என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜூலை மாதத்தின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்ந்த நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து விலை குறையும் என எதிர்பார்ப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

    சந்திரயான் 3 விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. அதன்பின் 6 மணி நேரத்திற்கு பிறகு நிலவின் தரைப்பகுதியில் பிரக்யான் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கியது. 14 நாட்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மழையின் காரணமாக தடைப்பட்டது. மழை பெய்ததால் டாஸ் கூட போடப்படவில்லை. இறுதியில், மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது இந்தியா.

    நிலவின் தென் துருவ பகுதியில் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்தது. நிலவில் விக்ரம் லேண்டர் தடம் பதித்த பின்னர் அதன் லேண்டிங் இமேஜர் கேமரா எடுத்த புகைப்படம் ஒன்றை இஸ்ரோ வெளியிட்டது. அதில், நிலவில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய ஒரு பகுதி காட்டப்பட்டுள்ளது. லேண்டரின் ஒரு கால் பகுதியின் நிழலும் காணப்படுகிறது.

    திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் நடைபாதை பக்தர்கள் தங்கள் உடமைகளை அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு மலையடிவாரங்களில் உள்ள தேவஸ்தான அதிகாரியிடம் ஒப்படைத்தால் அவை மலைக்கு வந்து சேர்ந்துவிடும். இந்த நடைமுறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி உடமைகளை ஒப்படைக்கும் பக்தர்களுக்கு ஆதார், செல்போன் எண்கள் மூலமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

    தானியங்கி தரை இறங்கும் வரிசையை தொடங்க அனைத்தும் தயாராக உள்ளது. நிலவில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் லேண்டர் தரை இறங்கும் பணி மாலை 5.44 மணிக்கு தொடங்கும். இந்த பணி தொடங்கியவுடன் விஞ்ஞானிகள் குழு கட்டளைகளை வரிசையாக செயல்படுத்துவதை உறுதி செய்து கொண்டே இருக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது.

    மிசோரம் மாநிலம் சைராங் பகுதி அருகே கட்டப்பட்டு வந்த ரெயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் அலறினார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் மீட்புக்குழு மீட்பு பணியில் ஈடுபட்டது. 17 தொழிலாளர்கள் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் பலியானார்கள். இடிபாடுகளில் இருந்து 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் பலரை காணவில்லை.

    காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்கான நிதியை 30 சதவீதம் குறைத்த நிலையில், 18 மாநிலங்களுக்கு 6366 கோடி ரூபாய் சம்பளம் பாக்கி வைத்துள்ளதாக மத்திய அரசு மீது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஹீத் ஸ்ட்ரீக புற்றுநோயால், 49 வயதில் மரணம் அடைந்துள்ளார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 455 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    சேமிப்பு கரையும் நாள். பரபரப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். உத்தியோகத்தில் பக்கத்து பணியாளர்களால் பிரச்சினை ஏற்படும்.


    ஜி20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடக்கிறது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7-ம் தேதி இந்தியா வரவுள்ளார் என வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சுல்லிவன் தெரிவித்துள்ளார்.

    15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கு பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. உலகின் வளர்ச்சி எந்திரமாக இந்தியா உருவெடுக்கும் என்றார்.

    ×