என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். “ஜென்ம சனி” என்றால் என்ன என்பதை குறித்தும், அதற்கான பரிகாரங்கள் குறித்தும் இங்கு அறிந்தது கொள்ளலாம்.
    ஒரு நபரின் ஜாதகத்தில் அவரின் லக்னத்திற்கு 12 ஆம் இடத்திலிருக்கும் சனி கிரகம் அவரது “ஜென்ம லக்னம்” ஆகிய “ஒன்றாம்” வீட்டில் பெயர்ச்சி ஆவதை “ஜென்ம சனி” என்பார்கள். இந்த ஜென்ம சனி காலத்தில் அந்த ஜாதகர் பல விதமான பிரச்சனைகளை சந்திக்க கூடும். எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, உடல் மற்றும் மன ரீதியான அசதி போன்றவை ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகள் உண்டாகும். அவப்பெயர் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

    ஜென்ம சனி காலத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஜென்ம லக்னத்திலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்வார். ஜென்ம சனி நடைபெறும் காலத்தில் சனி பகவானால் தீய பலன்கள் அதிகம் ஏற்படாமல், நற்பலன்களை சனி பகவானின் அருளால் அதிகம் பெறுவதற்கு வாரத்தில் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, “அனுமன் சாலிசா” மற்றும் சனி பகவானுக்குரிய மூல மந்திரங்களை துதித்து வழிபடுவது நல்லது. புதன்கிழமைகளில் விநாயக பெருமானையும் வழிபட்டு வர உடல்சார்ந்த துன்பங்கள் இக்காலங்களில் ஏற்படாமல் காக்கும்.

    கோவில்களுக்கு தீப எண்ணெயை தானமாக வழங்கி வரலாம். மாதத்தில் ஒரு சனிக்கிழமை அன்று ஒரு வேளை உணவு உண்ணாமல் சனி பகவானுக்கு விரதம் இருந்து,கோவிலுக்கு சென்று சனி பகவானின் விக்கிரகத்தின் அடியில் கருப்பு எள் கலந்த தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும். இந்த சமயங்களில் சனி பகவானின் விக்கிரகத்தை சுற்றி வந்து வழிபடுவதோ, நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வழிபடுவதோ கூடாது. துப்புரவு தொழிலாளிகள், கீழ்மட்ட நிலை பணியாளர்கள் போன்றோரிடம் மரியாதையுடன் நடந்து, அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது சனி பகவானின் நல்லாசிகள் உங்களுக்கு கிடைக்க செய்யும்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் எமனுக்கு என்று தனி சன்னதி உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள கல்வாழைக்கு பரிகாரம் செய்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதன் காரணமாக இக்கோவிலுக்கு ஞாயிறு, செவ்வாய், புதன், வெள்ளி போன்ற கிழமைகளில் பரிகாரம் செய்வதற்கும், இழந்த அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கும், நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காகவும், எமனுக்கு சிறப்பு பூஜைகள் செய்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று முதல் தொடர்ச்சியாக 3 நாட்கள் கோவில் நடை சாத்தப்படும் என்பதால் நீலிவனநாதர் கோவிலில் கல்வாழை பரிகாரம் செய்வதற்காகவும், எமனை தரிசனம் செய்வதற்காகவும் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் வேன்களில் கோவிலுக்கு வந்து பரிகாரம் செய்து சாமியை வழிபட்டு சென்றனர்.
    எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை.
    திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.

    முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.

    மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.

    இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.
    சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
     தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத  மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் உண்டாகும்.

    குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப்  மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

    திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும்  நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.

    இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே  இதற்கு சாட்சி.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406

    ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.
    தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். ஒருவர் அறிந்தோ அரியாமலோ செய்யும்  வினையின் எதிர்விளைவு தான் தோஷம். ஒருவரின் ஜாதகத்தில் கோபம், சாபம் என்ற இரண்டு  காரணங்களால் தான் தோஷம் உருவாகுகிறது.

    கோபம்: கோபம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு. இயலாமை. பலவீனத்தின் உச்சம். இதையே வேறு விதமாக கூறினால் கோபம் என்பது ஏமாந்தவர் ஏமாற்றப்பட்டவர்கள் மீது வெளிப்படுத்தும் உணர்வு.

    சாபம்: சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். சாபம்  என்பது அகங்காரத்தினால் ஒருவர் செய்யும் தீமையினால் பாதிக்கப்பட்டவர்கள்  வேதனையுடன் கண்ணீருடன் சபிப்பது தான் சாபம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.

    கடுமையான இந்த தோஷம் தலை முறை தலைமுறையாக தொடர்ந்து சந்ததியினரை பாதிக்கிறது. இந்த தோஷம் யாரால் ஏற்பட்டது என்ன குற்றத்தால் ஏற்பட்டது என்பதையும் ஒருவரின் ஜாதகம் கொண்டு அறிய முடியும்.

