என் மலர்
ஆன்மிகம்
- அமிர்தகடேஸ்வரர் கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
- அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன.
அமிர்தகடேஸ்வரர் கோவிலின் சுற்று மதில்களிலும், கருவறையிலும் ஐம்பத்து நான்கு கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
அவை 1906 மற்றும் 1925-ம் ஆண்டுகளில் கல்வெட்டுத் துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் ராசராசன் முதல் மூன்றாம் ராசராசன் வரையில் உள்ள ஒன்பது சோழ மன்னர்களுடைய வரலாற்று குறிப்புகளையும், கொடைத் தன்மையையும் இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பாண்டிய மன்னர்களான சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் மற்றும் குலசேகர பாண்டியன் ஆகிய மூவரின் கொடைத்தன்மையை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியலாம்.
விசயநகர மன்னர்களுள் கிருஷ்ண தேவராயரும், மூக்கண்ண உடையார் பரம்பரையில் விருப்பண்ண உடையாரும் இக்கோவிலுடன் தொடர்புடையவர்களாக இருந்ததை இக்கல்வெட்டுகள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.
- மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.
- இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.
கார்த்திகை மாதம் சோமவாரமான திங்கட்கிழமைகளில் மாலையில் சங்கு மண்டபத்தில் 1008 வலம்புரிச் சங்குகளை பரப்பி அவைகளின் மேல் மார்க்கண்டேயரின் கங்கா தீர்த்தத்தை நிரப்புவார்கள்.
மருந்து வகைகள், தானியங்கள், பச்சிலைகள், பழவகைகள், நவரத்தினங்கள், உலோகங்கள், எண்வகை மண் இப்படி மூந்நூறு வகைப் பொருள்களைப் படைத்து ஆகம விதிப்படி அமிர்தகடேசுவரரை பூசித்து திருமுழுக்காட்டுவார்கள்.
இது இத்தலத்திற்குரிய சிறப்பான விழாவாகும்.
இத்திருமுழுக்காட்டின்போது கவனித்தால் காலனின் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை உதைக்க இறைவன் லிங்கத்தில் இருந்து தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் உண்டான லேசான பிளவும் காணலாம்.
- சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
- நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.. என்று பாடினார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுரண்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது, கீழப்பாவூர். இங்கு சிவலோக பண்டாரநாதர் என்ற சித்தர் கோவில் இருக்கிறது.
பொதுவாக சித்தர்கள் ஜீவ சமாதியான இடத்தில் சிவலிங்கம்தான் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் இங்கு, அந்த சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த தேரோட்டம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சன்னியாசியால் தடைபட்டுப் போனது.
அந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்களில் நெல்லை அருகே உள்ள மானூரைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதர் என்ற சன்னியாசியும் ஒருவர்.
ஒல்லியான தேகம், நீண்ட தாடி, கையில் தவக்கோல், இடுப்பை மட்டுமே மறைக்கும் வஸ்திரம் என்று, முக்கால்வாசி நிர்வாணத்துடன் வந்திருந்த அவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கேலி- கிண்டல் செய்து அங்கிருந்து விரட்டினர். இதனால் வருத்தத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சிறிது நேரத்திலேயே ஒரு காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அங்கு வந்தார். தேரின் முன்பாக சென்று நிதானமாக இறைவனை தரிசித்தார். அப்போது இளைஞர்கள் மீண்டும் அவரைப் பார்த்து கேலி- கிண்டல் செய்தனர். இதனால் வருந்திய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.
அதன்பின்னர் அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தும் தேர் சிறுதும் நகரவில்லை. 'தேரின் சக்கரத்தில் ஏதேனும் மாட்டிக் கொண்டு இருக்கிறதா?' என்று பார்த்தனர். அப்படியும் ஒன்றும் இல்லை.

மீண்டும் சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போதும் தேர் நகரவில்லை. இறுதியில் பக்தர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இப்படி நகராத தேர், சுமார் 2 மாதங்களாக நடு வீதியில் நின்று கொண்டிருந்தது.
இதனால் வருந்திய கோவில் நிர்வாகத்தினர், தேர் நகராததற்கு தெய்வச் செயல் எதுவும் காரணமா என்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது கோவில் தேரோட்டம் தொடங்கிய நேரத்தில் ஒரு சன்னியாசியை இளைஞர்கள் கேலி செய்தது பற்றியும், அவர் ஒரு சித்தர் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.
