என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.
    • மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    சிவபெருமான் சித்தநாதன் என்ற பெயருடன் காட்சி தரும் தலம் திருநரையூர்.

    கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் திருநரையூர் உள்ளது.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் இம் மூன்றாலும் பெருமையுடைய இத்திருத்தலம் மகாலட்சுமி அவதாரம் நிகழ்ந்த சிறப்புடையது.

    இங்குள்ள தலமூர்த்தி சித்தநாதரை நோக்கி பதினெண் சித்தர்களுள் ஒருவரான கோரக்கச் சித்தர் இத்தலத்திற்கு வந்து தவம் புரிந்தார்.

    அவர் முன்பு தோன்றி தரிசனம் கொடுத்ததால் பரமேஸ்வரருக்கு சித்தநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.

    இத்தல மூர்த்திக்கு சாதாரணமாக ஒரு குடம் நீரை அபிஷேகம் செய்வித்து அதனை பிரசாதமாக நாம் குடித்தால் நம் உடம்பில் உள்ள அனைத்துவிதப் பெரிய ரோகங்களும் தீரும் என்று சொல்கிறார்கள்.

    பாண்டிய நாட்டு மன்னர் சந்திரகுப்தன் குஷ்டரோகம் ஏற்பட்டு அதனால் வருந்தி பல தலங்களுக்கும் சென்றான்.

    அப்போது அவன் கனவிலே சித்தநாதர் தோன்றி நரையூருக்கு வா என்று அழைக்க அதன்படி இவ்வாலயத்திற்கு வந்த மன்னன் 1008 குடம் பால் அபிஷேகம் செய்விக்க அவனது குஷ்டரோகம் உடனே குணமானது.

    • கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.
    • 24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    24 கால் மண்டபத்தில் சிவன் சன்னதி பக்கம் உள்ள முதல் தூணில், விநாயகர், வேல் தாங்கிய கந்தன் உருவங்களும், பெருமாள் பக்கம் உள்ள முதல் தூணில் ஆனந்த கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், நரசிம்மம் செதுக்கப்பட்டுள்ளன.

    இத்தூண்களின் அடியிலும், கடைசி 2 எதிர் தூண்களின் அடியிலும் ருத்திராட்சம், சிவச்சின்னம் அணிந்த முத்திய நாராயண செட்டியார் என்னும் திருவுருவம் பெயருடன் காணப்படுகின்றது.

    இம்மண்டபம், சிவன் சன்னதிக்கு இடப்பக்கமும், வரதராச பெருமாளுக்கு வலப்பக்கமுமாக 2 சன்னதிகளையும் இணைத்தவாறு மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதனை கட்டியவரின் உருவங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

    அதில் அவர்களின் (கைங்கர்யம்) நற்செயல் குறித்த கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கில் உள்ள முதல் தூண் கல்வெட்டில் (1886ம் ஆண்டு விபஸ்ரீ சித்திரை மாதம் புதுவை, வைசிய குல முத்திய செட்டியார் குமாரன் நாராயண செட்டியார் மண்டபம் தருமம்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் தென் வாயிலையொட்டிய 16 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய சைவ செட்டியாரில் ஒரு வகுப்பார் என்றும், வரதராச பெருமாளுக்கு வடக்கு பாகத்தில் உள்ள 24 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய செட்டியாரில் மற்றொரு வகுப்பார் என்பதும் சிற்பங்களாலும், கல்வெட்டாலும் புலப்படுகின்றன.

    கிழக்கு நோக்கிய முதலாவது தூணில் சிவன் சன்னதி பக்கம், பார்வதி பரமேசுவரர், நடராசர், 5 தலை நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

    எதிரில் கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.

    24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    தற்போது ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயரின் பின்னால் சேதுவை கடக்கும் போது ராம, லட்சுமணரை தம் தோளில் தாங்கிய அனுமனின் அற்புத காட்சி சுதையால் வண்ணப் பொலிவோடு காட்சி அளிக்கின்றது.

    24 கால் மண்டப மேற்கூரையின் பக்கச் சுவர்களில் சிவன் சன்னதியை ஒட்டியுள்ள பகுதியில் விநாயகர் காட்சி ஓவியங்கள், நடராசரின் பல்வேறு தாண்டவங்கள் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    வலப்பக்கத்தில் தசாவதார காட்சிகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    24 கால் மண்டபத்தில் சிவன் சன்னதி பக்கம் உள்ள முதல் தூணில், விநாயகர், வேல் தாங்கிய கந்தன் உருவங்களும், பெருமாள் பக்கம் உள்ள முதல் தூணில் ஆனந்த கிருஷ்ணனின் காளிங்க நர்த்தனம், நரசிம்மம் செதுக்கப்பட்டுள்ளன.

    இத்தூண்களின் அடியிலும், கடைசி 2 எதிர் தூண்களின் அடியிலும் ருத்திராட்சம், சிவச்சின்னம் அணிந்த முத்திய நாராயண செட்டியார் என்னும் திருவுருவம் பெயருடன் காணப்படுகின்றது.

    இம்மண்டபம், சிவன் சன்னதிக்கு இடப்பக்கமும், வரதராச பெருமாளுக்கு வலப்பக்கமுமாக 2 சன்னதிகளையும் இணைத்தவாறு மிகப்பெரிதாக கட்டப்பட்டுள்ளது.

    இதனை கட்டியவரின் உருவங்கள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன.

    அதில் அவர்களின் (கைங்கர்யம்) நற்செயல் குறித்த கல்வெட்டும் செதுக்கப்பட்டுள்ளது.

