என் மலர்
ஆன்மிகம்
- இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.
- அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.
"அபிராமி" பெயரிலும் அழகு, வடிவிலும் அழகு. "ரம்யம்" என்றால் அழகு. ரம்யத்தை உடையவள் "ராமி" (அழகுடையவள்), அபி&மேலான, எனவே "அபிராமி" என்ற சொல்லுக்கு "மேலான அழகுடையவள்" என்பது பொருள்.
தன்னையே துதித்து, தன் பெயரையே பெயராக்கிக் கொண்ட அபிராமி பட்டருக்கு அருள் செய்து அதன் வழி உலகுக்கு "அபிராமி அந்தாதி" கிடைக்கச் செய்தாள்.
இன்னலற்று இடர்படுவோர் அப்பாடல்களை ஓதி அன்னையை வழிபட்டால் எல்லா நலன்களையும் பெற்று இன்புற்று வாழ்வர்.
அன்னையின் கடைக்கண் நோக்கினால் அன்பர்கள்பெறும் பேறுகள் பலவாகும்.
''தனந்தரும், கல்வி தரும், ஒரு
நாளும் தளர்வறியா
இனந்தரும், தெய்வ வடிவுந்தரும்,
நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும், நல்லன எல்லாந்தரும்,
அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழ லாள்அபி
ராமி கடைக்கண்களே.''
அபிராமி அந்தாதி
- அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.
- திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.
அபிராமி அந்தாதியில் அம்பிகையின் வடிவம் பற்றிய வர்ணனை நிறைந்து கிடக்கிறது.
திருக்கடையூர் அம்பிகையின் திருவடிகளைத் தொழுவதால் அடைகின்ற பலன்கள் ஏராளம்.
மார்க்கண்டேயன் உயிரைக் கவர எமன் வந்த போது எமதர்மனை சிவபெருமான் காலால் உதைத்த சிவனுறைத் தலம் இது.
எனவே இங்குள்ள இறைவனான அமிர்தகடேஸ்வரரைத் தொழுவதால் எமபயம் நீங்கும்.
'சஸ்டியப்த பூர்த்தி' என்று கூறப்படுகின்ற அறுபது வயதை முடித்தவர்கள் அவசியம் இக்கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
இதனால் பூரண ஆயுள் கிட்டும் என்பது நம்பிக்கை.
- 24-ந் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.
- 26-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி
20-ந்தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.
* வரகூர் உறியடி உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டா ளுக்கு திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்,
21-ந்தேதி (புதன்)
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.
* திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
22-ந்தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைர வேல் தரிசனம்.
* கீழ்திருப்பதி எழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
23-ந் தேதி (வெள்ளி)
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் சுந்தரவல்லி தாயார் புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.
24-ந் தேதி (சனி)
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* திருவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் பெருமாள் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
25-ந்தேதி (ஞாயிறு)
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடய சப்பரம், இரவு பல் லக்கில் பவனி.
* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு.
* திருப்போரூர் முருகப்பெருமா னுக்கு பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
26-ந்தேதி (திங்கள்)
* கிருஷ்ண ஜெயந்தி.
* திருநெல்வேலி சந்தான நவநீத கிருஷ்ணசுவாமி கோபால கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருப்பரங்குன்றம், பழனி தலங்களில் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-4 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பிரதமை இரவு 11 மணி வரை பிறகு துவிதியை
நட்சத்திரம்: அவிட்டம் காலை 7.50 மணி வரை பிறகு சதயம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று காயத்ரி ஜெபம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாளுக்கு திருமஞ்சனம். ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலை சிறப்பு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-சுகம்
மிதுனம்-சுபம்
கடகம்-வரவு
சிம்மம்-வெற்றி
கன்னி-செலவு
துலாம்- தனம்
விருச்சிகம்-சுகம்
தனுசு- மகிழ்ச்சி
மகரம்-சோர்வு
கும்பம்-கண்ணியம்
மீனம்-பண்பு
- சத்ருக்களே இல்லாத ‘நிஷிக்ரோதா’ அவள். கோபத்தை நாசம் செய்யும் ‘குரோத சமனீ’
- அவள் மங்களத்தைத் தரும் ஆனந்த சொரூபிணி.
1. விசுவாமித்ரர் ராமருக்கு உபதேசித்த மந்திரத்தின் பெயர் விபரீத பிரத்தியங்கிரா. இந்த மந்திரத்தை உச்சரித்துதான் தாடகை, மாரீசன் சுபாகு ஆகிய அரக்கர்களை அடக்கினார் ராமர்.
