என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    ராகுல்காந்தியின் தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க மறுத்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். இதற்கிடையில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த புர்னேஷ் மோடி, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுப்பதை பவன் கல்யாண் வெட்கமின்றி படிக்கிறார். இவர்களால் ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாது என்று ரோஜா கூறியுள்ளார்.

    சட்ட ஒழுங்கு பிரச்சினையால் தி.மு.க. ஆட்சி இன்னும் ஓரிரு வாரத்தில் கலைக்கப்படலாம் என்று எச்.ராஜா கூறியுள்ளார்.

    அலிரமூடு கூடமில் உள்ள பழங்குடியினர் நல விடுதியில் மர்ம நபர்கள் நுழைந்து அங்குள்ள அகில்வரதன் ரெட்டி அறைக்குள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த அவரை தூக்கிக் கொண்டு வெளியே சென்றனர். பின்னர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்தனர். அவரது 2 கண்களை கத்தியால் குத்தி பிடுங்கினர்.

    தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான ரெயில் முன்புதிவு இன்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய 10 நிமிடத்தில் 5 ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

    மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜனதா அரசு இருந்தால்தான் மக்களுக்கு திட்டங்கள் சரியான வகையில் சென்றடையும். இதனால் மாநிலத்திலும் மக்கள் பா.ஜனதாவை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் 'இரட்டை எஞ்ஜின்' அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பா.ஜனதா தலைவர்கள் பேசி வருகிறார்கள். இதை கிண்டல் செய்யும் வகையில் இரட்டை எஞ்ஜினில் ஒன்று எப்போதுமே பழுதாகியுள்ளது. ஒற்றை எஞ்ஜினான நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பா.ஜனதாவை கிண்டல் செய்துள்ளார்.

    டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 50-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும். தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 18%-ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். iந்நிலையில், நீலாங்கரையில் இருந்து பனையூர் வரும் வழியில் உள்ள சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது. இதையடுத்து, போக்குவரத்து போலீசார் நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

    அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டோர் கழக பொதுச்செயலாளருக்கு மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

    ஜிஎஸ்டி கவுன்சிலின் 50வது கூட்டம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் வருவாய்க்கு வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள், குதிரை பந்தயம் மற்றும் கேசினோக்களின் மொத்த வருமானம் மீது 28 சதவீத வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்ததாக நிதி மந்திரி  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை நிலவரப்படி முடிவுகள் அறிவிக்கப்பட்ட 23,344 இடங்களில் 16,330 இடங்களை திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியது.

    மேலும் 3,002 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. கடும் போட்டியாக விளங்கிய பாஜக 3,790 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

    ×