    கிழக்கில் உள்ள முதல் தூண் கல்வெட்டில் (1886ம் ஆண்டு விபஸ்ரீ சித்திரை மாதம் புதுவை, வைசிய குல முத்திய செட்டியார் குமாரன் நாராயண செட்டியார் மண்டபம் தருமம்) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

    கோவிலின் தென் வாயிலையொட்டிய 16 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய சைவ செட்டியாரில் ஒரு வகுப்பார் என்றும், வரதராச பெருமாளுக்கு வடக்கு பாகத்தில் உள்ள 24 கால் மண்டபம் அமைத்தவர்கள் ஆயிர வைசிய செட்டியாரில் மற்றொரு வகுப்பார் என்பதும் சிற்பங்களாலும், கல்வெட்டாலும் புலப்படுகின்றன.

    கிழக்கு நோக்கிய முதலாவது தூணில் சிவன் சன்னதி பக்கம், பார்வதி பரமேசுவரர், நடராசர், 5 தலை நாகம் குடைபிடிக்கும் சிவலிங்கம் தூணில் பொறிக்கப்பட்டுள்ளன.

    எதிரில் கதையை ஊன்றிய மகாவிஷ்ணு, கருட சேவை காட்சி ஆகியன தோற்றம் அளிக்கின்றன.

    24 கால் மண்டபத்தின் கிழக்கே 2 வது வரிசை தூண்களில் 5 வது தூணில் ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயருக்கு ஒரு சிறிய மண்டபம் பித்தளை பிரபையுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    ஆஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமைகளில் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.

    ஆஞ்சநேயரின் பின்னால் சேதுவை கடக்கும் போது ராம, லட்சுமணரை தம் தோளில் தாங்கிய அனுமனின் அற்புத காட்சி சுதையால் வண்ணப் பொலிவோடு காட்சி அளிக்கின்றது.

    24 கால் மண்டப மேற்கூரையின் பக்கச் சுவர்களில் சிவன் சன்னதியை ஒட்டியுள்ள பகுதியில் விநாயகர் காட்சி ஓவியங்கள், நடராசரின் பல்வேறு தாண்டவங்கள் வண்ண ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன.

    வலப்பக்கத்தில் தசாவதார காட்சிகள் வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.

    01. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.

    02. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜூலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

    03. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

    04. விநாயகரை வழிபட்டால் நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

    05. சக்தியையும், சிவனையும் வேண்டிக் கொண்டு இடப்படுகின்ற குறியானது பிள்ளையார் சுழி எனப்படும்.

    06. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

    07. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

    08. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை உருவாக்கியது நரசிம்மவர்ம பல்லவன்.

    09. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.

    10. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

    11. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

    12. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

    13. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகிய மூவரும் போற்றி வணங்குகின்ற விநாயகர் புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் ஆவார்.

    14. காரைக்காலினைச் சேர்ந்த தாமானங்குடி கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பெரிதும் சிறிதுமாய் இரண்டு விநாயகர் திருவுருவங்கள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு விநாயகர் மற்றொன்று இங்கிலீஷ் விநாயகர்.

    15. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழிபாடாகக் கொண்டாடப்படு கின்றது.

    16. பிள்ளையாருக்கு ஞானக் கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.

    17. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

    18. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.

    19. சென்னை தியாகராய நகரில் ஆக்ஸ்போர்டு பள்ளி வளாகத்தில் சித்தி சக்தியுடன் பத்துத் தலை கொண்ட வலஞ்சுழி விநாயகர் உள்ளார்.

    20. எகிப்தில் விநாயகர் ஒருவர் இருக்கின்றார். இவர் தமது கையில் சாவி வைத்து இருக்கின்றார். தம்மை வழிபாடு செய்பவர்களுக்கு இவர் சொர்க்கத்தின் வாசலைத் திறந்து விடுவார் என்னும் நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

    21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

    22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.

    23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.

    24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

    25. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.

    26. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.

    27. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் 'ஐங்கரன்' என்று அழைக்கப்படுகின்றார்.

    28. அசோகர் காலத்தில் அவர் மகள் சாருமதி நேபாளத்தில் விநாயகருக்குக் கோவில் கட்டினார்.

    29. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.

    30. விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து ஒன்பது நாள் விநாயக விரதம் இருந்து வணங்குதல் விநாயக நவராத்திரி எனப்படும்.

    • திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.
    • அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    விநாயகருக்கு அபிஷேகப் பொருள்கள் எல்லாம் உகந்தன.

    ஆயினும் சில குறிப்பிட்ட தலங்களில் ஒரு சில அபிஷேகப் பொருள்கள் மட்டும் குறிப்பாகச் சிறப்பித்து செய்யப்பெறுகின்றன.

    அவ்வகையில் திருவலஞ்சுழி வெள்ளை விநாயகருக்குப் பச்சைக் கற்பூரம் மட்டுமே சார்த்தப்பட்டு வருகின்றது.

    பாலாபிஷேகம்:-வேலூருக்கு அருகில் உள்ள சேண்பாக்கம் என்னும் ஊரில் பால விநாயகருக்குத் தாமரைத் தண்டு நூலால் நெய் விளக்கேற்றிப் பாலாபிஷேகம் செய்தால் புத்திரப் பேறு கிடைக்கும்.

    சந்தன அபிஷேகம்:- செஞ்சேரிமலை என வழங்கப்படும் தென்சேரிகிரி மலையின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள இவ்விநாயகருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும். பரணி, ரோகிணி புனர்பூசம், அஸ்தம், மூலம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகரை சந்தன அபிஷேகம் செய்து வணங்குவது சிறப்பு தரும்.

