என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழ்நாட்டில் திராவிட ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சியை அப்புறப்படுத்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளோம். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் கொள்கையில் உறுதியோடு நிற்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக வரும் 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

    கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய இளம் வீரர் லக்சயா சென் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி உள்ளார். இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் மோதிய லக்சயா சென், 21-17, 21-14 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று அசத்தினார். 

    புதுச்சேரியில் தற்போது பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது அறிமுகமாகிறது. 17.3.2023-க்கு பிறகு பிறந்த குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடையலாம்.

    கலிபோர்னியாவின் முரியேட்டாவில் நேற்று அதிகாலை பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையத்திற்கு அருகில் செஸ்னா வணிக ஜெட் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் ஆய்வு செய்தார். ஆய்வு நடத்திய பிறகு பேசிய மத்திய அமைச்சர், "உள்நாட்டு ரெயிலின் 28 வது ரெயிலின் புதிய வண்ணம் இந்திய மூவர்ணத்தால் ஈர்க்கப்பட்டது" என்று கூறினார்.

    ஆஷஸ் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது.

    டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்தது. ஆனால், மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் நெல்லை கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் ச்சுற்றுக்கு முன்னேறியது.

    டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நெல்லை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை குவித்தது. ஆனால், மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் நெல்லை கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபையர் ச்சுற்றுக்கு முன்னேறியது.

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வன்முறை தொடர்பாக பாஜக தலைவர் ஜேபி நட்டா, மாநில எதிர்க்கட்சித் தலைவர் (எல்ஓபி) சுவேந்து அதிகாரி மற்றும் பாஜக மேற்கு வங்க பொறுப்பாளர் மங்கள் பாண்டே ஆகியோரிடம் இன்று பேசினார். அப்போது அவர், "ஜனநாயகத்தை அழிய விடமாட்டோம்" என்று தெரிவித்தார்.

    மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இத்தொகையை பெறுவதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர் பெயர், திருமண நிலை, தொலைபேசி எண், மின் இணைப்பு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், வாடகை வீடா அல்லது சொந்த வீடா உள்ளிட்ட 10 கேள்விகளும், 18 வயதுக்கு மேல் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், சொத்து விவரம், நில உடமை, வாகன விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக, தி.மு.க. உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் சேர்த்திருக்கலாம் என தெரிவித்தார்.

    ×