என் மலர்
தோஷ பரிகாரங்கள்
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஆஞ்சநேயருக்கு என்ன பரிகாரங்கள் என்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
நாம் ஆஞ்சநேயருக்கு பலவிதமான பூஜைகளும் பரிகார பூஜைகளும் செய்கிறோம். ஏழரை சனி இருப்பவர்கள் ஆஞ்சனேயர் பாதத்தை பிடித்துக் கொண்டால் போதும் சனியின் தாக்கம் மிகவும் குறையும் அதே போல்
பலவிதமான இன்னல்கள் துக்கங்கள் என்று வரும் போது ஆஞ்சநேயருக்கு நெய் விளக்கு வைத்தால் படிப்படியாக பிரச்சனைகள் தீரும்.
அவருக்கு செய்பவைகளில் சில,
- வடைமாலை சாத்துதல்
- செந்தூரக்காப்பு அணிவித்தல்
- வெண்ணெய் காப்பு சாத்துதல்
- ராம் ராம் என்று எழுதி மாலை சாத்துதல்
இந்த பரிகாரங்களை செய்து பலர் நன்மை நடந்ததை கண்கூடாகப் பார்க்கிறோம்.

பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. விநாயகரின் எந்த வடிவங்களை வழிபாடு செய்தால் என்ன பிரச்சனைகள், தோஷங்கள் தீரும் என்று பார்க்கலாம்.
பாலகணபதி: மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர். இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும்.
தருண கணபதி: பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறித்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி, சூரியோதய கால ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர். இவரை வழிபடுவதால் முகத்தில் களை உண்டாகும்.
பக்த கணபதி: தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லத்தினாலான பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி, நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு, உபாசனை நன்கு அமையும்.
வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி, ரவுத்ராகாரமாக வீரா வேசத்தில், செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
சக்தி கணபதி: பச்சை நிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சய மாலையும், தண்டமும், கமண்டலமும் ஏந்தியவர். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.
சித்தி கணபதி: பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தி ஆற்றலைக் குறிக்கும். சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவரை வழிபடுவதால் சகல காரியங்களும் சித்தியாகும்.
உச்சிஷ்ட கணபதி: வீணை, அட்சமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு, பதவிகளை பெறலாம்.
விக்னராஜ கணபதி: சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர். இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும்.
சுப்ர கணபதி: கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.
ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சமாலை, கோடாரி, இரும்பினாலான வலக்கை, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள்.
லட்சுமி கணபதி: பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.
மகா கணபதி: பிறை சூடி, மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கை யில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத் தியாகும்.
புவனேச கணபதி: விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசூரன். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகள் வெற்றியாகும்.
நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.
ஊர்த்துவ கணபதி: பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவான அட்டவணையை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நவக்கிரகங்களின் அருளையும் பெறுங்கள்.
ஒருவரின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களின் செயல்பாடுகளே காரணமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. அந்த ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியாக அமைந்த ஆலயங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அந்த ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவான அட்டவணையை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நவக்கிரகங்களின் அருளையும் பெறுங்கள்.
திங்களூர் (சந்திரன்)
ஒன்பது நவக்கிரக ஆலயங்களில் முதலில் வழிபட வேண்டியது திங்களூர் தான். இது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5 மணிக்கெல்லாம் கும்பகோணத்தில் இருந்து புறப்பட வேண்டும். பின்னர் திங்களூர் கயிலாசநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை, ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு, காலை 7 மணிக்கு அடுத்த தலமான ஆலங்குடிக்கு புறப்படலாம்.
ஆலங்குடி (குரு)
திங்களூரில் இருந்து ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். இது நவக்கிரகங்களில் உயர்ந்த கிரகமான குரு பகவானுக்குரிய தலமாகும். அங்குள்ள ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, 8.30 மணியளவில் கும்ப கோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். இதற்கிடையில் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவையும் முடித்துக் கொள்ளலாம்.
திருநாகேஸ்வரம் (ராகு)
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாகேஸ்வரம். இது நிழல் கிரகங்களில் ஒன்றான ராகுவுக்குரிய தலம். கும்ப கோணத்தில் இருந்து 10 அல்லது 15 நிமிட பயணம் தான். நாம் ஆலங்குடியில் இருந்து செல்வதால், 40 நிமிடங்கள் தேவைப்படலாம். தோராயமாக காலை 10 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோவிலை அடைந்து விட முடியும். அங்குள்ள நாகநாதசுவாமி ஆலயம், மிகப் பெரிய கோவில் என்பதால், ஆலயத்தை தரி சனம் செய்து முடிக்க, எப்படியும் 1 மணி நேரம் ஆகும். அதன் பிறகு அங்கிருந்து கும்பகோணம் வழியாக அடுத்த தலமான சூரியனார் கோவிலுக்குச் செல்லலாம்.
சூரியனார் கோவில் (சூரியன்)
கும்பகோணம் வழியாக 21 கிலோமீட்டர் சென்றால் சூரியனார் கோவில் உள்ளது. இது சூரிய பகவானுக்குரிய ஆலயம். நீங்கள் 11.30 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரிய நாராயண கோவில், மற்ற நவக்கிரக கோவில்களை போல் அல்லாமல், சூரியனை முதன்மையாக கொண்டு, நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த ஆலயம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன், 12 மணி அளவில் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
கஞ்சனூர் (சுக்ரன்)

வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)
நவக்கிரக கோவில்கள் அனைத்துமே, பகல் 1.15 மணிக்கு நடை சாத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்குத் தான் கோவில் நடை திறக்கப்படும். எனவே நாம் 1.30 மணிக்கு கஞ்சனூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறையை 2 மணி அளவில் அடைந்து விடலாம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, சுமார் 3 மணி அளவில் புறப்பட்டால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை 3.30 மணியளவில் அடைந்து விட முடியும். இது செவ்வாய் கிரகத்திற்குரிய தலம். மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்ததும், வைத்தீஸ்வரன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திருவெண்காட்டிற்கு 5 மணி அளவில் புறப்பட வேண்டும்.
திருவெண்காடு (புதன்)
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது திருவெண்காடு திருத்தலம். இது புதன் கிரகத்திற்குரிய தலமாகும். 16 கிலோமீட்டர் இடைவெளி தான் என்பதால், 5.15 மணிக்கெல்லாம் ஆலையத்தை அடைந்து விடலாம். அங்குள்ள வேதாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், புதன் பகவானையும் தரிசித்து விட்டு, மாலை 6 மணிக்குள் கீழ்பெரும்பள்ளம் புறப்பட வேண்டும்.
கீழ்பெரும்பள்ளம் (கேது)
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கேது பகவானுக்குரிய தலமான கீழ்பெரும்பள்ளம். இந்த ஆலயத்தை 15 நிமிடங்களில், அதாவது மாலை 6.15 மணி அளவில் அடைந்து விட முடியும். கேது தோஷம் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொள்வார்கள். அந்த ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள், கடைசி நவக்கிரக ஆலயமான திருநள்ளாறுக்கு புறப்பட வேண்டியது அவசியம்.
திருநள்ளாறு (சனி)
நவக்கிரக தல சுற்றுலாவில் இறுதியாக நாம் சென்றடையும் திருத்தலம் திருநள்ளாறு. இது சனி பகவானுக்குரிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழ் பெரும்பள்ளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கீழ்பெரும்பள்ளத் திலிருந்து சரியாக இரவு 7 மணிக்கு புறப் பட்டால் தான், 8 மணிக்குள் திருநள்ளாறு திருத்தலத்தை அடைய முடியும். பின்னர் அங்குள்ள தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும் தரிசித்து முடிக்கலாம்.
இப்படி ஒரே நாளில் ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் தரிசனம் செய்து, மன நிறை வையும், புண்ணியத்தையும் சேர்க்கலாம்.

சூரியனார் கோவிலில் இருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. எனவே அந்த தலத்தை 15 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது சுப கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய தலமாகும். இந்த ஆலயத்தில் பகல் 1.15 மணி அளவில் கோவில் நடை சாத்தப்படும் என்பதால், இங்கு எழுந்தருளி இருக்கும் அக்னீஸ் வரரை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தரிசித்து முடிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து அடுத்த தலமான வைத்தீஸ் வரன் கோவில் செல்லலாம்.

வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)
நவக்கிரக கோவில்கள் அனைத்துமே, பகல் 1.15 மணிக்கு நடை சாத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்குத் தான் கோவில் நடை திறக்கப்படும். எனவே நாம் 1.30 மணிக்கு கஞ்சனூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறையை 2 மணி அளவில் அடைந்து விடலாம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, சுமார் 3 மணி அளவில் புறப்பட்டால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை 3.30 மணியளவில் அடைந்து விட முடியும். இது செவ்வாய் கிரகத்திற்குரிய தலம். மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்ததும், வைத்தீஸ்வரன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திருவெண்காட்டிற்கு 5 மணி அளவில் புறப்பட வேண்டும்.
திருவெண்காடு (புதன்)
வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக் கிறது திருவெண்காடு திருத்தலம். இது புதன் கிரகத்திற்குரிய தலமாகும். 16 கிலோமீட்டர் இடைவெளி தான் என்பதால், 5.15 மணிக்கெல்லாம் ஆலையத்தை அடைந்து விடலாம். அங்குள்ள வேதாரண் யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், புதன் பகவானையும் தரிசித்து விட்டு, மாலை 6 மணிக்குள் கீழ்பெரும்பள்ளம் புறப்பட வேண்டும்.
கீழ்பெரும்பள்ளம் (கேது)
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கேது பகவானுக்குரிய தலமான கீழ்பெரும்பள்ளம். இந்த ஆலயத்தை 15 நிமிடங்களில், அதாவது மாலை 6.15 மணி அளவில் அடைந்து விட முடியும். கேது தோஷம் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொள்வார்கள். அந்த ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள், கடைசி நவக்கிரக ஆலயமான திருநள்ளாறுக்கு புறப்பட வேண்டியது அவசியம்.
திருநள்ளாறு (சனி)
நவக்கிரக தல சுற்றுலாவில் இறுதியாக நாம் சென்றடையும் திருத்தலம் திருநள்ளாறு. இது சனி பகவானுக்குரிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழ் பெரும்பள்ளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கீழ்பெரும்பள்ளத் திலிருந்து சரியாக இரவு 7 மணிக்கு புறப் பட்டால் தான், 8 மணிக்குள் திருநள்ளாறு திருத்தலத்தை அடைய முடியும். பின்னர் அங்குள்ள தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும் தரிசித்து முடிக்கலாம்.
இப்படி ஒரே நாளில் ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் தரிசனம் செய்து, மன நிறை வையும், புண்ணியத்தையும் சேர்க்கலாம்.
விநாயகர் பூஜையை ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வழக்குகளில் வெற்றிகிட்டும், குடும்ப நிலையில் முன்னேற்றம் காணும்.
சங்கரன் மகன் ஐங்கரனை வழிபட்டால் எந்தச் சங்கடங்களையும் தீர்த்துவைப்பான் என்பதில் ஐயமில்லை. நாம் தொடுக்கும் வழக்கு, நியாயமான வழக்காய் இருந்தால் உறுதியாய் நமக்கு வெற்றி கிட்டும்.
விநாயகரை வழிபட ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி திதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்தச் சதுர்த்தி திதி எந்தக் கிழமையில் அமைந்தாலும் சரி அன்று வீட்டைத் தூய்மை செய்ய வேண்டும். கோமியம், கடல்நீர் ஆகியவற்றைத் தெளிக்க வேண்டும். மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். வீட்டிலுள்ளவர் எல்லோரும் நீராடி, தூய்மையாக இருக்க வேண்டும்.
அவல், பொரி, கடலை, வெல்லம், இளநீர், பசும்பால், தேன், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
அருகம்புல், செம்பருத்தி, வெள்ளை எருக்க மலர் ஆகியவற்றைத் தயாராக வைத்துகொள்ள வேண்டும்.
அருகிலுள்ள விநாயகர் கோயிலில் சந்தனக் காப்புச் செய்து கொண்டுவந்த சந்தனத்தை மஞ்சள் தூளுடன் கலந்து, பிசைந்து, பெரிதாகப் பிள்ளையாரைச் செய்து கொள்ள வேண்டும். கிழக்கு முகமாக வீட்டின் அறையில் பீடம் அமைக்கப்பட வேண்டும். அதன் மீது முழுவதும் எருக்க மலர்களைப் பரப்ப வேண்டும். அதில் அருகம்புல் பரப்பி மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைக்க வேண்டும். பின்பு அதற்கு குங்குமத் திலகமிட்டு, அருகம்புல் மாலை இட்டுச் சுற்றிலும் செம்பருத்தி மலர்களை வைத்து அலங்கரிக்க வேண்டும். ஐந்து முகக் குத்துவிளக்கில் நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.
விநாயகர் பீடத்திற்குக் கற்பூர தீபம் காட்டி, தேங்காய் உடைத்து விநாயகருக்குரிய ஸ்தோத்திரங்களையும், அஷ்டோத்திர சத நாமாவளியையும் சொல்லி, அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்பு கற்பூர தூப தீபம் காட்டி வணங்க வேண்டும். விநாயகர் கோயிலுக்குச் சிதறு தேங்காய் உடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பிரசாதங்களைப் பிறருகுத் தந்த பின்பே வீட்டிலுள்ளவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த விநாயகர் பூஜையை ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வழக்குகளில் வெற்றிகிட்டும், குடும்ப நிலையில் முன்னேற்றம் காணும். செல்வபெருக்கு, புகழ் ஆகியன கிட்டும்.

