என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஆவணி பவுர்ணமி அல்லது புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரையான பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும்.
    ஆவணி பவுர்ணமி அல்லது புரட்டாசி பவுர்ணமிக்கு அடுத்த நாளில் வரும் பிரதமை திதியில் தொடங்கி, புரட்டாசி அமாவாசை வரையான பதினைந்து நாட்களும் ‘மகாளய பட்சம்’ எனப்படும். ‘மகாளயம்’ என்பதற்கு ‘பெரிய கூட்டம்’ எனப்பொருள். ‘பட்சம்’ என்பது பதினைந்து நாட்களைக் குறிப்பதாகும். அதாவது, மறைந்த நம் முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்திலிருந்து வந்திருந்து, அவரவர் சந்ததிகளின் இல்லத்தில் கூடும் பெரும் புண்ணிய காலமே ‘மகாளய பட்சம்’ என்பதாகும். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு.

    வாழும் காலத்தில் தன்னைத் தேடி வந்து யாசகம் கேட்ட எவராக இருந்தாலும், அவர்கள் கேட்டதை ‘இல்லை’ என்று சொல்லாமல் கொடுத்தவன் கர்ணன். அவன் செய்த தானத்தால் சேர்ந்த புண்ணியங்கள் அனைத்தும், குருசேத்திரப்போரில் அவனது உடல் முழுவதும் அம்புகள் தைத்திருந்தபோதிலும், உயிரை போகவிடாமல் காத்து நின்றன. அந்த வகையில் கர்ணன் எவ்வளவு பெரிய வள்ளல் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும். அந்த புண்ணியங்களை எல்லாம், வேதியர் உருவில் வந்த கண்ணன் பெற்றுச் சென்ற பிறகுதான், கர்ணனின் உயிர் அவனது உடலை விட்டுப்பிரிந்தது.

    அப்படி உடலை விட்டுப் பிரிந்த கர்ணனின் உயிர், தேவலோகம் சென்றது. அங்கு அவனது ஆன்மாவுக்கு பசி எடுத்தபோது, அவனது தட்டில் வைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் பொன்-பொருளாகவே இருந்தன. உணவுப் பதார்த்தங்கள் எதுவும் இல்லை. “பொன்-பொருட்களை எப்படிச் சாப்பிடுவது?” கர்ணன் கேட்டான். அப்போது அங்கிருந்து தேவ தூதர்கள், “நீங்கள் பூலோகத்தில் பொன்-பொருட்களை மட்டுமே தானமாக வழங்கியிருக்கிறீர்கள். உணவுப் பொருட்கள் எதையும், எப்போதும் தானமாக ஒருவருக்கும் அளிக்கவில்லை. அதோடு, பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் உங்களுடைய முன்னோர்களுக்கும் கூட நீங்கள் எந்த ஒரு சிரார்த்தத்தையும் செய்யவில்லை. அதனால்தான் உங்களுக்கு இந்த நிலைமை” என்று எடுத்துக் கூறினர்.

    “இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்க வழி இருக்கிறதா?” என்று கர்ணன் கேட்டதற்கு, “புரட்டாசி அமாவாசைக்கு முன்பான 15 நாட்கள் பூலோகம் சென்று, முன்னோர்களுக்கான சிரார்த்தங்களை செய்து வந்தால், இந்தப் பிரச்சினையில் இருந்து மீளலாம்” என்றனர். அதன்படியே 15 நாட்கள் பூலோகம் வந்து சிரார்த்தங்களையும், அன்னதானங்களையும் செய்தான், கர்ணன். இதையடுத்து அவனுக்கு தேவலோகத்தில் பசிக்கு உணவளிக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன.

    இந்த 15 நாட்களில் அன்னதானம் செய்வது பெரும் புண்ணிய பலன்களை நம் பித்ருக்களுக்கும், அவர்கள் வாயிலாக நம் தலைமுறைக்கும் கிடைக்கச் செய்யும். மகாளய பட்ச காலத்தில் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய வேண்டும். இப்படிப்பட்ட தீர்த்த திருத்தலங்கள் ராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, பவானி, திருவையாறு, கன்னியாகுமரி என பல இருந்தாலும், அவற்றில் முதன்மையானது ராமேஸ்வரம் திருத்தலம்.

