என் மலர்
ஆன்மிகம்
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-9 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி இரவு 8.54 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: அஸ்தம் நண்பகல் 1.49 மணி வரை பிறகு சித்திரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருநெல்வேலி சமீபம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைத்த மாநிதி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சனம். சமயபுரம் இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் காலை அபிஷேகம். திருத்தணி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம் கோவில்களில் முருகனுக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-பண்பு
மிதுனம்-பரிவு
கடகம்-மாற்றம்
சிம்மம்-ஆதரவு
கன்னி-நிதானம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-பெருமை
தனுசு- நிம்மதி
மகரம்-நட்பு
கும்பம்-நிறைவு
மீனம்-ஓய்வு
- சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
- அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.
கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது.
கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்ட வாறு கூறுகிறது:
பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோவிலாகவே கருதினர்.
இதனை "ஆக்கோட்டம்" என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும்.
அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும். முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும்.
நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும்.
சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும்.
அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.
வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.
- எந்த சிலையையும் அல்லது விக்கிரகத்தையும் நாம் தொடக்கூடாது.
- அதற்கு பதிலாக உள்ளத்தால் அவர்களின் திருவடிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.
நவக்கிரகங்களை மட்டுமல்லாமல் திருக்கோவில்களில் கொடிமரத்தை கடந்து உள்ளே சென்ற பின்னர் அங்குள்ள அனைத்து சிலைகளும், விக்கிரகங்களும் மந்திரப்பிரயோகம் செய்து சக்தியூட்டப்பட்டவை ஆகும்.
அவற்றை நாம் தொடுவதால் நம்மிடம் உள்ள அசுத்தம் அதன் சக்தியை பாதிக்கும்.
எந்த சிலையையும் அல்லது விக்கிரகத்தையும் நாம் தொடக்கூடாது.
அதற்கு பதிலாக உள்ளத்தால் அவர்களின் திருவடிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.
- நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.
- ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.
நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.
ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.
எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை.
எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும். சிலர் அப்படி சுற்ற தேவையில்லை என்கிறார்கள்.
மொத்தம் ஒன்பது முறை நவக்கிகரங்களை சுற்ற வேண்டும் எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான் முறையாகும். இந்த ஐதீகம் தான் நலத்தைத் தரும்.
- சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.
- வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.
சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.
வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.
நவக்கிரகங்கள் அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள் ஆவார்கள்.
அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூஜையும் வைணவ தலங்களில் உண்டு.
ஆனால் வெளிப்படையாக முன்நிறுத்தப்படுவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.
அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள். அவதாரங்களில் கூட, நவகிரக அம்சங்கள் உண்டு.
108 திவ்ய தேசங்களில் ஒன்பது திவ்யதேசங்கள், நவகிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி&தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)
எனவே எந்த கிரக தோஷம் உள்ளதோ, அதற்கு ஏற்ப, உரிய தலத்துக்கு சென்று வழிபட்டு பலன் பெறலாம்.
- சமீப ஆண்டுகளாக வைணவ நவகிரக தலங்களில் மீண்டும் உரிய முறைப்படி வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
- இதனால் தற்போது தஞ்சை மண்டல வைணவ நவக்கிரக தலங்கள் புகழ் பெற்று வருகின்றன.
சமீப ஆண்டுகளாக வைணவ நவகிரக தலங்களில் மீண்டும் உரிய முறைப்படி வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
இதனால் தற்போது தஞ்சை மண்டல வைணவ நவக்கிரக தலங்கள் புகழ் பெற்று வருகின்றன. அந்த வைணவ நவக்கிரகங்கள் விபரம் வருமாறு:
1. சூரியன்& ஸ்ரீசாரங்கபாணி ஆலயம், கும்பகோணம்.
2. சந்திரன்& ஜெகன்னாதர் ஆலயம், ஸ்ரீநாதன்கோவில்.
3. செவ்வாய்& சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் (திருநறையூர்)
4. புதன்& வல்வில் ராமர் ஆலயம் திருபுள்ளம்பூதங்குடி
5. வியாழன்& ஆண்டளக்கும் அய்யன்பெருமாள் ஆலயம், திருஆதனூர்.
6. சுக்கிரன்&கோலவல்வில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி
7. சனி& ஒப்பிலியப்பன் பெருமாள் ஆலயம், உப்பிலியப்பன் கோவில் (திருவிண்ணகர்)
8. ராகு& கஜேந்திர வரதர் ஆலயம், கபிஸ்தலம்
9. கேது& ஜெகத்ரட்சகன் கோவில், திருக்கூடலூர்
(மாந்தி& திருச்சேறை)
இந்த 9 வைணவத் தலங்களிலும் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார்.
இதனால் பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது. அங்கும் நவகிரகங்களை குறித்து பூஜைகள், பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு.
- பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக தலங்கள் அனைத்தும் இருக்கும் என்பார்கள்.
- ஆனால் வைணவ வழிபாட்டிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.
இந்த ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ள விதம், அதன் பலம் முதலியவை தான் ஒரு மனிதனின் தலை விதியை தீர்மானிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது.
வைதீக பிரதிஷ்டை, ஆகமப் பிரதிஷ்டை என இரண்டு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகளை அமைப்பர். அதற்கேற்ப அனைவரும் பூஜை செய்யலாம்.
பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக தலங்கள் அனைத்தும் இருக்கும் என்பார்கள்.
ஆனால் வைணவ வழிபாட்டிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.
சைவ சமய நவகிரக தலங்கள் சோழ மண்டலத்தில் அமைந்திருப்பது போன்றே வைணவ நவகிரக தலங்களும் சோழ மண்டலத்தில் அமைந்துள்ளன.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைணவ நவகிரக தலங்களில் சிறப்பான வழிபாடுகளை நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருந்தனர்.