    பெண்கள் புகுந்த வீட்டில் சந்தோஷமாக வாழாமல் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் ஆதரவில்லாமல் வாழ்வது அல்லது மரணம் அடைவது, வீட்டிற்கு மருமகளாக வாழ வந்த பெண்ணை வாழ விடாமல் கொடுமைப்படுத்துவது, பிறந்த வீட்டிற்கு திருப்பி அனுப்புவது போன்றவை பெண் சாபம் ஏற்படுவதற்கு காரணங்களாக உள்ளன.

    பலர் முன்னிலையில் ஒரு பெண்ணை அவமதிப்பது. அவள் நடத்தைக்கு களங்கம் ஏற்படுத்துவது.  பெண்களை ஏமாற்றுவது.  பெண்களிடம் தவறான எண்ணத்தில் பழகுவது. கட்டிய மனைவிக்கு துரோகம் இழைப்பது. காதலியை கர்ப்பமாக்கி ஏமாற்றுவது. பெண்களிடம் பணம் வாங்கி விட்டு ஏமாற்றுவது. மனம் வருந்தும் படியான கடுஞ்சொற்களை பேசி கண்ணீர் விட்டு அழ வைப்பது. உழைக்காமல்  பெண்ணின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு உடல் வளர்ப்பதும் காரணங்களாக உள்ளன.

    பணத்திற்காக பெண்ணை கொலை செய்வது தாயை பராமரிக்காமல் விட்டு விடுவது. கருவில்  உள்ள பெண் குழந்தையை கலைப்பது. நல்ல மாமியாரை பராமரிக்காமல் விடுவது போன்ற பல காரணங்களால் பெண் சாபம் ஏற்படுகிறது.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார்.
    தைப்பூசம் விரதம் இருப்பது மிகவும் எளிமையானதாகும். இதனை செய்து வர தீராத பிரச்சனைகளை கந்தன் தீர்த்து தீர்த்து வைப்பார். சகல சௌபாக்யமும், செல்வ வளத்தையும் கொடுப்பார். தைப்பூசம் அன்று காவடி எடுத்தால் நன்மைகள் ஏராளம்.

    பல வித காவடிகளும் அதன் பலன்களும்!

    காவடிகளில் பல வித காவடிகள் இருக்கின்றது. சிலர் தங்கள் சக்திக்கேற்ப காவடி எடுப்பதும் உண்டு. கந்தன் எப்பொழுதும் எதையும் எதிர்பாராதவர். காவடி எடுக்க இயலாவிட்டாலும் தைப்பூசம் நன்னாளில் மனதார வணங்கினால் போதும்.

    பால் காவடி

    தைப்பூசம் நன்னாளில் பால் காவடி எடுத்து அதனை முருகனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்தால் செல்வம் நிலைக்கும். ஒரு சிலர் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் சேர்க்க இயலாமல் இருக்கும். இவர்கள் எந்திரம், மந்திரம் என்று தேடி கொண்டு இருக்காமல் இறைவனை வணங்கினாலே போதுமானது.

    சந்தன காவடி:

    சந்தன காவடி எடுப்பதால் தீராத சண்டை, சச்சரவு என்று இருப்பவர்களின் வீட்டில் ஒரு முடிவு பிறக்கும்.

    மயில் காவடி:

    மயில் காவடி எடுத்தால் சிறப்பான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

    பன்னீர் காவடி

    பன்னீர் காவடி எடுத்தால் கடன் பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும்.
    பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கடுகு எண்ணெய் மூலம் நிரந்தர தீர்வு காணலாம். எந்த பிரச்சனைக்கு கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்...
    கடுகு எண்ணெய் கிரகங்களில் செவ்வாயை வலுப்படுத்த மிகவும் உதவும். கடன் கொடுத்தோ, பெற்றோ அவதிப்படுவோர் கட்டாயம் கடுகு எண்ணெயில் உணவு சமைத்து சாப்பிட நன்மை உண்டாகும்.

    வாகன விபத்து அடிக்கடி நடக்கும் தன்மை உடையோர், நிலம் மற்றும் மனை கட்டி தருதல் போன்ற வியாபாரம் செய்வோர் கடுகு எண்ணெயில் மாதம் ஒரு முறை உடல் முழுவதும் தடவி குளிக்க நன்மை பெருகும்.

    மேலும் செவ்வாய் தோஷம் உள்ளோர்களும்,கணவன்-மனைவி சண்டை அடிக்கடி நடக்கும் குடும்பங்களும் இதை செய்யலாம். திருமணம் தாமதம் ஆகும் ஆண்கள், பெண்களும் இப்படி செய்யலாம்.