    பித்ருக்கள், வழிபாட்டுக்கு உரியவர்கள். அவர்களை நாம் வணங்காதிருந்தால், அவமதித்ததாகிவிடும். ஆகையால் அது ‘பித்ரு தோஷம்’ என்று சொல்லப்படுகிறது. நம் அப்பாவோ, தாத்தாவோ, சித்தப்பாவோ... நம் வம்சத்தில் யாரோ ஒருவர் பித்ருக்களை வணங்காமல் இருந்திருந்தால் கூட, அவையெல்லாம் நமக்கு பாவங்களாக வந்தடையும் என்கிறார்கள். குடும்பத்தில் காசு பணம் இல்லாத நிலை, காசு பணம் இருந்தும் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாத சூழல், ஒற்றுமை இருந்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கை, வாரிசு இல்லாத துக்கம், வாரிசு இருந்தாலும் உடல்நலக்குறைபாடு போன்றவை, பித்ரு தோஷத்தால் வரும் பாதிப்புகளாக சொல்லப்படுகிறது.

    தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட, திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது மகாளய அமாவாசை. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து வழிபாடு செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை தொடங்கி அமாவாசை வரை உள்ள காலத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது வணங்கி வழிபடவேண்டும். இந்தநாளில், புனித நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி, நம் முன்னோரைப் பிரார்த்தித்து தர்ப்பணம் செய்ய வேண்டும். இது நமக்கும், நம் சந்ததியினருக்கும் நன்மை சேர்ப்பதாகும். எனவே மகாளய பட்ச காலத்தில், தினமும் பித்ருக்களை ஆராதியுங்கள். அவர்களுக்கு அன்னம் படைத்து நைவேத்தியம் செய்யுங்கள். தினமும் காகத்துக்கு அன்னமிடுங்கள். உங்களால் முடிந்த அளவு, ஏழை-எளியவர்களுக்கு உணவிடுங்கள். மேலும் முடிந்த தான தர்மங்களையும் செய்யுங்கள். வாழ்க்கை சிறப்பாக அமையும்.
    பெண்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது. அந்த ஆலயத்தை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    கருப்பை நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள் எல்லாம் தற்காலத்தில் பல பெண்களை வேதனைப்படுத்தும் உபாதைகளாக உள்ளன. இந்நிலையில் பெண்களுக்கு மட்டுமே ஏற்படக் கூடிய உடல்நலக் கோளாறுகளை தீர்த்து அருளும் ஆலயம் ஒன்று உள்ளது. திருச்சி அருகேயுள்ள பேட்டைவாய்த்தலை ஆலயம்தான் அது. இத்தல இறைவன் மத்யார்ஜுனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

    இறைவியின் பெயர் பாலாம்பிகை. பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யவும், குழந்தை பேறின்மையைத் தீர்க்கவும் மூன்றாம் குலோத்துங்க சோழனுக்கு அசரீரி ஒன்று இட்ட கட்டளையின் விளைவுதான் இக்கோயிலும் அதனருகே உள்ள  தீர்த்தமும் அமைந்ததாக  சொல்கிறார்கள். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் மாதாந்திர சிக்கல் மட்டுமல்லாமல், கருப்பைக் கோளாறுகள் எல்லாமும் நிவர்த்தியாகின்றன.

    திருச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் உள்ளது பேட்டைவாய்த்தலை.
    தஞ்சாவூர் திருச்சிற்றம்பலம் ஆலயத்தில் பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் எமதர்மன் சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற பெயரிலேயே ஒரு திருத்தலம் இருப்பதும், அங்கு சிவாலயம் ஒன்று அமைந்திருப்பதும் எவ்வளவு பெரிய சிறப்பாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான் என்ன தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.. திருவாரூரில் பிறந்தால் முக்தி. காசியில் இறந்தால் முக்தி. திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அந்த வகையில் இந்த திருச்சிற்றம்பலத்து மண்ணை உடலில் பூசிக்கொண்டால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள்.

