என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஜி20 உச்சி மாநாட்டிற்கான டெல்லியில் உள்ள சாலைகள், சாலையோரம் உள்ள சுவர்கள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பணம் செலவழிப்பது யார்? என்பதில் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையில் பெயரை தட்டிச் செல்வதில் கருத்து போர் உருவாகியுள்ளது.

    சட்ட விரோத பண பரிமாற்றம் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 25-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரின் நீதிமன்றம் காவல் ஆகஸ்ட் 28-ந்தேதி வரை (இன்று) நீட்டிக்கப்பட்டது.

    அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தி, தனி கோஷ்டியாக செயல்படும் அஜித் பவார், "அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார். மேலும், "ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    அறிவியலும், நம்பிக்கையும் இருவேறு பொருள்களை கொண்டவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியதில் எந்த சர்ச்சையும் இல்லை. ரோவர் திட்டமிட்டப்படி நகர்ந்து கொண்டு வருகிறது என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் செய்தியாளர்களிடம் தெரிவித்து இருக்கிறார்.  

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேசிய நல்லாசிரியர் விருது வென்ற இரண்டு தமிழக ஆசிரியர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில், "மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி, வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவருக்கும் எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! கல்வித்துறையில் தமிழ்நாடு செய்து வரும் சாதனைகளுக்கு ஆசிரியர்களே அடித்தளம்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

    நிலவின் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விக்ரம் லேண்டரில் உள்ள 10 சென்சார் கருவிகள் மூலம் வெப்பநிலை ஆய்வு செய்யப்படுகிறது.

    சந்திரயான்-3 மிஷன் வெற்றி மிக பிரமாண்டமானது. இது புதிய இந்தியாவின் அடையாளமாக மாறியுள்ளது. இந்தியாவின் சந்திராயன்3 மிஷன் பெண் சக்திக்கு நேரடி உதாரணம். இந்த பணியில், பல பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மகள்கள் இப்போது விண்வெளிக்கு கூட சவால் விடுகிறார்கள். தேசம் வளர்ச்சி அடைவதை இனி யாரால் தடுக்க முடியும்? என 104-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

    மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில், இன்று மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 3 மந்திரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் மந்திரி சபையில் இடம் பிடித்துள்ளவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    விஞ்ஞான வரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்தியா "சந்திரயான்-3" வெற்றிக்கு பிறகு முதல் இடத்திற்கு வந்துள்ளது. "சந்திரயான்-3" லேண்டர் நிலவில் கால்பதித்த ஆக.23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

    மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: இருவர் பலிமதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் சமையல் செய்தபோது தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் பலி எண்ணிக்கை 10  ஆக உயர்ந்துள்ளது.

    பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். நேற்று கிரீஸ் நாட்டின் சுற்றுப் பயணத்தை முடித்து தாயகம் புறப்பட்டார். வழக்கமாக அவர் டெல்லி வந்து இறங்குவார். இந்தமுறை நேராக பெங்களூர் வந்தடைந்தார். பெங்களூர் வந்துள்ள பிரதமர் மோடி, சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் உரையாட இருக்கிறார்.

    கிரீஸ் சென்ற பிரதமர் மோடி அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் பேசுகையில், சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றி மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு இந்தியா. நிலவில் நம் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் திறமையை உலகுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். இந்தியா, கிரீஸ் இடையிலான உறவு பழமையானது, வலுவானது என தெரிவித்தார்.

    ×