என் மலர்
ஷாட்ஸ்

தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை. சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது. நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். கடந்த 6 மாத குற்ற வழக்குகள் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து களைய வேண்டும். பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Next Story