    அப்படிப்பட்ட திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. கையில் சூலாயுதம், பாசக்கயிறு, மந்திரக்கோல் தாங்கி, வலது காலை மடக்கி, இடதுகாலை தொடங்கவிட்ட நிலையில் எமதர்மன் காட்சி தருகிறார். இந்த எமதர்மனை தரிசித்தாலே பாவங்கள் விலகிவிடுவதாக நம்பிக்கை.

    சனிக்கிழமை தோறும் பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை, எமகண்ட நேரத்தில் ஆயுள் விருத்திக்கான பூஜைகள் இங்கு செய்யப்படுகின்றன. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு கீற்று கொட்டகையில் சுதை சிற்பமாக இருந்த எமதர்மனுக்கு, தற்போது கற்சிலை வடித்து வைக்கப்பட்டுள்ளது. அவரைச் சுற்றி பரிவார தெய்வங்கள் உள்ளனர். எமன் சன்னிதிக்கு தெற்கு பகுதியில் ஆண்கள் மட்டும் நீராடும், ‘எம தீர்த்தக்குளம்’ அமைந்துள்ளது.

    பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
    சிறப்பு மிக்க பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச்சிறந்த ராகு, கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம்.
    சிறப்பு மிக்க பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச்சிறந்த ராகு, கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ள தலம்.

    மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். திருப்பாம்பரம் ஒரு ராகு, கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஐதீகம்.

    இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம் இதுவாகும். இந்திரன் சாபம் நீங்கிய தலமாகும். கங்கை பாவம் தொலைந்த தலமாகும். சந்திரன் பழி நீங்கிய தலமாகும் என்று சோதிட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
    கடன் தொல்லை மற்றும் திருமண தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும், பிள்ளைகளின் தோஷத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் தலமாக விளங்குவது இந்த வயலூர் முருகன்.
    கடன் தொல்லை மற்றும் திருமண தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கும், பிள்ளைகளின் தோஷத்தால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும் பிரச்சனைகளை தீர்க்கும் தலமாக விளங்குவது இந்த வயலூர் முருகன். பல முனிவர்களுக்கும் அடியார்களுக்கும் அருள்புரிந்த தலமாகிய வயலூர் முருகன் தளத்திற்கு ஒருமுறை சென்று வந்தாலே போதும்.

    அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும். வயலூர் முருகனை வழிபட்டு இறவாபுகழைப் பெற்றார் அருணகிரிநாதன் என்ற இந்த ஒரு கூற்றே போதும் இந்த வயலூர் முருகனின் சிறப்பை எடுத்துரைக்க. பழனி திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைத்த வேண்டுதலை வயலூர் முருகன் கோயில் நேர்த்திகடன் செய்யலாம்.

    ஆனால் வயலூர் முருகன் கோயிலில் வைத்த வேண்டுதலை மற்ற எந்த இடத்திலும் நேர்த்திக் கடன் செய்ய முடியாது அவ்வளவு பிரசித்தி பெற்றது இந்த வயலூர் முருகன் கோவில். இந்த வயலூர் முருகனைக் காண ஒரு கண் பத்தாது,வரம் தருவான் வயலூரான் என்பது அந்த ஊர் மக்கள் அவரின் புகழை எடுத்துரைக்கின்றனர்.

    கடன் தொல்லையும் பிள்ளைகளுக்கான வேண்டுதலும் திருமண பரிகாரங்கள் எதுவாயினும் வந்தவர்களின் மனக்குறையை தீர்த்து வைக்கிறார் இந்த வடிவேலன். இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு அம்சமாக கருதப்படுவது தத்து திருப்புதல் என்ற நேர்த்திக்கடன். இந்த கோயிலின் வழக்கமாக இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டு வருகிறது.

    தோஷம் உள்ள குழந்தைகளை குறிப்பிட்ட காலம் வரை கோயிலுக்கு தத்து கொடுத்தலும், உரிய காலம் முடிந்ததும் தத்து திருப்புதலும் செய்கிறார்கள்.இவ்வாறு கோவிலில் தத்து கொடுத்த குழந்தைகள் தோஷம் நீங்கி வாழ்வில் பல வெற்றிகளை பெற்று வாழ்கின்றனர் என்ற அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

    இவ்வளவு சிறப்பு மிக்க இந்த வயலூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகம், கார்த்திகை திருவிழா,சஷ்டி விழா என வழக்கமான விழாக்களும் வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகின்றன.
    பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்தால் நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
    பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.

    பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

    வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.

    வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.
    ராகு கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி அதற்காக பயப்படத் தேவையில்லை. ராகு,கேது தோஷம் நீங்க வழிபடும் கோவில்களை பற்றி அறிந்தால், அங்கு சென்று பயன்பெறலாம்.
    ராகு,கேது தோஷம் நீங்க வழிபடும் கோவில்களை பற்றி அறிந்தால், அங்கு சென்று பயன்பெறலாம். அதுபற்றி பார்க்கலாம்:-

    சிதம்பரம் அருகில் 22 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டு மன்னார்குடி தலத்தில் ஸ்ரீசவுந்தரநாயகி உடனாகிய ஸ்ரீஅனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலய இறைவனை அஷ்டநாகங்களும் அவர்களின் தலைவனான அனந்தனும் வழிபட்டு இறைவனருள் பெற்றதாக ஐதீகம். நாக தோஷமும் கேது தோஷமும் கால சர்ப்ப தோஷமும் நீங்கிட ஸ்ரீஅனந்தீஸ்வரரை ராகுகேது பெயர்ச்சியின்போது வழிபடலாம்.

    மேலும் காரைக்குடியில் செஞ்சை பகுதியில் நடராஜ் தியேட்டர் கீழ்புறம் ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி கோவில் இருக்கிறது. இங்கு நாக விநாயகர் சந்நிதியும் உண்டு வரப்பிரசாதியான மூர்த்திகள் இங்கு சென்று அபிஷேகம் அர்ச்சனை செய்யலாம்.

    பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நயினார்கோவில் என்ற ஊரில் ஸ்ரீசவுந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாத சுவாமி சந்நிதி உண்டு. இங்கு வழிபடலாம். திருச்சி தெப்பக்குளம் கிழக்கு வீதியில் (மலைக்கோட்டை அடிவாரம்) நாகநாதர் திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். அபிஷேகம் செய்யலாம்.

    சீர்காழியில் சிரபுரம் பகுதியிலுள்ள பொன்நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இங்கும் வழிபடலாம்.

    செம்மங்குடியில் உள்ள கேதுபுரம் கேது ஸ்தலம் ஆகும். இங்கு வழிப்படலாம்.

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் பாதையில் உள்ள தொலைவில்லிமங்கலம் சென்று வணங்கலாம்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிக்கோவில் (வழி) தண்ணீர்பந்தல் பாளையம் போஸ்ட், தங்கமேடு தம்பிக்கலை ஐயன் சுவாமி திருக்கோவில் ராகு கேதுவுக்குரிய பரிகார தலம் ஆகும்.

    மயிலாடுதுறை பேரளம் அருகில் திருமீயச்சூரில் உள்ள ஸ்ரீலலிதாம்பிகை கோவில் பிரகாரத்தில் பன்னிரு நாகர் உள்ளன. இதற்கு பாலாபிஷேகம் செய்யலாம்.

    கும்பகோணம் அருகில் நாச்சியார் கோவில் என்ற ஊரில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலில் கல் கருடன் உள்ளது. அவர் உடலில் ஒன்பது இடத்தில் நாகர் உருவம் அமைந்துள்ளது. ஏழு வியாழக்கிழமை தொடர் அர்ச்சனைக்கும் பணம் கட்டினால் பிரசாதம் அனுப்பி வைப்பார்கள்.

    கோவை-அவினாசி பாதையில் வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. இது ராகுகேது பரிகார ஸ்தலம், பிரார்த்தனை ஸ்தலம் என்று பெயர் பெற்றுள்ளது.