    தேனாபிஷேகம்:- திருப்புறம்பயத் தலத்தில் சிப்பி கிளிஞ்சல் முதலான கடல்படு பொருள்களால் ஆக்கப்பட்ட விநாயகர் தேன் அபிஷேகப் பிரியர். இவருக்கு எவ்வளவு தேன் அபிஷேகம் செய்யப்பட்டாலும் கீழே வழிந்தோடாமல் அனைத்தும் விநாயகர் வடிவுக்குள் போகக்காணலாம்.

    திருநீற்று அபிஷேகம்: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் முன்புறம் உள்ள பொற்றாமரைக் குளத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள விநாயகர் திரு நீற்று விநாயகர் என அழைக்கப்படுகின்றார். அங்கு வரும் பக்தர்கள் அனைவரும் கைகளாலேயே அவருக்கு விபூதி அபிஷேகம் செய்து வணங்குகின்றனர். மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் இந்த விநாயகருக்குத் திருநீறு அபிஷேகம் செய்ய நினைத்த காரியம் நிறைவேறும்.

    கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம்: மிருக சீரிஷம், பூரம், அனுஷம் ஆகிய நட்சத்திர நாட்களில் விநாயகருக்குக் கஸ்தூரி மஞ்சள் அபிஷேகம் செய்தால் வெற்றி உண்டாகும்.

    அன்ன அபிஷேகம்: பூர நட்சத்திர நாளில் விநாயகருக்கு அன்ன அபிஷேகம் செய்தால் இல்லத்தில் வளம் கொழிக்கும்.

    சொர்ணாபிஷேகம்: திருவோணம் நட்சத்திர தினத்தன்று விநாயகருக்கு சொர்ணாபிஷேகம் செய்ய செல்வம் கொழிக்கும்.

    • பால் - ஆயுள் விருத்தி
    • தயிர் -சந்தான (மக்கள்) விருத்தி

    தண்ணீர் அபிஷேகம்- மனசாந்தி

    நல்லெண்ணை-பக்தி

    சந்தனாதித்தைலம்- சுகம்

    வாசனைத்திரவியம்- ஆயுள் வலிமை

    மஞ்சள் பொடி- ராஜ வசியம்

    நெய்- மோட்சம்

    பஞ்சாமிர்தம்- தீர்க்காயுள்

    தேன்- சங்கீத (இசை) வளமை

    வாழைப்பழம்- பயிர் விருத்தி

    மாம்பழம்- சகல வசியம்

    பலாப்பழம்- உலக வசியம்

    திராட்சைப்பழம்- பயம் நீங்குதல்

    மாதுளம்பழம்-பகை நீங்குதல்

    தம்பரத்தம்பழம்- பூமி லாபம்

    நாரத்தம்பழம்- நல்ல புத்தி

    தேங்காய்த்துருவல்- அரசுரிமை

    சர்க்கரை- பகையை அழித்தல்

    பால்- ஆயுள் விருத்தி

    தயிர்-சந்தான (மக்கள்) விருத்தி

    இளநீர்- நல்ல புத்திரப்பேறு

    கருப்பஞ்சாறு- சாஸ்திரத் தேர்ச்சி

    அரிசிப்பொடி- பிறவிப் பிணிநீங்குதல்

    பஞ்ச கவ்யம்- ஆத்மசுத்தி, பாவ நிவர்த்தி

    எலுமிச்சம்பழம்- எம பயம் நீக்கும்

    நெல்லி முள்ளிப்படி- நோய் நீக்கம்

    அன்னம்- ஆயுள் ஆரோக்கியம், தேகம் அபிவிருத்தி

    பச்சைக்கற்பூரம்- பயம் நீங்குதல்

    விபூதி- ஞானம்

    வஸ்திரம்- ராஜயோகம்

    புஷ்பம்- மகிழ்ச்சி

    சந்தனம்- செல்வம், சுவர்க்கபோகம்

    கஸ்தூரி- வெற்றி உண்டாகுதல்

    கோரோசனை- ஜபம் சித்திக்கும்

    வலம்புரிச்சங்கு- தீவினை நீங்கும்

    சொர்ணம் (தங்கம்)- வைராக்யம்

    சஹஸ்ரதாரை- லாபம்

    கும்பம் (ஸ்நபனம்)- அஸ்வமேதயாகப்பலன்.

    • தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.
    • ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.

    01. செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் கோவில் ராஜ கோபுரம் முன்பு விளக்கேற்றி வழிபட்டு செல்வார்கள்.

    02. தங்களின் கோரிக்கைகள் நிறைவேறியவுடன் நேர்த்திக் கடனாக முருகனுக்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.

    03. இங்கு முருகனை பாலனாகவும், வள்ளியோடு திருமணம் புரிந்து கொள்ளும் மணக்கோலத்திலும் இரு வேறு நிலைகளில் காண முடிகிறது.

    04.ஆரம்ப காலத்தில் முருகனும் மரகதக்கல்லாலேயே வடிக்கப்பட்டிருந்தார் எனவும், பிற்காலத்தில் வேறு சிலை நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனவும் கருதப்படுகிறது.

    05. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப்பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது.

    06. பலி பீடத்தின் அடியில் உப்பு, மிளகு போட்டு, பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

    07. சிறுவாபுரி ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிக்கிருத்திகை சிறப்பு அபிஷேகம் மிகவும் விசேஷமானது.

