கு கோவில் கொண்டாள். தேவர்கள் அக்கோவிலை செம்பொற் கோவிலாக எடுத்தனர். பின் யுகங்களில் அது கருங்கல் கோவிலாயிற்று.

    பந்தகனை புதைத்த இடத்தில் ஜயஸ்தம்பம் உருவாக்கினர். ஜயச்தம் பத்திலிருந்து பிலாகாசத்துக்கு வாயில் எடுத்தனர். காயத்ரீ கதிர்கள் பரவிய எல்லைக்குள் அதன் 24 அக்ஷ்ரங்களுக்கும் ஸ்தூலமாக 24 தூண்கள் எடுத்து காயத்ரி மண்டபமாக்கினர். வேதங்களையே இம்மண்டபத்தின் சுவர்களாக எழுப்பினர்.  அம்பிகை ஸ்ரீ சக்ரத்தில் மூலத்ரி கோணத்தில் உறைபவள் ஆதலால் கருவறையை முக்கோணமாக அமைத் தனர். மூன்றரை வட்ட குண்டலி¬னி சர்ப்பமாக அவள் விளங்குவதால் வெளிப் பிரகாரங்களெடுத்து விஸ்தரிக்கும் போது இக்கோவிலின் மூன்றரை சுற்றுக்கள் இருக்குமாறு அமைத்தனர்.அம்மையின் விருப்பபடி அம்மைக்கு ஸ்ரீ சக்ர பதக்கம் தந்த பரமேச்வரனே பரம புண்ய பீடமான ஸ்ரீ சக்ர ஸ்தாபனம் செய்தார்.

    கோடி காமங்களை (விருப்பங்களை) நிறை வேற்றுவதாலும், தர்ம-அர்த்த-காம-மோட்சம் என்பதில் காமத்தின் கோடியிலுள்ள மோட்சத்துக்கு இட்டுச்செல்வதாலும் இச்சக்கரம் “காம கோடி பீடம்“ என பெயர் பெற்றது. இன்றும் முதலில் ஸ்ரீசக்ரத்திற்க்கு தான் முதல் பூஜை. பின்னரே காமாட்சி அம்மனுக்கு பூஜை நடைபெறுகின்றது.

    காஞ்சி காமாட்சியின் சன்னதியில் காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தைச் சுற்றி வசினி, கமேசி, மோதினி, அருணா, விமலா, ஜயினி, சர்வேஸ்வரி, கவுலினி என்ற எட்டு தேவியர்கள் உள்ளனர். இவர்களின் சக்தி அளவிட முடியாது.

    காஞ்சி காமாட்சியின் ஆலயக் கருவறையில் அம்பாளுக்கு வலது பக்கம் தவக்கோலத்தில் காமாட்சி காட்சி தருகிறாள். ஈஸ்வரனை மணம்புரியும் நோக்குடன் பஞ்சாக்னியின் நடுவில் ஊசி முனையில் ஒற்றை காலில் நின்று கொண்டு கரங்களைச் சிரம் மேல் குவித்து வைத்து தவக்கோல காட்சியில் காணலாம். இந்த அம்பிகை கருவறையில் சற்று மறைவான இடத்தில் இருப்பதால் பக்தர்கள் சவுகர்யமாக தரிசிக்க வாய்ப்பில்லை. ஸ்ரீகாமாட்சி (அம்பாள்) ஞானசக்தியாகவும், ஸ்ரீதபஸ் காமாட்சியை யோக சக்தியாகவும் போற்றி வழிபடுவர்.

    ஸ்ரீகாமாட்சியின் ஆலயத்தில் நவராத்திரி ஒன்பது தினங்களும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இதையட்டி கன்யா பூஜைகள் நடைபெறும். முதல் நாள் தொடங்கி ஒன்பது நாள் வரை நடைபெறும் கோயிலின் சார்பாக எண்ணெய், சீயக்காய் நீராடி புத்தாடை அணிந்து அம்பாளின் கருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் அருகில் அமரும் பாக்கியம் பெற்ற இந்த குழந்தைகளின் சிறப்பை அளவிட முடியாது.

    இங்கு நடைபெறும் சுமங்கலிகள் பூஜை வெகு பிரசித்தம். எந்த ஊரிலும் ஸ்ரீசக்கரத்துடன் தனியே கோவிலில் அம்பிகை இருக்க மாட்டார். ஆனால் காஞ்சி மாநகரில் மட்டும்தான் நான்கு கோபுரங்கள் அமைந்த ஆலயத்தில் நேமப்படி ஆறுகாலை பூஜையை ஏற்றுக் கொண்டு ராஜ ராஜேஸ்வரியாக அனுக்கிரகம் புரிகிறாள்.
    இவளது கடாட்சம் பெற்று பிறவி ஊமையான மூக்கன் அம்மன் தாம்பூலம் எச்சில் பயனாக கவிபாடும் திறமை பெற்றான். ஆன்மிக அன்பர்களுக்கு மூகபஞ்சதசி கிடைத்தது.

    மாங்காடு காமாட்சியம்மன் அர்த்த மேரு ஸ்ரீ சக்கரம்

    மாங்காட்டிலே அம்மை காமாட்சி பஞ்சாக்னியிலே தவம் செய்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் சொல் கேட்டு அவரை மணக்க காஞ்சி செல்லும் போது அந்த அக்னியை அணைக்காமலே சென்று விடுகிறார். இதன் காரணமாக இதணை சுற்றி உள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் துயர் தாங்கமாட்டாமல் தவித்தார்கள். நிலங்கள் வற்றிப்போயின,கால் நடைகள் துன்புற்றன.

    அப்போது அந்தப்பக்கம் தேசாந்திரமாக வந்த ஆதி சங்கரர் லோகத்தின் நலம் கருதி எட்டு மூலிகைகளால் ஆன “அஷ்ட கந்தம்“ அர்த்த மேரு” என்னும் ஸ்ரீ சக்ரத்தை பிரதிஷ்டை செய்தார். இந்த ஸ்ரீசக்ர யந்திரம் ராஜ யந்திரம் ஆகும். ஆமை வடிவத்தை அடித்தளமாக அமைத்து அதன் மீது மூன்று படிகளை ஏற்படுத்தி, அதன் மேற் புறத்தில் 16 இதழ்களைக் கொண்ட தாமரையையும், அதற்கு மேற்புறத்தில் ஸ்ரீசக்ர யந்திரமும் உண்டாக்கப்பட்டுள்ளது.