2. அய்யாவாடி ஸ்ரீபிரத்யங்கிரா தேவி ஆலயத்தை ஒட்டி அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கிறது. இங்குள்ள அகஸ்தீஸ்வரரை வழிபட்ட அகத்தியர் அன்னை பிரத்யங்கிராதேவியையும் வழிபட்டிருக்கிறார். அவள் மீது பாடல்களும் இயற்றி இருக்கிறார்.
3. ஸ்ரீபிரத்யங்கிராதேவியை புலிப்பாணி, போகர் போன்ற சித்தர்களும் வணங்கி, அவளை தங்களின் பாடல்களில் வைத்திருக்கிறார்கள்.
4. பார்வதி தேவி, சக்தியன்னை, தன் இரு சக்தியினால் சூலினி துர்கா, பிரத்தியங்கிரா என்ற இரு சக்திகளை சரபருக்கு அளித்தபடியால் 'ஆதிசக்தி வரபிரதாய நம' என்றும் 'காளி துர்க்கா சமேத சரபேஸ்வராய நம' என்றும் புகழப்படுகிறார்கள்.
5. ஒருவர் மீது பில்லி, சூனியம், ஏவல் போன்ற தீய சக்திகள் பிரயோகிக்கப்படும் பொழுது அத்தீய சக்திகளில் இருந்து அவரைக் காப்பாற்ற, அந்தத் தீய சக்தியை ஏவினவரையே அழிப்பதற்கு ஒரு பெண்ணாகிய மகாசக்தி பிரம்ம தேவனால் சிருஷ்டிக்கப் படுகிறாள். அந்த சக்தி அதர்வண பத்ரகாளி என்று அழைக்கப்படுகிறாள். அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் என்ற மகரிஷிகள் அவளது மந்திரங்களை உருவாக்கி யதையடுத்து அதர்வண பத்ரகாளிக்கு பிரத்தியங்கிரா என்ற பெயர் வந்தது.
6. சிங்கமும், சிங்கத்தின் வலிமை, கால பைரவரின் துணைவி, சூலம், கபாலம், ஆயிரம் பற்களையுடைய பெரிய குகை போன்ற வாயை உடைய முகம், ரத்த வண்ண மூன்று கண்களை உடையவள். இளம் பிறைச் சந்திரன் பிரகாசிக்கும் மகுடத்தை அணிந்தவள். இவை அவளது வடிவங்கள்.
7. எங்கும் வியாபித்திருப்பதைக் குறிக்கும் ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கைகளும் உடைய 'விஸ்வரூபி' என்று அவள் வர்ணிக்கப்படுவதுண்டு.
8. சத்ருக்களே இல்லாத 'நிஷிக்ரோதா' அவள். கோபத்தை நாசம் செய்யும் 'குரோத சமனீ' அவள் மங்களத்தைத் தரும் ஆனந்த சொரூபிணி.
9. 'பஞ்சாக்னி மத்தியிலிருந்து தவம் புரிந்து ஈசனிடமிருந்து பல வரங்களைப் பெற்ற அந்தகாசுரனை வதம் செய்ய ஈசனே அனுப்பிய பைரவருக்குத் துணையாக நின்ற பைரவி அவள். ஞானத்தை தரும் வித்யை. அவித்தை ரூபமாகி இருக்கும் ஞான ரூபிணி.
10. பிரத்தியங்கிராவை லலிதா சகஸ்ர நாம ஸ்தோத்திரம் சர்வ வியாபியாக ஆயிரம் முகங்களும் ஆயிரம் பாதங்களும் உடையவள் என்று வர்ணிக்கிறது.
11. உக்ரம் என்பதற்கு எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்று பொருள் கொண்டு, பிரத்தியங்கிரா உக்ரபிரத்தியங்கிரா என்று பெயர் சூட்டப்படுகிறாள்.
12. உக்ர பிரத்தியங்கிரா தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோவிலையடுத்த அய்யாவாடி (ஜவர்வாடி என்பதன் திரிபு) என்ற திருத்தலத்தைக் கோவிலில் கரிய வண்ணமுடையவளாய், சந்திரகலை சிரத்தில் பிரகாசிக்க, சூலம், பாசம், டமருகம் ஆகிய பல ஆயுதங்களை ஏந்திய பன்னிரண்டு கைகளுடன் சிம்ம வாகனமாக நான்கு சிங்கங்கள் அவள் முன்னே நிற்க, இடது காலை மடித்து வலது காலைத் தொங்கவிட்டு அமர்ந்து அருள் புரிகிறாள்.
13. ஒரு சிம்ம முகத்துடன் சிங்க வாகனத்தில் நெல்லை மாவட்டத்து திருக்குற்றாலத்தில் உள்ள சித்தேஸ்வரி பீடமாக விளங்கும் மவுன சுவாமிகள் மடவளாகத்தில் தரை மட்டத்துக்கு கீழே அமைந்த கருவறையில் பிரத்தியங்கிரா தேவி பஞ்சலோக விக்ரகமாக அமர்ந்து அருள் புரிகிறாள்.
14. சிதம்பரத்தில் உள்ள தில்லைக் காளியும், பிரத்தியங்கிராவாகிய பத்ரகாளியாவாள்.
15. இவள் சிவ துவேஷங்களில் ஈடுபடுகிறவர்களை அழிக்கும் சக்தியாக விளங்குவதால் இவளை தியானிக்கும் எவரையும் யாருடைய துவேஷமும் ஒன்றும் செய்ய முடியாது என்பது கண்கூடு.
- இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.
- இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.
திருக்கடையூர் தல மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார்.
வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.
வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது.
இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.
இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.
இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.
இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.
- எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார்.
- இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது.
மார்க்கண்டேயன் உயிரை பறித்து செல்லமுடிவு செய்த எமன் துணிச்சலாக திருக்கடையூர் தலத்துக்குள் நுழைந்தான்.
இதை கண்டதும் மார்க்கண்டேயர் ஓடிச் சென்று சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டார் என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான்.
அந்த கயிறு சிவலிங்கம் மீதும் பட்டது. அவ்வளவு தான்..... ஆவேசம் அடைந்த ஈசன் லிங்கத்தை பிளந்தபடி வெளியில் வந்தார். தன் இடது காலால் எமனை ஓங்கி உதைத்தார்.
ஒரே ஒரு உதைதான். ஈசன் உதைத்தால் யாரால் தாங்கிக் கொள்ள முடியும்? அந்த இடத்திலேயே எமன் உயிர் பிரிந்தது.
எமன் செத்துப் போனால் என்ன ஆகும்? அதன்பிறகு உலகில் யாருமே மரணம் அடைய வில்லை.
இதனால் உலகில் மக்கள் தொகை அதிகரித்தது. இதையடுத்து பாரம் தாங்காமல் பூமா தேவி அவதிப்பட்டாள்.
ஒரு கட்டத்தில் பூமாதேவியால் பொறுக்க முடியவில்லை. எனவே அவள் சிவபெருமானை நோக்கி பிரார்த்தனை செய்தாள்.
மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் தள்ளாடுவதை கண்டு மகா விஷ்ணுவும், பிரம்மாவும் சிவபெருமானை அணுகி எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினார்கள்.
இதனால் எமன் மீது ஈசன் இரக்கம் கொண்டார்.
எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து, ஆசி வழங்கி அருளினார். இந்த அற்புதமும் இங்கு தான் நிகழ்ந்தது.
அதை சுட்டிக் காட்டும் வகையில் திருக்கடையூர் தலத்தில் எமதர்ம ராஜாவும் எழுந்தருயுள்ளார். கால சம்ஹார மூர்த்திக்கு நேர் எதிரில் பிரகாரத்தில் எமதர்ம ராஜாவை காணலாம்.
- மார்க்கண்டேயர் தமது பூசைக்காகக் கொண்டு வந்த பிஞ்சிலம் என்னும் சாதி மல்லிகைக் கொடி இங்கு தலமரமாக உள்ளது.
- எனவே இத்தலம் "பிஞ்சிலவனம்" என்று அழைக்கப்படுகிறது.
மார்க்கண்டேயர் தமது பூசைக்காகக் கொண்டு வந்த பிஞ்சிலம் என்னும் சாதி மல்லிகைக் கொடி இங்கு தலமரமாக உள்ளது.
எனவே இத்தலம் "பிஞ்சிலவனம்" என்று அழைக்கப்படுகிறது.
இந்தச் சாதிமல்லி ஆண்டு முழுவதும் பூத்துக் கொண்டிருக்கக் கூடியது.
இங்கே இம்மலர் இறைவனுக்கு மட்டுமே அணிவிக்கப்படுகிறது.
மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.
இந்த சாதி மல்லியின் ஒரு பூவை எடுத்து அர்ச்சித்தால் அது 1008 முறை அர்ச்சித்ததற்குச் சமம் என்று சொல்லப்படுகிறது.
* மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் இருபதாவது கிலோமீட்டரில் திருக்கடையூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் செல்கின்றன.