    ஒருவருக்கு தொடர்ந்து உடல் பிரச்சனைகள் இருந்து கொண்டு இருந்தால் கடுகு எண்ணெயை ஒரு கிண்ணத்தில் விட்டு சம்பந்தப்பட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து ஏழு முறை அவர் தலையை சுற்றி "ஓம் பைரவாய நமஹ" மந்திரம் 108 கூறி வாசலில் எண்ணெயை கொட்டிட சீக்கிரம் குணம் உண்டாகும்.

    வெகு நாள் மருத்துவத்தில் உள்ளோர் 8 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
    நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.
    மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும், வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடனும் செலுத்துகிறார்கள்.

    அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமானது. நம்மை சுற்றி இருப்பவர்கள் வெள்ளை மனதுடையவர்களாக இருந்தால், நாம் செய்யும் காரியங்கள் வெற்றியாகும் என்பதற்காக செய்யும் பரிகாரம் இது.

    மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப்படுத்தினால் அவர்களின் மனம் குளிரும். அதற்காகத்தான் பால் அபிஷேகம் செய்கிறோம்.

    இந்த தைப்பூச நாளில் விரதம் இருந்து பால் குடம் எடுத்தால் வேண்டுதல்கள் நிறைவேறும்.
    பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள்.
    பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும்.

    ஜனங்களுக்கு இந்த காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளக்  காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன்பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சைனையைத் தீர்க்க முயல்கிறோம். அது பலனளிக்காமல் போகும்பொது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது.

    ஜனங்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்டஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு ,அவருக்கு குணம் ஆனால், அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.

    ஒருவருக்கு ஒரு பிரச்னை ஏற்படும்போது, மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும், இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம். பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கான காரணமான கிரஹங்கள் வெவ்வேறுக் இருக்கும். கிரஹத்தின் தோஷத்தினாலும், அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன. ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை, ஹோமம் மற்றும் அதன்குணம், சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .

    ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி, அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும். ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்து செய்ய வேண்டும். மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையொட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும்.
    பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்பிகையை வழிபட்டால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று செய்யும் வழிபாடு அம்பிகைக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி வரும் கிழமைகளில் எந்தெந்த ஆடை அணிவித்து அம்மனை வழிபட்டால் எந்தப் பலன் கிடைக்கும் என்பது பற்றி புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை..

    ஞாயிறு  -  சிவப்பு நிற ஆடை -  நோய்கள் நீங்கும்
    திங்கள்  -  ஆரஞ்சு நிற ஆடை -  செல்வ வளம்
    செவ்வாய் -  வெண்பட்டு -  நவகிரக தோஷங்கள் நீங்கும்
    புதன் -  பச்சை நிற ஆடை -  குழந்தைப்பேறு
    வியாழன் -  மஞ்சள் நிற ஆடை -  கல்வி, கேள்வி ஞானம் சித்திக்கும்.
    வெள்ளி -  பொன்னிற ஆடை -  மகிழ்ச்சி கிட்டும்
    சனி -  நீலநிற ஆடை -  நலமான வாழ்வு.
    கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார்.
    ஆதிபைரவரிடம் இருந்துதான் முதலில் அசிதாங்க பைரவர், உருபைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் எனும் அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

    பின்னர் இந்த எட்டு பைரவர் திருமேனி ஒவ்வொன்றிலிருந்தும் எட்டு எட்டாக ஒவ்வொரு காரணத்திற்கேற்ப 64 திருக்கோலங்களில் பைரவர்கள் வாகனத்துடனும், வாகனம் இல்லாமலும் நம் நாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். ஆக, நம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் எழுந்தருளி அருள்பாலிக்கும் எல்லா பைரவ மூர்த்திகளுக்கும், ஸ்ரீயோக பைரவர்தான் மூலமூர்த்தி ஆவார்.

    பைரவரை ஜோதிட நூல்கள் காலமே உருவாய் கொண்ட காலபுருஷனாக கூறுகின்றன. பன்னிரெண்டு ராசிகளும் அவரது உருவின் பகுதிகளாகின்றன.
    மேஷம்-சிரசு, ரிஷபம்-வாய், மிதுனம்-இரு கரங்கள், கடகம்-மார்பு, சிம்மம்-வயிறு, கன்னி-இடை, விருச்சிகம்-லிங்கம், தனுசு-தொடைகள், மகரம்-முழந்தாள், கும்பம்-கால்களின் கீழ்பகுதி, மீனம்-அடித்தளங்கள்.