    மூலிகைகளால் உருவானதால் ஸ்ரீசக்ரதிற்க்கு அபிஷேகம் கிடையாது, ஜவ்வாது, சந்தனம்,புனுகு சாத்தப்படுகின்றது. குங்கும அர்ச்சனை ந்டைபெறுகின்றது. மாங்காட்டிலே இந்த ஸ்ரீசக்ரம்தான் பிரதானம். பஞ்சலோகத்தாலான ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. ஆனால் குங்கும அர்ச்சனை இந்த ஸ்ரீசக்ரத்துக்குத்தான்.

    பல்லவர் காலத்தில் மிகப் பெரிய சக்கரக் கோவில். கர்ப்பக்கிருகத்தில் 6"ஜ்6"ஜ்3" அளவிலான ஸ்ரீசக்கரம் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது. அதி அற்புதங்கள் தன்னகத்தே கொண்ட ஒரே ஸ்ரீசக்கரக் கோவில். அர்த்தமேரு ஸ்ரீசக்கர தரிசனம் விசேஷம்.

    நாற்பத்து ஐந்து கோணங்களுடன் திகழும் இந்த ஸ்ரீசக்கரம் அஷ்டகந்தம் என்ற எட்டுவகை மூலிகைகளால் செய்யப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. சந்தனம், புனுகு சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமி அன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.  இங்கு திருமணமாகாதவர்கள் காமாட்சி எலுமிச்சம்பழம் கனி 3, 4, 8 என்று நிர்ணயித்து கனியை அம்மனுக்கு சமர்ப்பித்து திருமண வாய்ப்பை அடைகிறார்கள. இது திருமண பேற்றை அளிக்கும் பிரார்த்தனை தலமாக பேசப் படுகிறது. திருமணம் முடிந்த கையோடு கணவர்-மனைவி தம்பதி சமேதராய் வந்து பிரார்த்தனை நிறைவு செய்வர்.

    சங்கரன் கோவில்


    இங்கு அருளும், பொருளும் குறையாது அளித்திடும் ஸ்ரீகோமதி அம்மனும், ஸ்ரீசங்கர நாராயணரும் அருளாட்சி செய்கின்றனர். ஸ்ரீகோமதி அம்மன் சன்னதியில் இருந்து (மூலஸ்தானம்) 10 அடி தொலைவில் அமைந்திருக்கும் ஸ்ரீசக்கரக் குழி கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இதில் பதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம் வேலப்ப தேசிக சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்பாளின் திருப்பார்வையில் உள்ள இந்த சக்கரக் குழியில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி தியானித்து பிரார்த்தனை செய்தால் எண்ணிய காரியம் அனைத்தும் நிறைவேறும். குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வீட்டில் மழலைச் சத்தம் கேட்கும். குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறப்புடன் பிரகாசிப்பர். அனைத்து தீராப்பிணிகளும் தீரும். இங்குள்ள புற்று மண் விசேஷ பிரசாதம். கோமதி அம்மன் ஆடித் தபசு வாழ்க்கையில் ஒருமுறையாவது அவசியம் தரிசிக்க வேண்டும். சைவ, வைணவ ஒற்றுமை நிலைநாட்டும் கோவிலாகும்.

    திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி

    பஞ்சபூத தலங்களில் திருவானைக் காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயமும் ஒன்றாகும். ஆதிசங்கரர் அம்பாளின் உக்ரத்தைச் சாந்தப்படுத்த இங்கு ஸ்ரீசக்கர தாடங்கத்தைச் சாற்றினார். 1923 வருடம் காஞ்சி மகா பெரியவர் சித்திரை மாதத்தில் தாடங்கத்தை விதிப்படி ஜீர்ணோத்தாரணம் செய்து அம்பாளுக்கு (தோடு) அணிவித்தார்.

    ஸ்ரீலலிதாம்பிகை பீடம்

    கோவையில் ஆணைகட்டி மலை அடி வாரத்தில் லலிதாம்பிகை பீடம் அமைந்துள்ளது. இங்கு விக்கிரகம் மற்றும் மகாமேரு வடிவில் ஸ்ரீலலிதாம்பிகை அருளாட்சி புரிகிறார். இங்கு சமயாச்சாரம் என்னும் மார்க்கத்தின்படி தியான வழிபாடு செய்ய முக்கியத் துவம் அளிப்பது குறிப்பிடத்தக்கது.

    புன்னைநல்லூர் மாரியம்மன்

    தஞ்சையில் உள்ள மாரியம்மன் புற்றுமண்ணால் ஆனது. எனவே அபிஷேகம் கிடையாது. தைலக் காப்புதான். சதாசிவ பிரம்மேந்திரர் புற்றுமண் கொண்டு ஓர் எந்திரத்தை வடிவமைத்து பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த ஆலயத்தின் தேவியின் அபரிதமான சக்தி கண்ணொளி வழங்குதல் என்று பேசப்படுகிறது.