    08. அண்டர்பதி குடியேற என்ற திருப்புகழ் வேண்டுவன தரும் திருப்புகழ். சொந்த வீடு வேண்டும் என்று விரும்பும் பக்தர்கள் இதை பாடுகிறார்கள். வீடு, தொழில், திருமணம் செல்வம், மோட்சம் என்று அனைத்தையும் தரும் திருப்புகழ் இது.

    09. ஒரே திருப்புகழ் மூலம் 5 பலன்களைத் தரும் கோவில் என்ற பெருமை சிறுவாபுரி தலத்துக்கு உண்டு.

    10. வேண்டுதல் வேண்டியபடி சீக்கிரமாகவே நிறைவேறி விடும்.

    11. கோவில் முன்பு ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகள் உள்ளன.

    12. சென்னையில் இருந்து செங்குன்றம், காரனோடை வழியாகவும், மீஞ்சூர், பொன்னேரி வழியாகவும் இந்த ஊரை அடையலாம்.

    13. இங்கு முருகனை வணங்க செவ்வாய்க்கிழமை சிறப்பான நாளாக கருதப்படுகிறது.

    14. கோவில் சிறிய அளவில் இருந்தாலும் பல நூற்றாண்டு பழமையானது.

    15. பக்தர்கள் அனைவருக்கும் திருநீறு பிரசாதம் கவரிலேயே வழங்கப்படுகிறது.

    16. பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதால் இங்கு அமர்ந்துள்ள முருகப்பெருமான் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

    17. லவ-குசா இருவரும் சிவ பெருமானையும், முருகனையும் இங்கு வழிபட்டு உள்ளனர். ராமாயண காலத்தில் ராமருக்கும், லவ-குசனுக்கும் போர் நடந்த இடம் இது என்று கூறப்படுகிறது.

    18. வள்ளியுடன் திருமண ேஜாடியாக முருகன் இங்கு வந்து தங்கியதால் திருமணம் ஆகாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் நடக்கும்.

    19. கோவில் அமைந்துள்ள ஊர் சிறுவாபுரி, சின்னம்பேடு, சிறுவை, தென்சிறுவாபுரி, குசலபுரி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    20. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் சாக்லேட்டுகளை பிரசாதமாக வழங்குகின்றனர்.

    • சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.
    • இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    சிறுவாபுரி கோவிலுக்கு வரும் சில பக்தர்கள் அங்குள்ள கம்பியிலான கூண்டில் பூட்டு போட்டு செல்கிறார்கள்.

    இதற்கு ஒரு கதை இருப்பதாக ஊர் பெரியவர்கள் சொல்கிறார்கள்.

    ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் மாமியார்-மருமகள் சண்டை ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

    இதில் சிக்கி தவிக்கும் மாமியார்கள், மருமகள்கள் வாயை அடைக்கும் வகையிலும் மருமகள்கள் இனிமேல் மாமியார்கள் சண்டைக்கே வராமல் அடங்கி போகும் வகையிலும் ஒருவருக்கொருவர் இங்கு பூட்டுகளை போட்டு பூட்டி செல்கின்றனர்.

    பின்னர் அந்த சாவிகளை அவர்கள் ேகாவில் உண்டியலிலோ அல்லது அங்குள்ள திருக்குளத்திலோ வீசி செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இதுபற்றி கோவில் அர்ச்சகர் ஒருவர் கூறும்போது, "எதற்காக பக்தர்கள் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் பிரார்த்தனையை வெளியில் சொல்லக் கூடாது என கூறி நழுவி விடுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.
    • தந்தைக்கு “ஓம்” என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    தமிழ்நாட்டு மக்களால் பெரிதும் விரும்பி வணங்கிப் போற்றப்படும் தெய்வம் முருகன்.

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் என விளங்கி அடியார்களுக்கெல்லாம் முருகன் அருள் செய்து வருகின்றான்.

    முருகன் என்றதுமே மக்களின் உள்ளமெல்லாம் உருகும். முருகன் பால் மக்களுக்கு எல்லையில்லாத பக்தி உண்டு.

    தமிழ்நாட்டில் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் பெரும்பாலும் முருகனுக்கு கோவில்கள் அமைத்திருக்கின்றனர்.

    முருகனுக்குரிய கிருத்திகை, சஷ்டி முதலிய சிறப்பு நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டு மகிழ்கிறார்கள்.

    முருகன் கோவில்கள் எல்லாம் சிறந்த பிரார்த்தனை தலங்களாக விளங்குகின்றன.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கிருத்திகை முதலிய சிறப்பு நாட்களில் முருகன் கோவில்களில் பெருந்திரளாக கூடி வணங்கி மகிழ்கிறார்கள்.

    இன்றைக்கு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியம் எனும் பண்டைப் பெருந்தமிழ் நூலிலும், முருகன் வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.

    மேலும் சங்ககால புலவர் பெருமான், முருகனை பற்றி திருமுருகாற்றுப்படை என்னும் துதிநூலை பாடியிருக்கின்றார்.

    அதன் மூலம் ஆறு திருத்தலங்கள் முருகனின் ஆறுபடை வீடுகள் என்ற சிறப்பு பெற்றுள்ளன.

    சரவணன், கார்த்திகேயன், குமரன், கந்தன், வடிவேலன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன் போன்ற பல பெயர்களால் முருகன் வழங்கப்படுகிறார்.

    புராணங்கள் இவரை சிவனின் மகனாக சித்தரிக்கின்றன.

