பிரபல பாலிவுட் நடிகரும், பா.ஜனதா எம்.பி.யுமான சன்னி தியோல் வாங்கிய கடனுக்காக, அவருடைய பங்களாவை ஏலம் விட பரோடா வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அறிவிப்பு வெளியிட்ட, 24 மணி நேரத்திற்குள்ளேயே, தொழில்நுட்ப காரணங்களை மேற்கொள்காட்டி அறிவிப்பை திரும்ப பெற்றது.
இதற்கு, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ''56 கோடி ரூபாய் வாங்கிய கடனை கட்டத் தவறியதால், சன்னி தியோலின் பங்களா ஏலம் விடப்பட இருக்கிறது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்டனர். இன்று காலை, 24 மணி நேரத்திற்குள், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக, வங்கி அதன் ஏல அறிவிப்பை திரும்பப்பெற்றது என்ற செய்தியை நாட்டு மக்கள் கேட்கின்றனர்.
இந்த 'தொழில்நுட்ப காரணங்களை' தூண்டியது யார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா?'' எனப் பதிவிட்டுள்ளார்.