    சிருங்கேரி சாரதா

    துங்கபத்திரா நதிக்கரையில் நித்யஸ்வரூபியாக ஸ்ரீசாரதை உலகம் முழுவதையும் அருளாட்சி செய்து வருகிறாள். ஆதிசங்கரர் திருவடியைப் பின்பற்றி வந்த தேவி சரஸ்வதியே சாரதாம்பாளாக கோவில் கொண்டு திருவருள் புரியும் குருஸ்வரூபிணி. இவரை சக்தி, வாக்தேவி, வாணி, சரஸ்வதி, வீணாதாரிணி என்ற பல சிறப்பு பெயர்களால் அழைக்கிறார்கள். ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் கையில் ஜெபமாலை, சுவடி, ஞானமுத்திரையுடன் அலங்கார பூஷிதையாய் சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் (சாரதா) கோலம் நவராத்திரியில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    கொல்லூர் மூகாம்பிகை

    பாரத தேசம் முழுவதும் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட ஆதிசங்கரர் கொல்லூரில் கோல முனிவர் வழிபட்ட சுயம்புமூர்த்தம் லிங்கத் திருமேனியைத் தரிசித்தார். திருமேனியில் அம்பிகை அரூபமாக அருளாட்சி செய்வதைக் கண்டு மெய்சிலிர்த்து அருகில் உள்ள மேடை ஒன்றில் தவத்தில் ஈடுபட்டார். தேவியின் திவ்யதரிசனம் கண்டு மெய்சிலிர்த்து அங்கு விக்கிரகம் ஒன்றை நிறுவி அங்கு ஸ்ரீசக்கரத்தையும் நிறுவினார். கொல்லூர் மூகாம்பிகைக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் புஷ்பாஞ்சலி உண்டு. கிரகண காலத்தில் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். மூகாம்பிகையை சரஸ்வதி தேவியாக பாவித்து ஆதிசங்கரர் கலாரோகணம் பாடி அருள் பெற்றார்.

    வாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பூலோக சுவாமிநாத ஆலயம் என்றழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    வாஸ்து பரிகாரத்திற்கென திருச்சியில் ஓர் அற்புத ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தை பூலோக சுவாமிநாத ஆலயம் என்றழைக்கின்றனர். இங்கும் மாசி மகத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வீடு கட்டுதல், வாஸ்து பகவான் யோக நிலையிலேயே இருப்பார். அவர் வருடத்தில் சில நாட்கள் மட்டுமே விழித்திருப்பார் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. அப்படி அவர் விழித்திருக்கும் நாட்கள் வாஸ்து நாட்கள் என அழைக்கப்
    படுகின்றன. அந்த நாட்களில் மனை, வீடு, பூமி சம்பந்தப்பட்ட அனைத்து நற்காரியங்களையும் தொடங்கினால் மங்களம் பெருகி நன்மை கிடைக்கும்.

    இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தின் வெளியே இடது புறம் விநாயகர், வலது புறம் முருகன் மற்றும் கருப்பண்ணசாமி  போன்ற சந்நதிகள் உள்ளன. கோபுரத்தைத் தாண்டியதும் அகன்ற பிராகாரமும், கொடிமரம், நந்தியும் உள்ளன.

    அடுத்துள்ள  யாக மண்டபத்தின் வலது புறம் இறைவி ெஜகதாம்பிகையின் சந்நதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் கரங்களில் பத்மம் மற்றும் அல்லி மலரைத் தாங்கியுள்ள அன்னை, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன்  திருவருட்பாலிக்கிறாள். முன்புறம் இரு துவார பாலகர்கள் வீற்றிருக்க, அடுத்துள்ளது மகா மண்டபம். மகாமண்டப நுழைவாயிலில் இடது புறம் விநாயகரும், வலது புறம் வள்ளி- தெய்வானையுடன், முருகனும் அருட்பாலிக்கின்றனர்.

    அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் பூலோகநாத சுவாமி லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருட்பாலிக்கிறார். இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும், பிரம்மாவும் வீற்றுள்ளனர்.. ஆலய திருச்சுற்றில் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், சப்த கன்னியர், நாகாபரண விநாயகர், காசி விஸ்வநாதர், ஆஞ்சநேயர், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோரும், வடக்கில் சண்டீகேஸ்வரர் சந்நதியும், வடகிழக்கு மூலையில் நவகிரக நாயகர்களும், கால பைரவரும் வீற்றருள்கின்றனர்.

    ஆலயத்தில் இருக்கும் தல விருட்சமான வன்னி மரத்தையும், அருகே இருக்கும் வன்னிமர விநாயகரையும் வலம் வந்து வேண்டிக்கொண்டு, அருகே இருக்கும் கன்னிமார் களையும் வேண்டிக் கொள்ளும் கன்னிப் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடந்தேறுவது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

    பரிவார தெய்வங்கள் :

    இறைவனின் தேவக் கோட்டத்தின் தெற்கில் விநாயகரும், தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையும், பிரம்மாவும் அருள்பாலிக்கின்றனர்.

    ஆலய திருச்சுற்றில் மேற்கில் தல விருட்சமான வன்னிமரம், வன்னிமர விநாயகர், சப்த கன்னியர், நாகாபரண விநாயகர், காசி விசுவநாதர், ஆஞ்சநேயர், வள்ளி-தெய்வானை சமேத முருகன் ஆகியோரும், வடக்கில் சண்டீகேசுவரர் சன்னிதியும், வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களும், கால பைரவரும் வீற்றிருக்கின்றனர்.

    மூலவருக்கு வாஸ்து நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 800 பேர் கலந்து கொள்கின்றனர். ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது உண்டு. சிவராத்திரி அன்று இறைவனுக்கும், இறைவிக்கும் விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அன்று நடைபெறும் அபிஷேகங்களை கண்டுகளிக்கின்றனர்.

    சித்திரை முதல் நாள் பொங்கல், கார்த்திகை, மார்கழி 30 நாட்கள் என அனைத்து விசேஷ நாட்களிலும் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயத்திற்கு அத்தி, மகிழம், வன்னி, வில்வம், குருந்தை என ஐந்து தல விருட்சங்கள் உண்டு. தைப்பூசம், மாசிமகம், ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் இறைவன் இறைவி வீதியுலா வருவதுண்டு.

    பிரதோஷ காலத்தில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம்பெருமானுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற பொருட்களை வழங்கி அருள் பெருகின்றனர்.

    தினசரி 4 கால ஆராதனை நடைபெறும் இந்த ஆலயம் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீ பூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!

    சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இந்த ஆலயம். வாஸ்து தலமான இந்த ஆலயத்திற்கு வந்து வாஸ்து நாயகனான ஸ்ரீபூலோகநாத சுவாமியையும் ஸ்ரீ ஜெகதாம்பாளையும் வணங்குபவர்களுக்கு வாஸ்து தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கி அவர்கள் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது நிதர்சனமான உண்மையே!
    காரைக்குடியை சுற்றி சிறப்பு மிக்க ஒன்பது ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களைப் பற்றி இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டிருந்தவர்கள், வணிகம் செய்து வந்த நகரத்தார். இவர்கள் ஆங்கிலேய ஆட்சி, சமண - ஜைன சமயக் கொள்கைகளின் தாக்கம், ஆழிப் பேரலையின் தாக்குதல் போன்ற பிரச்சினைகளால் பாண்டிய நாட்டிற்கு குடியேறினர். பாண்டிய அரசனும் அவர்கள் வசிக்க, மானியமாக ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளைக் கொடுத்தான்.

    ஆரம்பத்தில் இளையாத்தன்குடியில் கூடி வாழ்ந்த இவர்கள், அங்கு ஆலயம் அமைத்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள ஒன்பது ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். அங்கும் அவர்கள் ஆலயங்களை எழுப்பினர். அப்படி அவர்கள் எழுப்பியவைதான், இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோவில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகிய ஒன்பது ஊர்களில் உள்ள திருக்கோவில்கள்.

    அந்த ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மாத்தூர் கோவில்

    காரைக்குடியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாத்தூர் கிராமம். இங்குள்ள ஐநூற்றீஸ்வரர் கோவில், 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இத்தல இறைவனின் திருநாமம், ‘அதோதீஸ்வரர்’ என்பதாகும். அம்பாளை பெரியநாயகி என்று அழைக்கிறார்கள்.

    இங்கு சித்தர்களில் சிறந்தவரான கொங்கணர் தவமியற்றி இருக்கிறார். தன் விடாமுயற்சியால், பல பச்சிலை மூலிகைகளைக் கொண்டு, உலோகங்களில் கலந்து நல்ல பொன்னாக மாற்றினார். ஐநூறு மாத்துப் பொன்தான் செய்ய முடிந்தது.

    கொங்கணருக்கு தாகம் உண்டானது. அவருக்கு இறைவன், மனித உருவில் வந்து தண்ணீர் தந்தார். அப்போது, அங்கிருந்த தங்கக் கலசம், மூலிகைச் சாறு ஆகியவற்றை காலால் தள்ளிவிட்டு மறைந்தார், ஈசன். எல்லாம் இறைவன் செயல் என்பதை உணர்ந்த கொங்கணா், தங்கம் செய்வதை நிறுத்திவிட்டு மீண்டும் தவமியற்ற ஆரம்பித்தார்.

    ஐநூறு மாற்றுத் தங்கம் தயாரித்த இடம் என்பதால், இந்த ஊருக்கு ‘மாத்தூா்’ என்றும், இத்தல இறைவனுக்கு ‘ஐநூற்றீஸ்வரர்’ என்றும் பெயர் உண்டானது.

    வயிரவன் பட்டி

    காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வயிரவன்பட்டி. இங்கு வளர்ஒளிநாதர் ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவனின் பெயர், வளர்ஒளிநாதர். அம்பாள் - வடிவுடை நாயகியம்மை. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.

    அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தியபோது அவர்கள் அஞ்சி நடுங்கினர். அவர்களை இறைவன், இத்தலம் இருந்த இடத்திற்கு செல்ல அறிவுறுத்தினார். அதன்படி இங்கு வந்த தேவா்கள், வனத்திற்குள் வளரொளிநாதரும் அம்மை வடிவுடை நாயகியும் கோவில் கொண்டிருப்பதைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர்.

    சிவமூா்த்தியின் அவதாரமே பைரவா். இங்கு பைரவருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. நான்கு கைகளில் சூலம், கபாலம், டமருகம் மற்றும் நாகபாசத்துடன் அருள்பாலிக்கிறார். வள்ளியம்மை என்ற பெண்ணின் சிலையும் உள்ளது. இவர் வயிர வருக்குத் தொண்டு செய்தவர்.

    இளையாத்தன்குடி

    இங்குள்ள கயிலாசநாதர் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் அனைவரும், இந்தத் தலத்தில் வந்து தங்கினர். இங்கு மன நிம்மதி கிடைத்ததால், மணல் லிங்கம் அமைத்து வழிபட்டனர். தேவர்களின் இளைப்பை ஆற்றியதால், இத் தலம் ‘இளையாற்றங்குடி’ என்று பெயர் பெற்றது. அதுவே மருவி தற்போது, ‘இளையாத்தன்குடி’ என்று அழைக்கப்படுகிறது.

    இங்குள்ள இறைவனின் திருநாமம் கயிலாசநாதர், அம்பாள் பெயர், நித்ய கல்யாணி. ஒரு சமயம் தஞ்சாவூரில், கோவிலுக்கு சொந்தமான வயலில் உழும் பணி நடந்தது. அப்போது மணலில் இருந்து லிங்கம் ஒன்று கிடைத்தது. அது இங்கே பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

    காரைக்குடியிலிருந்து 25 கிலோமீட்டா் தொலைவில் இளையாத்தன்குடி உள்ளது.

    இலுப்பைக்குடி

    காரைக்குடியிலிருந்து ஐந்து கிலோமீட்டா் தூரத்தில், இலுப்பைக்குடி உள்ளது. நகரத்தார் ஒருவர் கனவில் தோன்றிய சிவபெருமான், சூடாமணி ஒன்றை வழங்கி, சிவ வழிபாட்டை தொடங்கும்படி பணித்த தலம் இது.

    இத்தல இறைவன் பெயர்- சுயம் பிரகாசா், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாள் - சவுந்திரநாயகி. நான்கு வேதங்களும் பூஜித்த தலம் இது. அம்பாள் நின்ற கோலத்தில் உள்ளார். ஐநூறு மாத்து தங்கம் உருவாக்கிய சில நாட்களுக்குப் பிறகு, மேலும் ஆயிரம் தங்கம் செய்ய கொங்கணருக்கு ஆசை பிறந்தது. அவரை இத்தலம் இருக்கும் இலுப்பை காட்டுக்கு வரவழைத்தார், சிவபெருமான். அங்கு ஒளிவீசும் கதிா்களிடையே சிவலிங்கம் தோன்றியது. அதைக் கண்ட கொங்கணர், “இந்த சுயம்பிரகாசரை விட்டு தங்கத்தின் மீது ஆசை வைத்தேனே” என்று நினைத்தார்.