ருது தோஷம் பெற்றவர்கள் அந்த நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை அறிந்து பரிகாரம் செய்தால், வருங்கால வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.
செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ருதுவானால் அதை 'தோஷம்' என்று கருத வேண்டாம்.
ஆனால் அந்தக் கிழமைகளில் திருவாதிரை, பரணி, புனர்பூசம், கார்த்திகை, பூரம், கேட்டை, மகம் ஆகிய நட்சத்திரங்கள் இணையும் பொழுது ஒரு பெண் ருதுவானால் அது 'ருது தோஷம்' என்று சொல்வார்கள்.
ருது தோஷம் பெற்றவர்கள் அந்த நட்சத்திரங்களுக்குரிய அதிதேவதைகளை அறிந்து பரிகாரம் செய்தால், வருங்கால வாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாது.
ருது ஜாதகம் கணித்து அதன் கிரக நிலைகளுக்கேற்ப பரிகாரங்களைச் செய்து பலன்பெறலாம்.

நவகிரகங்களுக்கு செய்யும் பரிகாரங்கள் பல்வேறு நலன்களை அளிக்கும். எந்த கிரகத்திற்கு செய்யும் பரிகாரம் என்ன பலனை அளிக்கும் என்று பார்க்கலாம்.
சூரியன்: உடல் ஆரோக்கியத்தை வழங்கும்.
சந்திரன்: புகழ், கீர்த்தியைக் கொடுக்கும்.
செவ்வாய்: தைரியத்தையும், தன்னம்பிக்கையும் தரும்.
புதன்: அறிவு வளத்தைப் பெருக்கும்.
குரு: மதிப்பையும், மரியாதையையும் கூட்டும்.
சுக்ரன்: அழகையும், ஆற்றல் மிகுந்த பேச்சையும் தரும்.
சனி: ரோகத்தைத் தவிர்க்கும். இழப்பை ஈடுசெய்யும்.
ராகு: பயத்தைப் போக்கும்.
கேது: பாரம்பரியத்தை வளர்க்கும்.

பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். மக்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள்.
பரிகாரம் என்பது நம்மைச்சுற்றி நமக்கு ஏற்படும் பாவம்/தோஷம் இவைகளை நிவர்த்தி செய்வது ஆகும். மக்களுக்கு இக்காலத்தில் பல விதமான கஷ்டங்கள் ஏற்படுகின்றன. ஆனால், ஒரு சிலரது வாழ்கையில் பொதுவாக எல்லோருக்கும் ஏற்படும் பிரச்சினைகளை காட்டிலும், ஒருபடி அதிகமாகவே பிரச்சனைகள் தோன்றுகின்றன. இதற்கு மனிதன் தன் பணவலிமை, மற்றும் சொந்த புத்தியையும் திறமையையும் உபயோகித்து, அந்தப் பிரச்சனையைத் தீர்க்க முயல்கிறான். அது பலனளிக்காமல் போகும்போது தெய்வத்தின் அருளை நாடுகிறான். அப்போது தான் இந்த பரிகாரம் பற்றிய சிந்தனை வருகிறது.
மக்கள் பொதுவாக பரிகாரங்களைப் பற்றி தவறான முறையை கையாள நினைக்கிறார்கள். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஹோமம், கடவுள் வழிபாடு அல்லது வேறு ஏதாவது ஒரு சாந்தி ஒருவர் செய்து, அதனால் ஒருவருக்கு பிரச்சனை தீர்ந்து, நன்மை ஏற்படுகிறது. மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனை வரும் சமயத்தில் அதே சாந்தி, வழிபாடு ஹோமம் செய்தால் நிவர்த்தி ஆகி நல்ல பலன் கிட்டும் என்று எதிர்பார்த்து செய்கிறார்கள். இது தவறு, இது போன்று செய்யக்கூடாது. ஒருவருக்கு தலைவலி, ஜூரம் வந்தால் சில வியாதிகளுக்கு அது அறிகுறிகளாகும். ஆகவே தலைவலி என்று ஒரு மருந்தை ஒருவர் சாப்பிட்டு, அவருக்கு குணம் ஆனால், அதே மருந்தை மற்றொருவர் தலைவலி வருவதால் சாப்பிடக்கூடாது என்று டாக்டர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஒருவருக்கு ஒரு பிரச்சனை ஏற்படும்போது, மற்றொருவருக்கு அதே போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை பார்த்திருக்கிறேம். ஒன்றாகவே இருந்தாலும், இதற்கு காரணங்கள் வேறுபடலாம். பிரச்சனை/ தோஷங்கள் ஏற்படுவதற்கு ஜோதிட சாத்திரத்தில் கூறியபடி கிரஹங்களின் கோபம் தான் காரணம். பிரச்சனைகள் ஒன்றாகவே இருக்கும். ஆனால், அதற்கான காரணமான கிரஹங்கள் வெவ்வேறுக் இருக்கும். கிரஹத்தின் தோஷத்தினாலும், அதற்குரிய தேவதையின் கோபத்தினாலும் தான் பிரச்சனைகள் உண்டாகின்றன. ஆகவே கிரஹங்களுக்கு கிரஹங்கள் தேவதை ஆராதனை, ஹோமம் மற்றும் அதன்குணம், சுபத்வம்/அசுபத்வம் இவைகள் மாறுபடும் .
ஆகவே ஒருவருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்போது, அந்தக் கஷ்டங்கள் எந்த கிரஹத்தின் தோஷத்தால் ஏற்பட்டுள்ளது என்பதை நன்றாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி, அந்தக் கிரஹத்தை திருப்பதிப்படுத்தும் வகையில் பரிகாரம் சொல்ல வேண்டும். ஒரே கிரஹத்திற்கு பிரச்சினையின் வேகத்தின் அடிப்படையில் பரிகாரங்களைக் கூட்டிகுறைத்து செய்ய வேண்டும். மேலும் பரிகாரம் அவரவர்களுடைய பொருளாதாரம் மற்றும் சமூக அந்தஸ்தையொட்டி அதற்கு தகுந்தபடி சொல்லி செய்ய வைக்க வேண்டும்.

சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும்.
சகட தோஷம் கொண்டு பிறந்தவன் மந்திரியாக ஆனால் கூட பத்து நாளில் பதவியை பறிகொடுத்து விடுவான் என்று சொல்வார்கள். விறகு வெட்டி கஷ்டப்படுகிறானே என்று ஒரு தொழிலாளிக்கு சந்தன காட்டையே எழுதி வைத்தானாம் அரசன். ஆனால் அந்த தொழிலாளி சந்தன காட்டின் மகத்துவத்தை அறியாமல் சந்தன மரத்தை வெட்டி கட்டைகளை எரித்து கரித்துண்டுகளை விற்று பிழைப்பு நடத்தினானாம். இப்படிப்பட்ட அப்பாவிகளை கூட சகட தோஷத்தின் சகபாடிகள் என்று கூறலாம்.
ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.
சகட தோஷம் சர்க்கரை நோய் போன்றது வந்து விட்டால் போகாது. வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்து சாப்பிடுவது போல சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு. தினசரி பரிகாரம் என்றவுடன் அதை செய்ய முடியுமா? முடியாதா? என்று கவலைப்படவேண்டாம். மிக சுலபமாக செய்து விடலாம்.
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள். அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள். சகட தோஷம் உங்களை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்ளும். துன்பத்தை விலக்கி இன்பமாக வாழலாம்.

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தையும், செய்யக்கூடாதவைகளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பரிகார காலம்:
சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பட்சத்திலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம். செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.
பரிகாரம் செய்யகூடாத நேரம்:
ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, 12 நட்சத்திரங்களில் வரும் நாட்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக் கூடாது.

