என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    தமிழ்நாட்டை உலகோடு இணைத்தது கடல். மீன்பிடி தொழிலில் இந்தியாவிலேயே ஐந்தாவது பெரிய மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மீனவர்களின் பங்கு தவிர்க்க முடியாதது என்று மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

    ஐஎன்எஸ் விந்தியகிரி போர்க்கப்பலை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தொடங்கி வைத்தார். இதில் உள்ள 75 சதவீத தளவாடங்கள் உள்நாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டவை. அப்போது அவர் பேசுகையில், விந்தியகிரி கப்பலை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் கடல்சார் திறன்களை மேம்படுத்துவதில் இந்த நிகழ்வு ஒரு முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றார்.

    சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் தேதியை அறிவிக்கும் முன் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பா.ஜ.க அறிவித்தது. சத்தீஸ்கர் மாநில சட்டசபைக்கு 21 வேட்பாளர்களும், மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு 39 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலையும் பா.ஜ.க அறிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நிலவை நெருங்கிய நிலையில் 'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இனி இவை இரண்டும் தனித்தனி பயணங்களை தொடங்கும். இதன்பிறகு லேண்டரை நிலவில் எங்கு தரையிறங்குவது என்று முடிவு செய்யப்படும். இதற்காக நிலவில் தரை இறங்குவதற்கான இடங்களை புகைப்படம் எடுத்து உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெற்ற நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஏற்கனவே பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி, மீண்டும் அதே உறுப்பினர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார். அப்போது அவர் கூறுகையில், மதுரை மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்துசெய்ய முடியாது என்றார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மந்திரி அனுராக் தாகூர், பிரதம மந்திரியின் மின்சார பஸ் சேவை திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு 57,613 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 10,000 புதிய மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார்.

    மறைந்த பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவையொட்டி மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிட வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள டி.எம்.சவுந்தரராஜன் உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எ.வ.வேலு உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்தியா- சீனா இடையிலான 19-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுஜேவாலா தெரிவித்துள்ள நிலையில், சொல்லாட்சியை தாண்டி பாரத மாதாவை பாதுகாக்க எப்போது பயணிப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

    டெல்லியில் பா.ஜனதா மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை நடக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

    தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை செல்கிறார். மதுரை செல்லும் அவர் மறைந்த பிரபல மறைந்த பிரபல பின்னணி பாடகர் கலைமாமணி டி.எம். சௌந்தரராஜனின் முழு திருவுருவச் சிலையை திறந்துவைக்க உள்ளார். நாளை முதல் 2 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

    ×