அந்த சித்தரின் மனம் குளிர்ந்தால்தான், தேர் அங்கிருந்து நகரும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சித்தர், திருக்குற்றாலத்தில் இருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் சித்தர், வான் வழியாக பறந்து குருக்கள் மடம் என்ற பகுதியை அடைந்தார்.
திருக்குற்றாலத்தில் சித்தர் இல்லாததால், மீண்டும் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர் குருக்கள் மடத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கு சென்ற கோவில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் தேர் ஓட அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.
இதையடுத்து திருநெல்வேலி வந்த சிவலோக பண்டாரநாத சித்தர், "தேரோடும் வீதியிலே தெவங்கி நிற்கும் நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா.." என்று பாடினார்.
மறுநொடியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல, அந்த தேர் தானாகவே நகர்ந்து, கோவில் வளாகத்தில் போய் நிலை கொண்டது. இதைக்கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.
சிவலோக பண்டாரநாத சித்தர், தான் சித்ரா பவுர்ணமி அன்று ஜீவ சமாதி அடையப் போவதாகவும், பவுர்ணமி தோறும் தன் ஜீவசமாதியில் சாம்பார் சாதம், தயிர் சாதம் படைத்து வழிபட்டு, அதை தானமாக வழங்கு பவர்களுக்கு பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்று கூறினார். அதன்படியே அவர் ஒரு சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தில் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

கருவறையில் மூலவராக சிவலோக பண்டாரநாத சித்தர் திருவுருவம் உள்ளது. பத்மாசனத்தில் தியான நிலையில் வீற்றிருக்கும் இவர், தலையிலும், நெற்றியிலும் ருத்ராட்சம் அணிந்துள்ளார். அதோடு திருமார்பில் கவுரி சங்கரம் என்னும் அரிய ருத்ராட்சம், இரண்டு புஜங்களிலும் ருத்ராட்ச மணிகள், இடுப்பில் மட்டும் வஸ்திரம் என்று அணிந்திருக்கிறார்.
வலது கையில் சின்முத்திரையோடும், இடக்கையில் ஏடு தாங்கியும், புத்தரைப் போல் நீண்ட காதுகளுடன், முகத்தில் புன்னகை தவழ சிவசிந்தனையுடன் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி வருகிறார்.
சிவலோக பண்டாரநாதர், குருக்கள் மடம் பகுதியில் நோய் குணப்படுத்துவது, ஏடு ஜோதிடப் பலன் சொல்வது ஆகிய செயல்களில் ஈடுபட்டார். இவரை அப்பகுதி மக்கள் 'ஏடு ஜோதிடர்' என்றே அழைத்தனர்.
ஓய்வு நேரங்களில் அங்குள்ள தெப்பக்குளத்தில் நீரின் மேற்பரப்பில் படுத்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் சித்தரின் புகழ், அனைத்து திசைகளிலும் பரவியது.
தன்னை நாடி வருபவர்களிடம் தட்சணை எதுவும் பெறாமல், யாசகம் பெற்று கஞ்சி காய்ச்சி பருகி வந்தார். அந்த கஞ்சியை தன்னை நாடி வரும் மக்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாகவும் வழங்கினார்.
இப்படி கஞ்சியை பனை ஓலை பட்டையில் வாங்கிப் பருகிய மக்கள், ஓலை பட்டையை அங்கேயே வீசி விட்டுச் சென்றனர். அது காய்ந்து அருகில் இருக்கும் வீடுகளின் முன்பாக போய் விழுந்து கிடந்தது. இதனால் கோபம் கொண்ட அந்த வீட்டு மக்கள், சித்தரை வாய்க்கு வந்தபடி திட்டியதுடன், ஒரு கட்டத்தில் அவர் தங்கியிருந்த குடிலுக்கு தீயும் வைத்தனர்.
ஆனால் அப்படி தீவைத்தவர்களின் உடல் வெப்பத்தால் கொதிக்க ஆரம்பித்தது. உடல் முழுவதும் நெருப்பில் வெந்தது போல எரியத் தொடங்கியது. இதனால் பயந்து போன அவர்கள், சிவலோக பண்டாரநாத சித்தரைத் தேடி ஓடினர்.
நீரின் மீது படுத்து தியானம் செய்து கொண்டிருந்த அவரிடம், தங்களின் செயலுக்கு மன்னிப்பு கோரினர். இதையடுத்து அவர்களின் உடல் சமநிலைக்கு வந்தது.
சிவலோகநாதரை வழிபடுவோருக்கு குரு தோஷம், குரு சாபம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். அரசு வேலை, அரசியலில் உயர் பதவி கிடைக்க சிவலோக நாதரை தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும்.
திருமணம், குழந்தைப்பேறுக்குரிய சிறப்புத்தலமாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. நோய் தீரவும், வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிபெறவும் இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அர்ச்சனை கிடையாது. அதனால் பூ மாலைகள், நல்லெண்ணெய், ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது சிறப்பு.
பவுர்ணமி தோறும் காலையில் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூச நட்சத்திரம் அன்றும், அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்றும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
அமைவிடம்
தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோமீட்டரில் கீழப்பாவூர் இருக்கிறது. இங்கு வடக்குப் பேருந்து நிலையத்தில் அரசு நூலகத்தின் பின்புறம் 'குருக்கள் மடம்' பகுதியில் சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி அமைந்துள்ளது.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-5 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: துவிதியை இரவு 8.39 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: சதயம் காலை 6.23 மணி வரை பிறகு பூரட்டாதி மறுநாள்
விடியற்காலை 4.32 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ முருகப்பெருமாள் கோவிலில் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நலம்
ரிஷபம்-ஓய்வு
மிதுனம்-சாதனை
கடகம்-உதவி
சிம்மம்-செலவு
கன்னி-ஈகை
துலாம்- நன்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- உயர்வு
மகரம்-உதவி
கும்பம்-விவேகம்
மீனம்-மாற்றம்
- திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.
- இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.
திருக்கடையூர் ஆலயம் மொத்தம் மூன்று திருச்சுற்றுகள் கொண்டது.
இந்த ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது.
ஏராளமான சிறப்புகளுடன் அருமையாகத் திகழும் இத்திருக்கோவில் ஏழுநிலை ராசகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.
ராசகோபுரத்தில் பாற்கடலைக் கடைந்த காட்சி, ஆனை உரி போர்த்த தேவர், சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர் முதலிய சிற்பங்கள் காணத்தக்கன.
முதல் பிரகாரத்தில் இடதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. அதன் கீழ் நந்தவனம் உள்ளது.
கிழக்கு கோபுரத்திற்கு அருகில் குளம் உள்ளது.
இத்திருச்சுற்றிலேயே தென்மேற்கு மூலையில் இரண்டு நிலை கோபுரமும், ஒரு திருச்சுற்றும் கொண்ட அன்னை அபிராமியின் சன்னதி உள்ளது.
அம்மன் கருவறைக்கு வடபுறத்தில் சண்டிகேசுவரர் சன்னதி உள்ளது.
இரண்டாம் பிரகாரத்தில் ஐந்து நிலை கோபுரம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் திருச்சுற்றின் இடதுபுறம் அலங்கார மண்டபமும், ஈசான திசையில் யாகசாலையும் அமைந்துள்ளன.
மூன்றாம் பிரகாரத்தில் ஒருநிலை கோபுரம் உள்ளது.
வாயிலுக்குத் தென்புறம் சிவனுமைமுருகு, போகேசுவரி, முருகன் ஆகிய திருவடிவங்களும், வடபுறம் மார்க்கண்டேசுவரர் லிங்கத்திருவுருவும் உள்ளன.
திருச்சுற்றின் வடபுறத்தில் ஆடல் வல்லான் சன்னதி பைரவர் திருவுருவும், தென்புறத்தில் குங்கிலியக் கலய நாயனார், குங்கிலியம் விற்ற வணிகர், ஏழு கன்னியர், வீர பத்திரர், பிள்ளையார், எமன், அறுபத்துமூன்று நாயன்மார்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன.
தல மரமான பிஞ்சிலா மரமும் இங்கு உள்ளது.
கருவறையில் அமிர்தகடேசுவரரின் லிங்கத் திருவுரும் உள்ளது. மரகதலிங்கம் ஒன்று தனியாக, பாதுகாப்பாக பெட்டியில் உள்ளது.
கருவறையின் வெளிப்புறச் சுவர்களில் கோஷ்ட தெய்வங்களாக வடபுறம் மகிஷன் மீது துர்க்கை, நான்முகன், கீழ்ப்புறம் லிங்கோத்பவர், தென்புறம் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறை விமானம் எட்டுப்பட்டை கொண்டது.
நவக்கிரகங்கள் சன்னதி இல்லை
சிவாலயங்களில் அவசியம் நவக்கிரக சன்னதி இருக்கும். இது தவிர சில ஆலயங்களில் குரு, சனிக்கு தனி தனி சன்னதிகள் கூட அமைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் இக்கோவிலில் நவகோள்கள் இல்லை. எமவேதனையையே தீர்க்கும் அண்ணல் இங்கு இருப்பதால் ஏனைய துன்பங்கள் தீர வழிபட தேவையான நவக்கிரகங்கள் தேவை இல்லை என்பதுதான் இதற்குக் காரணம்.
- திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.
- இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.
1.திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.
2. இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.
3. தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் அம்பிகை மீது பாடப்பட்ட துதிகளில் "அபிராமி அந்தாதி"யே அதிகமாக பாடப்பட்டதாகும்.
4. அபிராமி மீது பாடப்பெற்ற அந்தாதிகளை நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து உரை எழுதியுள்ளனர்.
சமீபத்திய காலங்களில் பாரதியார், கண்ணதாசன், கி.வா.ஜகன்நாதன் உள்பட பலர் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதியுள்ளனர்.
5. அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களும் அன்னையின் சன்னதியில் சலவைக்கல்லில் பொறித்து பதிக்கப்பட்டுள்ளன.
6. அன்னை அபிராமிக்கு ஆதிசங்கரர் கம்மல் செய்து அணிவித்தார். அந்த கம்மல் இன்றும் உள்ளது.
7. அம்மனின் 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.
8. அபிராமி அம்மனுக்காக ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள நவரத்ன அங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று அபிராமிக்கு இந்த அங்கி அணிவிக்கப்படும்.
9. அபிராமியை புகழ்ந்து பாடி புகழ் பெற்ற அபிராமி பட்டரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். அவர்கள் திருக்கடையூரில் நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.
10. கவிஞர் கண்ணதாசன் திருக்கடவூர் பதிகத்தில், "அற்புத சக்தி அபிராமி" என்றும், "மமதை அறுத்து மனதினைக் காக்கும் மந்திர சக்தி அபிராமி" என்றும் பாடுவார்.
- இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.
- அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.
காரி நாயனார் திருக்கடவூர் தலத்தில் பிறந்தவர். இவர் ஒரு மிகச்சிறந்த தமிழறிஞராகத் திகழ்ந்தார்.
அறுபத்து மூன்று நாயன்மார்களும் தங்களது வாழ்க்கையில் ஒவ்வொரு குறிக்கோளைக் கடைப்பிடித்து வந்தனர்.
அதுபோலவே காரிநாயனாரும் ஒரு புதுமையான செயலைச் செய்தார்.
தமது தமிழ் புலமையால் "காரிக்கோவை" என்ற ஓர் அற்புதமான நூலை இயற்றினார்.
அந்த காலத்தில் புலவர்களை அரசர்கள் பெரிதும் மதித்துப் போற்றி வந்தனர்.
காரியாரும் தாம் இயற்றிய காரிக்கோவையை எடுத்துக்கொண்டு சேரன், சோழன், பாண்டியன் ஆகிய தமிழ் மூவேந்தர்களிடமும் சென்றார்.
நூலின் சிறப்பை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்கள் பெரும் நிதியை அள்ளி, அள்ளி கொடுத்தனர்.
அந்த நிதியை கொண்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திருப்பணிகள் செய்து புதுப்பித்தார்.
இவ்வாறு சிவனடியார்களுக்குத் தொண்டு புரிந்து இறுதியில் காரி நாயனார் சிவனடி சேர்ந்து முக்தி அடைந்தார்.
- ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.
- வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.
குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் ஆலயத்தில் தினமும் குங்குலிய தூபம் இடும் தொண்டு புரிந்து வந்தார். இறைவன் சோதனையால் அவருக்கு வறுமை ஏற்பட்டது.
அவரது மனைவி ஒரு நாள் திருமாங்கல்யத்தை கழற்றி கொடுத்து நெல் வாங்கி வரும்படி கூறினார்.
குங்குலியக்கலய நாயனாரும் அந்த தாலியை வாங்கிக்கொண்டு கடை வீதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே குங்குலிய வியாபாரி வருவதைக் கண்டார்.
உடனே அவருக்கு அமிர்த கடேசுவரருக்கு குங்குலியம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
மறு வினாடி எதை பற்றியும் யோசிக்காத அவர் தன் கையில் இருந்த தன் மனைவியின் தாலியைக் கொடுத்துக் குங்குலியம் வாங்கிக்கொண்டு நேராகக் கோவிலுக்கு சென்று விட்டார்.
சிவபெருமானின் அருளால் வீட்டில் செல்வம் நிறைந்தது.
ஒரு சமயம், திருப்பனந்தாளில் பக்தை மாலை அணிவிப்பதற்காக தலையைச் சாய்த்தார் சிவபெருமான்.
வளைந்திருந்த சிவலிங்கத்தை நிமிர்த்த சோழ மன்னன் செய்த முயற்சிகள் பலிக்கவில்லை.
எத்தனையோ பேர் முயன்றும் லிங்கத்தை நிமிர்த்த முடியவில்லை.
இதனால் எல்லாரும் குங்குலியக்கலய நாயனார் உதவியை நாடினார்கள்.
திருப்பனந்தான் சென்ற அவர் ஒரு பட்டுக்கயிற்றால் லிங்கத்தைக் கட்டித் தம்முடைய கழுத்தில் மாட்டிக்கொண்டு இழுத்தார்.
குங்குலியக் கலய நாயனாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட சிவபெருமான் சாய்ந்த நிலையிலிருந்து நிமிர்ந்தார்.
இத்தகைய சிறப்புடைய குங்குலியக்கலய நாயனார் கடைசி வரை திருக்கடையூரில் வாழ்ந்து அமிர்த கடேசுவரருக்கு சேவை புரிந்தார்.
- நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, இன்னலற்று இன்புற்று வாழ்தல்வேண்டும் என விரும்புவோர், அபிராமியை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
- அன்னையின் உருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி (90 செ.மீ) உயிர பீடத்தில் நான்கு திகரங்களோடு நின்று அன்னை காட்சி அருள்கின்றாள். .
மகா மண்டபத்தை அடுத்து உள்ளது சங்கு மண்டபம்.
இம்மண்டபத்தில் தான் அமுதகடேசுவரருக்கு 1008 சங்கு அபிஷேகம் நடைபெறும்.
மார்க்கண்டன் இங்கு இறைவனுக்கு 1008 வலம்புரிச் சங்குகளில் நீர் நிறைத்து அபிஷேகம் செய்ததாக ஐதீகம்.
இச்சங்கு மண்டபத்தை அடுத்த கருவறையுள் மேற்கு நோக்கியவாறு அமுதகடேசுவரர் மகாலிங்கத் திருமேனியராகக் காட்சி தருகின்றார்.
நீண்ட ஆயுளைப் பெற்று வாழ விரும்புவோர் இப்பெருமானை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
மேற்கு நோக்கிய இறைவன் திருச்சன்னதிக்கு எதிரில் வெளிப்பிரகாரத்தில் அன்னை அபிராமி கிழக்கு நோக்கித் கோவில் கொண்டு திகழ்கின்றாள்.
அன்னையின் உருவம் மிகவும் அழகு வாய்ந்தது. மூன்றடி (90 செ.மீ) உயிர பீடத்தில் நான்கு திகரங்களோடு நின்று அன்னை காட்சி அருள்கின்றாள்.
இரண்டு கரங்கள் அபயவரத முத்திரைகள் தாங்க, இரண்டு கரங்கள் மலரும் மாலையும் தாங்கித் திகழ்கின்றன.
அன்னையின் முகம் அருளை வாரிப் பொழிகின்றது.
நீண்ட ஆயுளைப் பெறுவதோடு, இன்னலற்று இன்புற்று வாழ்தல்வேண்டும் என விரும்புவோர், அபிராமியை வணங்கி வழிபடுதல் வேண்டும்.
இவற்றை ஒரு நேர வழங்கி அருளுவதற்காகவே இறைவனும் அன்னையும் இத்தலத்தில் எதிர் எதிராக எழுந்தருளித் திகழ்கின்றனர்.
அமிர்தகடேசுவரரை வணங்கி வழிபட்டுத் திரும்பும் அந்நிலையிலேயே அபிராமியையும் வழிபட வேண்டும் என்பதன் பொருட்டே அன்னையும் அப்பனும் எதிர் எதிரே நின்று பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
- திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.
- கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.
திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர்எதிரே தனி சன்னதியில் உள்ளனர்.
இதன் பின்னணியில் ஒரு சிறப்பம்சம் கூறப்படுகிறது.
திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.
கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.
இம்மண்டபத்தில் கால சம்கார மூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். அங்கு அவரது செப்புத் திருமேனியைக் கண்டு வழிபடலாம்.