    நேமங்கோயில்

    காரைக்குடியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் நேமங்கோயில் உள்ளது. இங்குள்ள நேமநாதர் ஆலயம் கி.பி. 714-ல் கட்டப்பட்டது. ஐந்து நிலைகளில் அழகிய பெரிய கோபுரம் கொண்ட, இத்தலத்தின் இறைவன் பெயர் நேமநாதர். அம்பாள்- சவுந்திரநாயகி. இந்த ஆலயத்தின் நுழைவு வாசலில் பல ஆண்டுகளாக, தேன்கூடுகள் எண்ணிக்கையில் மிகுந்து காணப்படுகின்றன. ஜெயங்கொண்ட சோழ அரசரால் கட்டப்பட்ட ஆலயம் இது. இந்த ஊருக்கு நந்திபுரம், மதுநதிபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் என்ற பெயா்களும் உண்டு.

    இந்தக் கோவிலில் விநாயகர் பல வித கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலத்தில் நடன கணபதியாகவும், வல்லப கணபதி, தசபுஜ கணபதியாக பத்துக்கரங்களில் ஆயுதம் ஏந்தி என பல வடிவங்களில் விநாயகரை தரிசிக்கலாம். முருகனும் ஆறுமுகங்களுடனும் பன்னிரு கரங்களுடனும் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்புரிகிறார். முருகனின் அருகில் சிவபெருமான், சதுர்புஜத்துடன் காணப்படுகிறார். பைரவருக்குத் தனி சன்னிதியில் இருக்கிறாா். இவருக்கு இரண்டு நாய்கள் வாகனமாக இருப்பது சிறப்பு.

    சூரக்குடி

    காரைக்குடியில் இருந்து பத்து கிலோமீட்டா் தொலைவில் உள்ளது, சூரக்குடி. இங்கு தேசிகநாதர் ஆலயம் காணப்படுகிறது. பழமை வாய்ந்த இந்த ஆலயம், நான்கு நிலை கொண்ட சிறிய கோபுரத்துடன் கம்பீரம் காட்டு கிறது. சுவாமியின் திருநாமம் - தேசிகநாதர், அம்பாள் திருநாமம் - ஆவுடைநாயகி.

    கோவில் கருவறையில் லிங்கத் திருமேனியில், தேசிகநாதர் அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மீது பிரம்ம ரேகைகள் காணப்படுகிறது. கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதி, இரண்டு சிம்மங்களை தாங்கியவாறு இருக்கிறது. அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவையாகும்.

    பிள்ளையார்பட்டி

    கிழக்கே ஏழுநிலைகள் கொண்ட நெடிய கோபுரத்துடன் காணப்படுகிறது, பிள்ளையார்பட்டி ஆலயம். வடக்குத் திசையில் மூன்று நிலைகள் கொண்ட விநாயகர் கோபுரம் இருக்கிறது. மூலஸ்தானக் கருவறையில் இருகரங்களுடன் ஒருகரத்தில் லிங்கத்தையும், மற்றொரு கையால் இடுப்புக் கச்சையைப் பிடித்தப்படி இருக்கிறார். வலது பக்கம் துதிக்கை சுழன்று உள்ளது.

    இது ஒரு குடவரைக் கோவில். இந்த ஆலயத்தில் நாம் காணும் ஒவ்வொரு சிலையையும், மலையைக் குடைந்தே செதுக்கியிருக்கிறார்கள். இங்கு திருவீசர் என்ற பெயரில் சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் வாடாமலர் மங்கை.

    இரணியூர்

    காரைக்குடியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இரணியூர் ஆட்கொண்ட நாதர் ஆலயம் இருக்கிறது. நரசிம்மராக உருவெடுத்து இரணியனை வதம் செய்தார், நரசிம்மர். ஆனால் அவனை வதம் செய்தபிறகும், நரசிம்மரின் கோபம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான், சரபேஸ்வரராக அவதாரம் எடுத்து திருமாலை ஆட்கொண்டாா். இத்தல இறைவனின் பெயர் ஆட்கொண்ட நாதா். அம்பாள் திருநாமம், சிவபுரந்தேவி. தவிர பெருமாளுக்கும், பத்ரகாளிக்கும் சன்னிதிகள் இருக்கின்றன.

    அம்மன் சன்னிதி முன் நவ துர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் அபூர்வக் காட்சியாகும். இது தவிர அஷ்ட லட்சுமிகளும் அணிவகுப்பது போல் அழகாக நிற்கிறார்கள். கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி, பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. பைரவர் சன்னிதியை சுற்றி 28 வகையான பைரவர் சிலைகள் உள்ளன.
    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மற்றும் கலை நயம் வாய்ந்த சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுததேவராயர், ராமதேவராயர் ஆகியோரால் கோவில் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது. முற்காலத்தில் இவ்வூர் “தாலவனம்“, “தாலபுரி” என்று அழைக்கப்பட்டது. தாலபுரி என்றால் பனைமர கிராமம் என்று பொருள். இவ்வூரில் பனைமரங்கள் நிறைந்து இருப்பதை காணலாம். அருள்மிகு சவுந்தரராஜ பெருமாள் கோயில் மதுரை அழகர்கோயில் போல் பெருமைமிக்கது. வைணவ கோவிலாக இருந்தாலும், இந்த கோவிலில் வில்வ மரம் தல விருட்சமாக உள்ளது

    சவுந்தரவல்லி தாயார் சன்னதி

    சவுந்தரராஜ பெருமாள் கோயிலின் பிரகாரத்தில் தென்புறத்தில் சவுந்தரவல்லி தாயார் சன்னதி அமைந்துள்ளது. மகாலெட்சுமியே சவுந்தரவல்லித் தாயாராக நான்கு கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்கள் அபய, வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார். செல்வங்களுக் கெல்லாம் அதிபதியான ஸ்ரீ மஹாலெட்சுமி மனதார வேண்டுபவர்களுக்கு அருளும், பொருளும் தந்தருள்வார்.