இடைபட்ட சில நூற்றாண்டுகளில் வைணவ நவக்கிரக தலங்களின் வழிபாடுகள் வழக்கொழிந்து போய் விட்டன.
- இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.
- சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.
அனைத்து சிவாலங்களிலும், ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நவகிரகங்கள் மேற்கு திசை முகப்பாக அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.
சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும், மேற்கில் சனியும், வடக்கில் குரு, தெற்கில் செவ்வாய், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், வடமேற்கில் கேது, தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.
சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்&மேற்கு, செவ்வாய்&தெற்கு, புதன்&வடக்கு, குரு&வடக்கு, சுக்கிரன்&கிழக்கு, சனி&மேற்கு, ராகு&தெற்கு, கேது&தெற்கு.
இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.
சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.
நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடும்போது சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிக் கொண்டே வழிபடலாம்.
- சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.
- தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.
எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும்.
தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது.
திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது.
செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது.
புதனுக்கு திருவென்காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடியிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன.
- இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை.
- ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன் (குரு) வெள்ளி (சுக்கிரன்), சனி, ராகு கேது ஆகிய 9 கிரகங்களும் நவக்கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஒன்பது கிரகங்களும் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் ஆற்றல் கொண்டவை.
ஒவ்வொருவரது உடலையும் மனதையும் நவக்கிரகங்கள்தான் இயக்குகின்றன.
சூரியன் நம் ஆத்மாவை இயக்குகிறது. சந்திரன் நம் மனதை செயல்படுத்துகிறது. செவ்வாயும், ராகுவும் நமக்கு பலம் தருகின்றன.
புதன் கிரகத்தால் வாக்கு மேன்மை பெற முடியும். வியாழன் நமக்கு ஞானத்தை அள்ளித் தருகிறது.
ஒருவரது காம இச்சைகளையும், இந்திரியங்களையும் வெள்ளிக் கிரகம் இயக்குகிறது. துக்கம், நரம்புத் தசை மற்றும் மரணத்தை சனி தீர்மானிக்கிறது.
ஒருவருக்கு, இந்த கிரகங்களில் ஏதாவது ஒன்றில் தோஷம் ஏற்பட்டால், அந்த கிரகத்துக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காமல் போய் விடும்.
மேலும் கிரக சுழற்சி காரணமாக கெடுதல்களும் நடக்கும். நல்லதும் நடக்கும்.
அதற்கு ஏற்ப நமது வாழ்க்கையை அமைதியாகவும், செழிப்பானதாகவும் மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அந்தந்த கிரகங்களை நாடிச் சென்று வழிபட்டு பரிகாரம் செய்து கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை.
- உற்சவத்தில் 9 நாட்களும் விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
- 13-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.15 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
5-ந் தேதி வெள்ளிசந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந்தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடக்கிறது.
9-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந்தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.
12-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணிமுதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ரதோத்றவக் காட்சி தேர் உற்சவம் நடக்கிறது.
13-ந் தேதி அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும்.
6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
14-ந்தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்சவத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.
இவ் வைபவத்தில் 10 நாட்களும் இரு வேளைகளிலும் யாகங்களும் 4 வேத (ரிக், யஜூர், சாம, அதர்வண) பாராயணங்களும், பன்னிரு திருமுறைகளும் பஞ்சமூர்த்தி வீதி உலா காட்சியும், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகளும் மற்றும் ருத்ராபிஷேகம், அன்னதானமும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை சபாநாயகர் கோவில் டிரஸ்டி பாஸ்கர தீட்சிதர் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- நாராயணனைப் பாடித் துதித்தால் வேண்டுபவை எல்லாம் தருவான்.
- சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா?
திருப்பாவை
பாடல்:
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல்
காத்துன்னைக்
கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
ஆவாவென் றாராயந் தருளேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவளே! கிழக்கு வெளுத்து விட்டது. எருமைகள் பனிப் புல்லை மேயச் சென்றுவிட்டன. பாவை நோன்பிற்காக நீராடச் சென்றவர்களை போகவிடாமல் தடுத்து, உன்னை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கிறோம். குதிரை வடிவில் வந்த அரக்கனையும், சாணூரன், முஷ்டிகன் போன்ற மல்லர்களையும் அழித்தவனும், தேவாதி தேவனுமாகிய நாராயணனைப் பாடித் துதித்தால், அவன் நோன்பிற்குரிய அருளாசி மற்றும் நாம் வேண்டுபவை எல்லாம் தருவான். எழுந்திடுவாய்!
திருவெம்பாவை
பாடல்:
கோழிச் சிலம்ப சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம்
கேட்டிலையோ?
வாழீயீ தென்ன உறக்கமோ? வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
கோழி கூவுகிறது. நீர்ப் பறவைகளும் சத்தமிடுகின்றன. பொழுது விடிந்து விட்டது என்பதை அறிவிக்கும் வெண்சங்கு முழங்கும் ஒலியும் கேட்கிறது. ஏழில் என்னும் இசைப் பாமாலையில் ஒப்பற்ற பரஞ்சோதியாகவும், எல்லா உலகங்களும் அழிந்துபடும் ஊழிக்காலத்திலும் கூட, முதல்வராக விளங்கும் சிவபெருமானை நாங்கள் பாடுவது உனக்கு கேட்கவில்லையா? அதுவே அவன் அன்பைப் பெறும் வழிமுறையாகும். உன் உறக்கம் என்ன உறக்கமோ? எழுந்திடுவாய்.