    பிரபஞ்சத்தில் சகல ஜீவ ராசிகளும் வான மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், சூரியன், சந்திரன் சனி, ராகு - கேது ஆகிய நவக்கிரகங்களும் காலச்சக்கரத்தின் ஆளுகைக்கு உட்பட்டதே! காலச் சக்கரத்தினை இயக்கும் பரம்பொருள் பைரவரே!

    கிரகங்கள் எல்லாம் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. ஆனால், அந்த கிரகங்களை எல்லாம் ஸ்ரீயோக பைரவர் ஆட்டிப் படைத்து ஆட்சி செய்கிறார். பைரவர் அரசர் என்றால், அவர் இட்ட கட்டளைகளை நிறைவேற்றும் சேவகர்களே கிரகங்கள். பைரவரின் கட்டளைப்படியே காலச்சக்கரம் சுழல்கிறது. அவர் கட்டளைப்படியே எல்லா கிரகங்களும் செயல்படுகின்றன. அவரைச் சரணடைந்து நெஞ்சம் உருக வழிபட்டால் காலத்தின் கட்டுப்பாட்டையும் மீறி கிரக தோஷங்களை அகற்றி நன்மை புரிவார்.
    அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர் சனி பகவான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது.
    சனீஸ்வரனை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. இவருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. அவரவர் செய்யக்கூடிய செயல்களுக்கேற்றாற் போல் பாதிப்புகளை கொடுக்க கூடியவர். எனவே இவரை நீதிபதி என்று அழைப்பது மிகப்பொருத்தமாக அமையும். அதிலும் தலைமை நீதிபதி என்றால் கண கச்சிதாமாகப் பொருந்தக்கூடியவர் இவர் ஒருத்தர் தான். எம தர்மருக்கு கூட மன்னிக்கும் தன்மை உண்டு. ஆனால் இவர் நீதிபதி என்பதால் இவரிடம் மன்னிப்பு கிடையாது. மன்னிப்பு இவருக்கு பிடிக்காத வார்த்தை. இவருக்கு ஒருவரை பிடித்து விட்டால்,(ஏழரை, அஷ்டமத்து சனி, கண்டச்சனி, மங்கு சனி) அந்த காலகட்டத்தில் சனி தோஷம் பிடித்தவர்கள் நன்மைகள் பல செய்து, இறைவனை மனம் உருகி வழிபாடு செய்தால், பாதிப்பை குறைப்பார். அத்துடன் அவரை விட்டு விலகும் போது நன்மைகள் பல செய்வார்.

    சனி தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?

    முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

    சனிதோஷம் போக செய்யக் கூடிய பரிகாரங்கள்...

    தினமும் ஒருகைப்பிடி அன்னம் எள்சேர்த்து காகத்திற்கு வைப்பது நன்மை தரும். சனிக்கிழமைகளில் சூரியோதயத்தின் போது 5 அகல் தீபம் நல்லெண்ணெய் விட்டு ஏற்றுவதும், சிவதுதி, அனுமன் துதிகளைச் சொல்வதும் நல்லது. தினமும் சிவன், லட்சுமி நரசிம்மர், அனுமன், சனிபகவான் காயத்ரி மந்திரங்களை மனதாரக் கூறுங்கள். சனி பிரதோஷ தினங்களில் நந்தி தரிசனம் செய்வதும், சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்வதும் சிறப்பானது.

    திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள நளதீர்த்தத்தில் நீராடி அங்குள்ள சனிபகவானை வழிபட்டும், திருவாரூர் திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் தலத்திற்கு சென்று அங்குள்ள பொங்கு சனிபகவானையும் வழிபடலாம். இரும்பு சட்டியில் 8 ஒரு ரூபாய் நாணயங்கள் போட்டு, நல்லெண்ணெய் நிரப்பி அதில் உங்கள் முகம் பார்த்த பின் தானம் அளிப்பது சனிதோஷம் நீங்கும். இரும்பு அல்லது ஸ்டீல் டாலர், காப்பு அணிவதும், அதை கருப்பு கயிறில் கட்டிக் கொள்வதும் நல்லது.

    வசதி உள்ளவர்கள் நீலக்கல் எனும் ப்ளூடோபாஸ் கல்லை டாலரில் பதித்து அணியலாம். அல்லது அந்தக் கல்லால் செய்த கணபதி சிலையை வாங்கி பூஜிக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். அடிக்கடி சிவாலயம் சென்று அங்குள்ள பார்வதியை வழிபட்டபின், நிறைவாக நவகிரக சனிபகவானை வணங்கி விட்டு அனுமனை தரிசித்து விட்டு வருவது நல்லது. அனுமன் இல்லாவிடில் வழியில் ஏதாவது ஒரு பிள்ளையாரை தரிசிப்பது நல்லது. இதில் உங்களால் முடிந்ததை செய்தால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் வராது.
    ×