என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்களிடமும், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் இருந்தும் கடந்த மாதம் 14ம் தேதி முதல் கருத்துக்கள் பெறப்படுகினறன.  கருத்து தெரிவிக்க ஜூலை 13ம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த காலக்கெடு இன்னும் இரண்டு நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், சட்ட ஆணையத்திற்கு இதுவரை கிட்டத்தட்ட 46 லட்சம் கருத்துக்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

    ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போனதாக ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் பேசி உள்ளார்.

    வடகொரிய தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, எங்களது வான்வெளியில் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்துவோம்.

    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி நியமித்த நிர்வாகிகளை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளது தேர்தல் ஆணையம். 

    கொடநாடு வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். துணை முதலமைச்சருக்கு அரசில் எந்த அதிகாரமும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் கொடநாடு வழக்கில் எந்த நடவடிக்கையும் இல்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என வாக்குறுதி கொடுத்தது திமுக. அதிமுக, இரட்டை இலை வழக்கில் சட்டப்போராட்டம் தொடர்கிறது. பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தற்போது வரை எனக்கு அழைப்பு வரவில்லை. பாஜக தலைவர்கள் எங்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர் என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் இடம் இருந்து கப்பற்படைக்காக 26 ரபேல் விமானம், 3 நீர்மூழ்கி கப்பல்களை இந்தியா வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் செல்ல இருக்கிறார். அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    தென்மேற்கு நைஜீரியாவின் லாகோஸில் நேற்று முன்தினம் பயணிகள் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, மோவா நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரக் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த சுமார் 20 பயணிகள் உயிரிழந்தனர்.

    வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் இன்று காலை 9 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நெல்லை சங்கர் நகரில் உள்ள ஐ.சி.எல். மைதானத்தில் இன்று நடைபெற்ற 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதின. இதில், திண்டுக்கல் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து நெல்லை ராயல் கிங்ஸ் அபாரமாக வென்றது. இதன்மூலம், நெல்லை ராயல் கிங்ஸ் 2வது குவாலிபையர் சுற்றில் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

    டிஎன்பிஎல் 2-வது தகுதி சுற்றில் திண்டுக்கல் டிராகன்சும், நெல்லை ராயல் கிங்சும் மோதுகின்றன. முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. சிவம் சிங் 46 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை ராயல் கிங்ஸ் களமிறங்குகிறது. 

    ×