* மயிலாடுதுறையில் தங்கும் விடுதிகளும் உணவுவிடுதிகளும் ஏராளம்! திருக்கடையூரிலும் மிக நல்ல தங்கும் விடுதிகளும், உணவு விடுதிகளும் உள்ளன.
* திருக்கடையூரில் சஷ்டியப்தபூர்த்தி விழா நடத்துவது மிகவும் சிறப்பானது என்பதால், கோவிலில் தினமும் குறைந்தது 30 முதல் 35 சஷ்டியப்தபூர்த்தி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
* விழாவுக்கு வருகை தரும் உறவினர்களைத் தங்க வைக்க, விருந்து பரிமாற எனயாவற்றுக்கும் வசதியாக சத்திரங்கள், மண்டபங்கள் உள்ளன.
* திருமணத்தை நடத்தி வைக்க ஏராளமான புரோகிதர்கள் இருக்கிறார்கள். அவர்களே நாதஸ்வரத்திலிருந்து விருந்து வரை எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறார்கள்.
* வருகிறவர்களின் வசதிக்குத் தகுந்தமாதிரி ஓட்டல் சதாபிஷேகம், ஓட்டல் சஷ்டியப்தபூர்த்தி என்கிற பெயரில் இங்கே இருக்கும் ஓட்டல்கள் வருபவர்களைக் கவர்கின்றன.
- மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது.
- மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூரில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மணல்மேடு என்னும் கிராமம் இருக்கிறது.
அங்கே தான் மார்க்கண்டேயர் தங்கி இருந்த ஆசிரமம் இருந்தது. தற்போது அந்த ஆசிரமம் மார்கண்டேயர் கோவிலாக மாறியுள்ளது.
மிருகண்டு முனிவர், மிருகண்டேஸ்வர் என்னும் பெயருடன் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.
மார்கண்டேயருக்கு தனி சந்நிதி உள்ளது. மார்கண்டேயரின் தாய் மருத்துவதிக்கு ஒரு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
விநாயகர், ஆஞ்சநேயர், சுப்ரமணியர் என்று சுவாமி விக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
குழந்தைப்பேறு அற்றவர்கள், திருமணம் கைகூடாதவர்கள், நோய்த் தொல்லைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கையை விரும்புகிறவர்கள் அனைவரும் இந்தக் கோவிலில் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் இருக்கிறது.
- விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.
- முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.
பாற்கடலை கடைந்த போது கிடைத்த அமிர்தத்தை தேவர்கள் கடம் (குடம்) ஒன்றில் கொண்டு வந்ததையும், அதில் இருந்து சிவபெருமான் லிங்கமாக தோன்றி அருள் புரிந்ததையும் அனைவரும் அறிவோம்.
ஈசனை கண்ட மகிழ்ச்சி தேவர்களுக்கு ஏற்பட்டாலும், அமரத்துவம் தரும் அமிர்தம் தங்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதே என்று வருந்தினார்கள்.
அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்ட வில்லையே என்ற தவிப்பு அவர்களுக்கு ஏற்பட்டது.
எனவே அமரத்துவம் தரும் அமிர்தம் தருமாறு அமிர்தகடேசுவரரை நோக்கி தேவர்கள் அனைவரும் வழிபட்டனர்.
பக்தன் கேட்பதைத்தான் இல்லை என்று சொல்லாமல் ஈசன் கொடுப்பாரே? அமிர்தகடேசுவரர் மறுவினாடியே தேவர்கள் முன்பு தோன்றி காட்சி கொடுத்தார்.
அவரிடம், "எங்களுக்கு அமிர்தம் வேண்டும்" என்று தேவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக் கொண்ட அமிர்தகடேசுவரர் அருகில் உள்ள குளத்தில் அமிர்தத்தை வைத்துள்ளேன்.
போய் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி விட்டு மறைந்து விட்டார்.
மகிழ்ச்சி அடைந்த தேவர்கள் உடனே அருகில் இருந்த குளத்துக்கு ஓடினார்கள்.
அந்த குளத்தில் சல்லடைப்போட்டு தேடிப் பார்த்தனர். ஆனால் அமிர்தம் கிடைக்க வில்லை.
தேவர்களுக்கு மிகவும் ஏமாற்றமாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்த அவர்களுக்கு மகாவிஷ்ணுவின் நினைவு வந்தது. உடனே அவர்கள் விஷ்ணுவிடம் ஓடிச் சென்று விபரத்தைக் கூறினார்கள்.