    தந்தைக்கு "ஓம்" என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

    ஓம் என்பது அ,உ,ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கையால் உண்டானது.

    அ-படைத்தல், உ-காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும்.

    அ,உ,ம, என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துக்களுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

    முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ,உ,ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவானவன்.

    முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், மதுரை தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்த தாகவும் கூறப்படுகிறது.

    முருகன் திருப்பெயர்கள் எண்ணிலடங்காது. ஆறுமுகப் பெருமானின் அவதாரங்கள் ஒவ்வொன்றும் சிறப்புடையது.

    வளம் மிகுந்த வாழ்வு அமைய வரம் மிகுந்த சிறுவை முருகனை வழிபட வாருங்கள்!

    • ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி!
    • ஓம் பழநி வேல் போற்றி!

    1. ஓம் சீர்மிகு செந்தில் போற்றி

    2. ஓம் யீதருத் தணிகை வேல் போற்றி

    3. ஓம் பழநி வேல் போற்றி

    4. ஓம் பரங்குன்றக் குமரன் வேல் போற்றி

    5. ஓம் ஏரகத்து எம்மான் வேல்போற்றி

    6. ஓம் அழகர் மலை அழகன் வேல் போற்றி

    7. ஓம் குன்றுதோறாடும் குழகன் வேல் போற்றி

    8. ஓம் தனி வேல் போற்றி

    9. ஓம் சுடர் வேல் போற்றி

    10. ஓம் செவ் வேல் போற்றி

    11. ஓம் வெற்றி வேல் போற்றி

    12. ஓம் நல்வேல் போற்றி

    13. ஓம் அயில் வேல் போற்றி

    14. ஓம் பெரு வேல்போற்றி

    15. ஓம் பருவே வேல் போற்றி

    16. ஓம் கருணை வேல் போற்றி

    17. ஓம் முரண வேல் போற்றி

    18. ஓம் அழகு வேல் போற்றி

    19. ஓம் கனக வேல் போற்றி

    20. ஓம் வச்சிர வேல் போற்றி

    21. ஓம் வைர வேல் போற்றி

    22. ஓம் மாணிக்க வேல் போற்றி

    23. ஓம் தங்க வேல் போற்றி

    24. ஓம் சதுர் வேல் போற்றி

    25. ஓம் சான்விமுளை வேல் போற்றி

    26. ஓம் கூர் வேல் போற்றி

    27. ஓம் ஜய வேல் போற்றி

    28. ஓம் வடிவேல் போற்றி

    29. ஓம் திணி வேல் போற்றி

    30. ஓம் அருள் வேல் போற்றி

    31. ஓம் ஓம், ஐம் ரீம் வேல் போற்றி

    32. ஓம் கதிர் வேல்போற்றி

    33. ஓம் வீர வேல் போற்றி

    34. ஓம் தீர வேல் போற்றி

    35. ஓம் ஐ வேல் போற்றி

    36. ஓம் தாரை வேல் போற்றி

    37. ஓம் செவ்வேள் திருக்கை வேல் போற்றி

    38. ஓம் வாரிகுளித்த வேல் போற்றி

    39. ஓம் முத்தையனார்கை வேல் போற்றி

    40. ஓம் கொற்ற வேல் போற்றி

    41. ஓம் சூர்மார்பு தொளைத்த வேல் போற்றி

    42. ஓம் குன்று எறிந்த வேல் போற்றி

    43. ஓம் வினைதீர்க்கும் வேல் போற்றி

    44. ஓம் இடர் களையும் வேல்போற்றி

    45. ஓம் ஞான வேல் போற்றி

    46. ஓம் குமர வேல்போற்றி

    47. ஓம் சக்தி வேல் போற்றி

    48. ஓம் குழந்தை வேல் போற்றி

    49. ஓம் நீதி வேல் போற்றி

    50. ஓம் புனித வேல் போற்றி

    51. ஓம் துணை வேல் போற்றி

    52. ஓம் என் இதயவேல் போற்றி

    53. ஓம் எனை காக்கும் வேல்போற்றி

    54. ஓம் துன்பம் போக்கும் வேல் போற்றி

    55. ஓம் துயர் துடைக்கும் வேல் போற்றி

    56. ஓம் இன்பம் அளிக்கும் வேல் போற்றி

    57. ஓம் அடர் வேல்போற்றி

    58. ஓம் வைவேல் போற்றி

    59. ஓம் ஒளி திகழ் வேல் போற்றி

    60. ஓம் பகை கெடுக்கும் வேல் போற்றி

    61. ஓம் பலமளிக்கும் வேல் போற்றி

    62. ஓம் பயம் போக்கும் வேல்போற்றி

    63. ஓம் புலமை நல்கும் வேல்போற்றி

    64. ஓம் சித்தி தரும் வேல் போற்றி

    65. ஓம் முக்தி தரும் வேல் போற்றி

    66. ஓம் அடியாரோடிணைக்கும் வேல் போற்றி

    67. ஓம் அன்பை வழங்கும் வேல் போற்றி

    68. ஓம் பிணியைப் போக்கும் வேல் போற்றி

    69. ஓம் பிறவாமை அருளும் வேல் போற்றி

    70. ஓம் நல்லன எல்லாம் தரும் வேல் போற்றி

    71. ஓம் தனம் தரும் வேல் போற்றி

    72. ஓம் தளர் வறியா மனம் தரும் வேல் போற்றி

    73. ஓம் தெய்வ வடிவம் தரும் வேல் போற்றி

    74. ஓம் சினம் கெடுக்கும் வேல் போற்றி

    75. ஓம் காலனைக் கடியும் வேல் போற்றி

    76. ஓம் காவலாய் வரும் வேல் போற்றி

    77. ஓம் கவலையெல்லாம் போக்கும் வேல் போற்றி

    78. ஓம் நெய் வைத்த வேல் போற்றி

    79. ஓம் கேடில் வேல் போற்றி

    80. ஓம் சிங்கார வேல் போற்றி

    81. ஓம் அடியார் உள்ளத்தில் இருக்கும் வேல் போற்றி

    82. ஓம் அன்பர்க்கருகில் இருக்கும் வேல் போற்றி

    83. ஓம் வம்பர்களை வாட்டும் வேல் போற்றி

    84. ஓம் துஷ்டர்கள் கைதுணிக்கும் வேல் போற்றி

    85. ஓம் குறை தீர்க்கும் வேல்போற்றி

    86. ஓம் குற்றம் களையும் வேல் போற்றி

    87. ஓம் எழில் வேல் போற்றி

    88. ஓம் அண்டினரைக்காக்கும் வேல் போற்றி

    89. ஓம் அசுரர்களை அழித்த வேல் போற்றி

    90. ஓம் அமரர்க் கபயம் அளித்த வேல் போற்றி

    91. ஓம் அடியவர் துயரை அழித்திடும் வேல் போற்றி

    92. ஓம் அழல் வேல் போற்றி

    93. ஓம் சிந்து வேல் போற்றி

    94. ஓம் சித்திர முனை வேல்போற்றி

    95. ஓம் துங்கத் தனி வேல் போற்றி

    96. ஓம் பேர் பெரிய வேல் போற்றி

    97. ஓம் மந்த்ர வேல் போற்றி

    98. ஓம் வெற்றி முனை வேல்போற்றி

    99. ஓம் குன்றம் பிளந்த வேல் போற்றி

    100. ஓம் அகிலமெலாம் போற்றும் வேல்போற்றி

    101. ஓம் எண்ணியதை எளிதில் தரும் வேல் போற்றி

    102. ஓம் ஏக்கத்தைப் போக்கும் வேல்போற்றி

    103. ஓம் என்றும் எங்கும் இருக்கும் வேல் போற்றி

    104. ஓம் இன்பமே தரும் இனிய வேல் போற்றி

    105. ஓம் சஷ்டிநாதன் கைவேல் போற்றி

    106. ஓம் குராவடிக் கோமான் கை வேல் போற்றி

    107. ஓம் நவரத்தின வேல் போற்றி

    108. ஓம் சீர்மிகு சிறுவாபுரி செல்வன் கைவேல் போற்றி போற்றி!

    • அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி!
    • அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி!