    கருவறையின் முன், மஹாலெட்சுமியின் அஷ்ட சக்திகளில் இரண்டான சங்கநிதி, பதும நிதி தங்கள் பத்தினிகளுடன் காட்சியளிக்கின்றனர். குபேரனின் இரு பக்கத்திலும் இவர்கள் எப்போதும் வீற்றிருப்பார்கள். வலது புறம் சங்கநிதி தனது இடது கையில் வலம்புரி சங்கும், வலது கை வர முத்திரையுடன், தன் பத்தினியுடன் அருள்புரிகிறார். இடதுபுறம் பதுமநிதி, தன் வலதுகையில் பத்மத்துடனும் (தாமரை) இடது கை வரமுத்திரையுடனும் தன் பத்தினியுடன் அருள்பாலிக்கிறார். இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை என்பது தனிச்சிறப்பாகும்.

    கள்ளழகரே சவுந்தரராஜராக...
     
    விஜயநகர பேரரசு வம்சத்தில் வந்த அச்சுத தேவராயர் என்பவரால் 16 ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக கோயில் வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் பிரதான தெய்வமான பெருமாள் ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரிலும், லட்சுமிதேவி சவுந்தரவல்லி தாயார் என்கிற பெயரிலும் வணங்கப்படுகிறார்கள். மாண்டூகம் என்றால் வடமொழியில் தவளை என்று பொருள்.கோயிலின் தல புராணங்கள் படி தவளையாக மாறும் படியான சாபத்தை பெற்ற மாண்டூக முனிவர் தனது தவளை வடிவம் நீங்கி, மீண்டும் பழைய நிலையை பெறுவதற்கு இந்த தாடிக்கொம்பு தலத்திற்கு வந்து தவம் இயற்றினார்.

    அப்போது தாலாசுரன் என்கிற அரக்கன் மாமுனிவரை மிகவும் துன்புறுத்தி வந்தான். இதனால் வருந்திய முனிவர் தனது துன்பத்தை போக்குமாறு திருமாலை நினைத்து வேண்டினார். - மாண்டூக முனிவரின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் மதுரை கள்ளழகர் வடிவில் வந்து அசுரனை வதம் செய்து முனிவரின் சாபத்தை போக்கி அருளினார். தனது துன்பத்தைப் போக்கிய பெருமாள் இத்தலத்திலேயே தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் புரியுமாறு முனிவர் வேண்டினார். அதை ஏற்று அவ்வாறே திருமால் சவுந்தரராஜ பெருமாள் என்கிற பெயரில் பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

    பிரார்த்தனை தலம்

    சித்ரா பவுர்ணமிவிழா ஐந்து நாட்கள் நடைபெறும். ஆடிப்பெருவிழா பத்துநாட்கள், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம், கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் லட்சதீபம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்ற சிறப்பு விழாக்கள் ந டைபெறுகிறது. தவிர பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி போன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சுவாமிகளுக்கும் வெவ்வேறு வழிபாட்டு பூஜைகளும் நடைபெறுகிறது.

    இங்குள்ள ரதி-, மன்மதனை ஐந்து வியாழக்கிழமைகளில் பூஜித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி மாதங்களின் முதல்நாட்களில் காலை 9 மணியளவில் விஷ்ணுபதி புண்ணியகால பூஜை நடைபெறும். பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணங்களை செய்ய இயலாதவர்கள் இதில் கலந்து கொள்வதின் மூலம் அக்குறை நீங்கும். தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்காக சுரைக்காயில் தீபம் ஏற்றப்படுவது மற்றுமொரு வழிபாட்டு சிறப்பு.

    மனித வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏற்படும் சோர்வு, பிரச்சினை, சிக்கலுக்கான தீர்வு இக்கோயிலில் உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு சிரமங்களை தீர்த்து வைக்கும் வழிபாடுகளும், பூஜைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்படுகின்றன. அதனால் பிரார்த்தனை தலமாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது.

    வேண்டுதல்கள் நிறைவேறுவதால் வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். சவுந்தரராஜ பெருமாள் சில குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் மாறியுள்ளார்.

    அன்னதான திட்டம்

    தினசரி குறைந்தபட்சம் 100 பக்தர்கள் உணவருந்தும் வகையில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தினமும் மதியம் 12.15 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிநது.

    கோவிலில் ரூபாய் 20 ஆயிரம் (ரூ .20,000) வைப்பதற்காக ஆர்வமுள்ளவர்கள், ஒரு நாளுக்கு அன்னதானம் வட்டி தொகையை ஒரு வருடத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். மேலும் ஒரு நாள் அன்னதானம் ரூ. 2000 வழங்கப்படும் - நன்கொடை வழங்க தயாராக உள்ளவர்கள் கோவிலில் நிறைவேற்று அலுவலரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இணையத்தில் தாடிக்கொம்பு கோவில்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமா கோவில் இணைய தளம் http://thadicombusoundarajaperumal.org/ என்ற பெயரில் இணையத்தில் உள்லது. இதில் கோவில் ஸ்தல வரலாறு, பூஜைகள் விவரம், விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