ஈசன் தருவதாக கூறிய அமிர்தம் எங்கே போயிற்று என்று தன் ஞானதிருஷ்டியால் விஷ்ணு பார்த்தார். அப்போது விநாயகர் அந்த அமிர்தத்தை எடுத்து ஒளித்து வைத்திருப்பது தெரிந்தது.
உலகில் எந்த ஒரு செயலை செய்யத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் விநாயகரை வழிபட வேண்டும் என்பது மரபு. அதனால் தான் விநாயகரை முழு முதல் கடவுள் என்கிறோம்.
அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர்.
இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது.
விநாயகரின் இந்த லீலை பற்றி மகாவிஷ்ணு தேவர்களிடம் எடுத்துக் கூறினார்.
முதலில் விநாயகரை கும்பிடுங்கள். அவர் அமிர்தம் தருவார் என்று கூறி தேவர்களை விஷ்ணு அனுப்பி வைத்தார்.
தவறை உணர்ந்த தேவர்கள் ஓடோடி வந்து விநாயகர் காலடியில் விழுந்து வழிபட்டு மன்னிப்புக் கேட்டனர்.
மகிழ்ச்சி அடைந்த விநாயகர் அமிர்த கடத்தை எடுத்துக் கொடுத்து தேவர்களுக்கு ஆசி வழங்கினார்.
தேவர்கள் அமிர்தம் உண்டு அமரத்துவம் பெற்றனர்.
அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். நாளடைவில் அது கள்ள விநாயகர் என்று மாறி விட்டது.
இந்த கள்ள விநாயகர் திருக்கடையூர் ஆலயத்தின் தொடக்கத்தில் கன்னி மூலையிலோ அல்லது முச்சந்திகளிலோ இல்லை. ஆலயத்தின் உள்ளே மகா மண்டபம் பகுதியில் ஈசனை பார்த்தபடி ஓரு ஓரத்தில் உள்ளார்.
அதாவது அமிர்தம் எடுத்து பதுங்கி இருந்ததை சுட்டிக் காட்டுவது போல அவரது சன்னதி மகா மண்டபத்தில் ஈசனின் கருவறைக்கு தென் கிழக்கில் ஓரு ஓரமாக உள்ளது. அவரது துதிக்கையில் அமிர்த கலசம் உள்ளது.
இதன் காரணமாக இந்த விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரை மனம் உருகி வழிபட்டால் இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
உறவினர்கள் மற்றும் பகைவர்களிடம் நீங்கள் எதையாவது இழந்து தவித்தால் இந்த விநாயகரை வழிபட சுபம் ஏற்படும்.
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது. அதில் இத்தலத்து கள்ள வாரண விநாயகர் மூன்றாம் படை வீட்டுக்கு அதிபதியாக உள்ளார்.
சமஸ்கிருதத்தில் இவரை "சோர கணபதி" என்று அழைக்கிறார்கள். அபிராம பட்டர் அந்தாதி பாடத் தொடங்கிய போது இந்த கள்ள விநாயகரை புகழ்ந்து பாடி விட்டே அந்தாதி பாடி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன.
- வாமா என்றால் அழகு என்ற பொருள். "வாமி" என்றால் அழகி என்று பொருள்.
திருக்கடவூரில் தேவியை அழகு என சொல்லத்தக்க வகையில் "அபிராமி" எனும் அழகுப்பெயர் கொண்டு அன்னை திகழ்கிறாள்.
"அபிராமி" என்றால் "அழகு" என்று பொருள்.
"அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வலில்" என்று அபிராமி பட்டர் பாடுவார்.
அன்னையின் அழகுத் தோற்றத்தை லலிதா சகஸ்ர நாமமும், சௌந்தர்ய லகரியும், கேசாரி பாதாந்தம் வர்ணிக்கின்றன.
வாமா என்றால் அழகு என்ற பொருள்.
"வாமி" என்றால் அழகி என்று பொருள். சிவபெருமானின் வாம பாகத்தில் விளங்குவதாலும் "வாமி" ஆவாள்.
மங்களமான அழகை உடைய திரிபுரசுந்தரியை அபிராமியின் வடிவில் பட்டர் கண்டு மகிழ்கிறார்.
17 நிர்வாகம்
இது தருமை ஆதீனத்தைச் சேர்ந்த தேவஸ்தானங்களில் ஒன்று.
திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனம் இருபத்தாறாவது குருமகா சந்திதானம் ஸ்ரீ&ல&ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கள் ஆட்சிபீடத்தை ஏற்ற நாள் முதல் இவ்வாலயத்தைச் சிறப்புறப் பரிபாலித்து வருகிறார்கள்.