    1. அகத்திய முனிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவா போற்றி

    2. அடியார் சித்தத்து இருக்கும் முருகா போற்றி

    3. அடி அந்தமிலா அயில் வேல் அரசே போற்றி

    4. அடியார் இடைஞ்சல் களைவோனே போற்றி

    5. அடியார் இருவினைத் தொகையறுப்பாய் போற்றி

    6. அடியார்கள் பங்கில் வருதேவே போற்றி

    7. அத்தா நிருத்தா அரத்த ஆடையா போற்றி

    8. அந்தண் மறை வேள்வி காவற்கார போற்றி

    9. அமராவதி புரக்கும் ஆனைக்கு இறைவா போற்றி

    10. அமருல கிறைவ உமைதரு புதல்வ போற்றி

    11. அரிய மோன விழிதிறந்த நளின பாதம் போற்றி

    12. அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி

    13. அறு சமய சாத்திரப் பொருளோனேபோற்றி

    14. அறிவுடன் ஓது மாதவர் பெருவாழ்வேபோற்றி

    15. அறிவும் உரமும் அறமும் நிறமும் உடையாய் போற்றி

    16. அறிவிற் பெரிய மேன்மைக்கார போற்றி

    17. அன்பர் மகிழ வரங்களும் அருள்வாய் போற்றி

    18. ஆதி அந்தமுமான சங்கரி குமரேசாபோற்றி

    19. ஆதி முடிவு அற்ற திரு நாமக்காரபோற்றி

    20. ஆயிர முகத்து நதி பாலாபோற்றி

    21. ஆறுதிருப்பதியில் வளர் பெருமாள் போற்றி

    22. இன்சொல் விசாகா க்ருபாகர போற்றி

    23. இணையில் அருணை பழநி கிழவபோற்றி

    24. இமயவரை ஈன்ற மங்கைக்கு ஒருபாலா போற்றி

    25. உக்ர இறையவர் புதல்வா முதல்வாபோற்றி

    26. உமையாள் பயந்த இலஞ்சியமே போற்றி

    27. உலகு அளவு மால் மகிழ்ந்த மருகாபோற்றி

    28. எந்தனுடைச் சாமிநாதா வயலூராபோற்றி

    29. எழுதா மறைமா முடிவே வடிவே போற்றி

    30. என்றும் அகலாத இளமைக்கார போற்றி

    31. ஒருகால் முருகவேள் எனவும் அருள்தாராய் போற்றி

    32. கசிவார் இதயத் தமிர்தே போற்றி

    33. கடம்ப மலர் முடிக்கும் இளையோனே போற்றி

    34. கரிமுகவன் இளைய கந்தப் பெருமான் போற்றி

    35. கருதுவார் மனம் புகுந்த பெருமாளேபோற்றி

    36. கர்பர் கயிலாயர் மைந்த வடிவேலாபோற்றி

    37. கவுரி நாயகனார் குரு நாயக போற்றி

    38. குருபுங்கவ எண்குண பஞ்சரனே போற்றி

    39. குன்றுருவ ஏவும் வேலைக்கார போற்றி

    40. குமர குர கார்த்திகைப் பெருமாளேபோற்றி

    41. குவடு தவிடு படக் குத்திய காங்கேயா போற்றி

    42. குறமகள் தார்வேய்ந்த புயனே போற்றி

    43. குறமகளை வந்தித்து அணைவோனே போற்றி

    44. சகல வேதமுமே தொழு சமரபுரிப் பெருமாளே போற்றி

    45. சரவணத்திற் பிறந்த ஒரு கந்தசுவாமியே போற்றி

    46. சம்பந்தன் எனத் தமிழ் தேக்கிய பெருமான் போற்றி

    47. சிந்தாலத்தை அடர் சுந்தாபோற்றி

    48. சலைகள் உருவிட அயிலைவிடு குமர போற்றி

    49. சிவகாம சுந்தரியே தரு பாலக போற்றி

    50. சூர்மா மடியத் தொடுவேலவனே போற்றி

    51. செஞ்சொல் அடியார்கள் வாரக்காரபோற்றி

    52. செஞ் சேவற், செங்கையுடைய சண்முகா போற்றி

    53. செந்தமிழ் சொல் நாலு கவிதைக்கார போற்றி

    54. செந்தமிழ் நூல் விரித்த செவ்வேள் போற்றி

    55. செவ்வான் உருவில் திகழ் வேலவா போற்றி

    56. சேலார் வயல் பொழில் செங்கோடைக்குமர போற்றி

    57. செயே வேளே பூவே கோவே போற்றி

    58. சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி போற்றி

