என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சென்னுடன் மோதினார். இதில் பிரனாய் 13-21, 21-15, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    தென்ஆப்பிரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு கிரீஸ் சென்றடைந்த பிரதமர் மோடியை அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஜார்ஜ் ஜெராபெட்ரிட்டிஸ் வரவேற்றார். கிரீஸ் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோ, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது, கிரீஸ் நாட்டின் உயரிய விருதான 'கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்' விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் கேத்ரினா வழங்கி கவுரவித்தார்.

    அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் எனத் தெரிவித்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி, இன்று கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை, கிரீஸ் வெளியுறவுத்துறை மந்திரி வரவேற்றார்.

    நாகை மாவட்டம் திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களுடன் அமர்ந்த முதலமைச்சர் காலை உணவை சாப்பிட்டு ருசி பார்த்தார். காலை உணவு திட்ட விரிவாக்கத்தால் 31 ஆயிரம் அரசு பள்ளியில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

    2020 தேர்தல் முடிவை மாற்றியமைக்க சதி செய்ததாக டொனால்டு டிரம்ப் மீது ஜார்ஜியா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக உள்ளூர் நேரப்படி நேற்று இரவு அட்லாண்டாவில் உள்ள சிறையில் சரண் அடைந்தார். பின்னர், 2 லட்சம் அமெரிக்க டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

    இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. விக்ரம் லேண்டர் நிலவில் கால்பதித்த நேரத்தில் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் பிறந்த 4 குழந்தைகளுக்கு சந்திரயான் என பெற்றோர் பெயர் வைத்து மகிழ்ந்தனர். இந்த சாதனை நாளில் குழந்தை பிறந்தது இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. விக்ரம் லேண்டரில் உள்ள இமேஜர் கேமரா நிலவில் லேண்டர் தரையிறங்குவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில் பல இடங்களில் சிறிய மற்றும் பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனை இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளது.

    புகுஷிமா அணுஉலை நிலையத்தில் சேமித்து வைத்திருந்த சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, பிசிபிக் கடலில் ஜப்பான்  முதல் கட்டமாக திறந்து விட்டுள்ளது ஜப்பான்.

    மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைத்தல், கள ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

    மதுரையில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் முதலில் 23-ந்தேதி நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்தது. பின்னர் மீண்டும் இந்த உண்ணாவிரதம் 24-ந்தேதிக்கு மாற்றப்பட்டது.

    அதன்படி, மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் மதுரை மாவட்ட தி.மு.க.வினர் ஏராளமானோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை தனது 71வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளார். தன்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×