    ராகு கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி அதற்காக பயப்படத் தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள் கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில்சென்று வழிபட்டால் போதும், ராகு கேதுப் பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுவார்கள் என்பதும் ஐதீகம்.
    தெய்வ வழிபாட்டிற்கென்று எண்ணற்ற மலர்கள் இருந்தாலும் அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தேர்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.
    மலர்களில் கூட மனக்கவலை தீர்கிறது என்றால் ஆச்சரியமாக இருக்கும். மலர்களிலும் பல மகத்துவங்கள் உள்ளன. தெய்வ வழிபாட்டிற்கென்று எண்ணற்ற மலர்கள் இருந்தாலும் அவைகளில் நம் எண்ணங்களை நிறைவேற்றும் மலர்களைத் தேர்ந்தெடுத்து பூஜை செய்தால் தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும்.

    மனோரஞ்சித மலரை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும். தாம்பத்ய சுகம் கிடைக்கும்.

    மனக்கவலை தீர வேண்டுமானால், மகிழ்ச்சி அதிகரிக்க வேண்டுமானால் வெண்தாமரை மலரை பூஜைகளில் சேர்க்கலாம்.

    நந்தியாவட்டை, மல்லிகை போன்ற மலரைப் பயன்படுத்தினால் மன அமைதி கிடைக்கும்.

    பாரிஜாத மலரைப் பயன்படுத்தினால் ஆயுள் விருத்தி அதிகரிக்கும்.

    வில்வம், துளசி போன்றவைகளைப் பயன்படுத்தினால் வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும்.

    மரிக்கொழுந்தைப் பயன்படுத்தினால் புகழ் பெருகும்.

    பூக்களைக் கொண்டு அர்ச்சித்து நன்மையைக் காணுங்கள்.
    கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் திருநாகேஸ்வரம் கோவிலில் உள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
    ராகு பகவானிற்கு உரிய சிறப்பு தலம் திருநாகேஸ்வரம். இந்த திருத்தலம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கே சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில் (கும்பகோணம்- காரைக்கால் சாலையில்) உள்ளது.

    கால சர்ப்பதோஷம், ராகு திசை, ராகு புத்தி, நாக தோஷம் அமைந்தவர்கள் இங்குள்ள ராகு பகவானைத் துதித்து அந்த தோஷங்களில் இருந்து விடுபடலாம். ஐந்து தலை அரவமாகிய (நாக ராஜாவாக) ராகு பகவான் சன்னிதி கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ளது. உதட்டோர புன்னகை, மடித்த கால் தொடையில் இடது கரத்தை ஊன்றி வலக்கரத்தால் அருள்பாலிக்கின்றார்.

    இங்கு வீற்றிருக்கும் ராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்யும் பொழுது, பால் அவருடைய திருமேனியில் பட்டு வழியும் வேளையில் நீலநிறமாக மாறிவிடும் அதிசயம் இன்று வரை நடந்து வருகிறது.

    1980-ம் ஆண்டு ராகு பகவானின் மீது கிடந்த, நாகம் கழற்றிய சட்டை, கோவில் கண்ணாடி பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ‘ராகுவைப் போல கொடுப்பானுமில்லை’ என்பது பழமொழி. எனவே கொடுக்கும் ராகுவை வழிபட்டால் அடுக்கடுக்காக நற்பலன்கள் வந்து சேரும். 
    பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.
    பொதுவாக தமிழகத்தில் சர்ப்ப தலங்கள் ஏராளமாக உள்ளன. மக்கள் இயல்பு நிலைக்கு வந்த பிறகு வழிபட உகந்த காலமாக அமையும் பட்சத்தில், வாய்ப்பிருக்கும் பொழுது வழிபாடுகள் செய்யலாம்.

    திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கீழப்பெரும்பள்ளம், ஸ்ரீகாளஹஸ்தி, பேரையூர், நைனார் கோவில் போன்ற நாக தலங்கள் உள்ளன. மேலும் சர்ப்பத்தை அருகில் வைத்திருக்கும் தெய்வங்களை வழிபடுவதன் மூலமும் நன்மைகளைப் பெறலாம்.