    அண்ணா மண்டபம்

    கிழக்கு முகம் கொண்ட சந்நதி. இருபுறமும் சங்கநிதி - பதுமநிதி உள்ளன. தொடர்ந்து அர்த்த மண்டபம் அல்லது ‘அண்ணா மண்டபம்’. கிருஷ்ணதேவராயரின் நினைவாக அச்சுததேவராயர் இந்த மண்டபத்தை முழுமைப்படுத்தியதால், மரியாதையுடன் ‘அண்ணா’ மண்டபம் என்று அழைக்கப்படலாயிற்று. இரு அரசர்கள், அவர்களின் பத்தினிமார்களின் சிலைகள் உள்ளன. கிருஷ்ணதேவராயரின் தலையில் கொண்டை வடிவம் உள்ளது; அச்சுததேவராயர் தலையில் கொண்டை இல்லை.
    இந்த அரசர்களுக்கு முன்னால் இருக்கும் தூண்களில் பெரிய திருவடி மற்றும் சிறிய திருவடி (இடம் மாறிய நிலையில்) கைகள் கூப்பிய வண்ணமிருக்கிறார்கள். பின்னர் வரும் அரசர்கள் - அவர்களின் இரு பத்தினிமார்களைத் தொடர்ந்து பாவை விளக்கு நாச்சியார்களும், அதன்பின் துவாரபாலகர்களும் காட்சி தருகிறார்கள். ‘இதிலென்ன அதிசயம்?’ என்று கேட்கலாம். தாயார் சந்நதி முன்னால் இருக்கும் மண்டபங்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிலைகள் அனைத்தும் கூரையைத் தாங்கும் தூண்கள் அல்ல. சிற்பக்கலையின் உன்னத நிலையை எடுத்துக்காட்டும் தனித்தனி சிற்பங்கள்!

    அழகு தெய்வம் ஆண்டாள் சன்னதி

    சவுந்தரராஜபெருமாள் கோவில் பிரகாரத்தில் வடமேற்கில் ஸ்ரீஆண்டாள் சன்னதி உள்ளது. ஆண்டாள் மூலவர், உற்சவர் என்ற நிலையில் காட்சியளிக்கிறார். இச்சன்னதிக்கு தனி விமானம் உண்டு. பெரியாள்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய இரு பிரபந்தங்களை பாடியுள்ளார்.

    சூடிக்கொடுத்த நாச்சியார், கோதை என்று அழைக்கப்படும் ஆண்டாள் மீது மிகுந்த பக்திகொண்ட விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயர் வைணவ தலங்களில் ஆண்டாள் சன்னதியை ஏற்படுத்தியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆண்டாளின் உற்சவர் சிலை ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரங்க மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் முக்கிய இடம்பெறுகிறது. ஆண்டாள் சன்னதியின் வெளிப்புர சுவர்களில் தசாவதார சிற்பங்கள் மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன. 20 கல்தூண்களை கொண்ட பெரும் மண்டபம் மூலவருக்கு எதிரே விசாலமாக உள்ளது.

    வடக்கு வீடு....

    மதுரைக்கு அருகே உள்ள 2 திருமாலிருஞ்சோலை என்ற திவ்யதேசத்தோடு தாடிக்கொம்பு தலத்திற்குத் தொடர்புள்ளதை தென்னிந்திய கோயில் சாசனம். ‘திருமாலிருஞ்சோலை அழகருக்கு வடக்கு வீடான புறமலை தாடிக்கொம்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள காட்டழகர் கோயில், திருமாலிருஞ்சோலை அழகரின் தெற்கு வீடாகக் கருதப்படுகிறது.

    அதனாலேயே இந்த மூன்று தலங்களிலும் சித்திரை உற்சவத்தில் ‘அழகர் ஆற்றில் இறங்குவதில்’ ஒற்றுமை இருப்பதைக் காணலாம். இதற்கு அடிப்படை புராண ஒற்றுமை இருப்பதே காரணமாக இருக்கலாம்.

    ரதி,மன்மதன் பூஜை நடைபெறும் நேரம்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருமண தடை நீக்கும் ரதி, மன்மதன் பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பூஜை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 7.30, 9.30, 11.30, மாலை 6 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது.

    பூஜை நேரம்

    கோவிலில் நடை திறக்கும் நேரம் காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

    விழாக்களும் பூஜைகளும்

    அருள்மிகு சவுந்தரராஜபெருமாள் கோவிலின் பூஜை முறைகள் ஆகம விதிகளின்படியும், தென்கலைச் சம்பிரதாயங்கள் படியும் நடைபெறுகின்றன. கலெக்டர் ஜார்ஜ் வின்ச், ஓர் அறிக்கையில், இக்கோவிலில் ஜூன் டிசம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்ததென்று குறிப்பிட்டுள்ளார். மேலும், விழாக்களின்போது, உற்சவர் தேரில் பவனி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்றைய காலத்தில் மதுரை சித்திரை விழாவைப் போன்று இத்திருக்கோவிலும் சித்திரா பவுர்ணமி விழாவும், ஆடிப் பெருவிழாவும் நடைபெற்றதாக பட்டாச்சாரியர்கள் கூறுகின்றனர்.

    தற்காலத்தில் சித்ரா பவுர்ணமி விழா 5 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவர் பெருமாள் தேரில் திண்டுக்கல் நகரை பவனி வருவார். பவுர்ணமி நாளன்று சவுந்தரராஜப்பெருமாள் குடகனாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    ஆடிப்பெருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவர் வாகனங்களில் வீதி உலாவாக அழைத்து வரப்படுகிறார். ஆடி மாதம் சுக்கில பட்சம்( வளர்பிறை) சதுர்த்தி திதி செவ்வாய்க்கிழமை பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதாரம் செய்தார். ஆடிப்பூர நாளில் பெருமாள்& ஆண்டாளுக்கு நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவம் 9 நாட்களுக்கு நடைபெறுகிறது. தாயார் சன்னதியில் கொலு விழா நடைபெறும். மகாசிரவரோண நிகழ்ச்சியும், லட்சார்ச்சனையும் நடைபெறும்.

    கார்த்திகை மண்டபத்தில் ரோகிணி நட்சத்திரம் லட்ச தீப வழிபாடு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி மிக முக்கியமான விழாவாகும். சொர்க்கவாசல் சிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சிறப்பு பூஜைகள்

    ஒவ்வொரு மாதமும் நடைபெறும் சிறப்பு பூஜைகளைப் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சவுந்தரராஜப்பெருமாள் திருவோண நட்சத்திர பூஜை, ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அமாவாசை பூஜை. ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி சுவாதி நட்சத்திர பூஜை, ஸ்ரீ வேணுகோபால சுவாமி ரோகிணி நட்சத்திர பூஜை, ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜையும், பிரதி ஞாயிறு மாலை 5 மணியளவில் ராகுகால பூஜையும் நடைபெறும்.
    கோடீஸ்வரர் திருக்கோவில் 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இன்று இந்த கோவில் பற்றிய சில முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.
    கோவில் பெயர் : அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்

    சிவனின் பெயர்  : கோடீஸ்வரர்(வேத்ரவனேஸ்வரர்), கோடிகாநாதர்

    அம்மனின் பெயர் : திரிபுர சுந்தரி, வடிவாம்பிகை,

    தல விருட்சம் :  பிரம்பு

    கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு  9 மணி வரை

    கோவில் சிறப்பு :

    * 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

    * இது 37 வது தேவாரத்தலம் ஆகும்.

