என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    மதுரையில் நடந்த அ.தி.மு.க. மாநாட்டில் பொதுச் செயலாளர் எடப்பாடிபழனிசாமி பேசுகையில், தமிழகத்தை 31 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெரிய கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வின் தொண்டன் என்பதே பெருமைதான். அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கட்சியாலும் முடியாது. எந்தக் கொம்பனாலும் முடியாது. தொண்டனாக இருந்து உழைப்பால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் என்றார்.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்தியா 185 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய அயர்லாந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 33 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகிற புதன்கிழமை அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு பிறகு முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    பாகிஸ்தானில் லாரி மீது மோதி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நீட் தேர்வுக்கு எதிராக எத்தனையோ இளம் சிட்டுகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோயுள்ளது. மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை. நீட் தேர்வை திணிக்கும் செயலில் மோடி அரசு வேகமாக இயங்குகிறது. நீட் தேர்வுக்கு எதிராக பலர் விடும் சாபம் மத்திய அரசை அகற்றும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

    திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    வரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறுவர். அந்நிய தேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம்.


    எடப்பாடி பழனிசாமி மாநாட்டின் முதல் நிகழ்வாக 51 அடி உயரம் கொண்ட கம்பத்தில், அ.தி.மு.க. கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 10 நிமிடம் பூக்கள் தூவப்பட்டது.

    சந்திராயன் 3 விண்கலத்தின் இறுதிக்கட்ட வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது சந்திரயான் 3 விண்கலம் சந்திர சுற்றுப்பாதையில் 25x134 கி.மீ. தூரத்தில் உள்ளது. திட்டமிட்டபடி 23-ம் தேதி புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கச்சத்தீவு பிரச்சினையில் துரோகத்தின் மறுஉருவம் என்றால் அது தி.மு.க.தான். கச்சத்தீவு ஒப்பந்தத்தை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை எதிர்த்து குரல் கொடுக்காமல் மவுனம் காத்ததுதான் துரோகம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை கூறினார்.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நேற்று இரவு நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய அயர்லாந்து 139 ரன்களை சேர்த்தது. அடுத்து ஆடிய இந்தியா 6.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 47 ரன்எடுத்தபோது மழை பெய்தது. அதன்பின் மழை நிற்காததால் டிஎல்எஸ் முறைப்படி இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ×