என் மலர்
ஆன்மிகம்
- இன்று சஷ்டி விரதம்.
- திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-21 (வெள்ளிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி காலை 11.14 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: திருவோணம் மாலை 4.50 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லி தாயார் புறப்பாடு. திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசல நாயகர் பூத வாகனத்திலும், இரவு சுவாமி சிம்ம வாகனத்திலும் பவனி வரும் காட்சி. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாட வீதி புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-பணிவு
மிதுனம்-மேன்மை
கடகம்-தாமதம்
சிம்மம்-உதவி
கன்னி-ஆதரவு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-பக்தி
தனுசு- நன்மை
மகரம்-அமைதி
கும்பம்-பரிசு
மீனம்-ஜெயம்
- இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன.
- கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
"காணி நிலம் வேண்டும் பராசக்தி" என்று மகாகவி பாரதி எந்த சக்தியிடம் வேண்டினாரோ, அந்த தியான நித்யகல்யாணி திருநெல்வேலி மாவட்டம் இந்தக் கடையம் வில்வவனநாதர் கோவிலில் அருள்பாலிக்கிறாள்.
இது ஒரு சிவாலயமாயினும் ராமாயணத்தோடு தொடர்புடைய சிற்பங்கள் இங்குள்ளன.
கோவில் கதவில் தசரதரால் சிரவணன் கொல்லப்பட்ட சம்பவம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
பிரம்மனுக்கு சிவன் கொடுத்த வில்வபழத்தை மூன்றாக உடைத்த பிரம்மா ஒன்றைக் கைலாய மலையிலும், இன்னொன்றை மேருமலையிலும், மற்றொன்றை துவாத சாந்தவனத்திலும் நட்டார்.
அந்த துவாத சாந்தவனப் பகுதியில்தான் வில்வவனநாதர் கோவில் உள்ளது.
தற்போது கோவிலுக்குள் உள்ள வில்வமரத்தில் எப்போதாவது தான் காய்காய்க்கும். இதை உடைத்தால் உள்ளே சிவலிங்க பாணம் இருக்கும்.
இத்தலத்து அம்மன் நித்யகல்யாணி என்பதால் எந்நாளும் எந்நேரமும் வரமருளுபவள்.
வில்வவனநாதரையும் நித்யகல்யாணியையும் காணப்பெற்றோர் பெரும்பேறுபெற்றவர்களே!
திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ. அல்லது தென்காசியில் இருந்து 20 கிமீ. தொலைவில் கடையம் உள்ளது.
- தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.
- நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.
இந்திரனின் பாவத்தை நீக்கியருள் புரிந்ததால் இவ்வாலய சிவன் பாபநாசநாதர் என்றும் அம்பாள் உலகம்மை,விமலை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.
தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.
நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த காசிக்கு நிகரான பஞ்ச குரோச ஸ்தலங்களை வழிபட்டு ஈசனருள் பெற்றிடுவோம்.
- காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
- ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.
தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள சிவாலயம் திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில்.
இவ்வாலயத்தின் புராண பெயர் புடார்க்கினியீஸ்வரர்.
காயம்பட்ட சுயம்பு மூர்த்தியென்பதால் அவரின் காயம் ஆற்றிடும் பொருட்டு சந்தனாதித் தைலம் மட்டுமே பூசி பூஜை செய்யப்படுகிறது.
ருத்ராட்ச மேனியுடை கோமதி அம்பாள் வேண்டும் வரங்களை வாரி வழங்குகிறாள்.
"நாறும் பூவின் நடுவில் நிற்பவனே நினை தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ" எனக்கேட்ட கருவூர் சித்தரின் வாக்கினைச் சாய்ந்து கேட்டதால் சுயம்புலிங்கமான நாறும்பூநாதர் சற்றே சாய்ந்தே காணப்படுகிறார்.
தேடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி சாய்த்தருள்கிறார்.
- இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.
- அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
இத்திருக்கோவிலின் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை அருள்பாலித்து வருகிறாள்.
சுகப்பிரசவம் ஏற்படவும் விரைவில் திருமணம் நடைபெறவும், கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் போன்றவை நீங்கிடவும் இந்த அம்மன் அருள்புரிகிறாள்.
இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.
அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
பாபநாசத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது இவ்வாலயம்.
- கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.
- மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அம்பாசமுத்திரத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆழ்வார்குறிச்சியின் மேற்கே 6 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், அருள்மிகு பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அருள்புரிகிறார்.
கடனையாறு என்றழைக்கப்படும் கருணையாற்றின் கரையில் அமைந்துள்ள சிவசைலம் என்னும் இவ்வூரின் பெயர் கடம்பவனமாகும்.
எழுந்து நிற்கும் நிலையிலுள்ள நந்திகேசுவரரும், பரமகல்யாணி அம்மன் நான்கு கைகளுடன் மேற்கு நோக்கி அமைந்திருப்பதும், நல்லருள் பாலிக்கும் நாயகனை நாம் நான்கு திசைகளில் இருந்தும் தரிசிக்கக்கூடியதும் இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு.
மேலும் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்குக் கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
- தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.
- அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் “பஞ்ச குரோச ஸ்தலங்கள்” எனப்படுகின்றன.
ஏழ்மையானோர் காசிக்கு சென்றுவர வசதி இல்லை என்பதற்காகவே உருவானவை பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன.
குரோச என்பதற்குக் காசிக்கு நிகரான என்று பொருள்.
தேவர்களுக்காகத் தோன்றிய அமுதக்குடத்தை மானுடர்களும் பயன்பெற எண்ணி அம்பெய்தி உடைத்தார் ஈசன்.
அவ்வமுதம் பல்வேறு இடங்களில் ஐந்து குரோசம் வரையில் பரவி ஐந்துதலங்களை உண்டாக்கியதால் "பஞ்ச குரோச ஸ்தலங்கள்" எனப்படுகின்றன.
ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும்.
திருநெல்வேலியில் 25கி.மீ தொலைவிலேயே காசிக்கு நிகரான இந்தப் பஞ்சகுரோச ஸ்தலங்களும் அமைந்துள்ளன.
- விநாயகர் தடைகளை அகற்றுபவர்.
- பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
முன்பெல்லாம் ஓலைச் சுவடியில்தான் நம்மவர்கள் எழுத்தாணி கொண்டு எழுதி வந்தார்கள். அந்த வகையில் `உ' என்ற எழுத்தை எழுதும் போது, ஓலைச்சுவடியின் வலிமையும், எழுத்தாணியின் கூர்மையும் தெரிந்து விடும்.
செம்மை இல்லாத ஓலைச்சுவடி கிழிந்துவிடும். இதன் காரணமாகவே எழுதத் தொடங்குவதற்கு முன்பாக 'உ' என்ற எழுத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்தனர் என்பது அறிவுப்பூர்வமான கருத்து.
இதற்கு ஆன்மிகக் கருத்தும் சொல்லப்படுகிறது. தமிழ் உயிர் எழுத்துகளில், 'உ'கரம் என்ற எழுத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த எழுத்து விநாயகப் பெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இதனை 'பிள்ளையார் சுழி என்றும் சொல்வார்கள்.

விநாயகர் தன்னுடைய தாய், தந்தையரான உமையாள், உமையவனை துணையாகவும், முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக 'உ'என்ற எழுத்தை உருவாக்கியதாக சொல்வதுண்டு.
விநாயகர் தடைகளை அகற்றுபவர். எனவே நம்முடைய காரியங்கள் அனைத்தும் தடைகள் இன்றி வெற்றிபெறுவதற்காக, விநாயகரைத் தொடர்ந்து நாமும் அவருடைய 'உ' என்ற பிள்ளையார் சுழியை பயன்படுத்தி வருகிறோம்.
'உ' என்ற எழுத்தானது ஒரு சிறிய வட்டத்தில் தான் தொடங்கும். வட்டம் என்பதற்கு தொடக்கமும் இல்லை... முடிவும் கிடையாது. இறைவன் தொடக்கமும், முடிவும் இல்லாதவர் என்பது இதனைக் குறிக்கிறது.

வட்டத்தைத் தொடர்ந்து, வளைந்து பின் நேர் கோடு செல்லும். இதனை 'ஆர்ஜவம்' என்பார்கள். இதற்கு 'நேர்மை' என்று பொருள். 'வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே' என்பதே இதன் தத்துவம். பிள்ளையார் சுழி போட்டு செயலை தொடங்கு பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
- தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.
- சீதாதேவி, தசரத மகாராஜாவுக்கு சிரார்த்தம் செய்து வைத்தாள்.
ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூவரும், 14 ஆண்டுகள் வனவாச காலத்தில் ஒவ்வொரு இடமாக சென்று கொண்டே இருந்தனர். அப்போது ராமபிரானின் தந்தையான தசரத மகாராஜாவின் இறந்த தினம் வந்தது.
இந்த காலகட்டத்தில் ராமரும், லட்சுமணனும் கயா பகுதியில் இருந்தனர். தந்தைக்கு சிரார்த்தம் செய்வதற்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்காக, ராமரும், லட்சுமணரும் வனத்தின் அடர்ந்த பகுதிக்குச் சென்றனர். அவர்கள் வருவதற்கு கால தாமதம் ஆனது.

அந்த காலத்தில் யாருக்காக சிரார்த்தம் செய்கிறோமோ, அவர்கள் நேரடியாக வந்து உணவை சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ராமரும், லட்சுமணரும் வர தாமதமான சமயத்தில், தசரத மகாராஜா வந்துவிட்டார்.
அவர் சீதாதேவியிடம், "எனக்கு மிகவும் பசிக்கிறது" என்று கூற, சீதாதேவியும் உணவை தயார் செய்து தசரதருக்கு அளித்தார். அதற்கு கயாவில் உள்ள ஒரு வேதியரும் மந்திரம் சொல்லி நடத்திக் கொடுத்தார். இதையடுத்து தசரத மகாராஜா மகிழ்ச்சியுடன் பித்ருலோகம் திரும்பிச் சென்றார்.
அதன்பிறகுதான் ராமரும், லட்சுமணரும் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சீதாதேவி, தசரத மகாராஜா வந்ததைப் பற்றியும், அவருக்கு சிரார்த்தம் சொல்லி உணவிட்டதையும் கூறினார்.
ராமர், "இதை எப்படி நம்புவது?" என்று கேட்க, அதற்கு சீதாதேவி, சிரார்த்தம் செய்து வைத்த வேதியரை சாட்சியாக அழைத்தாள். அந்த வேதியரோ, 'பெண் சிரார்த்தம் செய்து முடித்துவிட்டாள் என்று சொன்னால் தவறாகிவிடும்' என்று தயங்கி, "நான் சிரார்த்தம் செய்யவில்லை" என்று கூறிவிட்டார்.
உடனே சீதாதேவி, பல்குனி நதியை சாட்சியாக அழைத்தாள். பல்குனி நதியோ, "வேதியர் சொல்வது சரிதான். நான் இந்த பெண் சிரார்த்தம் கொடுத்ததைப் பார்க்கவில்லை" என்று கூறிவிட்டது.
சீதாதேவி இப்போது அக்னியை சாட்சியாக அழைத்தாள். அக்னி, 'நானும் பார்க்கவில்லை' என்று கூறியது. அடுத்ததாக பசுவை சாட்சிக்கு அழைத்தாள், சீதாதேவி. பசுவோ, 'அக்னி பகவானே 'நான் பார்க்கவில்லை' என்று நழுவி விட்டார்.
நான் பார்த்ததாக சொன்னால், அது சரியாக இருக்காது' என்று கருதி, அதுவும் "நான் பார்க்கவில்லை" என்று சொன்னது.

அப்பொழுது அங்கிருந்த அட்சய வடத்தை (ஆலமரம்) சீதாதேவி சாட்சியாக அழைக்க, அட்சய வடம் "சீதாதேவி, தசரத மகாராஜாவிற்கு உணவிட்டது சத்தியம்.. சத்தியம்.. சத்தியம்.." எனக் கூறியது.
இதனால் ராமரும், லட்சுமணரும் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து சீதாதேவி, வேதியரை நோக்கி "நீங்கள் சிரார்த்தம் செய்துவைத்து விட்டு, நான் செய்யவில்லை என்று கூறியதை ஏற்க முடியாது. எனவே நீ எப்போதும் பசியுடனேயே இருப்பாய்" என்று சபித்தாள்.

அதேபோல் பல்குனி நதியை நோக்கி, "நீ இன்றில் இருந்து வறண்டு போவாய்" என்றும், அக்னியிடம், "நீ இன்று முதல் நல்லவற்றை மட்டுமின்றி, அசுத்தங்களையும் எரிப்பாய்" என்றும், பசுவை நோக்கி "இன்றுமுதல் உன்னை யாரும் பூஜிக்க மாட்டார்கள்" என்றும் சாபமிட்டாள்.
ஆனால் அட்சய வடத்தைப் பார்த்து, "இனி உன் நிழலில் யார் ஒருவர் முன்னோருக்காக சிரார்த்த பிண்டம் வைக்கிறார்களோ, அவர்களின் 10 தலைமுறையினரும் மோட்சம் செல்வார்கள்" என்று வரம் அருளினாள்.

வேதியர், அக்னி, பல்குனி நதி, பசு ஆகிய நால் வரும், சீதாதேவியிடம் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினர். ராமரும் அவர்களுக்கு அருள்செய்யும்படி சீதாதேவியிடம் கூறினார். எனவே சீதாதேவி "யாரும் வருந்தவேண்டாம். வேதியரே.. கயா தலத்தில் கயாவாலி வேதியர்களுக்கு யார் அன்னம் கொடுக்கிறார்களோ, அவர்களின் வம்சத்தில் பஞ்சம் என்பதே இருக்காது.

அக்னியே.. அனைத்து தேவ காரியங்களிலும் நீ இன்றி எதுவும் நடக்காது. பல்குனி நதியே.. நீ வறண்டு போனாலும், உன்னை நினைத்து யார் சங்கல்பம் செய்கிறார்களோ, அவர்களுக்கு கங்கையில் குளித்த பலன் கிடைக்கும்.
பசுவே, உன் முன்பாக நின்று யாரும் உன்னை பூஜிக்க மாட்டார்கள். ஆனால் உன் பின்புறத்தை பூஜிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்" என்று வரம் அருளினாள்.
- சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது.
- 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவில், ராமாயணத்துடன் தொடர்புடையது. பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தை தரிசிக்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்வதைக் காண முடியும்.
இங்கே சீதையால் மணலில் பிடிக்கப்பட்ட மணல் லிங்கம்தான், மூலவராக இருக்கிறது. ராவணனை வதம் செய்த ராமபிரான், தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக இங்கே லிங்கம் அமைத்து வழிபட்டதாக ராமாயணம் சொல்கிறது.

காசிக்கு நிகராக வைத்து போற்றப்படும் இந்த ஆலயம், சீதையின் சிறப்புக்கும் பெயர் பெற்றது. ராவணனிடம் இருந்து மீட்கப்பட்ட சீதை, தன்னுடைய கற்பை நிரூபிப்பதற்காக அக்னி பிரவேசம் நடத்தினார்.
அந்த அக்னியின் சூட்டை, அக்னி பகவானாலேயே தாங்க முடியவில்லையாம். எனவே அவர் ராமேஸ்வரம் கடலில் மூழ்கி தன்னுடைய உடல் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக தல வரலாறு சொல்கிறது. இதன் காரணமாகவே, ராமேஸ்வரம் கடலை 'அக்னி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள்.

காசி லிங்கம்
ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் வைத்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய நினைத்தார், ராமபிரான். அதற்காக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனை பணித்தார்.
ஆனால் அவர் வருவதற்கு தாமதமானதால், மணலில் லிங்கம் செய்து தன் தவத்தை மேற்கொண்டார். பின்னர் அனுமன் கொண்டு வந்து சிவலிங்கமும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதுவே 'காசி லிங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
மணல் லிங்கம்
காசியில் உள்ள விஸ்வநாதருக்கு இணையாக வைத்து போற்றப்படுவது, ராமேஸ்வரத்தில் உள்ள மணல் லிங்கம். இந்த மணல் லிங்கத்தை, சீதாதேவி தன்னுடைய கையால் செய்திருக்கிறார். அனுமன் காசியில் இருந்து சிவலிங்கம் கொண்டு வர தாமதம் ஏற்பட்டதால், இந்த மணல் லிங்கத்தை சீதாதேவி செய்தார்.
இந்த மணல் லிங்கம்தான், ராமேஸ்வரம் ஆலயத்தின் பிரதான லிங்கமாகவும், ராமநாதசுவாமி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்த மூலவர் லிங்கம், இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது.

