என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    டெல்லி அரசின் அதிகாரம் தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை நிறுத்திவைக்க உச்ச நீதிமனற்ம் மறுத்துவிட்டது. அதேசமயம், மாநில அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி டெல்லி துணைநிலை ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார். வழக்கு விசாரணை அடுத்த திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

    கொரோனா காலத்தில் செயல்படுத்தப்பட்டது போல் நடமாடும் காய்கறி அங்காடிகளை தற்போது பெருமளவு மாநகராட்சி மற்றும் தோட்டக் கலைத் துறை மூலம் தொடங்கலாம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

    கவர்னர் ஆர்.என்.ரவியை நீக்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்பது சரியானதே என்று மேல்சபை எம்.பி. கபில்சிபல் கூறியுள்ளார்.

    பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார் . அப்போது கழிவறை அருகே பதுங்கி இருந்த பாம்பு அருகே தெரியாமல் சென்று விட்டார். அப்போது பாம்பு மாணவியை கடித்தது.

    வட மாநிலங்களில் கனமழை காரணமாக தமிழக முழுவதும் லோடு கிடைக்காமல் 30 சதவீதத்துக்கும் மேலாக சுமார் 2 லட்சம் லாரிகள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    இமாச்சல பிரதேச மாநிலம் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்கு சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி மீது அடுக்கடுக்கான பல்வேறு புகார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பல்வேறு சம்பவங்களை குறிப்பிட்டு, இதற்கெல்லாம் கவர்னர் பொறுப்பா? கேட்டுள்ளார்.

    நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று இங்கிலாந்திற்கு சென்றடைந்தார். நேட்டோ உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ள இருக்கும் ஜோ பைடன், லிதுவேனியாவுக்குப் புறப்படுவதற்கு முன்பு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்லஸ் III ஆகியோரை சந்திக்க உள்ளார்.

    டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை மந்திரி அதிதி பார்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர் மழையால் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே 2 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வர உள்ளார். ஜூலை 21-ம் தேதி இந்தியா வரும் ரணில் விக்ரமசிங்கே பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு மேம்பாடு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசிக்க உள்ளனர். அதிபராக பதவியேற்றபின் விக்ரமசிங்கே இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் வந்தால் கூட்டணி குறித்து பேசலாம். ஆளுநர் மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

    ×