காலனை சம்ஹாரம் செய்த அவசரத்தில், தம் திருக்கரங்களில் சூலம், மழு, பாசம், தர்சனி தரித்தவராய்த் தெற்கு நோக்கி எழுந்தருளி நிற்கிறார்.
உதைபட்ட காலன், திருவடியின் கீழ் உருண்டு கிடக்கிறான்.
வரம் பெற்ற மார்க்கண்டன் கை கூப்பி வணங்கி நிற்க, அன்னை சாட்சியாகக் கருணைக்கண் கொண்டு அருகில் நிற்க கண்டு வழிபடலாம்.
கால, சங்காரப் பெருமானைக் கண்டு வழிபடுவோர் நமனுக்கு அஞ்சாது நெடுங்காலம் வாழலாம்.
- ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.
- அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள்.
அன்னை அபிராமி கண்கண்ட தெய்வம், அழகுக்கொரு வரும் ஒவ்வாத செல்வி, சின்னஞ்சிறு பெண்ணுருவில் திகழும் உத்தமி, எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் ஈன்றருளும் வள்ளல் நாயகி, அபிராமி பட்டர் என்ற அன்பருக்கு அமாவாசையிலும் சந்திரோதயம் காட்டி, அபிராமி அந்தாதி என்னும் பாமாலை சூட்டிக் கொண்ட செல்வி.
அன்னை அபிராமியினிடத்தில் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் பட்டர் ஒருவர், பக்தி முற்ற முற்ற அவர் உன் மத்மராகவே ஆகிவிட்டார்.
அதைக் கண்ட அர்ச்சகர்கள், அவரை வெறுத்தது மட்டுமின்றி அவர் மீது பொறாமையும் கொண்டனர்.
ஒருநாள், தஞ்சை மன்னன் வந்த போது, பட்டர் அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறினார்.
அதைக் கொண்டே அர்ச்சகர்கள் அவரைப் பற்றிப் பலவாறாகப் பேசினர்.
பட்டர் தமது தவறை உணர்ந்து, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் என்று பாடத் தொடங்கி, எழுபத்தெட்டு பாடல்களைப் பாடி முடித்து, எழுபத்தொன்பதாவது பாடலை,
"விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு" வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு
எமக்கு, அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம்
பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர்
தம்மொடு என்ன கூட்டு இனியே"
என்று பாடினார்.
தயவர் தம்மொடு என்ன கூட்டு இனியே என்று அவர் பாடி முடித்த வேளையில், அன்னை அபிராமி தன் திருச்செவியில் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி வானத்தில் வீசி எறிந்தாள். அந்தத் தோடே வான வெளியில் முழு மதியாகக் காட்சியளித்தது.
அமாவாசையன்றே பவுர்ணமி நிலவு உதிப்பதைக் கண்டு மன்னர், அர்ச்சகர்கள் எல்லோரும் வியந்து நின்றனர். பட்டரின் திருவடியில் விழுந்து வணங்கி மன்னிப்பு வேண்டினர்.
பட்டர் இவ்வாறு பாடிய அந்தாதிப் பாடல்களைக் கொண்டதே அபிராமி அந்தாதி, அபிராமியின் அருள் பெற்ற அந்தப் பட்டர், அபிராமி பட்டர் என்ற பெயரால் அதுமுதல் அழைக்கப்பெற்றார்.
அந்த அந்தாதிப் பாடல்கள் அன்னையை வழிபடுவதற்கேற்ற அற்புதப் பாடல்களாகும்.
- அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.
- சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி.
அமுதத்தை மகாவிஷ்ணு தேவர்களுக்கு பரிமாறும்முன், சிவபூஜை செய்ய எண்ணினார்.
சிவபூஜையின் போது அம்பிகையையும் பூஜிக்க வேண்டும் என்பது நியதி.
எனவே, மகாவிஷ்ணு தனது ஆபரணங்களை கழற்றி வைத்தார்.
அதிலிருந்து அபிராமி அம்பிகை தோன்றினாள். பின் பூஜை செய்து தேவர்களுக்கு அமுதம் பரிமாறினார் மகாவிஷ்ணு.
மகாவிஷ்ணு மார்பில் அணிந்திருக்கும் ஆபரணங்களில், லட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
அண்ணனின் ஆபரணத்தில் இருந்து அபிராமி தோன்றியதால், மகாவிஷ்ணுவை, அம்பிகையின் அன்னையாகவும் கருதி வணங்குகிறார்கள்.