    59. ஞானகர சுர பாஸ்கரனே போற்றி

    60. தமிழ் சோதித்து அலங்கல் அணி அத்தா போற்றி

    61. தமிழ்தனை கரை காட்டிய திறலோனே போற்றி

    62. திரியம்பகி அளித்த செல்வச் சிறுவாபோற்றி

    63. திங்கள் சூடிய நாயகர் பெருவாழ்வேபோற்றி

    64. திருக்குராவடி நிழல் தனில் உறைவோய் போற்றி

    65. திருந்த வேதம் தண்தமிழ் தெரிதருபுலவ போற்றி

    66. திருமக சந்தர முருக கடம்ப சிவசுதபோற்றி

    67. திருநடனம் இடு மயிலில் வரு குமர போற்றி

    68. திமிர தினகர முருக சரவணபவ போற்றி

    69. திறல் பூண்ட சுப்ரமண்ய ஷண்முகவேலா போற்றி

    70. தீர தீர தீராதி தீரப் பெரியோனே போற்றி

    71. தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே போற்றி

    72. தூவிக்குல மயில் வாகனனே போற்றி

    73. தெரிவை பாரதியர் சாதியிலாதவர் தரசேய் போற்றி

    74. தெய்வ வாரண வநிதை புநிதா போற்றி

    75. தொழுது வழிபடும் அடியர் காவற்கார போற்றி

    76. நக்கீரர் சரண் என வந்தருள் முருக போற்றி

    77. நீலக்ரிப கலாபத் தேர்விடு சேவகாபோற்றி

    78. நீர் பெருஞ் சடையாரருள் தேசிகாபோற்றி

    79. நிதியே நித்தியமே என் நினைவேபோற்றி

    80. நினைத்ததை முடித்தருள் கிருபைக் கடலே போற்றி

    81. பச்சை மாமயில் மெச்ச ஏறிய பாகாபோற்றி

    82. பரமற்கு அருமறை உபசேதித்த தேசிகா போற்றி

    83. பரமகல்யாணி தந்த பெருவாழ்வேபோற்றி

    84. பல குன்றிலும் அமர்ந்த பெருமாள்போற்றி

    85. பொன்பரவு கதிர்வீசு வடிவேலா போற்றி

    86. மகாமாயை களைந்திட வல்லபிரான்போற்றி

    87. மஞ்சரி குஞ்சரி தோய் காங்கேயாபோற்றி

    88. மணம் அறாத கடம்பு பனைவோய்போற்றி

    89. மதுமலர்க் கண் துயில் முகுந்தன் மருகா போற்றி

    90. மந்தாகினி தந்த வரோதயனே போற்றி

    91. மயில் கொண்டு உலகு நொடியில் வருவாய் போற்றி

    92. மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா போற்றி

    93. மறவாதவர் நினைப்பவை முடிப்பவாபோற்றி

    94. மாநிலம் எழினும் மேலான நாயக போற்றி

    95. முத்தமிழை ஆயும் வரிசைக்கார போற்றி

    96. மைவருங் கண்டத்தர் மைந்தா போற்றி

    97. வடிவும் இளமையும் வளமையுமுடையாய் போற்றி

    98. வாசக அதீத மனோலய பஞ்சுரா போற்றி

    99. வாசுகி எடுத்துதவும் வாசிக்காராபோற்றி

    100. வாவியில் உதித்த முகமாயக்காராபோற்றி

    101. வாகை புனை குக்குட பதாகைக் காரா போற்றி

    102. வேடர் குலப் பிடிதோய்மலையே போற்றி

    103. வேதாள கணம் புகழ் வேலவனேபோற்றி

    104. வை வைத்த வேற்படை வானவனேேபாற்றி

    105. வேத ஆகம சித்ர வேலாயுதனேபோற்றி

    106. வேலும் மயிலும் நினைந்தவர் துயர்தீர அருள்வாய் போற்றி

    107. சந்ததமும் அடியார்கள் சிந்தையது குடியான

    தண் சிறுவை தனில் மேவும் பெருமான்போற்றி போற்றி

    108. வளம் மிகுந்த சிறுவை மேவி வரம் மிகுந்த பெருமான் போற்றி போற்றி

    இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை நிரம்ப இருப்பு வைத்துள்ள பெருமானே, எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    பிறவி யான சடமி றங்கி வழியி லாத துறைசெறிந்து