    ராகுவிற்குரிய தெய்வம் துர்க்கை, கேதுவிற்குரிய தெய்வம் விநாயகர். எனவே அவர்கள் இருவரையும் வாரந்தோறும் வழிபாடு செய்து வருவதன் மூலம் சீரும், சிறப்பும், செல்வாக்கும் பெறலாம். 
    திருமண வயது வந்தும் சிலருக்கு திருமணம் முடிவாகாமல் தாமதப்படலாம். பலன்தரும் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.
    திருமண வயது வந்தும் சிலருக்கு திருமணம் முடிவாகாமல் தாமதப்படலாம். ‘வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றது, வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே’ என்று கவலைப்படுபவர்கள், பலன்தரும் பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் மேற்கொண்டால் இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    திருமணஞ்சேரி வழிபாடு, தித்திக்கும் வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும். சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும்.

    இதுபோன்ற திருமணம் முடித்து வைக்கும் திருத்தலம் ஏராளமாக உள்ளது. நமது சுய ஜாதகத்தில் களத்திர ஸ்தானத்தின் பலம் பார்த்து, அதற்குரிய தலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால் மணமாலை சூடும் வாய்ப்பு விரைவில் வரும்.

    குரு பலம் கூடி வந்தால்தான் திருமணம் முடியும். எனவே, குருவிற்குரிய சிறப்பு தலங்களுக்குச் சென்றும் வழிபட்டு வரலாம். வானவருக்கு அரசனான வளம் தரும் குருவுக்கு, பட்டமங்கலம், குருவித்துறை போன்ற இடங்களில் ஆலயங்கள் உள்ளன. பொதுவாக கல்யாணக் கனவுகள் நனவாக, வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவது நல்லது.
    பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் குபேரரே அதிபதி. இவரை வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாகுறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம்.
    குபேரர் இவர் பணத்தின் அதிபதியான இந்து கடவுளாக விளங்குகிறார். பிரபஞ்சத்தின் அனைத்து வளத்திற்கும் இவரே அதிபதி. இவரை வணங்கி பூஜைகளை மேற்கொள்கிறவர்கள் பண பற்றாகுறையை சந்திப்பதில்லை என்பது ஐதீகம். இதில் பல சுவரஸ்ய குறிப்புகளும் உள்ளன.

    இதிகாசங்களில் ராவணன் குபேரனிடம் கடன் பெற்றதாக பதிவுகள் உண்டு. மேலும் இவர் விஷ்ணு பரமார்த்தாவின் ஆடம்பர திருமணத்திற்கு கடளித்ததாகவும் குறிப்புகள் உண்டு. பெரும் வணிக நிறுவனங்கள் ஏன் பல முக்கிய வங்கிகளின் முன் புறம் கூட குபேர சிலை நிறுவப்பட்டிருப்பதை நம்மால் காண முடியும்.

    இவை அனைத்தும் வளத்தை பெருக்க குபேரரின் எத்தனை தேவை என்ற முக்கியத்துவத்தை உணர்த்தும் உண்மைகளாக அமைகின்றன. முறையான ஆன்மீக முறைகளின் படி குபேர யந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

    அவை தங்கம், வெள்ளி அல்லது ஐம்பொன் ஆகிய உலோகங்களில் செய்யப்படலாம். இந்த யந்திரத்தை முறையாக பராமரித்து பூஜைகள் செய்கிற போது ஒருவருக்கு நேரவிருக்கும் பொருளாதார நெருக்கடி நீங்கும் என்பது நம்பிக்கை .

    இந்த யந்திரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம். பூஜையின் போது பூஜை அறையிலும் பின்னர் மீண்டும் அதை பணம் வைக்கும் இட த்திலும் மாற்றி வைக்கலாம். குபேர பூஜையை எல்லா நேரத்திலும் செய்யலாம் என்றாலும் கூட இதை செய்வதற்கு உகந்த நேரம் திரயொதசி.

    பூஜை நேரத்தில் இந்த யந்திரத்தை மஞ்சளாலும், மலர்களாலும் அக்‌ஷதையாலும் அலங்கரிப்பது உகந்தது. மேலும் குபேரரை வணங்க மற்றொரு வழி, முதல் கடவுள் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி குபேரரின் தியான மந்திரத்தை 108 முறை சொல்லலாம். கடவுளுக்கு தேன், வெல்லம் மற்றும் உலர் பழங்கள் படைக்கலாம். கற்பூரம் ஏற்றி ஆரத்தி காட்டிய பின் இறுதியாக அந்த யந்திரத்தின் முன் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபடலாம்.
    ×