    .* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்..

    * இது 1008 ஈஸ்வரர்களால் சூழப்பட்ட தலமாகும்

    * சனிபகவானும் எமனும் எதிரெதிர் சன்னதியில் அருள்கின்றனர்.

    * அகத்தியர், சித்திரகுப்தர், யமன் முதலிய சன்னிதிகள் உள்ளனர்.

    * இங்குள்ள சனிபகவான் "பாலசனி' என அழைக்கப்படுகிறார். இவரது தலையில் சிவலிங்கம் உள்ளது. காக வாகனத்திற்கு பதில் கருட வாகனம் உள்ளது. மங்கு, பொங்கு, ஸ்மரணச் சனி மூன்றிற்கும் வழிபடக்கூடிய சனிபகவான் இவர். இவ்வூரை ஒட்டி காவேரி நதி, "உத்திரவாஹினி' யாக (தெற்கிலிருந்து வடக்காக) பாய்கிறது.

    * சுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம் அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது.

    * செம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.

    * இங்குள்ள உத்திரவாஹினியில் கார்த்திகை ஞாயிறு அன்று விடியற்காலையில் நீராடினால் எல்லாப் பாவங்களும் தொலையும் என்பது நம்பிக்கை.

    முகவரி :

    அருள்மிகு திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்,
    திருக்கோடிக்காவல்,(வழி) நரசிங்கன் பேட்டை--609 802.
    திருவிடை மருதூர் வட்டம்,
    தஞ்சாவூர் மாவட்டம் .
    Ph: 0435 - 2450 595
    தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலைமாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
    தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி வட்டத்தில் இருக்கும் தேவிகாபுரம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் பெரியநாச்சியார் என்னும் பெரியநாயகி என்று கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. தற்போது வடமொழி சொல்லால் ப்ருகதாம்பாள் என்று வழங்குகின்றனர்.

    கோயில் அமைப்பு

    தேவிக்குரிய இவ்வாலயம் ஊரின் நடுவே அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக 475 அடி நீளமும் வடக்கு தெற்காக 250 அடி அகலமும் 30 அடி உயரம் கொண்ட அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய மதில் சுவர்களுடன் விளங்குகிறது. இம்மதிலின் முகப்பில் இராஜகோபுரம் சுமார் 150 அடி உயரம் உடையதாகவும் ஏழு நிலைகளையும் ஒன்பது கலசங்களையும் கொண்டுள்ளது. இக்கோபுரத்திற்கு எதிரே நான்கு கால்களைக் கொண்ட உயர்ந்த மண்டபம் ஒன்றுள்ளது. இக்கோபுரத்திற்கு வடக்குப்பக்கம் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தேர்மண்டபம் காணப்படுகிறது. இத்தேர் மண்டபம் கிழக்கு தெற்கு ஆகிய இரு திசைகளையும் நோக்கின வகையில் அமைந்துள்ளது.

    ஆலயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் காணலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

    இவ்வாலயத்துள் 3 பிரகாரங்கள் (சுற்றுகள்) உள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளே செல்லும் போது முதலாவதாக ஆலயத்தின் வலப்புறம் ஓர் அழகிய திருக்குளம் அமைந்துள்ளது. அதன் கரையில் நான்கு கால்களைக் கொண்ட குதிரைகள் இழுத்துச்செல்வது போன்ற கல்யாண மண்டபம் மிக அற்புதமான சிற்ப எழிலுடன் அமைந்துள்ளது. இதில் மனுநீதிச் சோழன் வரலாற்றைச் சித்தரிக்கும் சிற்பங்கள் பொற்புடன் விளங்குகின்றன. இது காணவேண்டிய அழகிய மண்டபம் ஆகும்.

    இவை இரண்டிற்கும் இடையில் பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இதை அடுத்து திருநந்தி தேவர் அன்னையை நோக்கிய வண்ணம் வீற்றிருக்கிறார். கோயிலின் வலப்புறம் விநாயகப் பெருமானும், இடப்புறம் ஆறுமுகப்பெருமானும் உள்ளனர். இம்மூன்றாம் பிரகாரத்தின் இருபுறங்களிலும் பண்டை நாளில் நறுமணங்கமழும் சோலைகள் இருந்தனவாக எண்ணுவதற்கு இடமளிக்கிறது.

    அடுத்து மகாமண்டபத்துடன் கூடிய ஐந்து நிலைக்கோபுரம் உள்ளது. இம்மகாமண்டபம் 36 கால்களைக் கொண்டது. இம்மண்டபத்தில் நவக்கிரக சந்நிதி இருந்தது. அது தற்போது வடக்குப்பிரகாரத்தில் தனிக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. இதைக்கடந்து உள்ளே சென்றால் இரண்டாம் பிரகாரத்தை அடையலாம். அங்கு வலப்புறம் விநாயகர் சந்நிதியும் மற்றும் நவராத்திரி கொலு மண்டபமும் உள்ளன. இந்தப்பிரகாரத்தில் தான் மிகுதியான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

    இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கியவாறிருக்கும் நடராசமூர்த்தி உள்ளார். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சவமூர்த்திகளும் அடுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியோரின் திருவுருவங்களும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளின் உருவங்களும் உள்ளன. இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர், திருமால், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய உருவங்களைக் காணலாம்.

    இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் அடுத்து உள் மண்டபத்தில் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி காட்சி தருகிறாள். அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளைக் கொண்டு நின்ற கோலத்தில் அழகுறக் காட்சியளிக்கின்றாள். 
    ×