பொது சிவில் சட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என இந்திய சட்ட ஆணையத்தின் கருத்துக்கேட்புக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடிதம் எழுதியுள்ளார். மேலும், திமுகவைப் பொறுத்தமட்டில் பொது சிவில் சட்டமே நிறைவேற்றக்கூடாது என்பதுதான் இறுதியான, தீர்க்கமான கொள்கை பிரகடனம். பாஜகவின் ஒரு நாடு, ஒரு இனம், ஒரு மொழி, ஒரு பண்பாடு என்ற கொள்கையின் விளைவாக பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால், மதச்சார்பின்மைக்கு குந்தகம் ஏற்படும். சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, அமைதியின்மை போன்ற பல கேடுகள் இந்திய சமுதாயத்தில் உருவாக்கும் நிலை ஏற்படும் என அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.