உப்பு லிங்கம்
இந்த ஆலயத்தில் அதிசயம் நிறைந்த உப்பு லிங்கம் ஒன்று உள்ளது. இந்த லிங்கத்திற்கு தனிக் கதையே உள்ளது. ஒரு முறை இவ்வாலயத்திற்கு வந்த சிலர், இங்கு மூலவராக உள்ள லிங்கம் மணலால் செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை. அப்படி மணலில் செய்யப்பட்டிருந்தால், அபிஷேகம் செய்கையில் கரைந்து போயிருக்கும் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் அங்கே அம்மனின் பக்தரான பாஸ்கரராய சுவாமிகள் இருந்தார். அவர், மூலவர் லிங்கமானது மணலால் செய்யப்பட்டதுதான் என்று உறுதிபடக் கூறினார். அது கரையாமல் இருப்பதற்கு, சீதாதேவியின் தெய்வீக சக்தியே காரணம் என்றும் கூறினார்.
மேலும் அதை மெய்ப்பிக்க ஒரு வேலையும் செய்தார். அதாவது தர்க்கம் செய்த சிலரிடம் உப்பு வாங்கி வரச் சொல்லி, அந்த உப்பில் ஒரு சிவலிங்கத்தை செய்தார். அந்த சிவலிங்கத்தின் மீது எத்தனை குடம் தண்ணீர் வேண்டுமானாலும் ஊற்றும்படி, பாஸ்கரராய சுவாமிகள் கூறினார்.
தர்க்கம் செய்தவர்கள் அவ்வாறே செய்தனர். ஆனால் உப்பு லிங்கம் கொஞ்சம் கூட கரையவில்லை. அப்போது பாஸ்கரராய சுவாமிகள், "அம்பாளின் பக்தனும், சாதாரண மனிதனுமான என்னால் செய்யப்பட்ட உப்பு லிங்கத்தையே, இவ்வளவு குடம் தண்ணீர் ஊற்றியும் கரைக்க முடியவில்லை.
இந்த ஆலயத்தில் மூலவராக இருக்கும் மணல் லிங்கம், மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமரின் மனைவி சீதாதேவியால் செய்யப்பட்டது. அது கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் உள்ளது" என்று கேட்டாராம். ராமேஸ்வரம் கோவிலில் உள்ள இந்த உப்பு லிங்கத்தை 'வஜ்ராயுத லிங்கம்' என்றும் அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை.

ஸ்படிக லிங்கம்
ராமேஸ்வரம் கோவில் கர்ப்பக்கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.
- இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம்.
- திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு கார்த்திகை-20 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தி நண்பகல் 12.24 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம்: உத்திராடம் மாலை 5.27 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம். திருவோண விரதம். சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். சிம்மாசனத்தில் பவனி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞான சம்பந்தர் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம், வழிபாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை மற்றும் மைசூர் மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-வரவு
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-பாசம்
கடகம்-முயற்சி
சிம்மம்-ஓய்வு
கன்னி-சிந்தனை
துலாம்- செலவு
விருச்சிகம்-சாதனை
தனுசு- திடம்
மகரம்-ஆதரவு
கும்பம்-உறுதி
மீனம்-உதவி
- இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.
- மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.
பொதுவாக இருநதிகளுக்கு இடையில் உள்ள தலம் சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும்.
தோரணமலையை சுற்றி ராமநதி, ஜம்புநதி ஒடுகின்றன.
இதுதவிர இப்போதும் இந்த மலையில் தேரையரும், மற்ற சித்தர்களும் அரூப நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதனால் மலை ஏறும் போதே நம்மை அறியாமலே நம் உடல் சிலிர்ப்பதை உணர முடியும்.
மலை உச்சியில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்தால், மனம் குளிர்ந்து விடுகிறது.
எந்த ஒரு மலையிலும் கிடைக்காத மனஅமைதியை அங்கு நீங்கள் பெற முடியும்.
இத்தகைய சிறப்புடைய இந்த புண்ணியமலை உச்சியில் முக்கியமான வசதிகள் இல்லாதது மிகப்பெரும் மனக்குறைவாக உள்ளது.
முருகப்பக்தர்கள் நினைத்தால் மூன்று மாதத்தில் அந்தத்திருப்பணிகளை செய்து முடித்து விடமுடியும்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தோரணமலையில் இந்தத்திருப்பணிகள் செய்பவர்களின் குடும்பமும் நிச்சயம் வாழையடி வாழையாக தழைக்கும்.