    பிணிக ளான துயர்உ ழன்று- தடுமாறிப்

    பெருகு தீயவினையி னொந்து கதிகள்தோறு மலைபொருந்தி

    பிடிப டாத ஜனன நம்பி- அழியாதே

    நறைவி ழா த மலர்மு கணந்த அரிய மோன வழிதிறந்த

    நளின பாதம் என சிந்தை- அகலாதே

    நரர்சு ராதி பரும்வ ணங்கும் இனிய சேவைதனை விரும்பி

    நல ன்தாக அடியன் என்று- பெறவேனோ

    பொறிவ ழாத முனிவர் தங்கள் நெறிவழாத பிலனுழன்று

    பொருநி சாச ரனைநி னைந்து- வினைநாடிப்

    பொருவி லாமல் அருள்புரிந்து மயிலின் ஏறி நொடியில் வந்து

    புளக மேவ தமிழ் புனைந்த- முருகோனே

    சிறுவ ராகி இருவர் அந்த கரிபதாதிகொடு

    பொருஞ் சொல்

    சிலைஇ ராமன் உடன்எ திர்ந்து- சமராடிச்

    செயம தான நகர்அ மர்ந்த அளகை போல வளமி குந்த

    சிறுவை மேவி வரமி குந்த - பெருமாளே.

    சீதாபிராட்டியை கொடுஞ் சொல்லால் கானகத்துக்கு அனுப்பிய, வில்லேந்திய ராமனை, சிறுவரான லவ- குசலவர் இருவரும், யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை இவற்றுடன் வந்த போது, எதிர்த்து போரிட்டு வெற்றி கொண்ட குபேர பட்டணமான அளகாபுரி போல எல்லா வளங்களும் மிகுந்துள்ள இச்சிறுவாபுரியில் வீற்றிருந்து வரங்களை நிரம்ப இருப்பு வைத்துள்ள பெருமானே, முருகோனே எனக்கு வேண்டிய வரங்களை அருள்வாய் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

    மனமுருகி முருக பெருமானை பிரார்த்தித்து, கஷ்ட நஷ்டங்கள் நம்மை விட்டு தொலைய வேண்டுமென்று வேண்டி வணங்க வேண்டும்.

    வேல் இரண்டெனு நீள்விழி மாதர்கள்

    காதலின் பொருள் மேவின பாதகர்

    வீணில் விண்டுள நாடிய ரூமைகள் - விலைகூறி

    வேளை யென்பதி லாவசை பேசியர்

    வேசி என்பவ ராமிசை மோகிகள்

    முது நெஞ்சழி ஆசையி லேஉழல்- சிறியேனும்

    மால யன்பர னார்இமை யோர்முனி

    வோர் புரந்தரன் ஆதிய ரேதொழு

    மாத வம்பெறு தாளினை யேதின- மறவாதே

    வாழ்த ருஞ்சிவ போகந னூனெறி

    யேவி ரும்பி வினாவுட னேதொழ

    வாழ்வ ரந்தரு வாய்அடி யேன்இடர்- களைவாயே

    நீல சுந்தரிகோமளி யாமளி

    நாடகம்பயில் நாரணி பூரணி

    நீடு பஞ்சமி சூலினி மாலினி- உமைகாளி

    நேயர் பங்கெழு மாதவி யாள்சிவ

    காம சுந்தரி யேதரு பாலக!

    நீர்பெரு ருஞ்சடை யாரருள் தேசிக!- முருகேசா

    ஆலில் நின்றுல கோர்நிலை யேபெற

    மாநில ங்கள் எலாநிலை யேதரு

    ஆய னந்திரு வூரக மால்திரு- மருகோனே

    ஆட கம்பயில் கோபுர மாமதில்

    ஆல யம்பல வீதியு மேநிறை

    வான தென்சிறு வாபுரி மேவிய- பெருமாளே

    இப்புவியில் உள்ளோர் யாவரும் நிலையான வாழ்வு பெறவும், பெரிய ஏழு உலகங்களும் நிலை பெறவும், உலகை காக்கின்ற திருவூரகம் என்னும் தலத்தில் விளங்கும் திருமால் மருகோனே உயர்ந்த தங்கத்தால் (ஆடகம்) வேயப்பட்ட கோபுரங்களும், பெரிய மதில்களும் உடைய கோவில்களும் பல வீதிகளும் நிறைந்து உள்ள அழகிய தென் சிறுவாபுரியில் வீற்றிருக்கும் முருக பெருமானே என்று மனமுருகி இந்த திருப்புகழை ஓதும் போது, இன்றைய சூழலில் நமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள், கஷ்டங்கள், தேக்கங்கள், தடங்கல்கள், வில்லங்கங்கள், விக்கினங்கள், நஷ்டங்களை நினைவில் கொண்டு மனமுருகி முருக பெருமானை பிரார்த்தித்து, அவை நம்மை விட்டு தொலைய வேண்டுமென்று வேண்டி வணங்க வேண்டும். 

    ×