பஞ்சநதீஸ்வரர் கோவில் கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் திருமண தடை அகலும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில், புராதன சிறப்பு வாய்ந்த ஆலயமாக விளங்குகின்றன பஞ்சநதீஸ்வரர் கோவில். இத்தல கால பைரவருக்கு 11 வாரம் முறைப்படி சகஸ்ரநாம வழிபாடும், விஷ்ணு துர்க்கைக்கு 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகால வழிபாடும் செய்தால் ராகு- கேது தோஷங்கள் அகலும். மேலும் திருமண தடை நீங்கும். மனதில் சஞ்சலங்கள் மறையும். மன பயம் விலகும், திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இத்தல கல்யாண விநாயகரை வழிபட்டு வருவதாலும், ஆண்டுதோறும் திருவாதிரை விழாவில் நடக்கும் சிவன்- அம்பாள் திருக்கல்யாணத்தின் போதும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறுகிறது. அப்படி வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அடுத்த ஆண்டு புதுமணத் தம்பதிகளாக ஆலயத்திற்கு வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திச் செல்கிறார்கள்.

திருமண தோஷம் உடைய பெண்கள் எந்த முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட்டால் திருமண தோஷம் நிவர்த்தியாகும் என்பதை பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த காலத்தில் எல்லா அம்சங்களும் நிறைந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதே மிகவும் அரிதான செயலாக இருக்கின்றது. அவர்களுக்கு தோஷமான ஜாதக அமைப்பாக இருந்தால் இன்னும் சிக்கல்தான். அப்படிப்பட்ட பெண்களுக்கு கண்கண்ட தெய்வம்தான் ஸ்ரீகருட பகவான். தன் அன்னையின் துயர் தடைத்து, அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து மகிழ்வித்த உத்தம புத்திரன் அல்லவா அவர். அவரை யார்-யார் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.
திருமண தோஷம் உடைய பெண்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
1. பெண்கள் பிறந்த லக்னத்திற்கு 7-ம் வீட்டு அதிபதியின் வாரத்தில் ஸ்ரீகருடனை வழிபட்டு வர வேண்டும்.
2. அல்லது 7-ம் வீட்டதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதியாக யார் இருக்கிறாரோ, அவருக்குரிய வாரத்தில் வழிபடலாம்.
3. அல்லது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள வீட்டதிபதி எங்கு அமர்ந்துள்ளாரோ அந்த வீட்டின் வாரத்திலும் வழிபடலாம்.
4. அல்லது ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள கிழமைகளில் ஸ்ரீகருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும்.
மேஷம் - வெள்ளிக்கிழமை
ரிஷபம் - செவ்வாய்க்கிழமை
மிதுனம் - வியாழக்கிழமை
கடகம் - சனிக்கிழமை
சிம்மம் - சனிக்கிழமை
கன்னி - வியாழக்கிழமை
துலாம் - செவ்வாய்க்கிழமை
விருச்சிகம் - வெள்ளிக்கிழமை
தனுசு - புதன்கிழமை
மகரம் - திங்கட்கிழமை
கும்பம் - ஞாயிற்றுக்கிழமை
மீனம் - புதன்கிழமை
பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதனையும் இந்த கருட வழிபாட்டால் நீக்க முடியும்.

கால சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே தோஷம் விலக சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.
ஒவ்வொரு உயிரும் இம்மண்ணில் பிறக்கும் போது, வான மண்டலத்தில் அப்போது காணப்படும் கிரகங்களின் அமைப்பைப் பொருத்தும், கிரகங்களின் அதிர்வலைகள் ஒன்றை ஒன்று குறுக்கிடுவதால் உண்டாகும் எதிர்மறை அதிர்வலைகளைப் பொருத்தும் அக்கிரகங்களினால் பாதிப்பை அடைகின்றன. அதனால் அவை அவ்வுயிருக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக தீமைகளைச் செய்து விடுகிறது.
இவற்றையே ஜோதிடத்தில் கிரக தோஷங்கள் என்கிறோம். அதுவும் நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகிய இருவருக்கும் இடையில் மற்ற கிரகங்கள் சிறைப்பட்டிருக்கும் அமைப்பை கால சர்ப்ப தோஷம் என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கிரகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீ கருட பகவானை வழிபடுவது ஒன்றே சிறந்த வழி என்று ஆன்றோர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். ஸ்ரீகருடனை ஒவ்வொரு மாத சுவாதி நட்சத்திரத்திலும், சிறப்பாக ஆவணி சுவாதிலும் வழிபட்டு வந்தால் கிரக தோஷங்கள் நிச்சயம் நீங்கும்.